எனது பதிமூன்று நூல்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

துணை. - சொல்வனத்தில்.


துணை.:-


விஷ்க் என்று காதுப்பக்கம் சுத்திக்கொண்டிருந்தது ஒரு . காலையில் விழிப்பு வந்ததில் இருந்து இந்த ஒரு பண்டம் போல அவனை மொய்த்துக்கொண்டிருந்தது. விலகிக்கிடந்த போர்வையின்வழி காலில் அமர்ந்து கூசியது. காலை அசைத்தான்.

மெல்ல அசங்கியபடி  பறந்து அடுத்த காலில் அமர்ந்தது.

கீழ்வீட்டின்  நாயைப் பார்த்து வீட்டுக்காரர் சத்தம்போட்டுக்கொண்டிருந்தார். லோப்ல லேது என்று எத்தி கதவைச் சாத்திக்கொள்வார். எதற்கு வளர்ப்பு மிருகம். மனிதனுக்குள்ளே பல மிருகங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.  மற்றொரு மனிதனைப் பார்த்துக் கத்தினால் பதிலுக்கு குதறிவிடுவான், அதை நன்றியுள்ள நாய் செய்யாது என்பதாலா.


பாவம் அதன் வாயை வேறு அவ்வப்போது சிவப்பு ரிப்பன் கொண்டு கட்டிவிடுகிறார்கள். அது அவனைப்பார்த்தால் ஓடிவந்து குலவ வருகிறது . அவனுக்கும் ஃபாத்திமாவுக்கும் வளர்ப்புப்பிராணிகள் என்றால் அலர்ஜிபடி இறங்கிப்போகும்போது அது ஓடிவந்தால் அப்படியே மூச்சைப்பிடித்தது போல நின்று கொள்வார்கள் சாலமனும் ஃபாத்திமாவும்.


வீட்டுக்காரர் பையன் வந்துடர்னா மத் அங்கிள். குச் பீ நஹி கரேகாஎன்று சொல்லி காலிடுக்கில் அதன் சங்கிலியை மிதித்துப் பிடித்துக்கொள்வான்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

ஹைதராபாத் - ஹைடெக் சாலைச் சிற்பங்கள் & மேம்பால ஓவியங்கள். HYDERABAD SCULPTURES & MURALS.

ஹைதராபாத்தில் நான் வியந்த ஒரு விஷயம் அழகழகான சாலை சிற்பங்கள்தான் . அவை நம்மூரு போல் சிமிண்டால் மட்டுமல்ல இரும்பாலும் ( வேஸ்ட் உலோகங்களாலும்) ப்ராஸ் போன்றவற்றாலும் அமைக்கப்பட்டிருக்கு 

புதன், 26 ஆகஸ்ட், 2015

குழந்தைக் கவிஞரும் மேனாள் நிதியமைச்சரும் மொழிக்கோயிலும்.திரு.கம்பன் அடிசூடி அவர்களின் வரவேற்புரை. :-

குழந்தைக் கவிஞரும் மேனாள் நிதியமைச்சரும் மொழிக்கோயிலும்.:-

குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கும் விழாவில் கம்பன் அடிசூடி அவர்களின் உரையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. நிகழ்வுக்கு வந்திருந்த ஒவ்வொருவரையும் அவர் பொருத்திச் சொன்ன விதம் அருமை.

கலப்பு.இனியும்
பிச்சையெடுக்கப் போவதில்லை.
யாருக்கும்
காரணம் சொல்லத்
தேவையில்லாத போதும்
யார் தலையையும் காக்கும்
பொறுப்பு இல்லாத போதும்
தர்மத்துக்காகக்
காத்திருப்பு.,
கோயில் வாசலில்
அழுக்கு மூட்டையோடு
குளிக்கவும் இல்லாமல்.

காரைக்குடி கம்பன் கழகத்தில் குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது :-காரைக்குடி கம்பன் கழகத்தின் 58 ஆவது கூட்டம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த வருடம் சாகித்திய அகாதமியின் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற கண்டனூர் குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அவர்களைப் பாராட்டி கம்பனடிப்பொடி விருது வழங்கப்பட்டது.

