காரைக்குடி கம்பன் கழகத்தின் 58 ஆவது கூட்டம் ஆகஸ்ட் 8 ஆம்
தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த வருடம் சாகித்திய அகாதமியின் சிறந்த சிறுவர்
இலக்கியப் படைப்புக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற கண்டனூர் குழந்தைக் கவிஞர்
செல்ல கணபதி அவர்களைப் பாராட்டி கம்பனடிப்பொடி விருது வழங்கப்பட்டது.
அந்தக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள அழைப்பிதழ் கம்பனடிசூடி திரு பழனியப்பன் அவர்களிடமிருந்து வந்ததால் கலந்து கொண்டேன்.
செல்வி கவிதா இறைவணக்கம் பாட கம்பனடிசூடி திரு பழனியப்பன்
அவர்கள் வரவேற்புரை ஆற்ற
கவிஞர் திரு சொ. சொ. மீ சுந்தரம் பாராட்டுரை நல்க,
பேராசிரிய சொ.சேதுபதி விருதுப்பா பாடினார்கள்.
இந்திய மேனாள் நிதி அமைச்சரும் எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பின்
நிறுவனருமான திரு . ப. சிதம்பரம் அவர்கள் தலைமை ஏற்று கம்பன் கழகத் துணைத் தலைவர் திரு.
அரு. வே. மாணிக்கவேலு அவர்கள் கொடுக்க வாங்கி “ கம்பன் அடிப்பொடி விருது புனைந்து பாராட்டினார்கள்.
மாண்பமை அமைச்சர் விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
குழந்தைக் கவிஞர் செல்லகணபதி ஏற்புரை அளித்தார்கள்.
பேராசிரியர்
மு. பழனியப்பன் நன்றியுரை வழங்க
செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
என இனிய சிற்றுண்டியுடன் நிறைவடைந்தது விழா.:)
டிