எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 4 அக்டோபர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். ஏஞ்சல்மீனின் க்வில்லிங் ஓவியங்கள்.

முகநூலில் அறிமுகமானவர் என் தங்கை ஏஞ்சல். இவர் cherub crafts என்ற பேரில் வல்லிம்மாவின் தோழியாக இருந்ததால் இணைத்தேன். பின் அவரின் முகநூல் பக்கம் சென்று பார்த்தால்  க்வில்லிங்கால் செய்யப்பட்ட வண்ண வண்ண அட்டைகள் , ஓவியங்கள் பார்த்தேன். ரசித்தேன் . ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அவர் இரண்டு வலைத்தளங்களிலும் எழுதுகிறார். அந்த இணைப்பைக் கீழே கொடுத்திருக்கிறேன்.  அதனால் அவர்கிட்ட ஒரு கேள்வி கேட்டு இங்கே பகிர்கிறேன். 

அதுக்கு முன்னாடி க்வில்லிங்க பத்தி ஒரு சிறுகுறிப்பு.

இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலை. ஐரோப்பிய மத குருமார்கள் தங்கள் விவிலியப் புத்தகத்துல தங்க ரேக்கினால் செய்யப்பட்ட பேப்பரால இந்த வேலைப்பாடுகளை செய்து அலங்கரிப்பாங்க. ராஜபரம்பரைக்காரங்களும் இத பொழுதுபோக்கா செய்து வைச்சுக்குவாங்க். இது காஸ்ட்லியான விஷயம்கிறதால சாதாரண மக்களை எட்டலை. அப்புறம் 1930 ல இங்கிலாந்துல விதம் விதமான பேப்பர்கள் கண்டுபிடிக்கப்பட்டபின்பு இது புனர்ஜென்மம் எடுத்ததாம். 


இதுக்கு பேப்பர் ரோலிங், பேப்பர் ஸ்க்ரோலிங், ஃபிலிக், மொசய்க் அப்பிடின்னு பல பேர் எகிப்து சரித்திரத்துல இருக்கு. 3MM, 5MM , 10MM, ன்னு மூன்று அளவுல உள்ள குவில்லிங் பேப்பர்களில் கிடைக்கும். இதுக்கு க்வில்லிங்க் ஊசின்னு ஒண்ணு இருக்கு. இது ரெண்டும் வைச்சு பலவிதமான மந்திர வேலைகள் செய்திருக்க ஏஞ்சல் கிட்ட ஒரு கேள்வி.  ( இவர் ப்ராடக் ஃப்ரம் வேஸ்ட் என்பது போல ரீசைக்கிளிங் மெத்தட்லயும் சணல் போன்றவை பயன்படுத்தியும் இந்த கார்ட்ஸ் செய்திருக்கிறார்.


என் அன்பு ஏஞ்சல்மீனு, ( ஹிஹிஹி -- இதுதான்  அவர் பெயர் -- கேஜிஜி சார்கிட்டத்தான் பேர்க்காரணம் இடம் சுட்டி விளக்குங்கன்னு சொல்லிட்டமேன்னு அதே கொஸ்டீனை இவர்கிட்ட கேக்கலை :)  க்வில்லிங்க்ல நகைகள் பார்த்திருக்கேன். ஆனா நீங்க விதம் விதமான வேலைப்பாடுகள் உள்ள வண்ண வண்ண வாழ்த்து அட்டைகள்,  அலங்காரப் பொருட்கள் செய்றீங்க.இந்தக் கலையை எங்கேருந்து கத்துக்கிட்டீங்க. அது பத்தி விவரமா சொல்லுங்க


அன்பின் தேனக்கா :) 
என் பெயர் ஏஞ்சல் ..
நம்ம சமைத்து அசத்தலாம் ஆசியா அக்கா அவர்கள் அஞ்சு என்று அழைக்க இப்போ அந்த பெயரே நிலைத்து விட்டது :)

படிப்பு முடிப்பதற்குள் திருமணம் பிறகு வெளிநாட்டு வாழ்க்கை .கணவர்  ரெண்டு மகள்கள்  ,முதல் பொண்ணு ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள் பேரு ஷாரோன் ரெண்டாவது பொண்ணு நாலுகால் பூனைபொண்ணு பெயர் ஜெஸ்ஸி. பூனைங்களுக்கு ஸ்கூல் இன்னும் ஆரம்பிக்கலை :)இதில்லாம ஏழு நீச்சலடிக்கிற பிள்ளைங்க (தங்க மீன்கள்) தோட்டத்தில் வளருகிறார்கள் .

