எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 அக்டோபர், 2014

தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆத்தங்கரை மரமும்..

81. பருவமே புதிய பாடல் பாடு..

சுகாசினியும் மோகனும் ட்ராக் சூட்டில் செம ஃபிட்டாக ஒரு பூங்காவில் ஜாகிங் ஓடும்போது பின்னணியில் ஹார்ட் பீட் போல் ஒலிக்கும் பாடல். இதன் ரிதமும் பாடல்வரிகளும் அழகு. பதின்பருவங்களில் அடிக்கடி ஹம் பண்ணிய பாடல். ( ஆமா இப்ப மோகனும் சுகாசினியும் எங்க இருக்காங்க.)

82. அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா.

மலேசியா வாசுதேவனின் குரலில் அருமையான பாடல். மகேந்திரன் படம். அஸ்வினியும் சந்திர சேகரும் என நினைக்கிறேன்.  மசூதியும் டோம்களும் மாடங்களும் குதிரைவண்டியும் வெளிச்ச ஓவியமும் அழகு. இளமை நினைவை இசைக்கும் தெருக்கள். என்ற வரி பிடிக்கும், :)


83.அத்தைக்குப் பிறந்தவளே..

செம இளமைப் பாடல்.  ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே என்று பாடல் ஆரம்பிக்கும்போது சேர்ந்து உரக்கப் பாடுவது உண்டு ஹாஹா. விக்னேஷும் அவரின் அத்தை மகளும் ( நடிகையின் பெயர் மறந்துவிட்டது .) அத்தையும் மாமனும் சுகம்தானா ஆத்துல மீனும் சொகம்தானா. அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா.. என்ற வரிகள் செம.(ஸ்டூடியோக்களில் மட்டுமே எடுக்கப்பட்டுவந்த சினிமாக்கள் சரித்திரத்தை 75 களில் மாற்றி கிராமங்களின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து நம்மை இயற்கை நேசர்களாக மாற்றிய பாரதிராஜா இப்ப என்ன செய்றார்.. )

84. நலம் .. நலமறிய ஆவல்.

காதல் கோட்டையில் தேவயானியும் அஜீத்தும் பாடும் பாடல். இவர் ஊட்டியிலும் அவர் ஜெய்ப்பூரிலும் இருக்க. மென்மையான குளிரும் இதமான வெய்யிலும் மாறி மாறி அடித்தது போன்ற சுகம் இருக்கும் இந்தப் பாடலில். மென்மையான காதல்.

85. தீர்த்தக் கரையினிலே..பாரதியாரின் பாடல் வரிகள் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் பிரதாப் போத்தனுடன் காரில் வரும் ஸ்ரீதேவி கமல் பாடும் குரல் கேட்டுக் காரை விட்டிறங்கி தன்னை மறந்து கண்ணீர் மல்கக் கமலை நோக்கி  நடக்கும் காட்சி இதயம் தொடும். உருகி உருகி வேதனையை வெளிப்படுத்தும் பாடல். 

86.கண்டநாள் முதலாய்.

பிரசன்னாவும்.  லைலாவும் நடித்த குறும்பான படம் . அதில் இது டைட்டில் சாங்க். எதிர்பாராமல் லைலா பிரசன்னாவைக் கன்னத்தில் கடித்து வைக்க ( அட பொல்லாத குட்டி லைலாவும் அப்பாவி குட்டி பிரசன்னாவும்ங்க.. :) அடுத்து வரும் ரசனையான பாடல். கன்னத்தில் பாண்டேஜுடன் பிரசன்னா இருக்க லைலா அம்மா ரேவதியுடன் பாடுவார்.

87. என்ன என்ன வார்த்தைகளோ ..

 வெண்ணிற ஆடையில் ஜெயாம்மா பியானோ இசைத்தபடி ஆடும் நடனப் பாடல். இளமையும் அழகும் மின்ன சின்னச் சின்ன விழிகளில் தன் ஆசையைச் சொல்லி முடிப்பார்.இந்த நடனங்களிலும் ஸ்லீவ்லெஸ் ரவிக்கையிலும் அவர் தோன்றும்போது பார்வைக்கு மிகக் கவர்ச்சியாக இருப்பார். இன்றைக்குப் பார்க்கும்போதே  இப்படித் தோணுதே .. அப்போ அன்னிக்கு உள்ள மக்கள் நிலை என்னவா இருந்திருக்கும்.. .. ஆளுமைப் பெண்ணின், அழகுப் பேரரசியின் முன்னால் அனைவரும் அடிமைகளாகத்தான் இருந்திருப்பார்கள்.. :)

88. எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு.

 குடித்துவிட்டு வரும் முத்துராமனைப் பார்த்து கே ஆர் விஜயா பாடும் பாடல். காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும். காத்திருப்பேன். என் பாதையில் தெய்வம் இணைந்து வரும். என்ற வரிகள் நம்பிக்கை ஊட்டும்.

89. பார்த்த ஞாபகம் இல்லையோ..

புதிய பறவை படத்தில் சிவாஜியும் சௌகாரும் நடித்த பாடல் காட்சி. சாதாரணமாக ஆரம்பித்து செம திரில்லாகப் போகும் படம்.  அவர் சரோஜாதேவியைக் காதலிக்கத் தொடங்கும்போது இறந்ததாகக் கருதப்படும் சௌகார் வருவார். இந்தப் பாடல் ஒரு க்ளப்பில் சௌகார் பாடுவார். அதைப் பார்த்து சிவாஜி காதல் கொள்வார். ஒரு நீல நதிக்கரை ஓரம் நாம் வாழ்ந்திருந்தோம் சில காலம். என்ற வரிகள் கேட்டதும் சிவாஜி கண்ணில் ஒரு பல்ப் ஒளிரும்.மிக வசீகரமான பார்வை ஒன்றைப் புன்னகையோடும் புகையோடும்  கசியவிடுவார் சிவாஜி.

90. உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது

நவக்ரகத்தில் லெக்ஷ்மியும் சிவகுமாரும்  கடற்கரையில்  பாடும் பாடல். தாவணியில் லெக்ஷ்மி அழகு.  நுரை பொங்க கால் நனைக்கும் அலையும் கடலும் காற்றும் சூரியனும் அழகு சேர்க்கும்.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.4 கருத்துகள்:

 1. மனம் கவர்ந்த இனிமையான பாடல்கள். பருவமே பாடலில் ஜானகியம்மாவின் குரல் இனிமை. வெண்ணிற ஆடை படம் சமீபத்தில் பார்த்தபோது ஜெயாம்மாவின் கவர்ச்சிஅழகை பார்த்து வியந்துதான் போனேன். நலம் நலமறிய எனக்கும்,என் நண்பிக்கும் மறக்கவே முடியாத பாடல். அள்ளி தந்த பூமி பாடலில்(நண்டு) எனக்கு 'தனித்த காலம் வளர்த்த இடங்களே,இளமை நினைவை இசைக்கும் தெருக்கள் 'பிடித்த வரிகள். பாடல் தொகுப்பு மிகஅருமை அக்கா.

  பதிலளிநீக்கு
 2. பருவமே புதிய பாடல் பாடு பாடலில் வருவது சுஹாசினியும் மோகனும். பிராதப் போத்தன் அல்ல. அவர் அந்தப் படத்தில் சுஹாசினியின் கணவனாக வருவார். இதுதான் சில ஆண்டுகள் கழித்து மணிரத்தினத்தினால் மவுன ராகம் என்று எடுக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 4. நன்றிடா ப்ரிய சகி அம்மு

  நன்றி காரிகன் திருத்திவிட்டேன்.

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...