எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 மே, 2015

தேன் பாடல்கள். பொன் வீதியில் மானும் முயலும் மயிலும்.

341. தோளின் மேலே பாரம் இல்லை.


 கல்லூரிப் பருவத்தில் வசந்தி அக்கா டான்ஸ் ஆடிய பாடல் என்பதால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.  கார்த்திக் திலிப் ஆடும் பாடல் காட்சி அப்போ க்ரூப்பாக இந்த ஸ்டைலில் கிடார் எல்லாம் வைத்துக் கொண்டு ஆடுவது புதுசு. அக்கா ஆடிய ஹாஸ்டல்டே டான்ஸில் பின்பக்கம் ஒரு ஓடம் திரையின் பின்னால் நிழலாக அசைய முன்பக்கம் ஒரு கறுப்பு ட்ரெஸ்ஸில் வெள்ளையாக பெயிண்ட் அடிக்கப்பட்ட ஸ்கெலிடன் போல ஆடியது 1982 இல் ரொம்பவே புதுசு. கட்டறுக்கும் காளைப்பருவம் ஆனால் இந்தப் பாட்டை இப்போதுதான் பார்த்தேன்.

342. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாள்

மிக அருமையான சந்த நயம் மிகுந்த பாடல். கவிதா முத்துராமன் ஜோடி. காற்றினிலே வரும் கீதம் படம். பெரும்பாலான படங்களும் பாடல்களுமே கூடப் பார்த்திருக்கமாட்டேன் ஆனால் இசையும் குரலும் குழையும் அற்புதம் இந்தப் பாடலில் கவர்ந்திழுக்கும். அதே போல ஹொகனேக்கலில் தெறிக்கும் சாரலில் ஒரு வானவில்லும் உருவாகி இருக்கும். 343. நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் 

{விஜய்காந்தும் பூர்ணிமாவும் நடித்த எளிய காட்சியமைப்புள்ள பாடல். அலையும் மணலும் கூட காட்சியமைப்பை அழகாக்கும். எம் எல் ஸ்ரீகாந்தின் குரல் மென்மையாக இருக்க வாணி ஜெயராமின் குரல் அதை விட இதமாகப் பின் தொடரும். இன்று போல் வாழ்ந்திடலாம் அன்போடு, தேன் சுவை தமிழ் பேசி தெம்மாங்கு இசை பாடி..  என்ற வரிகள் அழகு. தண்டட்டியும் கை வளையும், கழுத்து ஆரமும் கொண்டையும் சூடிய பூவும் பூர்ணிமாவை பரதப் பெண் போலச் சித்தரிப்பது வெகு அழகு.}

இது தூரத்து இடி முழக்கம் என நினைத்து பதிவு செய்தேன். இது நினைப்பது நிறைவேறும் என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் என்று உமேஷ் ஸ்ரீனிவாசன் விளக்கம் கொடுத்திருக்கிறார். யூட்யூபில் தவறாக இந்தப் படத்தின் பாடல் காட்சியோடு டப் செய்யப்பட்டுள்ளது தெரியாமல் பகிர்ந்துள்ளேன் மன்னிக்க :) 

344.  ரொம்ப நாளாக எனக்கொரு

{சுஜாதாவும் கமலும் நடித்த பாடல். வாணி ஜெயராம் எஸ்பிபி , சங்கர் கணேஷ் கூட்டணி. சுஜாதா எப்பவுமே மனதை அமைதிப்படுத்தும் அழகு. மான் விழியோடு கன்னத்தில் மச்சம் வைத்த மான் குட்டி போல இருப்பார். இரட்டைச் சடையும் அசைந்தாடும் ஜிமிக்கியும் கோண வகிடும்  தாவணியும் செம அழகு. தலதான் அப்போதைய ஆண்களின் ஹேர் ஸ்டைலுக்கான மொத்த ஐகான்.}

இதுவும் என்னடி மீனாட்சி படப்பாடலாம். இது ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது என்ற படத்தின் பாடல் காட்சியோடு டப் செய்யப்பட்டுள்ளது. யூ ட்யூபை நம்பி ஒரு பாட்டு கூட அப்லோட் செய்யமுடியாது போலிருக்கே. ரீ மிக்ஸ் மாதிரி டப் பண்ணி இவங்களே வெளியிட்டுடுறாங்க. :)

