2821. இவர் எங்கே இருக்கார்னு சொல்லுங்க
2822. வாளைமீனும் விலாங்குமீனும்
மங்கையர் மலர் இணைப்பில் 30வகையான பழ உணவுகள் வெளியானது. அந்தப் பழ உணவுகளுக்காக சமைத்து எடுத்த பல புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். ஒவ்வொரு உணவுக்கும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கினால் அந்த உணவு ரெஸிப்பியைப் படிக்கலாம்.
பழ உணவுகள். மை க்ளிக்ஸ், FRUIT RECIPES, MY CLICKS.
இவை மங்கையர் மலர் இணைப்பில் வெளியான ரெஸிப்பீஸ். என் தேனூஸ் ரெஸிப்பீஸ் வலைத்தளத்திலும் வெளியானவை. எனவே புகைப்படங்கள் இங்கே கொடுத்திருக்கிறேன்.
இணைப்பைச் சொடுக்கினால் ரெஸிப்பீஸைப் படிக்கலாம்.
அன்பொளி ANBOLI, தர்ம சக்கரம், நகரத்தார் மலர் – ஒரு பார்வை
அன்பொளி ANPOLI - வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்ற கேப்ஷனுடன் வெளியாகும் நூல் அன்பொளி. இதன் 339 ஆவது இதழை வாசித்தேன். திரு. வேதாத்ரி மகரிஷி அவர்களின் தலையங்கத்துடன் வெளியாகி உள்ளது..
தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையும் சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து பல்வேறு நூல்களை ஆய்வு செய்கிறார்கள். நம் தோழி திருமதி. பவளசங்கரி தமிழர் வாழிவியல் ஆய்வு அறக்கட்டளையின் நிறுவனர். ஈழத்துக் கவிஞர் திரு. ரிஷான் ஷெரீஃப் அவர்களின் நூலை (முன்பே வலைத்தளத்தில் விமர்சனம் வெளியிட்டுள்ளேன் ) நூல்களின் நண்பர்களின் குழுமத்துக்காக ஆய்வு செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
ஸ்ரீ ராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமப்ரப
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் வாயு புத்ர நமோஸ்துதே !
திருச்சி கல்லுக்குழியில் இருக்கும் ஆஞ்சநேயரைத் தரிசித்ததில்லையா. வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து இன்புற வேண்டியவர் இந்த ஆஞ்சநேயர். சுந்தரமாகக் காட்சி தரும் மூலவரையும் உற்சவரையும் ஒரு சனிக்கிழமை மாலை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என சுந்தரரின் காட்சி இன்பத்தைப் பகிர்ந்துள்ளேன்.
நமது மண்வாசம் மதுரையில் இருந்து வெளிவரும் மாத இதழ். தானம் அறக்கட்டளையின் ரிஃப்ளெக்ஷன் பதிப்பகத்தின் மூலம் இன்று வரை இடையறாது ஆறாண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து சமூக மாற்றத்தை உண்டாக்கி வரும் இதழ். இதில் கிட்டத்தட்ட 50 இதழ்களுக்கும் மேலாகக் கதை, கவிதை, கட்டுரை எனப் பங்களிப்புச் செய்யும் வாய்ப்புக் கிட்டியது.