எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தேன் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேன் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஏப்ரல், 2018

தேன்பாடல்கள். 29. பூக்களும் பாக்களும் அடுக்குத் தொடர்கள்.

1. ஷெண்பகமே ஷெண்பகமே. இது அந்தப் பெண்ணையா இல்லை. அந்தப் பசுவையா என்று இனம் பிரிக்க முடியாமலும் காவியத் தரத்திலும் உள்ள ஒரு கட்டுத்தறிப் பாடல். :)



2. மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு என்று தேவயானியும் ரம்பாவும் பாடும் பாடல். சகோதரிக்குள்ளான ஒரு பரஸ்பர பாசமும் அன்பும்  பொங்கும் பாடல்.



செவ்வாய், 30 மே, 2017

தேன் பாடல்கள்.- 27. ராஜாவும் ரோஜாவும்.



நேருக்கு நேர். மனம் விரும்புதே உன்னை உன்னை.. சிம்ரன் தோன்றிய முதல் படம். ஹிப் டான்ஸ்களின் முன்னோடி. J





அதே சிம்ரனின் முதிர்ச்சித் தோற்றம். ஆனால் க்ளாஸான பாட்டு.

Vaaranam Aayiram - Mundhinam Video | Harris Jayaraj | Suriya

வியாழன், 13 ஏப்ரல், 2017

பட்டாக்கத்தி பைரவனும் சண்டியரும்.

எனக்குப் பிடித்த பாடல்களை அவ்வப்போது பதிவேற்றுவதுண்டு. இங்கே சில பாடல்கள் என் ரசனைத் தேர்வாய் உங்களுக்காக யூ ட்யூபிலிருந்து. :)

மெல்லினமே மெல்லினமே

என் இருபத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி மறைத்தாய்.. என்ற வரிகள் பிடிக்கும் அதோடு விஜயின் டான்ஸ் பிடிக்கும். :)



ஒருவர் வாழும் ஆலயம். 

இதன் லிரிக்ஸுக்காகப் பிடிக்கும்.




Something Something Unakkum Enakkum -Something-divx 

பிரபுதேவா டைப் ஃபாஸ்ட் டான்ஸ். அதிலும் ஜெயம் ரவியும் த்ரிஷாவும் இதில்தான் இயல்பாய் நடித்திருப்பார்கள். செம ஆட்டம்.

வியாழன், 27 அக்டோபர், 2016

தேன் பாடல்கள். - 26. குட்டிராணியும் கண்மணியும்.

351. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

மிக அழகாகச் செல்லும் காதல். அப்பாஸும் ஐஸும். ஆனா நடுவுல புகுந்து அவர் ஏதோ சுயநலமி மாதிரி கெடுத்துடுவாங்க. அப்பத்தானே அழகன் வரலாம் ஐ மீன் மம்முட்டி. :) 




352. என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா..இதை அஜீத் தபுவிடம் கேட்டபடி பாடும்போது மிக அழகாக இருக்கும். தபு கொஞ்சம் மஸ்குலைன் ஃபீமேல். அஜீத் கொஞ்சம் மென்மையான ஹீரோ. கடும் பாலைவனமும் வெய்யிலும் கூட தன்மையாக மாறிவிடும் அற்புதம். இசை சான்ஸே இல்லை. ஒருசில தமிழ்ப் பாடல்கள்  ஆல்பம் மாதிரி மாறிக் கொண்டு வருகின்றன. அதில் இதுவும் ஒன்று.

புதன், 20 ஜூலை, 2016

இளம்பிரிவும் இதயத்தின் பாடல்களும்.

என்னை எப்பொழுதும் மயக்கும் பாடல்கள்.

அழகே வா அருகே வா. 



நானே வருவேன்.



வா அருகில் வா.



நான் கவிஞனும் இல்லை

வெள்ளி, 6 நவம்பர், 2015

தேன் பாடல்கள் :- சித்திரையும் சித்திரமும்.

சித்திரப் பாவை என்ற அகிலனின் நாவல் கல்லூரிக் காலத்தில் படித்தது. மிகப் பிடித்த வார்த்தை அது.  கலைஞர் ஒரு அரசியல் கூட்ட சுற்றுப் பயணமொன்றில் ஒரு ஊருக்கு  வர தாமதமான போது “ மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்களுக்கோ நித்திரை எனக்கோ யாத்திரை “ என்று கூறிச் சென்றதாக உறவினர் ஒருவர் சொல்லக் கேள்வி.  இந்தச் சித்திரமும் சித்திரையும் மிகப் பிடித்துப் போனதால் அதிலிருந்து எனக்குப் பிடித்த சில பாடல்கள் உங்களுக்காகவும் இங்கே.


