செவ்வாய், 17 மே, 2011

நதி.. மலை..

1.தாய்மை ததும்பும்
பசிய மார்பகத்திலிருந்து பாலாய்
கசிந்து கொண்டிருந்தது நதி..
*********************************************

2. வெண் தீயாய்
சடசடவென மலையிலிருந்து
பற்றிப் பரவுகிறது நதி..
*************************************************

3. கர்ப்பப்பைகளைப் போல
ஒளிந்து வைத்திருக்கிறது மலை
குகைகளை..
**********************************************

4. ஆடுகளைப் போல
வெட்டிக் குவிக்கப்பட்டு
சுண்ணாம்புக் கவிச்சியுடன் மலை13 கருத்துகள் :

மதுரை சரவணன் சொன்னது…

சிறப்பாக உள்ளதுகவிதை. வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் சொன்னது…

எதுவுமே உங்கள் பார்வை பட்டால் கவிதையாக, சிறந்த கவிதையாக மலர்கிறது.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

உயிரோசையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

ரிஷபன் சொன்னது…

உயிரோசை பிரசுரத்திற்கு வாழ்த்துகள்..

வெண் தீயாய்.. புதுசாய்!

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

வாழ்த்துக்கள் ..

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

//கர்ப்பப்பைகளைப் போல
ஒளிந்து வைத்திருக்கிறது மலை
குகைகளை..
//

புனிதமான உவமை . கவிதைகள் ஒவ்வொன்றும் சூப்பர்

Chitra சொன்னது…

very nice, akka!

குணசேகரன்... சொன்னது…

நல்ல கற்பனை..

http://zenguna.blogspot.com

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்ல கற்பனை. நதியைப்பற்றியும் மலையைப்பற்றியும் மலையளவு மாத்தியோசித்து எழுதிய கவிதை. பிரசுரம் ஆனதற்கும் வாழ்த்துக்கள்.

சசிகுமார் சொன்னது…

கவிதை எப்பவும் போல அருமை அக்கா.

Vijiskitchencreations சொன்னது…

congrats & Super poem.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சரவணன்

நன்றி ரமேஷ்

நன்றி குணா

நன்றி ரிஷபன்

நன்றி கருன்

நன்றி சங்கர்

நன்றி சித்து

நன்றி குணசேகரன்

நன்றி கோபால் சார்

நன்றி சசி

நன்றி விஜி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...