எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 25 மே, 2011

சமச்சீர் கல்வியும் கருத்து கந்தசாமிகளும்..

சமச்சீர் கல்வி .. இந்த வாசகம் கடந்த மூன்று நாட்களாக முகப்புத்தகத்தில் படும் அடி வேறு எதற்கும் பட்டிருக்காது.. யார் கைதானதும் கூட..இவ்வளவு பெரிதாய் விவாதிக்கப்படவில்லை..

தங்களை கருத்து கந்தசாமிகளாய் நினைத்துக் கொண்டு ஒரே கருத்து மயம்தான். எனக்கு அம்மா பாசம் அய்யா பாசம் என்பதெல்லாம் இல்லை. பிடித்தவர் செய்யும் எல்லா செயலும் உவப்பானதாய் இருப்பதில்லை. பிடிக்காதவர் செய்யும் எல்லா செயலும் வெறுப்பதுமில்லை.


உண்மையில் நிறைய அரசுப் பள்ளிக்களுக்குச் சென்றிருக்கிறேன். சீஃப்கெஸ்டாகவும் சில நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பிள்ளைகளின் அறிவு என்னை வியக்க வைத்திருக்கிறது. சரியாக சானலைஸ் செய்யப்பட்டால் அவர்கள் ஜொலிப்பார்கள் எனவும் உணர்ந்திருக்கிறேன். வாய்ப்புகள் வழங்கப்படாமல் நிறைய பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்வதில்லை. கல்வி என்பதும் மருத்துவம் என்பதும் இலவசமாய் ஆக்கப்படவேண்டும்.

உனக்கு இது ஏன் பிடிக்கவில்லை எனத் தெரியும் என் அன்புத் தங்கையே கூ்றியதுதான் இந்த இடுகைக்கே காரணம். இலவசமாய் தரமான கல்வி கிடைத்தால் அரசுப் பள்ளிகளில் அட்மிஷனே கிடைக்காது என்பதுதான் உண்மை. என் உறவினர்கள் யாருக்கும் கல்விக்கூடம்(கல்லூரி) இருந்தாலும் பள்ளிக்கூடம் இல்லை. எனவே நான் யாருக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய சூழலிலும் இல்லை.

எந்த அடைப்படையில் நான் ஒரு சார்புள்ளவள் என்பது தீர்மானிக்கப்படுகிறது. பெயராலா., பிறந்த குலத்தாலா.. சமமாய் மனிதரை கருதுவது மனிதராய்ப் பிறந்த யாருமே செய்வதுதானே.. இதில் மனிதாபிமானமுள்ள நான் ஏன் எல்லாருக்கும் கிடைக்கும் அரிய வாய்ப்பை மறுதலிக்க வேண்டும். வேண்டாத இலவசங்களை எல்லாம் கட் செய்துவிட்டு கல்வியும் .,மருத்துவமும் கொடுத்தால் போதுமே.. மீன் பிடிக்கத்தான் கற்றுக் கொடுக்கவேண்டும் .. தினமும் மீன் தருவது தலைவலி என்பது என் கருத்து.

இதில் வேடிக்கை முகப்புத்தகத்தில்., அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்காதவர் கூட எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்பது கானல்தானா என முதலைக் கண்ணீர் வடிப்பது.

ஆண் அரசாண்டால் எல்லாம் பெரியவருக்குத் தெரியும் என்றும் பெண் அரசாண்டால் சாமான்யன் கூட ராஜகுருவாய் அட்வைஸியாய் மாறுவதும் ஏன்.? இது இந்தியக் குடும்ப மனோபாவம். பெண் என்பவள் எல்லாவற்றையும் தன்னைக் கேட்டு தன் அனுமதி பெற்றுச் செய்யவேண்டும் என்பது.

மூன்று முறை அரசாண்டவர்களுக்கு தெரியாதா.. நாம் ஏன் அதை திடீரென்று முன்னிருத்தி பேசவேண்டும். ஒரு திட்டம் உண்மையிலேயே பயனளிக்கக்கூடியதாய் இருந்தால் அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. சத்யமேவ ஜயதே என்ற இந்திய அரசின் தாரக மந்திரத்தை நானும் நம்புகிறேன்.

