எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 மே, 2011

மே மாத லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி.,டாக்டர் மாதினி., அமெரிக்க விஜி..மற்றும் நான்..:))

மே தினம் உழைப்பாளிகள் தினம். அன்று வெளிவந்த லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தியை அட்டைப் படத்தில் போட்டு கௌரவித்துள்ளது நம்ம லேடீஸ் ஸ்பெஷல்.. நாமும் வாழ்த்துவோம் .




முன்னுரையிலும் கிரிஜாம்மா என்னையும் சாந்தியையும் மாதினியையும் அமெரிக்க விஜியையும் குறிப்பிட்டு சிறப்பு செய்து இருக்காங்க.. அவங்களுக்கு அன்னையர் தின அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..:)


8 மணி நேரம் உழைப்பு.. 8 மணி நேரம் ஓய்வு., 8 மணி நேரம் தூக்கம் என சொன்ன கார்ல்மார்க்ஸ் பிறந்த தினத்தில் ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்துவதில் சந்தோஷமடைகிறேன்.. அவர்தான் குடும்பத் தலைவியாய் இருந்து ஆட்டோ ஓட்டி தொழிலாளர் நல சங்கத்தில் உயர் பதவியில் இருக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி.. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சாந்தி..!


விஜிஸ் கிச்சன் என்று நமக்கெல்லாம் தெரிந்த அமெரிக்க விஜிதான் இந்த மாத ப்லாகர். ஹாலிடேக்கு ஜாலி ட்ரிப் அடிக்குமுன்னால அவங்க சொல்றத படிச்சிட்டுப் போங்க..வாழ்த்துக்கள் விஜி.!


கர்ப்பமான பின்னாடிதான் எல்லாரும் டாக்டர்கிட்ட கன்ஃபர்ம் பண்ண போவாங்க.. ஆனா நம்ம டாக்டர் மாதினி கர்ப்பத்துக்கு முன்னாடியே உடலில் ஏதும் கோளாறுகள் இருக்கான்னு செக் பண்ண சொல்ற ப்ரீ கன்செப்ஷன் க்ளினிக் வந்து ஹெல்த் செக்கப் பண்ண சொல்றாங்க.. எல்லாரும் படித்துப் பயன் பெறுங்க.. ஆட்டோ ஓட்டுநர் சாந்தியையும் டாக்டர் மாதினியையும் (மகாபலிபுரம் போயும் ஐந்து ரதங்களின் அருகில் அமர்ந்து தொலைபேசியில் பேசி ) பேட்டி எடுத்துத் தொகுத்துக் கட்டுரையாக்கி இருக்கிறேன்....




டிஸ்கி:- முக்கியமான விஷயம்.. நம்ம லேடீஸ் ஸ்பெஷல் சார்பில் மே 20 அன்னைக்கு மெரினா பீச்சில் ஒரு மீட் இருக்கு. பெண் வலைப்பதிவர்கள் மட்டும் 3.30 க்கு காந்தி சிலையருகில் வந்துடுங்க. கிரிஜா ராகவன் மேடம் உங்களை எல்லாம் சந்திக்க ஆவலா இருக்கார். சென்னை பெண் வலைப்பதிவர்கள். , வெளி ஊரிலிருந்து வரமுடிந்த பெண் வலைப்பதிவர்கள் கலந்துக்கலாம். லேடீஸ் ஸ்பெஷலில் அறிமுகமான ப்லாகர்கள் லேடீஸ் ஸ்பெஷல் லிங்கை தங்கள் வலைத்தளத்தில் காட்ஜெட்டில் கொடுங்க . முக்கியமா வர்றவங்க லேடீஸ் ஸ்பெஷல் படிச்சிட்டு வாங்க.. நம் சந்திப்பு இனிய சந்திப்பா அமையட்டும்..:))




18 கருத்துகள்:

  1. குடத்திலிட்ட விளக்காகத்திகழும் ஒரு சில சாதனைப்பெண்மணிகளை, குன்றிலிட்ட விளக்காக மாற்றி, அவர்களை அனைவருமே அறியச்செய்யும், நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    மே 20 மெரினாபீச் மீட் வெற்றியடையவும், பயனுள்ளதாக அமையவும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. //முன்னுரையிலும் கிரிஜாம்மா என்னையும் சாந்தியையும் மாதினியையும் அமெரிக்க விஜியையும் குறிப்பிட்டு சிறப்பு செய்து இருக்காங்க..//

    மிக்க மகிழ்ச்சியான செய்தி.
    அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
    Congratulations to all of you.

    [VOTED 2 to 3 in INDLI]

    பதிலளிநீக்கு
  3. மே தினம் உழைப்பாளிகள் தினம். அன்று வெளிவந்த லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தியை அட்டைப் படத்தில் போட்டு கௌரவித்துள்ளது நம்ம லேடீஸ் ஸ்பெஷல்.. நாமும் வாழ்த்துவோம் .

    வாழ்த்துக்கள்...ஆட்டோ ஓட்டுனர் சாந்தி

    மூன்று 8....கள் அருமை அக்கா...

    அன்னையர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. சந்திப்பு இனிமையாக அமையட்டும். சாதனை மகளிர்க்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. ம்ம்..தேனு..எல்லா மீட்டியாக்களிலும் கலக்கறீங்க.அதிலும் இவள் புதியவளில் உங்கள் கட்டுரை...போனிலேயே கமெண்ட் பண்ணிட்டேனே.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்:)! பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  7. நன்றி தேனு. என் வலைதளத்தையும் என்னையும் லேடிஸ் ஸ்பெஷல் பத்திரிகையில் அறிமுகப்டுத்தி எனக்கு வாய்ப்பளித்த உங்களுக்கும் லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஷா அம்மாவுக்கும் என் ம்னமார்ந்த நன்றி.மற்று ம்வை.கோபாலகிருஷ்ணன் சாந்தியையும் மாதினியையும் குறிப்பிட்டு இருக்காங்க. ஆட்டோ சாந்தி அட்டைபடம், அவர்களின் கட்டுரையும் படித்தேன் மற்றும்
    எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


    www.vijiscreation.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. nice blog thenammai.I too am following your blog
    anandhirajan
    www.anandhirajansartsncrafts.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. நல் வாழ்த்து நான் கூறுவேன்...
    நல்ல படி வாழ்கவென்று....



    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  10. என் அருமை தோழி விஜிக்கு வாழ்த்துக்கள்
    தேனக்கா , வுஹும் வுஹும் , நான் அங்க இருக்கும் ப்போது மீட்டிங் எல்லாம் கிடையாதா? ?

    பதிலளிநீக்கு
  11. ஆட்டோ சாந்திக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. மெரீனா மீட்டிங்கில் கட்டாயம் கலந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வாசிக்கும் பொழுது மிக சந்தோஷமாக இருக்கு தேனக்கா,சும்மா,சும்மா அதிருதில்ல ! இந்த டயலாக் தான் நினைவு வருது..சென்னையில் இருந்தால் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்..

    பதிலளிநீக்கு
  14. நன்றி கோபால் சார்

    நன்றி மேனகா

    நன்றி செந்தில்

    நன்றி சங்கர்

    நன்றி சாரல்

    நன்றி ஸாதிகா

    நன்றி முத்து

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி விஜி

    நன்றி ஆனந்தி

    நன்றி ஆர் ஆர் ஆர்

    நன்றி ஜலீலா

    நன்றி அமுதா கட்டாயம் வாங்க..:)

    நன்றி ஆசியா..

    பதிலளிநீக்கு
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...