எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 20 மே, 2015

குழந்தைகள் விளையாட்டு பகுதி 7. ஈஸி சுடோகும் காகுரேவும்.



இது மாதிரிப் படம்-  சுடோகுவும் காகுரேவும்.

32. பில்டிங் ப்ளாக்ஸ்.
இதில் மெக்கானிக்ஸ்/ மெக்கானோ என்ற பில்டிங்க் செட்டுகளை விளையாடி இருக்கிறார்கள் பிள்ளைகள். பில்டிங்க் மட்டுமல்ல, பாட்டரியுடன் எலக்ட்ரிக் கார் போன்றவற்றையும் வடிவமைக்கலாம். துவாரங்கள் உள்ள இரும்பு/சில்வர் தகடுகளும் ஆணிகளும் இதன் மூலப் பொருட்கள். பிள்ளைகளின் கைகளுக்கும் மூளைக்கும் கண்ணுக்கும் பயிற்சிஏரோப்ளேன், வீடு, வண்டிகள் போன்றவற்றை வடிவமைக்கலாம்.

33. க்ராஸ்வேர்டு பசில்ஸ்
பத்ரிக்கைகளில் மற்றும் காமிக்ஸ் புக்குகளில் இந்த பசில்ஸ் வரும். இது வெக்காப்லரியை செம்மையாக்கும்டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துவுல வரும்.
34 .ஸ்கிராபிள்ஸ்.
இது நிறைய வார்த்தைகளை உருவாக்க வைக்கும். ஒரு டப்பாவில் இருந்து சில ப்ளாஸ்டிக் சதுரங்களை குலுக்கிக் கொட்டினால் என்ன எழுத்துகள் விழுகின்றனவோ அந்த எழுத்துக்களை வைத்து வார்த்தைகள் உருவாக்க வேண்டும். யார் அதிகம் வார்த்தைகள் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் வின்னர்

35 . புக் கிரிக்கெட். :- 
இதுக்கு பெரிய புத்தகம் ஒன்று வேண்டும். டிக்‌ஷ்னரி அல்லது என்சைக்ளோ பீடியா போன்ற ஒரு புக். அதுல நாம ஒரு பேஜை திறக்கணும் அதுல ரைட் ஆர் லெஃப்ட் நு கேட்டுட்டு அந்தப் பக்கத்துல என்ன நம்பர் கடைசியா வருதோ அதுதான் நம்மோட ரன். சைபர் வந்தா அவுட், மத்த நம்பர் எல்லாம் வந்தா 1 – 9 வரை ஸ்கோர் உண்டு. நம்ம ஸ்கோரை ஒரு பக்கம் எழுதிட்டு வரணும். நம்மோட போட்டியாளரும் நாம அவுட்டான உடனே விளையாடுவாங்க . அவங்க ஸ்கோரை இன்னோரு பக்கம் குறிச்சுக்குவாங்க. அவங்களும் சீரோ வாங்கினா அவுட்.. இப்பிடி ஒரு 10 தரம் அவுட் ஆனவுடனே ஸ்கோரைக் கூட்டிப்பார்த்து யார் அதிகமோ அவங்கதான் வின்னர்.

36..ஈஸி சுடோகு & காகுரே. 

சுடோகுன்னா பொதுவா 9 நம்பர் இருக்கும். அதுல ஈஸி, மீடியம், கஷ்டம் அப்பிடின்னு ரகவாரியா இருக்கும். இன்னும் கில்லர் சுடோகு, டபுள் சுடோகு, மல்டிபிள் சுடோகு, லெட்டர்ஸ் சுடோகுன்னு இருக்கும். ஆனா இந்த ஈசி சுடோகுல 4 நம்பர், 6 நம்பர்தான் இருக்கும். அதுவும் மேல் கீழா 6. 6, 6, சைடாலயும் 6,6,6 இருக்கும் இல்லாட்டி மேல்கீழா 4,4,4,. & சைடால 4,4,4, இருக்கும். இது ரொம்ப ஈஸியா சால்வ் பண்றாமாதிரி இருக்கும்.

காகுரே தினமலர்ல ஸ்பெஷல். இதுல குடுத்துறக்க நம்பர்படி அந்த இடது அல்லது மேலே உள்ள எண்ணுக்கான கூட்டுத் தொகையா அமையும்.  அதுவும் 1 - 9 வரை உள்ள எண்கள் ஒரு முறை மட்டுமே மேல் கீழேயோ, இடம் வலமாகவோ வரணும்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகுதி - 1.தாப்பூ தாமரைப் பூ.


2. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.


3. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா மண்ணா.

 

 

4.  குழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம்ஸ் - INDOOR GAMES )

 

5. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை, I SPY.

 

6. குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு. 

 

விளையாட்டும் வார்த்தைகளும். 

 

 7. குழந்தைகள் விளையாட்டு பகுதி 7 . ஈஸி சுடோகும் காகுரேவும்.

 

8.  குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.

 

 

9. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி. 

 

10. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.



4 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான சுவாரஸ்யமான நினைவலைகளை மீட்டுத்தரும் இனிய பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. இவைகள் கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு...!

    பதிலளிநீக்கு
  3. நன்றி கோபால் சார்

    நன்றி டிடி சகோ :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...