ஆரம்பத்தில் வலைபதிவுகள் பற்றியெல்லாம் அறிந்திருக்கவில்லை ..தமிலிஷ் /இன்ட்லியில் வரும் பதிவுகளை வாசித்து 
கூகிள் ஐடியில் பின்னூட்டமிடுவேன்.


பிறகு ஒரு நன்னாளில் என் கணவர் ஆங்கில வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து தந்தார் அதில் வாழ்த்து அட்டை செய்வது பற்றி பதிவுகள் எழுதினேன் .பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எனது ஆர்வம் quilling பக்கம் திரும்பியது .
அதற்க்கு முக்கிய காரணம் என் மகள் தான் :) 

ஒவ்வொரு கிறிஸ்மசுக்கும் நாங்க சான்டா கிளாஸ் வீட்டுக்கு வருவார்னு சொல்லி வைப்போம் ..நாங்களே அவளுக்கு தெரியாம பரிசு பொருளை வாங்கி அட்டைபெட்டியில் போட்டு சாண்டா வைச்ச மாதிரி செட்டப் செய்வோம் ..இவளும் நல்ல பிள்ளையா சான்டாவுக்கு பால் பிஸ்கட் எல்லாம் வைப்பா :)
 

எங்க வீட்டு சாண்டா எல்லாத்தையும் சாப்பிட்டு விடுவார் .மகள் அதிகாலை எழும்பி குதூகலத்துடன் பரிசுங்களை பிரிப்பா ..இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பரிசு பெட்டி வாங்கினோம் அதில் ஒரு க்வில்லிங் டூல் இருந்தது எனக்கு அதை பயன்படுத்த தெரியலை ஆனா என் மகளே  ரெண்டு வாத்து குஞ்சு செய்து  காண்பிச்சா !! அப்போ ஆரம்பிச்சது இந்த கலை மீது ஒரு ஆர்வம் .யூ டியூப் மற்றும் வேறு பல தளங்களைஎல்லாம் தேடி செய்ய கற்றுக்கொண்டேன் .

நான் க்வில்லிங் செய்ய பயன்படுத்துவது ரெடிமேட் pre cut காகிதங்களை அல்ல வண்ண தாள்களை வாங்கி அதை வெட்டி செய்வேன் அல்லது பழைய வண்ண காகிதங்கள் அட்டைகள் எது கிடைத்தாலும் அதில் வெட்டி செய்வது மிகவும் விருப்பம் ..

தமிழில் யாரும் க்வில்லிங் பற்றி அறிந்திருக்கவில்லை நான் துவக்கினேன் கொஞ்சமே கொஞ்சம் டிப்ஸ் சொல்லிதந்ததில் இப்போ இளமதி  ப்ரியா ,அதிரா ,ஆச்சியின் மகள் அப்புறம் ஆச்சி என நிறைய பேர்  மிக அழகாக க்வில்லிங் செய்யறாங்க :) 

அது மட்டுமில்லை நான் ஒரு frugal crafter ..கையில் இருப்பதை வைத்து செய்வது என வழக்கம் ..அதுவும் மீள் சுழற்சி என்றால் மிகவும் விருப்பம் .இப்போது இங்கே நிறைய பேருக்கு கற்று கொடுக்கிறேன் .க்வில்லிங் மட்டுமின்றி வீட்டு தோட்டம் போடுவதிலும் ஆர்வமுண்டு  இதற்க்கு முக்கிய காரணம் மனதோடு மட்டும் வலைப்பூ உரிமையாளர் தோழி கவுசல்யா ..அவரது ஊக்குவிப்பினால்  நலம் மற்றும் பசுமை விடியலில் நேரம் கிடைக்கும்போது எழுதி வருகிறேன் .

நான் க்வில்லிங் செய்ய பயன்படுத்துவது ரெடிமேட் pre cut காகிதங்களை அல்ல வண்ண தாள்களை வாங்கி அதை வெட்டி செய்வேன் அல்லது பழைய வண்ண காகிதங்கள் அட்டைகள் எது கிடைத்தாலும் அதில் வெட்டி செய்வது மிகவும் விருப்பம் ..