சித்திரைச் செவ்வானம். - இதை என் தோழி வஹிதா ரெஹ்மான் பாடி கேக்கணும். பதின்பருவப் பாடல். ஆனா படமாக்கப்பட்டவிதம் சொதப்பல். கவிதாவும் முத்துராமனும். ஆனால் கவிதா பயந்து ஒதுங்கி நம்மையும் பதட்டப்பட வைத்திருக்கிறார் காட்சியமைப்பில். கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் வொர்க்கவுட் ஆகலை போல. :) மாக்ஸி என்னும் உடையணிந்த கவிதாவும் (  ஃபுல் ஃபார்மல்ஸில் ) பாண்ட் ஷர்ட்டில் முத்துராமனும் நம்ம தமிழ் சினிமா டூயட்டின் விநோத ஸ்பெஷல். :) ஒவ்வொரு வரியையும் பிசகாமப் பாடுவோமாக்கும். :)



சித்திரமே சொல்லடி. பி பி ஸ்ரீனிவாசின் தேன் குரலில் மயக்கும் பாடல். ஸ்ரீகாந்தும் நிர்மலாவும். ஆனால் இதிலும் நிர்மலாவின் பயப்பார்வை. ஹ்ம்ம் முதல் சினிமா ஷீட்டிங். கண் என்னவோ திரு திருவென விழிப்பது போல் ஒரு தர்மசங்கடம்.. :) அதைப் பொருட்படுத்தாமல் ஸ்ரீகாந்த் ரொமான்ஸாக பாடியிருப்பார். :)

சனி, 30 மே, 2015

தேன் பாடல்கள். பொன் வீதியில் மானும் முயலும் மயிலும்.

341. தோளின் மேலே பாரம் இல்லை.


 கல்லூரிப் பருவத்தில் வசந்தி அக்கா டான்ஸ் ஆடிய பாடல் என்பதால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.  கார்த்திக் திலிப் ஆடும் பாடல் காட்சி அப்போ க்ரூப்பாக இந்த ஸ்டைலில் கிடார் எல்லாம் வைத்துக் கொண்டு ஆடுவது புதுசு. அக்கா ஆடிய ஹாஸ்டல்டே டான்ஸில் பின்பக்கம் ஒரு ஓடம் திரையின் பின்னால் நிழலாக அசைய முன்பக்கம் ஒரு கறுப்பு ட்ரெஸ்ஸில் வெள்ளையாக பெயிண்ட் அடிக்கப்பட்ட ஸ்கெலிடன் போல ஆடியது 1982 இல் ரொம்பவே புதுசு. கட்டறுக்கும் காளைப்பருவம் ஆனால் இந்தப் பாட்டை இப்போதுதான் பார்த்தேன்.

342. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாள்

மிக அருமையான சந்த நயம் மிகுந்த பாடல். கவிதா முத்துராமன் ஜோடி. காற்றினிலே வரும் கீதம் படம். பெரும்பாலான படங்களும் பாடல்களுமே கூடப் பார்த்திருக்கமாட்டேன் ஆனால் இசையும் குரலும் குழையும் அற்புதம் இந்தப் பாடலில் கவர்ந்திழுக்கும். அதே போல ஹொகனேக்கலில் தெறிக்கும் சாரலில் ஒரு வானவில்லும் உருவாகி இருக்கும். 

வெள்ளி, 15 மே, 2015

தேன் பாடல்கள்.காதலும் மயக்கமும்

191.சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
தமிழ்வாணன் பாணியில் தொப்பி கண்ணாடியோடு எம்ஜியாரும் சரோஜா தேவியும் பாடும் பாடல். தாய் சொல்லைத் தட்டாதே 1961 இல் வந்தது .அந்தக் கால மோட்டார் காரும் அழகு.  ”பழகப் பழக வரும் இசை போலே தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே.”. என்ற வரிகள் அருமை.