அந்தக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள அழைப்பிதழ் கம்பனடிசூடி திரு பழனியப்பன் அவர்களிடமிருந்து வந்ததால் கலந்து கொண்டேன்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6

139. இது அரிவாள்மணை -- அருகாமணை. ஆனால் தேங்காய் திருகியும் அதற்கான மடலும் இணைந்தது. அநேகமாக இதுபோல் காரைக்குடியில் மட்டுமே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.என் அம்மாவிடம் நாங்கள் போகும் ஊரில் பழகும் தோழியர் & பக்கத்து வீட்டுக்காரர்கள் இதுபோன்ற அருகாமணை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பார்கள். ஒவ்வொரு முறை நாங்கள் ஊருக்குத் திரும்பும்போது அநேகருக்கு இம்மாதிரி அருகாமணை பார்சல் ஆகி இருக்கும். :)

அதே அரிவாள்மணை இன்னொரு கோணத்தில். இதில் திருகினால் தேங்காய் பூப்போல வரும். மிக்ஸியில் பவுடராகிவிடும். அல்லது திப்பி திப்பியாக வரும்.

மன வடிவ முத்தம்.

முன்னொரு நாள்
முன் மாலைப்போதும்
பின்னொரு நாள்
பின்னிரவுப்போதும்
இன்னொருநாள்
இளங்காலைப் போதும்
உன் குரல் அனுப்பி
விழுந்து கிடந்த
எனை தூக்கினாய்
குழந்தையைப்
போலானேன்
சினேகிதியே
தாயானாய்
வார்த்தைகளால்
தாலாட்டி
இதம்தந்தாய்
இன்னமுதே..

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.

”சீர்மிகு சிங்கப்பூர் பாகம் - 1. சொர்க்கபுரி” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தஸ்தயெவ்ஸ்கி கதைகள் - சுசீலாம்மாவின் புதுநூல் வெளியீடு.

அன்பு வாழ்த்துகள் அம்மா.

முகநூலில் சுசீல்லாம்மா தனது பக்கத்தில்  தனது புது நூல் வெளியீடு பற்றி எழுதி இருந்தார்கள். அவர்கள் வலைப்பக்கத்திலும் வெளியானதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

சனி, 22 ஆகஸ்ட், 2015

தேடிப்பாரேன்..

தேடிப்பாரேன்,
கொஞ்சம் தேடிப் பாரேன்.
நொறுங்கிக் கிடக்கும்
கண்ணாடிச் சில்லுகளில்
ஆற்றின் கண்ணாடிச் சில்லுகளில்
கொட்டிச் சிதறும்
வெளிச்ச வெள்ளங்களில்
சூரியனின் சூடான முத்தங்களில்

சாட்டர்டே போஸ்ட் :- ஆழ்வார்களும் அரங்கனும் சூடிய சுடர்க்கொடி சுமிதாவும்.

முகநூலில் என் அன்பிற்குரிய தங்கைகளுள் ஒருவர் சுமிதா ரமேஷ். அழகான கவிதைகளும் அதைவிட அழகான அரங்கன் பதிவுகளுமாக மனதைத் தொட்டவர். என்றும் புன்னகை, எளிமை, அசத்தலான பதிவுகள் எனக் கலக்கி வருபவர். முகநூலில் மட்டுமல்ல கூகுள் ப்ளஸ்ஸிலும் இவர் பதிவுகள் பார்த்து அசந்ததுண்டு. அரங்கன் மேல் எனக்கும் பித்தென்றாலும் இவர் வழி தனி வழி. தினமும் தவறாமல் ரசனையோடு அரங்கனைப் பாடிப் பரவிப் புகழும் இவரின் பதிவை என் வலைத்தளத்திலும் வெளியிட ஆவல் மிகுந்தது. 