எனக்கு கொஞ்சம் சமைக்கவும் தெரியும் :)பொது மக்களின் நன்மை கருதி சில பல நாட்களாக சொந்த சமையல் குறிப்பு எதுவும் எழுதவில்லை ..சமையலில் எனது ஆசான்கள் ..ஜலீலா ஆசியா அப்புறம் மேனகா மஹி சாதிகா அக்கா .பாயிஜா இப்படி நிறைய பேர் இருக்காங்க .

சாட்டர்டே கார்னரில் என்னை அறிமுகம் செய்வதற்கு மிக்க நன்றி அக்கா :)


டிஸ்கி:- ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க ஏஞ்சல். அஞ்சுன்ற பேரும் அழகு. உங்க கைவேலைப்பாடுகள் பார்த்து அசந்து போய் இருக்கேன். முதன்முதலா உங்க பக்கத்துல இந்த வாழ்த்து அட்டைகளைப் பார்த்ததும் பிரமிப்பா இருந்துச்சு. ரொம்ப சூப்பர் வொர்க். வாழ்த்துக்கள்டா. வித்யாசமான உருப்படியான பொழுதுபோக்கு. நானும் செய்து பார்க்கிறேன். :)  பயனுள்ள விஷயம் ஒன்றைப் பகிர்ந்ததுக்க நன்றி ஏஞ்சல்.:)


ஏஞ்சலின் இரு வலைத்தளங்கள் மூலமாகவும் கத்துக்கலாம். இங்கே போய் பாருங்க இன்னும் நிறைய இருக்கு ரசிங்க. :)


http://kaagidhapookal.blogspot.in/


42 கருத்துகள்:

  1. வாவ் எங்க அன்புத்தோழி அஞ்சு. வாழ்த்துக்கள் அஞ்சு. தேனக்காவின் சாட்டர்டே ஜாலி கார்னரில் உங்க பேட்டி. மிக்க மகிழ்ச்சி. உங்க சிஷ்யை நானும் என்பதில் பெருமை. அழகழகான க்விலிங்க்.
    ரெம்ப நன்றி தேனைக்கா. எங்க தோழி அஞ்சுவை பேட்டியை பதிவு செய்தமைக்கு ரெம்ப நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. என்ன அருமையான படைப்புகள்! அதிசயக்க வைக்கின்றன! வாழ்த்துக்கள்! ஏஞ்சலின்! சகோதரி!

    சகோதரி தங்களுக்கும் நன்றி பகிர்ந்ததற்கு.

    எங்கள் தளத்தில் எழுதும் நாங்கள் இருவர். கீதா கல்லூரிக் காலத்திலேயேஅதாவது 28 வருடங்களுக்கு முன்னமேயே இந்த பேப்பர் க்வில்லிங்க் செய்து வாழ்த்து அட்டைகள், கல்யாணப் பரிசுகள் என்று அசத்தியிருக்கிறார். அப்போது இந்த கலர் பேப்பர் கிடைக்குமே வார்னிஷ் பேப்பர் என்று அப்புறம் கோல்ட் கலர் பேப்பர், கலர் சார்டுகள், நல்ல வழ வழப்பான ஆங்கில இதழ்களின் கலர் பேப்பர்களை வைத்து செய்வார். ஆனால் கிராமம் ஆதலால், நவராத்திரி சமயங்களில் இவை எல்லாம் கொலுவை அலங்கரிக்கும். அவ்வளவே! அப்போது சிறு சிறு கம்மல், தொங்கட்டான் இவைகளை பேப்பருடன், பாசி மணியும், சம்கியும் சேர்த்து செய்வதுண்டு. மாலைகள் கூட செய்திருக்கின்றார். சுற்றுவதற்கு பேனா, ஈர்க்குச்சி....இவைகளை வைத்து

    இப்போது பல பல வன்ணங்களில் அழகழகாக கிடைப்பதை வைத்து ஜெவல்லரியும் செய்கிறார்.

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  3. Thanks Thenu. ANGELS PICTURE LOOKS LOVELY. SHE IS A LOVELY PERSON..HER kwilling has piqued my interest. may be I will learn from her. Congrats Angel baby. Love toSharon and Jessie.

    பதிலளிநீக்கு
  4. மிக்க மிக்க நன்றி தேனக்கா :) ரொம்ப சந்தோஷமாயிருக்கு சாட்டர்டே ஜாலி கார்னரில் என்னை பேட்டி எடுத்ததற்கு ..

