எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 மே, 2011

என் பெயர் அருணா..

சுவாசம் மெல்லியதாய் ஓடிக் கொண்டிருக்கிறது.. எப்போதும் மெல்லியதுதானே. இன்றென்ன புதிதாய்..

எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக மிட்டாய்களை வாயில் போட்டு என்னை பாதுகாத்துவிட்டதாக உற்சாகப்பட்டுக் கொண்டிருந்தார்கள்..


நீதி மன்றத்திலிருந்து தீர்ப்பு வந்து விட்டது கருணைக் கொலை செய்யக் கூடாது என்று.. என்னால் அவர்களுக்கு சிரமம்தான்.. எத்தனை நர்ஸ்கள் மாறி இருப்பார்கள்.. எல்லாருக்கும் நான் உயிரோடு இருக்கவேண்டும்.. அவர்கள் நம்பிக்கையை சிதைக்காமலிருக்கவே உயிரோடு இருக்கிறேன்.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம். அல்லது மருந்து மாத்திரை உணவுகளால்., அவர்கள் அன்பால் பராமரிப்பால் என்னை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

நான் ஒரு வெஜிடபிள்.. மெடிக்கல் லாங்குவேஜில் சொன்னால்.. கோமா பேஷண்ட்.. மூச்சு விடும் உயிரினம். இதயம் மட்டும் தாறுமாறாய் சீரற்றுத் துடித்துக் கொண்டே இருக்கிறது.. மூளை செயல்படவில்லை என்று சொல்கிறார்கள்.. அது அவர்களுக்கு.. எனக்கு செயல்படுகிறது ஆனால் எதும் செய்யத்தான் முடியவில்லை..

38 நீண்ட ஆண்டுகள் .. எதற்காக மருந்தும் உணவும் கொடுத்து காப்பாற்ற வேண்டும்.. ஏனெனில் நான் அவர்களுள் ஒருத்தி.. அவர்கள் என்னை அவர்களாய் உணர்கிறார்கள்.. அவர்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற நான் உயிரோடு இருக்கிறேன்..

மெடிக்கல் மிராக்கிளாக இருக்கலாம்.. எனக்கு நடந்த அநீதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் நடந்ததாய் வருந்துகிறார்கள். அவர்களின் நம்பிக்கையின் சாட்சியாய் நான் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன்..

அந்த இருளடைந்த நாளில் நாய்களுக்கான உணவை திருடி விற்றுக் காசாக்கின சோகன் லாலை கண்டித்தேன்.. நாய்களே பரிசோதனைக்கு கொண்டுவரப்பட்டவை.. அவைகளின் உணவைத் தின்பவன் எப்படிப்பட்டவன்.. நாய்களின் எச்சத்தை தின்பவன். பலமுறை கண்டித்தும் பயனில்லை. பான் போட்ட வாயோடு ஏதோ ஒரு பானா காலியை உச்சரித்தான்.. மும்பையின் தெருக்களில் நாயோடு நாயாக அலைய வேண்டியவன்..

ஒரு முறை பொறுக்க முடியாமல் சீனியர் டாக்டரிடம் சொன்னேன் . அவர் கடுமையாகத் தண்டித்து விட்டார்.. அன்று மாலை ட்யூட்டி முடிந்து நான் வீடு செல்ல உடைமாற்றும் அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டிருந்தேன்.. அங்கேயே ஒரு ஓநாய் ஒளிந்திருப்பது அறியாமல்.. ஆடுகளின் கழுத்தில் கயிற்றைப் போடுவது போல ஒரு நாய்ச் சங்கிலி என் கழுத்தை நெரித்தது.. கோர முகத்தோடும் பற்களோடும் நாயைப் போல சோகன்லால்.. கத்த முடியவில்லை.. உதவிக்கு யாரை அழைக்க.. திமிறினேன்.. கழுத்தை நெரித்த அந்த நாய் என் உடம்பின் மீதும் அத்து மீறீயது..

குரல் வளையில்., ரத்தக்குழாய் உடைந்து மூளை நரம்புகள் செயலிழக்கத்துவங்கின.. ஒரு அவசர மயக்கத்துக்கு போனேன்.. அந்த இருட்டறைதான் நான் கடைசியாகப் பார்த்தது.. இப்போது என் கண்கள் விழித்திருக்கின்றன என்றாலும் எதுவும் சரியாய் பதியாமல்., புரியாமல்.

என் நகை., பணம்., வாட்ச் எல்லாம் எடுத்துக் கொண்ட அவன் தெருக்கு தெரு அலையும் வெறி நாய் போல வெளியேறினான்.

அவனுக்கு தண்டனை கிடைத்தது.. பின் வெளியேறி வேறு இடங்களில் வேலை செய்ய சென்று விட்டான்..

என்னை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தபடி பராமரித்தபடி இருக்கிறார்கள் அனைவருமே முகம் சுளிக்காமல்..