/// அரங்கனைப் பற்றி ாயிரிவ்யப் ப்ரந்தப் பாடல்குடன் எனது தளத்துக்காக எழுதித்தரமுடியுமா சுமி. // 

 என முகநூல் உள் டப்பியில் தொடர்பு கொண்டபோது தினம் அரங்கனைப் பற்றி எழுதி வரும் அவர் ஆழ்வார்களைப் பற்றியும் எழுதித் தருவதாகச்சொன்னது களிகூரச் செய்தது. எம்பெருமான் சங்கல்பம். இதையே அவரும் சொன்னது பார்த்து இன்புற்றேன். :)
 வைணவத்தில்  திளைத்த  ஆழ்வார்கள்
 நம் தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியங்கள் இறைவனை ஆண்டவை  நம் மனதையும் என்றென்றும் ஆள்பவை.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

பொழுதும் மனசும்.9.4.86.

8. சுருண்டு கிடக்கிறது
பொழுதும் மனசும்

கவிழும் ஓடாய்
இருள்.

உரலும் உலக்கையுமாய்
காற்றும் மரங்களும்.

தை அமாவாசை, ரதசப்தமி ரெசிப்பீஸ்ஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், அரிசிப்பருப்பு சாதம். ஆனியன் கார்லிக் ரைஸ்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள். - சுமதிஸ்ரீயின் நூல் ஒரு பார்வை.

கண்ணீர் கசியவைக்கும் நெஞ்சை நெகிழவைக்கும் மனசை ஆட்டிப் படைக்கும் எழுத்தை சமீபத்தில் படித்தேன். ஆண் எழுத்தாளர்களே பெரும்பகுதியும் உண்மையைப் பொளேரென அறையும் விதத்தில் எழுதி இருப்பதைப் படித்துப் பிரமித்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண் எழுத்தைப் படித்துவிட்டு அயர்ந்து போய் இருக்கிறேன் இன்று.

ஆண்குழந்தைகளே ஆன்ம ப்ரதிபலிப்புகள் என்று எண்ணப்பட்டு வரும் ஒரு சமூகப் போக்கில் பெண்ணாகப்பிறந்து தந்தை தாயால் வெறுப்போடு வளர்க்கப்பட்டு அவர்கள் அங்கீகாரமில்லாமலே தன்னைத் தான்விரும்பும் எழுத்து மற்றும் பேச்சுத்துறையில் வளர்த்து இன்று எட்டாத உயரங்களையும் எட்டி இருக்கும் சுமதி ஸ்ரீ என் ஆச்சர்யத்துக்கும் மதிப்புக்கும் உரியவர்.  அவரின் நான்காவது நூல் “என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் “

செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5


செட்டிநாட்டில் மிதிலைப்பட்டியில் நிறைய ஓலைச்சுவடிகள் இருப்பது கேள்வியுற்று தமிழ்த் தாத்தா உ. வே. சுவாமிநாதய்யர் அங்கே மாட்டுவண்டியில் சென்று அவற்றை எல்லாம் வாங்கிவந்து சேகரித்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இங்கே காரைக்குடியில் திருமணத்தைப் பதிவு செய்யவும் 124. ஏடுகளையும் 125. எழுத்தாணிகளையும் போன நூற்றாண்டில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு 126. இசைகுடிமானம் எழுதுதல் என்று பெயர். பெண்ணின் அப்பத்தா வீட்டு ஐயாவும், மாப்பிள்ளையின் அப்பத்தா வீட்டு ஐயாவும் இந்தத் திருமணப் பதிவு ஏடை எழுதிக் கொள்வார்கள். ஓரம் நறுக்கப்பட்டு கயிறில் கோர்க்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஏடும். 

கதவுகள்தொலைந்த என்னைத் தேடி
ஒவ்வொரு கதவாய்த்
திறந்து பார்க்கிறாய்.
எல்லாம் முடிந்தது எனத் திரும்பிச்
செல்லும் உன்னைக்
குரலற்றுப் பார்க்கிறேன்

புதன், 19 ஆகஸ்ட், 2015

நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.