    பதிலளிநீக்கு
  5. quilling artist angelin sister வாழ்க.இந்த வரலாற்றை எங்களுக்கு தெரியப்படுத்திய இந்த தளத்திற்கு நன்றிகள்.பூனை,தங்க மீன்கள்களையும் பிள்ளைகளா நினைப்பது பெரும் விசியம்.உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள்.

    உங்களிடமிருந்து quilling கற்று தனி வெப்சைட்டே துவங்கிட்டேன்.frame work laam seiya try panren.

    பதிலளிநீக்கு
  6. ஏஞ்சலின் பதில்கள் அருமை.ஏஞலின் க்வில்லிங் கைவேலை எனக்கு மிகவும் பிடிக்கும். படங்கள் அருமை. ஏஞ்சலின் படம் இப்போது தான் பார்க்கிறேன், ஆனால் வெகு நாட்காளாக பார்த்து பழகியது போல் உணர்வு ஏற்படுகிறது.
    வீட்டுத்தோட்ட குறிப்புகள், சமையல், விழிப்புணர்வு கட்டுரைகள் என்று பன்முக எழுத்தாளர் ஏஞ்சலின்.
    வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.
    தேனம்மை உங்களுக்கும் வாழ்த்துக்கள்.வித்தியசமான பேட்டிக்கு.

    பதிலளிநீக்கு
  7. ரசிக்கவைத்த தகவல்களின் பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  8. Thx for this post thenakka.:) am a secret admirer of her beautiful works!!! All the best Angel...Ungal kalai menmelum valarattum!!.,

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரி!

    சும்மா! எனும்பெயரில் சொல்வது கோடியென்பேன்!
    அம்மா!. வியக்கின்றேன் ஆழ்ந்து!

    உங்கள் வலைத்தளம் அன்புத்தோழி அஞ்சு சொல்லி அறிந்தேன்!
    மிக அருமை! நிறைய விடங்கள் உள்ளன!..
    தொடர்கிறேன்!..
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. அஞ்சு! வலையுலகில் ஆனாளென் தோழியாய்!
    கொஞ்சும் குணத்தழகுக் கோகிலம்! - நெஞ்சிலே
    நிற்கின்றாள்! இன்றிங்கு நின்வலை நேர்முகம்கண்(டு)
    உற்று மகிழ்ந்தே(ன்) உளம்!

    அஞ்சுவின் அன்புக்குப் பாத்திரமான
    அதிர்ஷ்டசாலி நானும் என்பதில் பெருமையடைகிறேன்!
    நேர்முகம் மிக அருமை! அத்துடன் தேவதை அஞ்சுவும் முகம் காட்டியுள்ளாரே!..:)

    அவரிடம் க்விலிங் கலையைக் கற்றேன் என்று எப்பவும் எங்கும்
    நான் சொல்ல மறந்ததில்லை. என்ன சந்தேகமெனினும் உடனே தீர்த்திடுவார்!
    அவர் கைப் பக்குவம்: கைவேலையென்றாலும் சமையல் என்றாலும்
    கார்டனிங் – வீட்டுத்தோட்டம் என்றாலும் எல்லாமே அற்புதமே!
    அத்துடன் செல்லப்பிராணிகளில் அவள் அன்பும் ஈடிணை இல்லாதது!

    அருமையான பேட்டி! உங்களுக்கும் அஞ்சுவுக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. ஆவ்வ்வ்வ்வ் இவ்ளோ நாளும் கடலின் அடியில ஒளிச்சிருந்த ஃபிஸ்ஸு இப்போ வலையில் அகப்பட்டுவிட்டதோ? :) சந்தோசம் பொங்குதே.... வாழ்த்துக்கள் அஞ்சூ....

    பதிலளிநீக்கு
  12. ஆவ்வ்வ்வ்வ் இவ்ளோ நாளும் கடலின் அடியில ஒளிச்சிருந்த ஃபிஸ்ஸு இப்போ வலையில் அகப்பட்டுவிட்டதோ? :) சந்தோசம் பொங்குதே.... வாழ்த்துக்கள் அஞ்சூ....