192.அருகில் வந்தாள். உருகி நின்றாள்.
பார் மகளே பார் படம் என்று நினைக்கிறேன். மனசைச் சோகத்தில் ஆழ்த்தும் பாடல்./// உன்னைச் சூடி இருந்ததும் பெண் தானோ பின் தூக்கி எறிந்ததும் அவள்தானோ.// இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு. அது மாளிகையானதும் அவளாலே. மண் குடிசையானதும் அவளாலே..///உருக்கும் வரிகள்.

193.மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு
அன்னமிட்ட கையில் எம்ஜியாரும் பாரதியும் நடித்தது.சுசீலாவும் டிஎம் எஸ்ஸும் பாடியது. அசல் எம்ஜியார் போலவே நடுவில் குரல் கொடுப்பார் டி எம் எஸ். அட்டகாசம்.

வெள்ளி, 27 மார்ச், 2015

தேன் பாடல்கள் . கண்ணழகும் கண்ணனும்.

121. நினைக்கத் தெரிந்த மனமே.

ஆனந்த ஜோதியில் தேவிகா பாடும் பாடல். சோகத்தைப் பிழிந்து உருக வைக்கும் பாடல். எம்ஜியார் தேவிகா புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார். இதில் ஜப்லா என்ற கழுத்து டிசைன் வைத்த ரவிக்கையை அணிந்திருப்பார் தேவிகா.  ” பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா. இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா.. “ என்ற பதில் கிடைக்காத கேள்விகளோடு முடியும் பாடல்.

122. வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணனவன்.

மெல்லிய இசையோடு இருக்கும் பாடல். மனதை வருடும் காட்சிகள்.  கண்ணழகு பார்த்திருந்து .. காலமெல்லாம் காத்திருந்து .. என்று மயங்கிப் பாடுவார் எஸ் எஸ் ஆர் .. விஜயகுமாரியைப் பார்த்து.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

தேன் பாடல்கள்.பாசமும் பிரிவும் ( ரொமான்ஸ் வெள்ளி :)

221. மானூத்து மந்தையிலே மான்குட்டி பெற்ற மயிலே.
கிழக்குச் சீமையிலே அண்ணன் விஜயகுமார் தங்கை ராதிகாவுக்குப் பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு சீர் கொண்டு வரும் பாடல் காட்சி. ஒவ்வொரு வரியும் வைரம். ( பாடல் வைரமுத்து )

222. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
பாசமலரில் சிவாஜியும் சாவித்ரியும் அண்ணன் தங்கை. தனக்குக் குழந்தை பிறந்ததும் மாமன் சீர் கொண்டு வருவார் என்று பாடுவார். தனக்கும் அண்ணனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை ஒவ்வொரு வரியும் உணர்த்தும்.

223. பெண்ணே அழகிய தீயே
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பெரும்பாலான பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதில் இது ஏ க்ளாஸ் பாட்டு. மின்னலேயில் மாதவனும் ரீமாசென்னும்கூட செம க்யூட்.

224. வெண்மதி வெண்மதியே நில்லு.
இதுவும் மின்னலேதான். பிரிவைப் பாடும் பாடல்.  பாத்ருமில் உக்கார்ந்து அழும் காட்சியில் ரீமா செமயாக நடித்திருப்பார். மாதவனும் சோகத்தைப் பிழிந்திருப்பார். // அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே. அளந்து பார்க்க பல வழி இல்லையே// என்ற வரிகள் பிடிக்கும்.

வெள்ளி, 7 நவம்பர், 2014

தேனே உனை நான் தேடியலைந்தேனே..



231. ஓ வசந்த ராஜா. – தேன் சுமந்த ரோஜா

232. நான் மாந்தோப்பில் – அவன் பூவிருக்கும் தேனெடுக்க

233. தேனே தென்பாண்டி மீனே – இசைத்தேனே இசைத்தேனே

234. வானிலே தேனிலா ஆடுதே

235. பாடு நிலாவே தேன் கவிதை – பூ மீது தேன் தூவும் காதல் வரம்

236. கண்மணி நீ வரக் காத்திருந்தேன். – தேன் நான்

237. தட்டிப் பார்த்தேன். – தேனாக நெனைச்சுத்தான்

238. தேன் சிந்துதே வானம். –

239. பூவே இளைய பூவே – தேங்கும் தேனே. இனிக்கும் தேனே.

240. காத்திருந்து காத்திருந்து – தேன் வடிச்ச பாத்திரமே.

241. என்னோடு பாட்டுப் பாடுங்கள் – தேன் நிலா நாளிலே தாரகைப் பூ

242. மானே தேனே கட்டிப்புடி – பூவோடு தேன் பாயுது. தேனோடு தேன் சேருது.