 முக்தியடைய நிஷ்டை இன்றியமையாதது. அழிக்கும் சிவனே நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் காட்சி நிலையாமையையும் நிலையானவனைப் பற்ற வேண்டிய நிலைமையையும் உணர்த்தியது. சும்மா இருப்பதே சுகம் என்று  சொல்லி இருக்காங்க. ஆனா ஒரு அரைமணி நேரம் இப்படி சும்மா அமர்ந்து பாருங்க ( சிந்தனை எதுவுமில்லாம :).

சைவ நாற்படிகள் சரியை கிரியை யோகம், ஞானம் இவை சிவ புண்ணியங்களாகும். அட்டாங்க யோகங்களில் இயமம், நியமம், ஆசனம், ப்ரணாயாமம், பிரத்யாகாரம், தாரணை ,தியானம், சமாதி. என்பனவற்றுள் இது ஏழாம் எட்டாம் யோகமாகும். இவை முக்தி பெற வழிகளாம்.

 உலக புகைப்பட தினத்துக்காக பல்வேறு இடங்களில் ( நாகேஷ்வர், பெங்களூரு, கர்நாடகா ( பிதாருக்கும் குல்பர்க்காவுக்கும் மத்தியில் இருக்கும் சிவன் ) , குஜராத் சோம்நாத்தில் ஆர்ட் கேலரி அருகில் இருக்கும் லிங்கம்.  &  நிஷ்டையில் இருக்கும் சிவன் படங்களைப் பகிர்கிறேன்.


சாந்தா தத்தின் ’வாழ்க்கைக் காடு’ - ஒரு பார்வை.வாழ்க்கைக்காடு ஒரு பார்வை :-

புலம்பெயர் வாழ்வின் இருப்பையும் இருப்பின்மையையும் ஈழத்து எழுத்தாளர்கள் வலிமையுடன் பதிவு செய்திருப்பார்கள். நம் தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில் பிரிவு ஏற்படும்போது வர்க்கபேதம் ஜாதிபேதமின்றி மக்களுக்குள்ளே ஏற்படும் பிரிவையும் வேறுவழியின்றி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் வலியையும் அப்படியே தன்னுடைய எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சாந்தாதத் தன்னுடைய வாழ்க்கைக்காடு என்ற சிறுகதைத் தொகுப்பில்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

காரைக்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகம்.

காரைக்குடியில் இருக்கும் நகரச் சிவன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி நிகழ இருக்கின்றது. இதைப்பற்றி என் ராமு மாமா முகநூலிலும் தனி மெயிலிலும் அறியத்தந்தவற்றை இங்கே பகிர்கிறேன்.

/////காரைக்குடிச் சிவன் கோவில் கும்பாபிஷேகம் – 27-08-2015 ,மன்மத வருடம் ஆவணி மாதம் ய ம் தேதி அன்று
குடமுழுக்கு ஆண்டு ஆங்கில ஆண்டு
1 ஆங்கிரச 21-04-1872
2 விஜய 1953
3 ஆனந்த 1974
4 விபவ 1989
5 சித்திரபானு 26-08-2002
6 மன்மத 27-08-2015

காரைக்குடி ஊராட்சி மன்றம் ஏற்படுத்தப்பட்டது 1855
நகராட்சியாக மாற்றப்பட்ட்து 5-09-1928
1888 குடமுழுக்கின்போது ராம.ஆத.ராம. ராமனாதன் செட்டியார் அவர்கள் கிழக்கு ராஜகோபுரம் எடுத்தார்கள்.

சிங்கப்பூர் - பாகம் 5 . சிங்கையில் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம்.

சீர்மிகு சிங்கப்பூர் பாகம் - 5. சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும் “ என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.திங்கள், 17 ஆகஸ்ட், 2015

இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.

இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.

1.டாங்கர் சட்னி
2.ஆரஞ்சு துவையல்
3.ரோஜாப்பூ சட்னி
4.வெங்காயக் கோஸ்
5.கதம்பச் சட்னி
6.கத்திரி உருளை அவியல்
7.வரமிளகாய்த் துவையல்

இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.

