கொசுவத்தி., ஊதுவத்தி எல்லாம் சுத்தாம ஒரு விஷயம் சொல்லணும் . முடியுமா பார்க்கிறேன்.. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி புதன் கிடைச்சாலும் பொண்ணு கிடைக்காதுன்னு சொல்லுற ஒரு புதன் கிழமை இந்த பூமியில ஒரு பெண் குழந்தை பிறக்க போகுது ( அட அஞ்சலி பாப்பா இல்லப்பா) அது அன்பான குழந்தை. தேன் போல பேசும்( சமயத்தில் தேளும் கூட) அதுக்கு நாம எல்லாம் நல்ல பெயர் வைக்கணும்னு தேவதை எல்லாம் பேர் தேடுச்சாம். சரி அவங்க பெரியப்பத்தா பேரே அழகா இருக்கு. அவங்கள மாதிரி பொறுமையா இருக்கட்டும்னு அப்பத்தா வீட்டு ஐயா தேனம்மைங்கிற பேரை வச்சாங்களாம்.
ஐயா., ஆயா., அப்பத்தா., அப்பா., அம்மா., மாமா.,மாமி., அத்தை., சித்தப்பா., சித்தி., பெரியம்மா., பெரியப்பா மட்டுமில்லீங்க.. அத்தை மக்க., மாம மக்க., பெரியம்மா மக்க., தம்பிங்க எல்லாருக்கும் நான் தேனுதான்.. இன்னிய வரைக்கும்.. எல்லாரும் கிட்டத்தட்ட என் வயசுதான்.. சரி போகுதுன்னு விட்டுட்டேன்.. இதுக்காக எல்லாம் போராட்டமா நடத்த முடியும்கிறீங்களா.. என் சித்தப்பா மக்க ---குட்டித்தங்கச்சிங்க ரெண்டு பேர் மட்டும் என்ன ஆச்சின்னு கூப்பிடுவாங்க இனிமையா..
காலேஜ் படிக்கும் போது ஒரு கிறுக்குத்தனம் இருந்துச்சு ( அப்பமட்டும்தானா கிறுக்குத்தனம் .. ஹிஹி என சிரித்துக் கொண்டே நசரேயன் வருவது தெரியுது ) . என்னன்னா ஒரு பாட்டு விடுறது இல்ல.. எந்தப் பாட்டுல எல்லாம் தேன் தேனே., அப்பிடின்னு வருதோ அதை எல்லாம் எடுத்து எழுதி அதுக்கு ஒரு தனி டைரி போட்டு தேனுவின் டைரிக்குறிப்புகள் ரேஞ்சுல டேட்டா எடுத்து வைச்சுருந்தேன். இப்ப அந்த இண்ட்ரஸ்ட் போயிட்டதால அந்த டைரிய தேடணும். ரொம்ப சுவாரசியமான நாட்கள் அவை.. ஒவ்வொரு இளம் பெண்ணும் தான் ஒரு் முக்கியமானவள்னு நினைக்கிற காலகட்டம் அது.
பூதக்கண்ணாடி எல்லாம் வச்சு தேட வேண்டாம். அதுக்கு மேல ரொம்ப சுவாரசியம் இல்லை. கல்லூரி முடிச்சவுடனே கொஞ்ச நாள்ல திருமணம் ஆகி திடீர்னு தேனம்மைலெக்ஷ்மணன் ஆகிட்டேன். அப்புறம் ரொம்ப வருஷம் சும்மா இல்லத்தரசியா இருந்தேன். திடீர்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஞானோதயம்., ஒளிவட்டம்னு சொல்லலாம்.. ( ரொம்ப ஓவரா இருக்கோ..:)) ஏற்பட்டது. பிள்ளைகளுக்கு நம்மிடம் உள்ள தேவைகள் குறையும்போது நமக்கு ஒரு வெற்றிடம் ஏற்படுது. அதை நிரப்ப சிலர் கணவருடன் சேர்ந்து தொழிலில் ஈடுபடுறாங்க. வங்கித்தொழிலில் இருக்கும் கணவருக்கு நாம என்ன உதவி செய்யிறது. எனவே சும்மா இருக்கமேன்னு ப்லாக் எழுத ஆரம்பிச்சு வந்தேமாதரம் சசிகுமார் புண்ணியத்துல THENU னு ஸ்டைலா கையெழுத்து போட்டாச்சு .
நம்ம ப்லாக் பேரு சும்மா. ஆனா நாம ஹனிலெக்ஷ். எனவே சிலசமயம் ஹனின்னு சொல்றாங்க.. ஏன்னா ப்லாக் ஐடியாம். சரி சரி . ஒரு முறை டெல்லிக்கு ட்ரெயினில் போகும்போது என் கணவர் அடிக்கடி என்னை தேனு என விளித்துக் கொண்டிருந்தார். எல் எஃப் சி என்றதால் ஏசி கம்பார்ட்மெண்ட். எதிரே ஒரு தமிழர் பேர் ராகவன் சிங்கப்பூரில் ஜேம்பவாங்கில் பணிபுரிந்துகொண்டிருந்தவரும் அவர் மனைவியும் வந்தார்கள். கிட்டத்தட்ட 36 மணிநேர ப்ரயாணம். இவர் கூப்பிடுவதைப் பார்த்து,” சார் நீங்கதான் வெள்ளைக்காரர் மாதிரி ஒய்ஃபை ஹனின்னு சொல்றீங்க.. :”என்றார்.. இவர் இவ பேரே அதுதானே .. இதுல என்ன சிறப்பு என என்னைப் பார்த்தார்..:))
பேஸ்புக்கிலும் , ப்லாகிலும் சிலர் தேன் என்றும் தேனம்மை என்றும் அழைப்பார்கள்.. யாரையாவது எந்த புக்குக்காவது பேட்டி எடுக்கணுமென்றால் எடுத்தவுடன் ” ஹலோ நான் தேனம்மைலெக்ஷ்மணன் பேசுறேங்க ..”என்றால் அவங்க ”என்னங்க” என்பார்கள்.. அப்புறம் என்ன ரிப்பீட்டுதான்..:))
இதுதாங்க நான் தேனு., தேனம்மைலெக்ஷ்மணன்., THENU., HONEY., தேன் ஆன கதை..