மதிய உணவுத்திட்டம்., தனியார் பள்ளிகளில் ஃபீஸ் குறைப்பு., என்ட்ரென்ஸ் எக்ஸாம் இல்லாமலிருப்பது என பல நடந்திருக்கிறது. இதிலும் சரியான முடிவே எடுக்கப்படும் என நினைக்கிறேன். அம்மா அப்பா அட்வைஸ் செய்தால் நாம் கேட்டுக் கொண்டது அந்தக்காலம். உனக்கென்ன தெரியும் என நம் பிள்ளைகள் பரிகசிப்பது இந்தக் காலம். இருந்தும் அம்மா அப்பா எது செய்தாலும் ஏன் இப்படி என நாம் கேட்டதில்லை. அவர்கள் செய்வதெல்லாம் நம் நன்மைக்கே என எண்ணுபவர்களுள் நானும் ஒருத்தி.

முதலில் எல்லாவற்றுக்கும் கண்டமேனிக்கு கருத்து சொல்லும் பழக்கத்தை விடுங்கள். தேவையானால் மட்டுமே சொல்லுங்கள்.. இப்போது என்னையும் கருத்து கந்தசாமி ஆக்கி விட்ட அம்முவுக்கு நன்றி.

14 கருத்துகள்:

  1. உங்கள் சமூக உணர்வைப் பாராட்டும் அதே நேரத்தில்...

    //ஒரு திட்டம் உண்மையிலேயே பயனளிக்கக்கூடியதாய் இருந்தால் அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. சத்யமேவ ஜயதே என்ற இந்திய அரசின் தாரக மந்திரத்தை நானும் நம்புகிறேன்.//


    இந்த வரிகளில் உள்ளது இன்னும் நம் நாட்டில் நடக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களே என்ற வியப்பு ஏற்படுகிறது...

    பதிலளிநீக்கு
  2. //முதலில் எல்லாவற்றுக்கும் கண்டமேனிக்கு கருத்து சொல்லும் பழக்கத்தை விடுங்கள். தேவையானால் மட்டுமே சொல்லுங்கள்.//

    நல்ல கருத்து.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய தினமலர் கார்ட்டூனை பாருங்கள். அது தான் பலரின் அசல் முகம்.

    பதிலளிநீக்கு
  4. //இதில் வேடிக்கை முகப்புத்தகத்தில்., அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்காதவர் கூட எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்பது கானல்தானா என முதலைக் கண்ணீர் வடிப்பது//
    சரியாகச் சொன்னீர்கள் !

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா25 மே, 2011 அன்று PM 6:11

    மன்னிக்கவும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  6. கருத்து சொல்லும் அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.சமச்சீர் கல்வி என்பது அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பொதுவான பாடத் திட்டம். பாடப்புத்தகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அதை கற்று தரும் விதத்தில் தான் விசயம் இருக்கிறது. மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகத்திலுள்ள கருத்துக்களை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செயல் முறை விளக்கத்துடன் சொல்லுகின்றனர். சமச்சீர் மட்டும் நீங்கள் சொல்வது போல் மாணவர்கள் எளிதில் பதில் அளிக்கவும் , பயமின்றி சரளமாக பேசுவதற்கும் உதவவில்லை. தற்போது அரசு பள்ளிகளில் செயல் படும் செயல் வழிக் கற்றல் முறைதான் காரணமாகும் . மேலும் , இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் மாநகராட்சி பள்ளிகளில் கூட்டம் அதிகரித்து இருப்பதற்கு காரணம் கற்றல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்தி இருப்பதும்.ஆசிரியர்களிடம் போதிக்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதுமே காரணமாகும்... இதை சொல்வதால் சமச்சீர் வேண்டாம் என்று அர்த்தம் அல்ல... அதனை விட மதிப்பிடலில் மாற்றம் வேண்டும்... விவாதத்திற்கு இடமளித்த தங்களுக்கு நன்றி.. நல்ல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா25 மே, 2011 அன்று PM 9:53

    தங்களின் நியாயமான ஆதங்கங்கள் புரிகின்றது. ஆனால் எவரும் தத்தமதுக் கருத்துக்களை வெளியிடுவது கூடாது என நம்மால் எப்படிக் கூற முடியும், அது கருத்துச் சுதந்திரம், அதனை தடுக்க முடியாதே. அவர்கள் கூற்றில் மெய் இல்லாமலேக் கூட இருக்கலாம்..