1.டாங்கர் சட்னி:-

புதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015.
11.10.2015 ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா நடக்க இருக்கிறது.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.115. இது ட்ரேதான். ஆனால் மரத்தில் செய்யப்பட்டு பறவையும் கிளையும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.116.இது மணவறையில் உபயோகப்படுத்துவது. அரசாணிக்கால் நடுவது. முதல் நாள் இரவே பங்காளிகள் வந்து இதில்தான் கிலுவைக் கம்பையும் பாலைக்கம்பையும் ஊன்றி அரசிலைகளைச் சுற்றி வைப்பார்கள். அரசன் ஆணைக் கால் என்று பெயர். அரசனின் ஆணையோடு திருமணம் செய்விப்பதாக இதை வைப்பது

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

 ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

ஸ்ரீ விநாயகர் துதி.

ஓம் விண்ணவர் தொழும் விமலா போற்றி
ஓம் மண்ணுயிர்க்கொரு மருந்தே போற்றி
ஓம் கள்ளவாரணப் பிள்ளையே போற்றி
ஓம் திருமுறை காட்டிய திருவே போற்றி
ஓம் பேழைவயிற்று பெருமானே போற்றி
ஓம் இருவேறு உருவ இறைவா போற்றி
ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
ஓம் வேண்டும் வரமருள்வாய் போற்றி
ஓம் கரிமுகத்து எந்தாய் காப்பாய் போற்றி
ஓம் கற்றவர் விழுங்கும் கனியே போற்றி. 

ஒரு ஃபர்னிச்சர் மார்ட்டின் முகப்பில் இருந்த விநாயகர்.
 காரைக்குடி எங்கும் இப்போது பழக்கடை. எனவே ஒரு பிரம்மாண்டப் பழக்கடையில் இரு விநாயகர்கள். !!! தேடிப்பார்த்துக்குங்க எங்கேன்னு :)

 ஓ சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயிலில் உள்ள தூணில் விநாயகர்.

புதன், 12 ஆகஸ்ட், 2015

வேதவல்லியைத் தேடி.

கும்பகோணத்தில்ருந்தபோது தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலுக்குப் போனோம். வண்டியை நிறுத்திவிட்டுப் போனால் முதன் முதலில் நுழைந்தது வேதவல்லி அம்மன் சன்னிதி. யுனெஸ்கோவின் அரும்பெரும் சரித்திரச் சின்னத்தில் இடம் பெற்றதால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழும், அறநிலையத்துறையின் பராமரிப்பின் கீழும் இயங்கி வருகிறது இக்கோயில் நிர்வாகம்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

இராஜராஜேச்சுவரத்தில் ஒரு மாலை.

கூண்டுக்குள் நாதக் கருங்கல் படிகள்
உள் ப்ரகாரம்.
கும்பகோணம் கோயில்களுக்குப் பெயர் பெற்ற ஊர். அங்கே இருக்கும் சிறப்பிடம் பெற்ற கோயில்களில் ஒன்று தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில். பல்லவர்களைப் பற்றி மட்டுமே சிற்பக்கலை செழிக்கப் பாடுபட்டவர்கள் என்று நினைத்திருந்த என்னை இக்கோயில்கள் மாற்றின ( தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் மற்றும் தாராசுரம் கோயில் . )

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள் வெளியீடு.

ஈரோடு சங்கமத்தின்போதே எனது நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிட வேண்டுமென்ற என்னுடைய கோரிக்கையையை வலைப்பதிவர் சந்திப்பில்  அவையில் திரு. தாமோதர் சந்துரு அண்ணன் & திரு. ஸ்டாலின் குணசேகரன் முன்னிலையில் தெரிவித்திருந்தேன்.  அந்த எண்ணம் இன்று ஈடேறியது.  தாமோதர் சந்துரு அண்ணன் முன்னிலையில் பாரதி புத்தகாலயத்தில் என்னுடைய நூல் பெண் பூக்கள் வாசகர்களால் வெளியிடப்பட்டது. பெண்பூக்களை அன்பின் ஆராதனாவும் சக்தி ஷாலினியும் பெற்றுக்கொண்டது வெகு சிறப்பு.  நன்றி அண்ணன். :)

சனி, 8 ஆகஸ்ட், 2015

மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.

