எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 மே, 2015

குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.



37.எண் விளையாட்டு./காகுரே. 

இது தினமலர்ல வந்துகிட்டு இருக்கு சுடோகு போலத்தான். இதுக்குப் பேரு காகுரே.இது குறுக்கெழுத்துப் புதிர்போலக் கட்டங்களில் சில எண்களை அங்கங்கே கொடுத்திருப்பாங்க. மேல் கீழா, இடம் வலமாக் கூட்டினா நமக்கு அந்தக் கூட்டுத் தொகையில் வரணும். வந்த எண்ணே வரக்கூடாது. மூணு கட்டம் கொடுத்து 18 ந்னு கொடுத்திருந்தா 9 +1 +8 இல்லைன்னா 9+2+7 , 9+3+6, 9+5+4 ,5+6+7, 4+6+8 , 7+3+8 இன்னு வரும். நாலு கட்டம்னா 9+1+2+6 இல்லைன்னா 9+1+3+5, 9+2+3+4, 8+1+2+7, 8+2+3+5, 8+1+4+5, 8+1+3+6, 8+1+5+4, அண்ட் சோ ஆன் இருக்கும்.. J

38.வார்த்தை விளையாட்டு./குறுக்கெழுத்துப் புதிர்.

பன்னெடுங்காலமா விளையாடின விளையாட்டு இது. தினமலர் வாரமலர்ல வருது. ஒரு க்ளூ கொடுத்திருப்பாங்க. மேலும் கீழும் வலமும் இடமும் இதை ஃபில்லப் செய்யணும். இத ஃபில் பண்ணி அனுப்பினா ப்ரைஸ் எல்லாம் உண்டுன்னு அறிவிச்சிருப்பாங்க ராணிமுத்துவுல. J


39.காட்டா பீட்டீஇண்டூ அண்ட் சைபர் போடுறது குறுக்கே நேரே அடிக்கிறதுக்கு மார்க்

.காட்டா பீட்டீன்னா ஒன்பது கட்டம் போட்டுக்கணும் நோட்புக்ல அல்லது சிலேட்ல அல்லது தரையில அதுல ஒருத்தங்களுக்கு இண்டூ சிம்பர் இன்னொருத்தருக்கு சீரோ சிம்பல் ஒருத்தங்க இண்டூ போட்டுட்டு வரணும். இன்னொருத்தங்க சீரோ போட்டுட்டு வரணும். யார் ஒரே லைன்ல நேராவோ மேல் கீழாவோ கிராசாவோ மூணு சிம்பல் போட்டாங்களோ அவங்க வின்னர்.

40 .பிங்கோ = BINGO

பிங்கோ ரொம்ப சுவாரசியமான விளையாட்டு இதுக்கு ரெண்டு மூணு பேர் விளையாடலாம். ஒரு பேப்பரும் பேனாவும் போதும். 25 உள்ள ஒரு கட்டம் 5 இண்டூ 5 உள்ள 25 கட்டம் போட்டு அதுல ஒன்னுலேருந்து 25 வரைக்கும் உள்ள நம்பரை எழுதணும். 

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆர்டர்ல எழுதி இருப்போம். விளையாட ஆரம்பிக்கும்போது ஒருத்தர் ஒரு நம்பரை சொல்லிட்டு இண்டூ போட்டுக்கணும். எல்லாரும் அதே நம்பரை இண்டூ போட்டுக்கணும். அடுத்தவர் ஒரு நம்பர் சொல்ல திரும்ப எல்லாரும் அதை இண்டூ போட்டுக்கணும். இப்பிடியே ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு ஒரே வரிசையில உள்ள நம்பரை சொல்லி அந்த வரிசையில் இருக்கும் 5 நம்பரும் கட் ஆகிட்டா B ( INGO ) ன்னு போட்டுக்கலாம் . வரிசையா மேலிருந்து கீழோ, வலமிருந்து இடமோ அல்லது குறுக்கேயோ  5 நம்பர் அடிபட்டுட்டா முறையே I, N , G , O  இதப் போட்டுட்டு சீக்கிரம் யாருக்கு பிங்கோ முடிஞ்சிதோ அவங்க பிங்கோன்னு கத்தலாம். 

உடனே ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க பேப்பரைக் கீழே பரப்பி வைச்சு ஒத்துப் பார்த்து பிங்கோ கரெக்டுன்னா ஒத்துப்பாங்க. முதல்ல பிங்கோ சொன்னவர் வின்னர். அடுத்து அடுத்துக் கட்டங்கள் போட்டு விளையாடிக்கிட்டே இருக்கலாம் இந்த விளையாட்டு. 

41 .நேம் ப்ளேஸ் திங்ஸ் அனிமல்ஸ்.  = NAME PLACE THINGS ANIMALS.

இது பொதுவா ட்ராவல் சமயத்துல விளையாடுறது. பஸ், கார், ட்ரெயின் போன்றவற்றில் ப்ரயாணம் செய்யும்போது பிள்ளைகளுக்குப் போர் அடிச்சா இந்த விளையாட்டுத்தான் விளையாடுவோம். A யிலிருந்து Z வரை உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒருத்தர் நேம் சொல்லணும். அடுத்தவங்க ப்ளேஸ் சொல்லணும். அடுத்தவங்க திங்ஸ் சொல்லணும். அடுத்தவங்க அனிமல்ஸ் சொல்லணும். நிறைய பேர் விளையாண்டா சுவாரசியமா இருக்கும். நிறைய ஊர், மனிதர்கள்,தேசம், பொருட்கள், விலங்குகள் பேரைத் தெரிஞ்சுக்கலாம். 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகுதி - 1.தாப்பூ தாமரைப் பூ.

2. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.


3. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா மண்ணா.

 

 

4.  குழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம்ஸ் - INDOOR GAMES )

 

5. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை, I SPY.

 

6. குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு. 

 

விளையாட்டும் வார்த்தைகளும். 

 

 7. குழந்தைகள் விளையாட்டு பகுதி 7 . ஈஸி சுடோகும் காகுரேவும்.

 

8.  குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.

 

 

9. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி. 

 

10. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.

 


8 கருத்துகள்:

  1. தங்களின் தங்கமான இதுபோன்ற பதிவுகளால் நானும் அடிக்கடி குழந்தைகள் போல ஆக நேரிடுகிறது. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. //இது ராணிமுத்துவுலயும் வரும். //

    ராணிமுத்துவில் இந்தப் போட்டி வந்தது கிடையாது. 'அறிவுப்புதிர்' என்று தலைப்பிட்டு..
    ஒரு கேள்விக்கு இரு விடைகள் கொடுத்து அவ்விரண்டில் சரியான ஒரு விடியத் தேர்ந்தெடுக்கச் சொல்லியிருப்பார்கள்.
    'குறுக்கெழுத்துப் போட்டி 'ராணிமுத்து'வில் வந்ததே கிடையாது.

    எனது பதிவு:
    http://nizampakkam.blogspot.com/2010/08/67radiocw.html

    பதிலளிநீக்கு
  3. நன்றி கோபால் சார். :) உங்களுக்கு குழந்தை உள்ளம் அதுதான் :)

    ஆம் நிஜாம் சகோ. தவறைத் திருத்தியமைக்கு நன்றி.

    ராணிமுத்துவில் இரு விடைகள் கொடுத்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி இருப்பார்கள். இடுகையிலும் திருத்தி விடுகிறேன். தக்க சமயத்தில் எடுத்துச் சொன்னமைக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  4. பிங்கோ - எப்போதும் புது புது உற்சாகம் + சுவாரஸ்யம் தரும்...

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம் பிங்கோ இப்போதும் குழந்தைகளுடன் விளையாடுவதுண்டு......

    பதிலளிநீக்கு
  7. //41 .நேம் ப்ளேஸ் திங்ஸ் அனிமல்ஸ். = NAME PLACE THINGS ANIMALS.// இது என் ஆல்டைம் ஃபேவரைட்.... முன்பு தினமலரில் வரும் குறுக்கெழுத்தை முழுமையாக முடிக்கும்போது வரும் திருப்தியை இன்று இந்த பதிவின் மூலம் நினைவுகூர்ந்தேன். நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...