    பதிலளிநீக்கு
  13. அஞ்சுவின் குயில் பார்த்துத்தான் இப்படி ஒன்று இருக்கு என்பதே எனக்கு தெரியும் பின்பு அஞ்சு கொடுத்த அதிக ஊக்குவிப்பால் நானும் அஞ்சுவைப் பார்த்து செய்ய பழகினேன். அஞ்சுவின் ஒவ்வொரு குயிலும் சூப்பரா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. அஞ்சுவின் கைவண்ணங்களை வெளியிட்ட தேனக்காவுக்கு வாழ்த்துக்களும் மற்றும் எங்கள் “கெட்ட கிருமிக் கூட்டம்” சார்பாக நன்றியையும் தெரிவிக்கிறேன். இப்படி வெளியிட்டு அனைவரையும் ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. சூப்பர் அஞ்சு, ஹே ஹே உங்கள பார்த்துட்டேன்... அழகு...
    எனக்கே உங்கள் பெயர் ஏஞ்சல் என்பது தான் , மனதில் நிற்குது.
    பதிவு முழுவதும் படிக்கல, , ஈது க்கு , இப்ப மட்டன் பிரியாணி செய்து கொண்டு இருக்கேன்..பிறகு வருகிறேன்

    பதிலளிநீக்கு
  16. என் அன்புச்சகோதரி நிர்மலா அவர்களை இன்று இங்கு நேரில் பார்க்க நேர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். அதற்காக திருமதி. தேனம்மை அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    மற்றவர்களுக்கு மட்டுமே ஏஞ்சலின், அஞ்சு, மீனு etc., etc., என்ற பெயர்களெல்லாம். எனக்கு ‘நிர்மலா’ மட்டுமே.

    நான் இவ்வாறு அழைக்கும் போதெல்லாம் அவர்களின் தந்தை அழைப்பதாக உணர்ந்து மகிழ்வார்கள். இது எங்கள் இருவருக்குள்ளும் உள்ள ஓர் உன்னத ஒப்பந்தப்பெயராகும்.

    >>>>>
    >>>>>

    பதிலளிநீக்கு
  17. மிக அழகான கைவேலைகளை படமாகக்காட்டி பதிவாக்கிக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    பேட்டிச்செய்திகள் மிக இயல்பாக, இயற்கையாக, வெகு அருமையாக உள்ளன.

    பேட்டி எடுத்த திருமதி தேனம்மை அவர்களுக்கும், பேட்டி கொடுத்துள்ள அன்புள்ள நிர்மலாவுக்கும் என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பிரியா :)
    பிசியான நேரத்திலும் வந்து என்னை பின்னூட்டமிட்டு உற்சாகபடுதியதற்க்கு மிக்க நன்றி அன்பு ஜலீலா
    மிக்க நன்றி லாவண்யா கணேஷ் :)

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்களுக்கு வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா :)

    வாழ்த்துக்களுக்கு வருகைக்கும் பாராட்டுக்களும் மிக்க நன்றி அன்பு சகோதரி ஆச்சி :)

    பதிலளிநீக்கு
  20. பின்னூட்டமிட்டு உற்சாகபடுத்தியதற்க்கு மிக்க நன்றி கெட்ட கிருமிகள் கூட்டத்தின் செயலாளர் அதிரா மியாவ் :)
    தேனக்கா நான் ரொம்ப அமைதியான பிள்ளை இதோ இந்த அதிரா கூட சேர்ந்து தான் இவ்லோ அட்டகாசம் :)

    பதிலளிநீக்கு
  21. வருகைக்கும் கவிபாடி என்னை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி :) சகோதரி இளமதி

    பதிலளிநீக்கு
  22. அன்பு சகோதரர் துளசிதரன் அவர்களுக்கு வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி .
    கீதா அவர்கள் 28 வருடங்கள் முன்பேவா !! செய்திருக்கிறார்!! மிக ஆச்சர்யமாக இருக்கு எனக்கு 2009 முதல் தான் தெரியும் கண்டிப்பாக அவர் வலையில் சென்று பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  23. அன்பின் வல்லிம்மா மற்றும் அன்பு கோமதிம்மா இருவரின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி :)

    பதிலளிநீக்கு
  24. அன்பு ராஜேஸ்வரி அக்கா வருகைக்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றிக்கா

    பதிலளிநீக்கு
  25. தேனக்கா என் கமெண்ட் எங்க காணோம்,காக்கா தூக்கிட்டு போய்டுச்சா??