ரோடு ஓரங்களில் அடர்ந்து வளர்ந்து காடாய்க் கிடப்பதைக் குத்துப் புதர்ச் செடி என்போம்.

அந்தக் குத்துப்புதராக வளரும் செடிகளை அலங்காரமாக வெட்டி அழகழகாய் பசுமைச்சிற்பம் சமைத்திருக்கிறார்கள் லால்பாகில்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

காத்திருப்பு :-காத்திருப்பு :-

*காகங்கள் கரைதல் போல்
இருப்புக் கொள்ளாமல்
நகரும் வாழ்க்கை.

8888888888888888888888888888888

ஆயுள் ஆரோக்ய ரெசிப்பிஸ்இந்த உணவுக்குறிப்புகள் மே. 1 - 15, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. 

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சுதாமாபுரி

”சிரவண மாதத்தில் சுதாமாபுரி ” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி.

ஸ்ரீ விநாயகர் போற்றித் துதி. 

ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
ஓம் விடலை விரும்பினாய் போற்றி
ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
ஓம் பாவமறுப்பாய் போற்றி
ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி

சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் விநாயகர்.
 இவர் அதே கோயிலில் உள் புறச்சுற்றில் உள்ள விநாயகர்.
இனி வருபவர்கள் எல்லாருமே அகஸ்தீஸ்வரர் கோயிலின் கோஷ்ட தெய்வம்தான்.

அபாய அழகோடு ஒரு அணை.

தூரத்தில் மனிதர்கள் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
சென்றவருடம் கேரளா சென்றிருந்தோம். திருவனந்தபுரம் சென்றிருந்தபோது அங்கே கணவரின் நண்பர் கொச்சு வெளி பீச், கோவளம் பீச் எல்லாம் கூட்டிச் சென்றார்.

மாலையில் கோவளம் பீச் செல்லும் வழியில் இப்படி ஒரு அணை போன்ற ஒன்று இருக்கு. அதன் மேல் பக்கங்களிலேயே வீடுகளும் இருக்கு.ஹைவேஸ் ரோடு போல இருக்கு. அந்த ரோட்டின் மேலே பாலம். அதிலிருந்து எட்டிப்பார்த்து இந்தப்புகைப்படங்களை எடுத்தேன்

அமீரகத்தின் தமிழ்த்தேரில் தாய்மை.

அமீரகத்தில் இருந்து வெளிவரும் தமிழ்த் தேர் இதழில் தாய்மை பற்றிய என்னுடைய மூன்று கவிதைகள் வெளியாகி உள்ளன.

தாய்மை:-
==========
மழை பொழிந்தது
கட்டிடங்கள் கட்டிடங்கள்  
கட்டிடங்கள் வழித்து.. 

கற்கள் வெறுமே நின்றன..  
மழை சலித்துச் சுருண்டது

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நாதாங்கி.

தாளிடப்பட்ட கதவின் பின்
பயந்து ஒளிந்திருக்கும் ஒருவரை
எத்தனை முறைதான் அழைப்பது ?

தட்டத் தட்ட அதிர்கிறது
நாதாங்கி

உள் அலையும் சுவாசம்
வெப்பமாக்குகிறது அறைக்கதவை

சண்டையிட அல்ல
சமாதானத்துக்கே அந்த அழைப்பென்பதை
கதவு திறவாத ஒருவரிடம்
கத்தாமல் தெரிவிப்பதெப்படி

உதயகால ஸ்லோகமும் சூரிய நமஸ்காரமும்.உதயகால ஸ்லோகமும் சூரிய நமஸ்காரமும்.

உதயகால ஸ்லோகம்.

1.ஆதிகணபதி அறுமுகரை அம்பிகை மணவாளரைக் கால பைரவர் நந்திகேஸ்வர் வீரபத்ர தக்ஷிணாமூர்த்தியைத் தியானித்தெழுந்தேன்.