நான் இப்படி விழுந்ததும் என் காதலன் காணாமல் போனான்.. அவனோடு பனிமலைச் சிகரங்களில் ஏறவும்., கப்பல்களில் மிதக்கவும்., விமானங்களில் பறக்கவும் முடியாது என முழுதாய் அறிந்தபின் பிரமிடுக்குள் இருக்கும் மம்மியைப் போல என்னைப் போட்டு விட்டுப் போய் விட்டான்.. என்றும் உயிர்க்க மாட்டாள் என ..

சுற்றி இருந்த சொந்தக்காரர்களுக்கு அவரவர் வேலைகள்.. ஒரு ஜடத்தை துடைத்து மருந்தும் உணவும் கொடுத்து ., பெட்ஸோர் வராமல் பார்க்க முடியவில்லை.. என்றைக்கு அந்த அறையில் விழுந்தேனோ அன்றிலிருந்து இந்த ஆஸ்பத்திரியில் கர்ப்பத்தை விட்டு வெளியேறாத பிள்ளை போல கிடக்கிறேன்.. என்னை சுமந்து கொண்டே இருக்கிறது இந்த மருத்துவமனை..

38 வருடமாக இப்படிக் கிடக்கிறேனே என்று என்னைப் பார்க்க வந்த பிங்கி விராணிக்கு என்னைப் பார்த்துப் பார்த்து தினம் வேகிறது மனது.. எப்படி இருந்த நான் இப்படிஆகிவிட்டேன் என்று,,. அவளது அன்பிலும் குறை சொல்ல முடியாது.. என் கதையை எழுதினாள்.. இவ்வளவு கஷ்டப்படாமல் முடித்துவிடவும் நினைக்கிறாள்..என் நிலை பார்த்து கருணைக் கொலைக்கு மனு போட்டாள்..

என் துயரை பார்த்து பார்த்துப் பரிதவித்து நீதி மன்றக் கதவைத் தட்டினாள்.. காய்கறியைப் போலக் கிடக்கும் எனக்கு வலியாவது ஒன்றாவது.. என் சக தோழிகள் ., நர்ஸுகள் என்னை பார்த்துக் கொள்வதாக சபதமிட்டவர்கள் போல தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள்.. அவர்களுக்கு என்னை இழப்பதா என்ற துயரம்.. ஏனெனில் நான் அவர்களின் அங்கம்..

அவர்களைப் போல அங்கு வேலை செய்த ஒருத்தி.. ரத்தமும் சதையும் துடிப்புமாக வளைய வந்தவள்.. நான் இருப்பது அவர்களுக்கு ஒரு துணை போல.. என்னைக் காப்பாற்றி இதுவரை வந்திருப்பது அவர்களின் நம்பிக்கைக்கு உயிர் கொடுப்பது போல.. அவர்கள் எனக்கு பணி செய்வதை அவர்களே சிரமமாக எண்ணவில்லை.. அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றவே இன்னும் உயிர்ப்போடு இருக்கிறேன்..

தாறு மாறாக வேணும் என் இதயம் இயங்கிக் கொண்டிருக்கிறது.. அது கடவுள் கொடுத்த காலம் வரை இயங்கட்டும்.. அவர்கள் வெளியே இனிப்பை உண்டுகொண்டிருக்கிறார்கள் என் உயிர்ப்பால்.. என் சந்தோசம் அசைவற்ற கண் வழி வழிகிறது.. கைகள் உறுதியாய் இன்னும் என் எதிரிக்கும் என்னை விட்டுச் சென்றவர்களுக்கும் என் உறுதியை என் இருப்பை வாழ்வை பறை சாற்றுகிறது.



டிஸ்கி.1 :- இது மே 15 -30 சூரியக்கதிரில் வெளிவந்தது..


டிஸ்கி..2..:- தங்கள் பல வேலைகளுக்கிடையிலும் தங்கள் எண்ணங்களை., கருத்துக்களை., பாதித்தவைகளை., சுமைகளை பதிவுகளில் பகிரும் அனைத்துத் தோழிகளுக்கும்., தங்கைகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.. மற்றும் வலைப்பதிவர்கள் அனைவருக்குமே தாய்மை நிறைந்த அன்னையர் தினத்தில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. வாழிய வையகம். வாழ்க வளமுடன். !

20 கருத்துகள்:

  1. படிக்கும்போதே என் கண்களில் நீரை வரவழைத்தது. பகிர்வுக்கு நன்றிகள்.





    [voted 1 to 2 in INDLI]

    பதிலளிநீக்கு
  2. இது ஒரு உயிரோடுள்ள உயிரற்ற உயிரின் பயணம். இங்கே மனிதத்தன்மை நிரம்பியுள்ள மனிதர்களையும் சந்தித்தது. மனித மிருகங்களையும் சந்தித்தது. அவருக்காக பிராதிப்போம்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் வருந்த செய்கிறது, குணமடைய முடியாது என் தெரிந்தாலும் குணமடைய வேண்டும் என மனதார எண்ணுகிறேன், அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வேதனை அளிக்கிறது....

