எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 மே, 2011

வியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க..





கோடைகாலத்தில் வெய்யிலால் உண்டாகும் உடல்சீர்கேடுகள் என்னென்ன.. அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என சுபம் மருத்துவமனையின் டாக்டர் வேல்ராணி அவர்களிடம் நம் இவள் புதியவள் வாசகியருக்காக பேட்டி எடுத்தோம்.. அவர் கூறியவற்றை பின்பற்றி வியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க....


வியர்வை., வேர்க்குரு., வேனல்கட்டி.,துர்நாற்றம்., சன்ஸ்ட்ரோக்., நீர்க்கடுப்பு அல்லது நீர் எரிச்சல்., அம்மை., வயிற்றுப்போக்கு., உடல் உஷ்ணம்., படை., சொறி., சிரங்கு., புண்கள்., கொசுக்கடி., சருமம் கருத்து போதல் அல்லது வெளுத்துப் போதல் என வெய்யில் காலத்தில் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவில்லை..இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் வியர்வைதான்..


வியர்வைச் சுரப்பிகள் வெய்யில் காலத்தில் அதிகம் வேலை செய்கின்றன. எனவே வேர்க்குரு உண்டாகிறது. இது அதிகமானால் வேனல்கட்டி உருவகிறது. அதிகமாக வியர்வையினால் உடல் துர்நாற்றம் உண்டாகிறது. இதைத்தவிர்க்க தினம் காலை மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்., ஒரே ப்ராண்ட் சோப்பைத்தான் உபயோகிக்க வேண்டும். நம் சருமம் ஒரு சோப்புக்கு பழகியபின் மாற்றினால் சருமப்பிரச்சனைகள் உருவாகும். எனவே எந்த சோப்பை உபயோகிக்கிறோமோ அதையே எப்போதும் உபயோகிக்க வேண்டும்.

சுத்தமான துவாலைகள் ., கைக்குட்டைகள் உபயோகப்படுத்தவேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வேர்க்குரு அதிகமானால் அரிப்பு ., தலையில் பொடுகு ஏற்படும். வேர்வை நீங்க குளித்தபின் வேர்க்குருவுக்கான பவுடர் போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதிகமான பவுடர் போட்டால் அதுவே தோலில் படிந்து மயிர்க்கால்கள் அடைபட்டு இன்ஃபெக்ட் ஆகி வேனல்கட்டி ஆகலாம்.

வேர்வை கை மடிப்புகளில் அல்லது உடல் மடிப்புகளில் படிந்து சிவந்து தடித்துவிடும். வியர்வை இல்லாமல் நன்கு துடைக்கவேண்டும். இல்லாவிட்டால் படை., சொறி., சிரங்கு., புண்கள் போன்றவை ஏற்படக்கூடும். இதை தடுக்க குளித்தபின் நன்கு துடைத்து விட்டு களிம்பு அல்லது ஆயிண்ட்மெண்ட் அல்லது டியோடரண்ட் தடவுவதை விட ., லேசாக வேர்க்குருபவுடரைப் போட்டுக் கொள்ளலாம்.. துர்நாற்றத்தைத்தடுக்க மைல்ட் பாடிஸ்பிரே உபயோகப்படுத்தலாம்.

தலைக்கு தரமான ஷாம்பூ., அல்லது சீயக்காய்த்தூள் உபயோகப்படுத்தலாம். தலையில் வேர்க்காமல் இருந்தாலே பொடுகு வராது. துர்நாற்றமும் வராது. பயத்தமாவு., கடலைமாவு போட்டும் நன்கு அலசலாம். வியர்வையினால் பெருகும் ஃபங்கஸை இவை தடுக்கின்றன.

நீர்ச்சுருக்கு., அல்லது நீர்க்கடுப்பு வந்தால் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்., நீர் ஆகாரம் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை ஜூஸ்., நன்னாரி சர்பத்., வெட்டிவேர் சர்பத்., நீர்மோர்., பானகம்., இளநீர்., நுங்கு., பழச்சாறுகள் போன்றவை தாகவிடாயை தடுக்கும். சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் எரிச்சலையும் தடுக்கும். பாட்டில்களில் விற்கப்படும் குளிர்பானங்களை விட வீட்டிலேயே செய்து அருந்துவது சிறப்பு. மண்பானைகளில் நீர் வைத்து அருந்துவது நல்லது.. அதை முதலில் நன்கு சுத்தமாக்கியபின் தண்ணீர் ஊற்ற வேண்டும்.


மாங்காய்.,பச்சை மிளகாய் போன்ற உஷ்ணம் ஏற்படுத்தும் உணவுகளை அளவோடு சாப்பிடவேண்டும். காரம் மற்றும் மசாலா குறைக்க வேண்டும்.இல்லாவிட்டால் அவை சூடு தாங்காமல் வயிற்று வலியையும் வயிற்றுப் போக்கையும் உண்டாக்கும். எந்த உணவையும் அதிக சூட்டோடோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ உண்ணக்கூடாது. சாதத்தில் அதிகம் தயிர் அல்லது மோர் சேர்த்து உண்ணலாம்.

ஐஸ் சேர்த்து தயாரிக்கப்படும் குல்ஃபி., ஐஸ்க்ரீம்., மில்க்‌ஷேக் ., ஃப்ரூட் சாலட்டுகளையும் மிதமான குளிர்ச்சியில் ரூம் டெம்பரேச்சரில் சாப்பிடவேண்டும்.. தரமானவைகளாக இல்லாவிட்டால் தொண்டையில் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டுவிடும்.

