எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 10 அக்டோபர், 2014

தேன் பாடல்கள் ஆசையும் ஆட்டமும்.

71. அன்று வந்ததும் இதே நிலா

எம்ஜியாரும் சரோஜா தேவியும் பாடும் பெரிய இடத்துப் பெண்  பாடலை நாங்கள் கல்லூரி நாட்களில் நின்றபடி செய்யும் ஒரு எக்சர்ஸைஸ் போலப் பாடி இருக்கிறோம். மிக அருமையான இசைநடனப் பாடல்.  நிலவைப் போல சரோஜாதேவி ஜொலிப்பார்.

72. காதலென்னும் வடிவம் கண்டேன்..

பாக்ய லெக்ஷ்மியில் உள்ள பாட்டு இது. பருவப்பெண்கள் தனிமையில் பாடும் பாடல் என்னவோ எனக்குப் பிடித்த ஒன்று. ஈ வி சரோஜா தோட்டத்தில் ஆடிப் பாடுவார். துள்ளாமல் துள்ளும் உள்ளம், மின்னாமல் மின்னும் கன்னம் என்ற வரிகள் அழகு.  


73. ஹலோ மிஸ்டர் ஜமீன் தார்  ஹௌ டூ யூ டூ..:)

சாவித்ரியும் ஜெமினியும் பாடும் பாடல். மிஸ்ஸியம்மா என நினைக்கிறேன். ஜோடி அழகு.



74. அஹா மெல்ல நட மெல்ல  நட ..

சிவாஜியும் சரோஜா தேவியும் பாடும் பாடல். மினுமினுக்கும் உடையோடு இரவில் சரோஜா தேவி அழகு நடை போட பின்னாலேயே போய் சிவாஜி பாடுவார். பாட்டிலேயே ஒரு அழகான குடும்பம் , திருமணம், குழந்தை எல்லாம் விரியும். ஹையோ மெல்ல நட என்ற ட்விஸ்டில் வசீகரமான பார்வையோடு சிவாஜியும் அழகு.


75. மனம் விரும்புதே உன்னை..

சிம்ரன் சூர்யா நடித்த பாடல். சிம்ரன் ஸ்லிம் அழகி நேருக்கு நேர் படம். சூர்யா ரொம்பச் சின்னப் பிள்ளையாய் அழகாய் இருப்பார். இடுப்பு நடனம் என்பதை சிம்ரனிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பிடி ஒரு வெட்டு வெட்டி அழகாகத் தொடர்ந்து ஆடி மனதைக் கொள்ளையடித்தவர்.

76. ஒன்றா இரண்டா ஆசைகள்..

ஜோதிகா சூர்யா காம்பினேஷனில் அற்புதமான பாடல். இதுவும் இரவுப் பாடல்தான். தனியே தண்ணீரின் மேல் கட்டப்பட்ட ஒரு மூங்கில் வீட்டில்  படு ரொமாண்டிக்காகப் படமாக்கப்பட்டிருக்கும்.

77. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா.

 மக்களைப் பெற்ற மகராசியில் வரலெக்ஷ்மியும் சிவாஜியும் நடித்த பாடல். பி பி ஸ்ரீனிவாஸ் குரல். பாடல் வரிகள் அருமை. ஒவ்வொரு வரியும் உண்மை.


78. லஜ்ஜாவதியே

 பரத் நடித்த ஃபார்த பீபிள் என்ற மலையாளப் படத்தின் தமிழ்ப் பதிப்பு. கோபிகாவும் அவரும் படகில் ஆடும் ஆட்டம் அட்டகாசம். மயிலைப்போல கோபிகா கூந்தல் நெளிய ஆடுவதும். பரத் ஒரு ஜம்ப் செய்து இரு கால்களும் மடக்கிக் குதித்து ஃபாஸ்ட் நடனம் ஆடுவதும் ஒரு பரபரப்பான இன்பம். என்னா ஆட்டம் என்னா ஆட்டம் :)


79. மலரே மலரே உல்லாசம்..

 உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் ரஜனியும் மாதவியும் ஒரு அழகான பூங்காவில் நடந்தபடி பாடும் பாடல். கண்ணழகி மாதவி. ஸ்டைல் மன்னன் ரஜனியும் ஜில் அழகு.  மெல்லிய இசை, பனி, நீர் நிலை. புகை, மலை , இரவு, மாலை என எங்கெங்கோ  கொண்டு செல்லும் இந்தப் பாடல். லலலா லலலா லாலால்லா என்று ஹம் பண்ணத் தோன்றும்.


80. பனி விழும் மலர்வனம்..

 ஜெமினி கணேசன் மகள் மருத்துவர் ஜிஜி நடித்த ஒரே படம்.  முத்துராமன் மகன் கார்த்திக்கும் கல்லூரிப் பையன் போலிருப்பார். ஜிஜி பள்ளிப் பெண் போல் இருப்பார். வைரமுத்துவின் வைர வரிகளில் இந்தப் பாடல் எங்கள் பள்ளி கல்லூரிக் காலங்களில் ஒரு வரம்.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.



3 கருத்துகள்:

  1. அருமை! எப்படியெல்லாம் அழகாகயோசிக்கின்றிர்கள்!

    தேன் பாடல்கள் அருமை!

    பதிலளிநீக்கு
  2. ஜெமினியும் சாவித்திரியும் பாடும் பாடல் ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்தான்.
    நீங்கள் பகிர்ந்த பாடல் எல்லாம் எனக்கும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி துளசிதரன் சகோ

    நன்றி கோமதி மேம். :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...