243. வான் நிலா நிலா அல்ல – தேன் நிலா எனும் நிலா

244. பார்த்தேன் சிரித்தேன் – உனைத்தேன் என நான் நினைத்தேன்

245. வாலிபமே வா வா – தேனிசையே தா தா

வெள்ளி, 31 அக்டோபர், 2014

தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆத்தங்கரை மரமும்..

81. பருவமே புதிய பாடல் பாடு..

சுகாசினியும் மோகனும் ட்ராக் சூட்டில் செம ஃபிட்டாக ஒரு பூங்காவில் ஜாகிங் ஓடும்போது பின்னணியில் ஹார்ட் பீட் போல் ஒலிக்கும் பாடல். இதன் ரிதமும் பாடல்வரிகளும் அழகு. பதின்பருவங்களில் அடிக்கடி ஹம் பண்ணிய பாடல். ( ஆமா இப்ப மோகனும் சுகாசினியும் எங்க இருக்காங்க.)

82. அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா.

மலேசியா வாசுதேவனின் குரலில் அருமையான பாடல். மகேந்திரன் படம். அஸ்வினியும் சந்திர சேகரும் என நினைக்கிறேன்.  மசூதியும் டோம்களும் மாடங்களும் குதிரைவண்டியும் வெளிச்ச ஓவியமும் அழகு. இளமை நினைவை இசைக்கும் தெருக்கள். என்ற வரி பிடிக்கும், :)


83.அத்தைக்குப் பிறந்தவளே..

செம இளமைப் பாடல்.  ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே என்று பாடல் ஆரம்பிக்கும்போது சேர்ந்து உரக்கப் பாடுவது உண்டு ஹாஹா. விக்னேஷும் அவரின் அத்தை மகளும் ( நடிகையின் பெயர் மறந்துவிட்டது .) அத்தையும் மாமனும் சுகம்தானா ஆத்துல மீனும் சொகம்தானா. அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா.. என்ற வரிகள் செம.(ஸ்டூடியோக்களில் மட்டுமே எடுக்கப்பட்டுவந்த சினிமாக்கள் சரித்திரத்தை 75 களில் மாற்றி கிராமங்களின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து நம்மை இயற்கை நேசர்களாக மாற்றிய பாரதிராஜா இப்ப என்ன செய்றார்.. )

84. நலம் .. நலமறிய ஆவல்.

காதல் கோட்டையில் தேவயானியும் அஜீத்தும் பாடும் பாடல். இவர் ஊட்டியிலும் அவர் ஜெய்ப்பூரிலும் இருக்க. மென்மையான குளிரும் இதமான வெய்யிலும் மாறி மாறி அடித்தது போன்ற சுகம் இருக்கும் இந்தப் பாடலில். மென்மையான காதல்.

85. தீர்த்தக் கரையினிலே..

வெள்ளி, 10 அக்டோபர், 2014

தேன் பாடல்கள் ஆசையும் ஆட்டமும்.

71. அன்று வந்ததும் இதே நிலா

எம்ஜியாரும் சரோஜா தேவியும் பாடும் பெரிய இடத்துப் பெண்  பாடலை நாங்கள் கல்லூரி நாட்களில் நின்றபடி செய்யும் ஒரு எக்சர்ஸைஸ் போலப் பாடி இருக்கிறோம். மிக அருமையான இசைநடனப் பாடல்.  நிலவைப் போல சரோஜாதேவி ஜொலிப்பார்.

72. காதலென்னும் வடிவம் கண்டேன்..

பாக்ய லெக்ஷ்மியில் உள்ள பாட்டு இது. பருவப்பெண்கள் தனிமையில் பாடும் பாடல் என்னவோ எனக்குப் பிடித்த ஒன்று. ஈ வி சரோஜா தோட்டத்தில் ஆடிப் பாடுவார். துள்ளாமல் துள்ளும் உள்ளம், மின்னாமல் மின்னும் கன்னம் என்ற வரிகள் அழகு.  


73. ஹலோ மிஸ்டர் ஜமீன் தார்  ஹௌ டூ யூ டூ..:)

சாவித்ரியும் ஜெமினியும் பாடும் பாடல். மிஸ்ஸியம்மா என நினைக்கிறேன். ஜோடி அழகு.

வியாழன், 18 செப்டம்பர், 2014

தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.

