புதன், 25 மே, 2011

பரிசோதனை எலிகளும் பரதேவதையும்..

ஆய்வுக் கூடத்தில் எலிகள்
அன்பாய் வளர்க்கப்பட்டு..
அடுத்த சோதனைகள் வரை
அன்பு உணவு கொடுக்கப்பபட்டு..

சிரிஞ்சால் குத்திப்பார்ப்பது
மூஞ்சியில் ஆல்கஹால் தேய்ப்பது
பஞ்சை அமுக்கி முச்சை அடக்குவது
எல்லாம் செய்துவிட்டு சோதனை எனலாம்


நலியாத புன்னகையோடு
டிசெக்‌ஷன் ப்ளேட்டில்
படுக்க வைக்கப்பட்டு
ஆணியும் ஊசியும்
அடிக்கப்படும் போது கூட
நம்பிக் கொண்டிருப்பீர்கள் இது அன்பென்று,

கத்திரிக்கோல்களால் துண்டாக வெட்டி
சாக்குப் பையிலும் அமுக்கி
வீசும் போது வீசாமல் இருக்கலாம்
உங்கள் பிணவாடை உங்களுக்கே..

அன்பென்று நடித்து
அரவணைப்பதாய் கத்தி சொருகி
சிரிக்கும் இவர்களைப் பார்த்து
சிலர் பரதேவதே காளி் என விழுவார்கள்.

கரு நீர்க்கலாம் என உங்கள்
தாய் வயிற்றிலேயே உங்கள் கருவைக்
குத்திக் கொலை செய்யும் இவர்களோடு
இன்னமும் அன்பு என்று நீங்கள்
கட்டிப் பிடித்து அழுது கொண்டிருக்கலாம்.

பரதேவதையோ உங்கள் உதிரத்தை
எல்லாருக்கும் அருந்தக் கொடுத்து
சதையை சமைத்து வைத்து
சாவகாசமாய் ஒன்றும்
அறியாததுபோல காட்சியளிக்கும்
அடுத்த பரிசோதனை எலிக்காக காத்து.

9 கருத்துகள் :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கொடுமையாய் இருக்கிறது.

மதுரை சரவணன் சொன்னது…

//பரதேவதையோ உங்கள் உதிரத்தை
எல்லாருக்கும் அருந்தக் கொடுத்து
சதையை சமைத்து வைத்து
சாவகாசமாய் ஒன்றும்
அறியாததுபோல காட்சியளிக்கும்
அடுத்த பரிசோதனை எலிக்காக காத்து.//

எதார்த்தமான உண்மை... வலிக்கிறது..வாழ்த்துக்கள்

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அன்பும், பண்பும் நம் ஒவ்வொரு எண்ணங்களிலும், பேச்சிலும், எழுத்திலும், நடத்தையிலும், செயல்களிலும், ஒவ்வொரு சிற்றுயிர் மீதும் கூட காட்டப்பட வேண்டும்.

வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலார் பிறந்த மண்ணில் நாம் வாழ்கிறோம் என்பதை மறக்கக்கூடாது.

செந்தில்குமார் சொன்னது…

வலிகளை சுமந்த...
எலிகளின் துயரங்கள்
கனமான வரிகளாய்..அக்கா..

குணசேகரன்... சொன்னது…

that is life..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வலி நிறைந்த வார்த்தைகள்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

ஆமாம்..

நன்றி ராஜி

நன்றி சரவணா

நன்றி ரத்னவேல் சார்

நன்றி கோபால் சார்

நன்றி செந்தில்

நன்றி குணசேகரன்

நன்றி செந்தில்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...