    என்று மாறும் இந்த அவலம்....

    இப்பதிவை செய்தி தாள்களில் படித்திருக்கிறேன்..
    கருணைக் கொலை பற்றி கருத்து சொல்ல நான் தயங்குகிறேன்...

    பதிலளிநீக்கு
  5. அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  6. பெண்களின் இரக்க குணத்தையும், என்றாவது ஓர் நாள் அருணா குணமாவார் எனும் நம்பிக்கையுடன் வாழும் சக தோழிகளின் பண்புகளையும் பதிவில் உணர்வு பூர்வமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. வாசித்து முடித்த பொழுது என்ன சொல்வதென்று தோன்றவில்லை . அத்தனை வேகமாய் இதயம் எங்கும் பரவிக்கொண்டிருக்கிறது வலி நிறைந்த உணர்வுகளின் தாக்கம் . பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் மேடம்.. படைப்புக்கும் ,அன்னையர் தினத்துக்கும்

    பதிலளிநீக்கு
  9. மனதை நெகிழ்த்தும் பகிர்வு தேனம்மை.

    தங்களுக்கும், அனைத்து மகளிருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. மனிதம் இன்னும் உயிர்த்திருக்கிறது என்பதற்குச் சான்று. பல நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளில் அந்த நர்ஸ்கள் அதை தங்கள் வெற்றியாகக் கொண்டாடியதைப் பார்த்த போது இப்படித்தான் தோன்றியது

    பதிலளிநீக்கு
  11. தங்களுக்கு என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  12. மீள முடியாத துயரம்!

    மனதை கஷ்டப்படுத்திவிட்டது.

    அவன் செய்த தவறுக்கு அவனால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும். மனசாட்சி இல்லா மனிதன்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. அன்னையர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் இந்த நாளில் தங்களின் பதிவு கண்களில் நீர் வரவைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  15. மனசுக்குக் கஸ்டமான பதிவக்கா !

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா9 மே, 2011 அன்று 11:30 AM

    It s very old news. I came to know abt it immediately after it happened as I was in Pune at the time.

    There are a few lessions to b learnt from her tragic episode for all women in general:

    They r:

    When dealing with men, b aware not all men r same, came from same background, with same value systems. There r many Indian sub- cultures which devalue females as nothing but nuisances to b used only as sex objects and then, discarded scornfully. Women to them r just inanimate objects.

    There s however general opinion in Indian culture that women r made to obey, not to rule, esp. over men. Why Indian culture ? It s universal. In fact, the statement 'Women r made to obey' by nature - came from German Philsopher.

    Men dont like to be bossed around by women. Such thinking prevail across sections of society in India.

    In case u r the boss and ur subordinate s a male, tke care to ensure that ur bossing or commands r obeyed by male subordinates w/o any sense of revenge. For which u need many kinds of protection, from ur employers and ur society around.

    Aruna was the nurse, and the man who caused her to become a vegetable for many decades, was his orderly or ward boy. He came under her for commands. She found his work defective and pointed out peremptorily, even threatened him to report to authorites.

    After such acts, she failed to ensure that the ward boy could not take revenge upon her. She failed to appreciate the common facts that a ward boy does physical labour in hospital, and as such, develops a strong physique. Further, he becomes immuned to suffering of people as he daily sees blood, wounds and death by suffering. Thus, he lacks empathy with others.

    Having moved closely with him for many years, Aruna blindly thought she could issue commands and expect them to b obeyed. She lacked common sense.

    The ward boy was just an average Indian male, who does not like to b bossed around like that. Further, he was guilty which he knew. If his boss was a man, he would not so easily hav overpowered him.

    What s the final result ? The court did not sentence him to death; but gave only Life imprisonnment, which he served w/o prob for some years and was released. He is now living in Delhi as a grandfather in a retired life with a lot of reltions happily, whereas Aruna is paying the price of not having applied common sense in dealing with such male.

    U may examine the issue, not as an emotive one, to invite comments which pity, but as an issue which can give forewarnings and many lessons to your sisters in blogosphere.

    To b forewarned is to b forearmed !

    பதிலளிநீக்கு
  17. வாசிக்கும் போது
    இதயம் கனமானது ...அக்கா

    அன்னையர் தின வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  18. நன்றி கோபால் சார்

    நன்றி ரமேஷ்

    நன்றி இரவு வானம்

    நன்றி சௌந்தர்

    நன்றி நிரூபன்

    நன்றி சங்கர்

    நன்றி செந்தில்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ராம்

    நன்றி விக்கி உலகம்

    நன்றி மாதவி

    நன்றி அக்பர்

    நன்றி சசி

    நன்றி ஹேமா

    நன்றி சிம்மக்கல்

    நன்றி செந்தில்குமார்

    பதிலளிநீக்கு
  19. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...