இதையும் எடுத்துச் சொன்ன உமேஷ் ஸ்ரீனிவாசனுக்கு நன்றி :)


345. காதலின் பொன் வீதியில்


மு க முத்துவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்த காட்சி. மிக அழகான இசையமைப்பு. கொஞ்சம் ஆர்டிஃபிஷியலாக இருந்தாலும் ”காதலின் பொன் வீதியில் - கண்ணோடு ஒருத்தி வந்தாள்”  என்ற வரிகள் டி எம் எஸ்ஸின் கம்பீரக் குரலில் கவர்ந்தவை. சுஜாதா மான் குட்டி என்றால் இங்கே நிர்மலா வெண்ணிற முயல் குட்டி போல துள்ளித் துள்ளி ஆடுவார். ஆரஞ்ச் கலர் எம்ப்ராய்டரி புடவை அந்தக்கால எக்ஸ்பென்சிவ் ஐட்டம். இம்மாம் பெரிய கொண்டை போட்டுக் கொண்டு ( விக் ) எப்படித்தான் இவர்கள் ஆடினார்களோ என வியக்க வைக்கும்.


346. வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு.

வாழ்வு என் பக்கம் படம் இசை எம் எஸ் விஸ்வநாதன். முத்துராமன் லெக்ஷ்மி. ஐடியல் ஜோடி. தலை நிறைய பூவைத்த பூங்கொடி போன்ற பெண்களை இன்று காண முடியுமா. :) விரல்களோடு வீணை பேசுவது என்பது அழகான வார்த்தை. இருவரின் மந்தகாசப் புன்னகை முகத்தையும் லெக்ஷ்மியின் மயில் போன்ற நளினத்தையும் நாணத்தையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். :)


347. வா பொன்மயிலே நெஞ்சம்

சுஜாதா சிவகுமார் இளந்தென்றலில் ஊஞ்சலாடும் சுகமளிக்கும் பாடல்.  “ காதலின் ஜாடை எல்லாம் கண்ணழகிலே “ என்ற வார்த்தைகள் அழகு.  சுஜாதாவின் கொண்டையின் ஒரு பக்கம் பூவும் சிவகுமார் ( பெல்ஸ்/ பெல்பாட்டம் அந்தக்கால ஃபேஷன் )  வலது கையில் கட்டியிருக்கும் வாட்சும் இன்று காணாமல் போன விஷயங்கள். மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ. பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ. என்ற வரிகளும் அழகு.

348. அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன்

ஒயிட் ட்ரெஸ்ஸில் தேவதை மாதிரி பறந்து பறந்து ஆடும் காட்சிகள் அன்று பிரபலம்.  ஜெயசித்ரா சிவகுமார் ஜோடி. கடற்கரைப் பாடல். பெல்ஸ் போல அன்றைய இளைஞர்கள் விரும்பி அணிந்தது பைஜாமா எம்பிராய்டரி போட்ட ஜிப்பா. படம் எங்கம்மா சபதம். “நான் நீயன்றோ நீ நானன்றோ “ என்ற வரிகள் பிடிக்கும். :)


349. கேட்டதெல்லாம் நான் தருவேன்

எம் எஸ் வி யின் இன்னிசையில் எஸ் பி பி சுசீலாம்மா பாடிய பாடல். படத்தில் முத்துராமன் ஜெயம்மா பாடும் பாடல். ஜெயாம்மான்னாலே ஜில் ஜில்தான். :)  ரவுண்ட் நெக் க்ளோஸ்ட்  முழுக்கை பனியன் , லெகின்ஸ் போல சுடி பாட்டம் காதோரம் சுருட்டையாகத் தொங்கும் முடி - இதெல்லாம் அந்தக் கால ஃபேஷன். :) திடீரென திருமணமாகி புடவை காஸ்ட்யூமுக்குப் போய்  நாணத்தோடு பாடி பிள்ளைகுட்டி என ஆகிவிடுவார்கள் ஒரே பாடலில். “ ஒரு பொழுதேனும் பிரிவறியாமல் வாழ்வது நாம்தானே “ ரசிக்கவைத்த இடம். :)