181. அம்மா என்றால் அன்பு.
ஜெயலலிதாம்மா பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல். அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு. ஆசான் என்றால் தெய்வம். என்ற அந்தப் பாடல் அம்மாவின் குரலுக்காகவே பிடிக்கும்.படம் அடிமைப்பெண்.

182. அன்பே அமுதா.
ரவிச்சந்திரன் விஜயகுமாரி நடித்த பாடல். ./// நீ பாலமுதா, சுவைத் தேனமுதா இல்லை பாற்கடலில் பிறந்த சொல் அமுதா, உந்தன் சொல் அமுதா இல்லை சுவை அமுதா. கொஞ்சம் நில் அமுதா அதைச் சொல் அமுதா./// ப்ளஸ்டூவில் என்னோடு படித்த அமுதாவிடம் தினம் ஒரு முறையாவது இந்தப் பாடலைப் பாடி இருப்போம். 

183. மெல்ல மெல்ல மெல்ல என்மேனி நடுங்குது மெல்ல
ஜெமினியும் சரோஜா தேவியும் நடித்த பாடல். படம் பணமா பாசமா. ///மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல. சொல்ல சொல்லச் சொல்ல என் சிந்தை குளிருது சொல்ல. ஒரு பெண்ணின் மென்மையான காதல் உணர்வுகளை, மெல்லிய காமத்தை அற்புதமாகப் படம் பிடித்த வரிகள்.

வியாழன், 11 செப்டம்பர், 2014

தேன் பாடல்கள் 180. மார்கழியும் மல்லிகையும்

171. நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா.
காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனும் காஞ்சனாவும், ராஜஸ்ரீயும் ரவிச்சந்திரனும் ( விசிலில் )  பாடும்பாடல். ஒன்று பி பி ஸ்ரீனிவாஸ் குரல் என்று நினைக்கிறேன். எல் ஆர் ஈஸ்வரியின் குரலும் மிக அருமையாக இருக்கும். ஏதோ அணைக்கட்டின் பூங்காவில் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. இளமையான, துள்ளலான ஹீரோஸ் & ஹீரோயின்ஸ்.

172. மார்கழித் திங்கள் அல்லவா..
சங்கமம் படத்தில் விந்தியாவும் ரஹ்மானும் நடித்த பாடல் காட்சி. கிராமிய நடனக் கலைஞனான ரஹ்மானும் பரத நாட்டியக் கலைஞியான விந்தியாவும் காதலிப்பார்கள். திருமணம் செய்து கொள்ள அப்பா விஜயகுமார் தடை விதித்திருப்பார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு நடனமாடுவார் விந்தியா. மனதைத் தொடும் வரிகள்.

173. அந்தி மழை பொழிகிறது.
பள்ளி செல்லும் பதின் பருவத்தில் கேட்ட பாடல். பித்துப் பிடிக்காத குறைதான். வாஹ் வாஹ் வாஹ் வஹ்ஹாஹா என்று ஹம்மிங்கோடும் ம்யூசிக்கோடும் பாடிய பாடல். கண் தெரியாத ராஜபார்வைக்கார கமல் , காந்தக் கண்ணழகி மாதவியைக் காதலிக்கும் பாடல். /// ஈவினிங் ரெயின் ஷவரிங். இட்ஸ் ஒன் ஒன் ட்ராப்ஸிலும் யுவர் ஃபேஸ் ஸீயிங்ங்ங்ங் /// என்று என் அக்கா ரேவ் பாடுவாள்.

174. ஏண்டி சூடாமணி ..
சிம்ரனும் கமலும் நடித்த பம்மல் கே சம்பந்தம் படப்பாடல். ஏண்டி சூடாமணி காதல் வலியைப் பார்த்ததுண்டோடி. என்று இசையோடு கேட்கும் சமயம் வயிற்றைப் பிசைவது போன்றும் நெஞ்சைப் பிழிவது போன்றும் சோகம் உண்டாகும். 


175. கண்மணி அன்போடு காதலன்
குணாவில் கமல் பாடும் பாடல். என்று கேட்டாலும் பிடிக்கும். // மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது.// என்ற வரிகள் அற்புதம். மானே தேனே போட்டுக்கணுமா என்று கேட்கும் இடங்கள் புன்னகையை வரவழைக்கும். அந்த மலைக் குகை இருட்டும். லேசாகப் பிளந்த இரு பாறைகளுக்கிடையேயான இடை வெளியில் கமல் கால் பாவிக் குதித்து ஆடுவது திகிலான அற்புதம். கொடைக்கானல் சென்ற போது இந்தக் ( குணா கேவ்) குகைக்குள் போக முடியாமல் போய்விட்டது. அபாயகரமான குகை என்று கைட் தடுத்து விட்டார்.