    சமச்சீர்க் கல்வி என்பது தற்சமயம் ஒரு பொதுப் பாடத்திட்டம் அவ்வளவே ! ஆனால் அதுவும் அவசியமானது. பெரும்பாலான மெற்ரிக் பள்ளிகள் தமது மெற்ரிக் பாடத்திட்டம் உசத்தி என விளம்பரப் படுத்தித் தான் வியாபாரம் செய்து வருகின்றார்கள்.....

    முதலில் மெற்ரிக் முறையை இல்லாமல் செய்துவிட வேண்டும். பின்னர் அருகாமைப் பள்ளியில் படிக்கும் செயலையும் நிறைவேற்ற வேண்டும், அப்படி செய்தால் அக்கம் பக்கம் ஊரில் போய் பிள்ளைகளை விலைக்கு வாங்குவது போல செய்யும் மார்க்கேட் தந்திரம் முடிவுக்கு வரும்..

    பின்னர் தனியார் பள்ளியினை விடவும் தரத்துக்கு அனைத்து அரசுப் பள்ளிகளை மதுரை சரவணன் சொன்னது போல மாற்றம் கொண்டு வந்தால் - யாரும் தனியாரை நோக்கி ஓடமாட்டார்கள் .......... !!!

    பதிலளிநீக்கு
  9. //இதில் வேடிக்கை முகப்புத்தகத்தில்., அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்காதவர் கூட எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்பது கானல்தானா என முதலைக் கண்ணீர் வடிப்பது//
    உண்மையான வரிகள்

    பதிலளிநீக்கு
  10. ஃபேஸ்புக்கில் என்ன நடக்கிறதென அறியேன்.

    அக்கா, பெண் என்பதால் அவரைக் குறைகூறுவதாய்த் தெரியவில்ல. ஏற்கனவே இருமுறை அவரின் ஆட்சியில் இருந்த அனுபவம்தான் மக்களை இப்படிப் பேச வைக்கிறது என்பது என் கருத்து.

    சமச்சீர் கல்வியை விடுங்கள்; ஆனால், பள்ளிக் கட்டணத்தில் பள்ளிகள் கேட்டுக்கொண்டாலொழியத் தலையிட மாட்டேன் என்பது, திருடனாய் வந்து சரண்டராகாவதே வழி என்பதுபோல இல்லை?

    //அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்காதவர் கூட எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்பது கானல்தானா என முதலைக் கண்ணீர் வடிப்பது//

    அரசு மருத்துவமனைகளுக்கும்தான் நம்மில் பெருமாலோர் போவதில்லை; (போகாததன் காரணமே தரமில்லை என்பதுதானே?) எனில் அதைக் குறித்தும் எதுவும் கூறக்கூடாதா?

    மழைநீர் தொட்டி போன்ற நல்ல திட்டத்தையும் கொண்டுவந்தவர் அவரே என்பதை மறுப்பதற்கில்லை. எனினும்..

    பதிலளிநீக்கு
  11. சமச்சீர் கல்வி என்பதை நாம் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து புரிந்து கொள்ளவேண்டும். பிறகு தான் ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும்.
    http://www.virutcham.com/2011/05/சமச்சீர்-கல்விஆர்வலர்கள/
    (சமச்சீர் கல்வி:ஆர்வலர்கள் பதில் அளிப்பார்களா?)

    பதிலளிநீக்கு
  12. >>முதலில் எல்லாவற்றுக்கும் கண்டமேனிக்கு கருத்து சொல்லும் பழக்கத்தை விடுங்கள். தேவையானால் மட்டுமே சொல்லுங்கள்.

    hi hi ஹி ஹி இப்போ நாங்க கமெண்ட் போடலாமா? வேணாமா? ஹா ஹா

    பதிலளிநீக்கு
  13. நன்றி பாசமலர்

    நன்றி கோபால் சார்

    நன்றி ரமேஷ்

    நன்றி ஆகாயமனிதன்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி சரவணன்

    நன்றி ராஜி

    நன்றி இக்பால்

    நன்றி நண்டு

    நன்றி ஹுசைனம்மா

    நன்றி விருட்சம்

    நன்றி செந்தில்.. :))

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...