    பதிலளிநீக்கு
  26. தேனக்காவின் சாட்டர்டே ஜாலி கார்னரில் ஏங்சலின் பேட்டியை கண்டதில் மகிழ்ச்சி,அதைவிட மகிழ்ச்சி ஏஞ்சலினை பார்த்த்து.....வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.தங்கள் மூலமாகவே க்வில்லிங் பர்றி அறிந்துக் கொண்டேன்,ஆனா இன்னும் செய்து பார்க்கல...இனி தான் அதை முழுமையா கத்துக்கனும்..என் குருவே சரணம்....பேட்டியை பகிர்ந்த தேனக்காவுக்கும் மிக்க நன்றி !!

    பதிலளிநீக்கு
  27. அஞ்சு உங்களைப் பார்த்ததில், உங்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.அழகான,அருமையான பகிர்வுக்கு தேனக்காவிற்கும் தங்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாழ்த்துக்கள் அக்கா(ஸ்)! :)

    பதிலளிநீக்கு
  29. மிக்க நன்றி ப்ரியசகி அம்மு :)

    தகவல்களுக்கு நன்றி துளசிதரன் சகோ. கீதாவுக்கும் வாழ்த்துகள்.

    நன்றி வல்லிம்மா

    நன்றி ஏஞ்சல் :)

    பூனைகளையும் மீன்களையும் பிள்ளைகளாகச் சொன்னமை குறித்து நானும் வியந்தேன் திருமதி பி எஸ் ஸ்ரீதர். அருமை ஏஞ்சல். :)

    பன்முக எழுத்தாளர் ஏஞ்சல் என்று அழகா சொன்னீங்க கோமதி மேம். கருத்துக்கு நன்றி.

    நன்றி ராஜி

    அஹா சீக்ரெட் அட்மைரர் ஆ லாவண்யா.. ஏஞ்சல் சொல்லவேயில்லை.. இந்த விஷயம் எல்லாம் இப்போதான் தெரியுது. பெருமையா இருக்கு ஏஞ்சல் :)



    பதிலளிநீக்கு
  30. மிக அழகாகக் கவி வடித்தீர் இளமதி.. அருமை அருமை.. ! தங்கள் வரவு இனிதே ஆகுக. கருத்திட்டமைக்கும் முதல் வரவுக்கும் நன்றி :)

    ஆதிரா அதென்ன கெட்ட கிருமிக் கூட்டம் .. எனக்குத் தெரியலயே.. உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி டா.

    என்ன பரவசம் இவங்களுக்கெல்லாம் ஏஞ்சல் நீங்க கொடுத்து வைச்சவங்க :)



    பதிலளிநீக்கு
  31. கருத்துக்கு நன்றி ஜலீலா. மீனைப் பிடிச்சு என் வலையில போட்டுட்டன்ல.. ஹாஹா

    எங்கள் அனைவரின் அன்புக்கும் உரிய கோபு சார் வந்து பின்னூட்டமிட்டதிலும் நிர்மலாவை வாழ்த்தியதிலும் பெருமகிழ்ச்சி. நல்வரவு கோபால் சார். :) கருத்துக்களும் அன்புக்கும் நன்றி. :)

    உங்க பேட்டியை எந்தக் காக்கா வந்து என் வலையிலேருந்து தூக்கிட்டுப் போகும் மேனகா. அம்புட்டுத் தெகிரியம் எந்தக் காக்காவுக்கும் இல்லை. நான் அன்னிக்கு லாகவுட் பண்ண அதே நேரத்துல நீங்க அனுப்பி இருப்பீங்கன்னு நினைக்கிறேண்டா. மறுநாள் 14 ஹவர்ஸ் கழிச்சுத்தான் பார்த்தேன். ரெண்டு கமெண்ட்ஸும் .. சோ வெளியிட்டாச்சுடா மேனகா. :)

    நன்றி ஆசியா

    நன்றி மஹி. :)

    பதிலளிநீக்கு
  32. ஆஆஆஆஆஆஅ அஞ்சு அக்கா பேட்டியா .... அஞ்சு அக்காவின் பேட்டியை தந்த தேனம்மை அக்காக்கு முதலில் நன்றி ....

    அஞ்சு அக்காவின் quilling உலகம் அறிந்ததே ..... சமையலில் அஞ்சு அக்கா ராணி தான் அன்பிலும் பாசத்திலும் அஞ்சு அக்கா தேவதை தான் ..... அஞ்சு அக்காக்கு என் வாழ்த்துக்களும் அன்பும் ....