2.சேஷகிரிவளர் வெங்கடேசரைத் திருமகள் அலர்மேலுவை தேவி சரஸ்வதி சதுர்முகப் ப்ரம்மா ஸ்ரீ பூமிதேவி அம்மனை

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஸ்நேகம் :-ஸ்நேகம் :-

*அன்புச் சூல் கொண்டு
மேகமாய் நான்.

*கட்டிட இறுக்கம் தூர்த்து
கொஞ்சம் மண்ணாகவும்
மரமாகவும் இரேன்.
என்னை நான் சமர்ப்பிப்பதற்கு.

இழவுகார விடுதியும் சில பிரச்சனைகளும்


இழவுகார விடுதியும் சில பிரச்சனைகளும்

காரைக்குடியில்  மக்கள் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்ட இழவுகார விடுதியினால் அந்தத் தெருவில் வசிப்பவர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஊருக்கும் உத்தரகிரியை மண்டபம் வேண்டும்தான் என்றாலும் அது குடியிருப்புப் பகுதியிலோ , பள்ளிக்கூடப் பகுதியிலோ  அமையாமல் காப்பது நலம்.

சனி, 1 ஆகஸ்ட், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர் . ஜக்கும்மாவின் ரின் நினைவுகள்.

ஜக்குமா. சகு மேம் என் முகநூல் தோழி. ஒருவரை ஏன் பிடிக்கும் எதுக்குப் பிடிக்கும்னு தெரியாது. ஆனா பார்த்தோடனேயே பிடிக்கும். அவங்கள்ல ஒருத்தர் ஜக்குமா. மிக மிக அன்பானங்க. அதிர்ந்து ஒரு சொல் சொல்லி எழுதி அறியாதவங்க. தன்மையானவங்க. பேசும் , எழுதும் ஒவ்வொரு வார்த்தையையும் நூறு முறை யோசித்தபின் எழுதுறவங்க. தன்னையறியாமல் கூட அடுத்தவங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையா இருப்பாங்க. எனக்கு அவரோட பதிவுகள் பிடிக்கும்.அவரிடம் சாட்டர்டே போஸ்ட்டுக்காக தன்னோட கருத்துகளைப் பகிர்ந்துக்கும்படி கேட்டிருந்தேன். அதுக்கு அவரின் பதில் இங்கே. :)


சகு மேம் எங்களோடு நீங்கள் சொல்ல நினைத்து இதுவரை சொல்லாத நிகழ்வுகள் சிலவற்றைப் பகிர்ந்துக்க வேண்டுகிறேன். 

 முயற்சிக்கறேன்! தேன்! உங்களைப் போலெல்லாம் பத்திரிகை க்காக எல்லாம் நான் எழுதிய அனுபவம் கிடையாதுப்பா! உங்க மதிப்பில் நான் இருப்பது உங்களுக்கே உள்ள அன்பான குணம்! நேரம் கொஞ்சம் சாதகமாக சில நேரங்களில் அமைய மெனக்கிட வேண்டியதாய் போய்விடுகிறது!

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி,

ஸ்ரீ விநாயகர் போற்றித் துதி.

ஓம் வன்னியிலை ஏற்பாய் போற்றி
ஓம் காலம் கடந்த கற்பகமே போற்றி
ஓம் வெவ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் வேட்கை தணிவிப்பாய் போற்றி
ஓம் கண்ணுதற் கடவுளே போற்றி
ஓம் முருகனின் அண்ணனே போற்றி
ஓம் முக்திக்கு வித்தானாய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தாய் போற்றி
ஓம் வெயிலுகந்த விநாயகா போற்றி
ஓம் கோடிசூரிய ஒளியினாய் போற்றி

மாமாவின் சாந்தி வைரவன் பட்டியில் நடைபெற்றபோது அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிள்ளையார் ( குடும்பத்தோடு :)

Related Posts Plugin for WordPress, Blogger...