உடல் சூடு அதிகம் இருக்கும். எனவே அதிகம் நீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள்., வெள்ளரிக்காய்., பூசணிக்காய்., பீர்க்கங்காய்., புடலைங்காய் போன்றவையும்., பழங்களில் தர்ப்பூசணி., வெள்ளைக் கிர்ணி., சிவப்பு கிர்ணி., வெள்ளரிப்பழம் போன்றவையும்., எலுமிச்சை ஜீஸ் மற்றும் அனைத்து பழச்சாறுகளும் ஏற்றவை.

வெய்யில் அதிகமாக இருந்தால் சன்ஸ்ட்ரோக்., மயக்கம்., தலைச்சுற்றல் ஏற்படும். சிலருக்கு அம்மையும் ஏற்படும். எனவே வெய்யில் நேரங்களில் அதிகம் வெளியில் செல்லாமல் மாலை நேரங்களில் செல்லலாம். வேலைக்கு செல்லவேண்டிய பெண்கள் சன்ஸ்கிரீன் லோஷன்கள் உபயோகப்படுத்தலாம். மேலும் கைகளுக்கு உறை அணிந்து கொள்ளலாம். அவை சருமம் கறுப்பதை தடுக்கின்றன. ஆண்கள் தொப்பி அணிந்து கொள்ளலாம்.

வெளியே செல்ல வேண்டி வந்தால் கறுப்பு குடை பயன்படுத்துவதை விட வெள்ளைக் குடைகள் அல்லது கலர் குடைகள் பயன்படுத்தலாம். காலமாற்றத்துக்கு ஏற்ப காட்டன் உடைகள் அணிய வேண்டும். சிந்தடிக் உடைகளை அணியக்கூடாது. கோடை முடியும் வரை வாஷபிள் காட்டன் உடைகள்தான் பெஸ்ட். உள்ளாடைகளும் காட்டனில்தான் அணிய வேண்டும்.

முன்பெல்லாம் வீடுகளில் வெட்டிவேர் தட்டி இருக்கும். தற்போது நாம் ஃபேன்., ஏசி., ஸ்பிளிட் ஏசி., ஏர் கூலர் போன்றவற்றுக்கு மாறிவிட்டோம். ஏர் கூலர்களில் இருக்கும் நீரை அடிக்கடி மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கோடையிலும் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுக்கடியால் வேனல்கட்டிக்கு சமமாக சருமம் சிவந்து தடித்து விடும்.

எனவே இந்த கோடைகாலத்தில் இருமுறை குளித்தும்., காட்டன் உடைகள் அணிந்தும்., நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கள் பழங்கள்., நிறைய நீர் ஆகாரங்கள் எடுத்தும் வியர்வையை விரட்டுங்க.. கோடையையும் கொண்டாடுங்க..


டிஸ்கி :- இந்தக் கட்டுரை மே மாத இவள் புதியவளில் ஆண்டாள் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.. உங்க தேனக்கா புனைபெயரில் எல்லாம் எழு்த ஆரம்பிச்சாச்சு மக்காஸ்..:)


16 கருத்துகள்:

  1. வெய்யில் காலத்திற்கேற்ற பயனுள்ள பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கோடைகாலப் பாதுகாப்பு.

    கொண்டாடிடுவோம்.:)

    பதிலளிநீக்கு
  3. கோடை டிப்ஸ்...
    கொண்டாட வேண்டிய டிப்ஸ்...

    பதிலளிநீக்கு
  4. வியர்த்து விறுவிறுத்துப்படிச்சு முடிச்சதும் ஜில்லுனு ஆகிடுச்சுங்க.
    கோடையை துரத்த நல்ல பகிர்வு தான். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. கோடைக்கு சொல்ல‌வேண்டிய அவ்வளவையும் அழகா சொல்லிட்டீங்க தேனக்கா! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப பயனுள்ள டிப்ஸ்...பகிர்வுக்கு ரொம்ப நன்றி...

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி, அக்கா!

    பதிலளிநீக்கு
  8. கோடையைக் கண்டால் மிரள்கிற மனசுக்கு தைரியம் சொல்லும் பதிவு

    பதிலளிநீக்கு
  9. புனைபெயரில் எழுத ஆரம்பிச்சுட்டீங்களா,ம்ம் கலக்குங்க....பகிர்வுக்கு நன்றி அக்கா!!

    பதிலளிநீக்கு
  10. வெயிலுக்குத் தேவையான சூப்பர் குறிப்புகள்.பகிர்வுக்கு நன்றி அம்மா.புனை பெயரில் எழுத ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள். எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாள் அம்மன் பெயரில் எழுத ஆரம்பிச்சிருகீங்க.அந்த அம்மனின் அருளுடன் மேம்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா!

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. நன்றி ராஜா

    நன்றி ராஜி

    நன்றி மாதேவி

    நன்றி ரமேஷ்

    நன்றி கோபால் சார்

    நன்றி அஸ்மா

    நன்றி கீதா

    நன்றீ சித்து

    நன்றி ரிஷபன்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி மேனகா., :))

    நன்றி கீதா

    நன்றி ஜிஜி

    நன்றி ரத்னவேல்சார்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...