    பதிலளிநீக்கு
  33. முகநூலில் அறிமுகமாகி இனிய தோழியாகிவிட்ட ஏஞ்சலை இங்கு பேட்டி எடுத்ததற்கு மகிழ்ச்சியும் நன்றியும் தேனக்கா.
    ஏஞ்சல், உங்க பேட்டி நச்சுனு இருக்கு..உங்க அருமையான க்வில்லிங் பின்னாடி உள்ள வரலாறைத் தெரிஞ்சுகிட்டேன்..ஷாரோனிற்கு நன்றியும் வாழ்த்துக்களும். இளமதியின் க்வில்லிங் பார்த்து அசந்து போயிருக்கிறேன், அவர்கள் உங்கள் மாணவியா? :)
    முகநூலில் நீங்கள் பகிரும் வாழ்த்து அட்டைகளைப் பார்த்து வியந்து ரசித்திருக்கிறேன். ஒன்றிரண்டு செய்து பார்த்திருந்தாலும் இப்பொழுது நிறைய செய்ய வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டுகிறீர்களே..இது நியாயமா? நேரத்திற்கு எங்கு போவேன்? :)
    மிக மிக அருமை டியர்..வாழ்த்துக்கள்..மேலும் பல பேட்டிகள் உங்கள் வழி வந்து உங்கள் க்வில்லிங் திறமை எட்டுத்திக்கும் தெரியட்டும். அன்புடனும் மகிழ்வுடனும் வாழ்த்துக்கள் இனிய தோழியே.

    பதிலளிநீக்கு
  34. வருகைக்கும் அன்பு பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி கிரேஸ் :)
    நான் சும்மா ஒன்றிரண்டு டிப்ஸ் கொடுத்தேன் இயற்கையாகவே இளமதி பிரியா .அதிஸ் மற்றும் அனைவரிடமும் உள்ள திறமைகள் இப்போ வெளிப்படுது ..
    அவங்க அனைவரும் குருவை மிஞ்சின சிஷ்யைஸ் இப்போ ..:) thanks for your encouraging words dear :)

    பதிலளிநீக்கு
  35. வருகைக்கும் பிசியான நேரத்திலும் அக்காவை வந்து விஷ் பண்ணினதுக்கும் தாங்க்ஸ்டா கலைக்குட்டி :)

    தேனக்கா :) அந்த அக்க்காஆஅ என்ற இடி இடிக்கிற மாதிரி ஒரு சத்தத்தோட வந்திருக்கே அந்த பொண்ணுதான் எங்க கூட்டத்தில் கடைக்குட்டி ..மேடம் கொஞ்சம் பிசியா இருக்கா இல்லைன்னா இங்கே நிலநடுக்கமே வந்திருக்கும் :)

    பதிலளிநீக்கு
  36. //சமையலில் அஞ்சு அக்கா ராணி தான்//

    ஞே !!! aww!!!

    பதிலளிநீக்கு
  37. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கலை

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி க்ரேஸ்

    ஹாஹா அஞ்சு இத படிச்சி சிரிச்சிக்கிட்டே இருக்கேன். :) ///தேனக்கா :) அந்த அக்க்காஆஅ என்ற இடி இடிக்கிற மாதிரி ஒரு சத்தத்தோட வந்திருக்கே அந்த பொண்ணுதான் எங்க கூட்டத்தில் கடைக்குட்டி ..மேடம் கொஞ்சம் பிசியா இருக்கா இல்லைன்னா இங்கே நிலநடுக்கமே வந்திருக்கும் :)///

    பதிலளிநீக்கு
  38. ஏஜலின் உங்கள் கைவண்ணத்தில் மயங்காமல் யாரும் இருக்கமாட்டாங்க. நானும் என் பொண்ணும் ட்ரை பண்ணுவோம் உங்கள் கார்டை பார்த்து. ஆனால் உங்கள் அளவுக்கு வராது .. சூப்பர் ஏஜ்ஜலின் .. என்னையும் நியாபகம் வைத்து நினைவு கூறியதற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  39. ஏஜலின் உங்கள் கைவண்ணத்தில் மயங்காமல் யாரும் இருக்கமாட்டாங்க. நானும் என் பொண்ணும் ட்ரை பண்ணுவோம் உங்கள் கார்டை பார்த்து. ஆனால் உங்கள் அளவுக்கு வராது .. சூப்பர் ஏஜ்ஜலின் .. என்னையும் நியாபகம் வைத்து நினைவு கூறியதற்கு நன்றி...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...