350. தேவியின் திருமுகம்.
சிவகுமார் ஜெயசித்ரா நடித்த வெள்ளிக்கிழமை விரதம் பாடல்.  மிக அழகான தலைமுடி சைட்பர்ன்ஸ் எனப்படும் கிருதா டபிள் சூட் ட்ரெஸ் என கலர்ஃபுல்லாக சிவகுமாரும் மூக்குத்தி அடர்ந்த ( விக் ) தலைமுடியுடன் ஜெயசித்ராவும் பாடும் மெலடி சாங். ( சங்கர் கணேஷ் இசை அவ்வப்போது புது ட்ராக் ஒலிக்கும் :) ( டி எம் எஸ் சுசீலாம்மா பாடியது )

ராமகிருஷ்ணன் என்ற  மலையாள நண்பர் ( தென்னகப் பகுதிக்கான குழந்தைகளுக்கான சினிமா அமைப்பின் இயக்குநர் இவர் )  சொல்வார் மஞ்சக் கயிறு இல்லைன்னா தமிழ் சினிமாவே இல்லை என்று. அதை அப்போது எடுக்கப்பட்ட ஒவ்வொரு படங்களும் நிரூபித்தன என்பதுதான் உண்மை. அவர் மனைவி ரஜிதா சொல்வார் ..அதைப்போல பூ அலங்கரிக்கப்பட்ட கட்டிலும் என்று .  இந்தப் பாடலிலும் அவை இரண்டும் வரும். அப்படி தமிழ்ப்படங்களை நேரடியாக கிண்டல் செய்பவர்களிடம் என்ன சொல்ல முடியும் . ஹிஹி என்று கொஞ்சம் அசட்டுச் சிரிப்புத்தான் :)

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.
8 கருத்துகள்:

 1. தேர்ந்தெடுத்த பழைய தமிழ் சினிமா பாடல்களின் பட்டியலும், அதில் தங்களின் ஆர்வமும், ஈடுபாடும் வியக்க வைக்கின்றன. தாங்கள் தலையிடாத விஷயங்களே ஏதும் இல்லை என்பதையும் நன்கு உணரமுடிகிறது. :) மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. (343) 'நினைப்பது நிறைவேறும்' பாடல் இடம் பெற்ற படமும் அதே பெயர் கொண்டதுதான். நீங்கள் கூறும் பாடல் 'தூரத்து இடி முழக்கம்' படத்தில் வரும் 'உள்ளமெங்கும் தள்ளாடுதே' பாடல். (https://www.youtube.com/watch?v=wz6eKSemqUw) யூ ட்யூபில் யாரோ மாற்றி Dub செய்துள்ளார்கள். (344) 'ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை' பாடல் இடம்பெற்ற படம் 'என்னடி மீனாட்சி', இதுவும் யூ ட்யூபில் தவறாக 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' படப்பாடல் காட்சியால் நிரப்பப்பட்டுள்ளது.(https://www.youtube.com/watch?v=PVvAsSFRXPA)

  பதிலளிநீக்கு
 3. தங்களின் கருத்துக்கு நன்றி கோபால் சார்.

  திருத்தியமைக்கு நன்றி உமேஷ். இடுகையிலும் திருத்தம் கொடுக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 4. // தோளின் மேலே பாரம் இல்லை... கேள்வி கேட்க யாருமில்லை... // அப்படித்தான் கல்லூரி நாட்களில் ஆட்டம் போட்டோம்... அந்த நாட்கள் வருமா...?

  பதிலளிநீக்கு
 5. சரியா சொல்லி இருக்கீங்க டிடி சகோ. :)

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 7. என்ன அருமையான பாடல்கள்...அதுவும் ஒரு வானவில் போலே என்றெல்லாம் பாடிக் களித்ததுண்டு...அந்த நாளும் வந்திடாதோ.....

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...