வியாழன், 4 செப்டம்பர், 2014

தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.

131. சங்கீத ஸ்வரங்கள். ஏழே கணக்கா

அழகனில் மம்முட்டியும் பானுப்பிரியாவும் பாடும் பாடல். இரவில் ஆரம்பித்து விடியற்காலையில் முடியும். இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவும் காலையில் சூரிய கிரணங்களோடு தொலைக்காட்சி ம்யூசிக்கும் அழகு. மேலும் இருவரும் படுத்தபடியும் அமர்ந்தபடியும் திரைச்சீலையைத் தொட்டுக் கொண்டும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்தப் பாடல் பலரின் தூக்கத்தைக் கெடுத்ததோடு மட்டுமல்ல ரிங் டோனாகவும் இருக்கிறது. :)

132. ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி.

அவன் தான் திருடன் என்றிருந்தேன். அவனை நானே திருடிக் கொண்டேன். முதன் முதல் திருடும் காரணத்தால் முழுசாய்த் திருட மறந்துவிட்டேன். என்ற வரிகள் பிடிக்கும்.  புன்னகை முகத்தோடு சரோஜா தேவி பாடும் நல்ல ரிதமிக்கான பாடல். பள்ளிக் கூடத்துக்குத் தினமும் மாட்டு வண்டியில் போவோம் அந்த இனிமையான நினைவுகள் மறுபடியும் நிழலாடும் இந்தப் பாடல் கேட்கையில்.

133. காற்றில் எந்தன் கீதம்.

ஸ்ரீதேவியும் ரஜனியும் நடித்த படம் ஜானி. இதில் டபிள் ஆக்ட் ரஜனி. இந்தப் பாடல் ரொம்ப மெலடியஸாக இருக்கும். தனிமையும் ஏக்கமும் பொங்கி வழியும் பாடல். 

134. ஆசையக் காத்துல தூதுவிட்டு.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

தேன் பாடல்கள்.. தலைவர்களும் தலைவிகளும் கெமிஸ்ட்ரியும்.

91. இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவி..

கமலும் நிரோஷாவும் பாடும் பாடல். வழக்கம்போல தலை கெமிஸ்ட்ரியில் நூத்துக்கு நூத்துச் சொச்சம் வாங்கும் பாடல். குட்டிக் குழந்தை போல் இருப்பார் நிரோஷா.

92. எங்கிருந்தோ ஆசைகள். எண்ணத்திலே ஓசைகள்.
சந்திரோதயத்தில் ஜெயாம்மா பாடும் பாடல். காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஜெயாம்மா, எம்ஜியார் காட்சி அழகு. இருவர் முகமும் கவர்ச்சியும் காந்தமும் பொருந்தியது.

93. இளமை கொலுவிருக்கும்.
சாவித்ரிம்மாவும் ஜெமினியும் நடித்த படம். அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ, அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ. என்ற வரிகள் எனக்குப் பிடித்தது.

வெள்ளி, 25 ஜூலை, 2014

தேன் பாடல்கள்.நாணமும் தவிப்பும்

211. பார்த்த முதல் நாளே.
வேட்டையாடு விளையாடுவில் கமலும் கமலினி முகர்ஜியும் பாடும் அற்புதமான பாடல். மனமொத்த தம்பதிகளின் கனிவு அழகாக இருக்கும். இருவரின் புன்னகையும் மனதைக் கொள்ளை கொள்ளும்.

212. தனிமையிலே இனிமை காண முடியுமா.
ஜெமினியும் சரோஜாதேவியும் பாடும் பாடல்.  இரவில் நிலவில் கொள்ளை அழகாக இருக்கும். மாடியில் ஜெமினியும் ஏணியின் கீழ் சரோஜாதேவியும் நிற்பார்கள். கடல் இருந்தால் அலை இருக்கும் உலகில் எதுவும் தனிமை இல்லை எனப்பாடுவது அழகு.

213. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா.
இந்தப் பாடலைக் கேட்டால் எனக்கு மணியனின் இவள் அல்லவோ பெண் ஞாபகம் வரும்.அதில் ட்ரான்சிஸ்டரில் பாட்டுக் கேட்கும் ஹீரோ அதைக் கேட்கவென்றே வரும் ஹீரோயின் சியாமளா. படத்தில் எஸ் எஸ் ஆரும் விஜயகுமாரியும்.

வெள்ளி, 18 ஜூலை, 2014

தேன் பாடல்கள்.மாலையும் மலரும்.

201.கேட்டதெல்லாம் நான் தருவேன்
டாலி பொம்மை மாதிரி இருக்கும் ஜெயாம்மாவும் முத்துராமனும் பாடும் பாடல். /// ஒரு பொழுதேனும் பிரிவறியாமல் வாழ்வது நாம்தானே.. // காலமெல்லாம் நான் வருவேன் எனை நீ தடுக்காதே// வரிகளும் திருமணமாகிக் குழந்தையுடன் போவதுவரையுமான காட்சிகள் அழகு. 

202. பூவே வாய் பேசும்போது.
நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு. நீ ஒரு வார்த்தையால் என்னை நிரப்பி விடு. // மிக அருமையான லிரிக்ஸ். ஒவ்வொரு வார்த்தையும் இசையும் அற்புதம். ஏற்கனவே எனக்கு சிம்ரன் பிடிக்கும் இந்தப் பாடலில் ரொம்பப் பிடித்தது. ஷாமும் கூட.

203. எங்கிருந்தோ ஆசைகள்.
ஜெயாம்மாவும் எம்ஜியாரும் பாடும் பாடல் எம் எஸ் வி யின் இசை. மிக இயல்பான வெட்கத்தோடு அழகான பாடல். படம் சந்திரோதயம்.

204. மாலை என் வேதனை கூட்டுதடி.
சேதுவில் விக்ரம் பாடும் பாடல். மிக அருமையான வரிகள். கேள்வியும் பதிலுமாய் சில இடங்களில் அழகு. மேலும் அறந்தாங்கி என்று நினைக்கிறேன். இரண்டு பஸ்கள் கடக்கும் ஒரு வளைவு வரும். மிக அழகான இடம் அது. 

வெள்ளி, 20 ஜூன், 2014

தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலயமணியும்.

161. பூங்காற்று திரும்புமா.
மனசை வருடும் பாட்டு. பாராட்ட , மடியில் வச்சு தாலாட்ட ஒரு தாய் மடி கேட்டு ஏங்கும் பாடல். ராதாவும் சிவாஜியும் பாடும் பாடல். முதல் மரியாதை படம். அன்பையும் காதலையும் தேடித் தேடி அலையும் வரிகள். 

162. ஆயர்பாடி மாளிகையில்
கண்ணதாசன் வரிகளில் கண்ணன் துயிலும் காட்சி விரிவது அழகு. என் ஆயா ஒரு முறை பட்டாலையில் என் ஐயா திண்டில் சாய்ந்து தூங்குவதைப் பற்றி இந்தப்  பாடலோடு குறிப்பிட்டார்கள். நினைக்கும்போதெல்லாம் திகைப்பாய் இருக்கும் கணவரைப் பற்றிப் பரிவோடு குறிப்பிடும் அளவு எவ்வளவு அன்பும் காதலும் இருந்திருக்க வேண்டும்.

163. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கல்லூரியில் ஃபோ(ல்)க் டான்ஸ் போட்டியில் ஆடியது மறக்க முடியுமா. டென்த் ப்ளஸ்டூ படிக்கும்போதே பக்கத்துவிட்டு பாமாக்கா மார்கழியில் பாவை நோன்பு இருப்பார்கள். என்னையும் சேர்த்துக் கொள்வார்கள். புகைப்படத்தில் இருக்கும் கிருஷ்ணரை நடுவில் வைத்து சுற்றிச் சுற்றி வருவோம். அதன் பின் கல்லூரியில் இந்தப் பாடலையும் மயங்கி மயங்கிப் பாடி ஆடி இருக்கிறோம். ஒவ்வொரு வரியும் மறக்காது . கண்ணன் மேல் அவ்வளவு காதல். :) // குளத்தில் மூழ்கி குளிக்கையில் கோவிந்தன் பெயரைச் சொன்னால் கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி. சேலை திருத்தும் போது சீரங்கன் பேரைச் சொன்னால் அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி.

Related Posts Plugin for WordPress, Blogger...