சரி சரி பேர் புராணமெல்லாம் போதும்னு சொல்றீங்களா.. அதுவும் சரிதான். இதுக்கெல்லாம் கோச்சுக்கணும்னா இந்த பேரு பெத்த பேரு பத்தி என்னை எழுத சொன்ன பாலாஜி சரவணா மற்றும் அமைதிச்சாரலைக் கோச்சுக்குங்க..:))
எது எப்படியோ தங்கள் பெயர்க்காரணம் தேனாக இனிக்குதுங்க! இல்லாவிட்டால் 332 எறும்புகள் மொய்க்குமா?
பதிலளிநீக்கு(எறுப்புகள்=Followers)
honey...
பதிலளிநீக்குபெயரை போல பதிவும் தித்தித்தது.
பார்த்தேன்.....படித்தேன்....சிரித்தேன்....
பதிலளிநீக்குஅந்த புகைப்படம் ஆஹா.. என்ன அழகு.. எனக்கு மிகவும் பிடித்த கறுப்பு வெள்ளையில்.
பதிலளிநீக்குதேன் எப்போதும் உங்கள் எழுத்தில் இனிக்கட்டும்.
எல்லாருக்கும் நான் தேனுதான்.. //
பதிலளிநீக்குSweet name.
//டைரிய தேடணும். ரொம்ப சுவாரசியமான நாட்கள் அவை//
பதிலளிநீக்குநாங்க எல்லாம் ரெம்ப நல்லவங்க .. கண்டிப்பா கிடைக்காது
தேனு அக்கா, தேன் சொட்ட சொட்ட , ஒரு இனிமையான பதிவு.
பதிலளிநீக்குnice photo .
love this post akkaa.....
பதிலளிநீக்குரொம்ப ஜாலியா, உங்க பெயர் போல இனிமையா காரணம் சொல்லிட்டீங்க தேனக்கா!
பதிலளிநீக்கு//இதுக்கெல்லாம் கோச்சுக்கணும்னா இந்த பேரு பெத்த பேரு பத்தி என்னை எழுத சொன்ன பாலாஜி சரவணா மற்றும் அமைதிச்சாரலைக் கோச்சுக்குங்க. //
கோச்சுக்கிறதா? எல்லாரும் நன்றி சொல்லப் போறாங்க தேனக்கா! ஹி ஹி :)
//திடீர்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஞானோதயம்., ஒளிவட்டம்னு சொல்லலாம்.. ( ரொம்ப ஓவரா இருக்கோ..:)) ஏற்பட்டது. பிள்ளைகளுக்கு நம்மிடம் உள்ள தேவைகள் குறையும்போது நமக்கு ஒரு வெற்றிடம் ஏற்படுது.//
பதிலளிநீக்குஆமாம் தேனக்கா,நல்ல பகிர்வு.
பேரோடும் புகழோடும் வாழ வாழ்த்துக்கள்..
எனக்கு தேனம்மை என்று முழுப்பெயர் சொல்லி விளிக்கவே பிடித்திருக்கு:)!
பதிலளிநீக்குபெற்றோருடன் இருக்கும் படம் அருமை.
ஆஹா...பெயர் காரணம் சூப்பரா இருக்கு ஆச்சி!
பதிலளிநீக்குதேன்னா அக்கா பகிர்வு அருமை..
பதிலளிநீக்குபெற்றோருடன் இருக்கும் படம் அழகு
நல்லவேளை...ஒளிவட்டம் தோன்றுச்சு!!!எங்களுக்கு தேனம்மை கிடைச்சாங்க!
பதிலளிநீக்குஉங்கள் பெயரைப் போலவே பெயர்க்காரணமும் இனிமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇண்ட்ரஸ்டிங்
பதிலளிநீக்குதேன்மொழி என்ற பெயர் அதிகம் கேல்விப்பட்டிருந்தாலும், தேனம்மை என்பது கதைகளில் மட்டுமே படித்தது. முதல் “தேனக்கா” நீங்கதான். “தேன்” என்ற பாடல்கள் கணக்கேயில்லாமல் வந்தனவே. உங்களவருக்கு தனியே கவிதை எழுத அவசியமே இருந்திருக்காதே! இந்தப் பாடல்களில் அவ்வப்போது ஒன்றை எடுத்துவிட்டாலே, இன்னும் எண்ணிக்கை முடிந்திருக்காதே!! ;-))))))))
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்
பதிலளிநீக்குநன்றி ரமேஷ்
நன்றி கலாநேசன்
நன்றி ரிஷபன்
நன்றி ராஜி
நன்றி நசர்
நன்றி சித்து
நன்றி கனி
நன்றி பாலாஜி
நன்றி ஆசியா
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி ஆர் ஆர் ஆர்
நன்றி சிநேகிதி
நன்றி அருணா..
நன்றி ஜிஜி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நன்றி சதீஷ்., ஹுசைனம்மா., அஷோக்.:)
பதிலளிநீக்கு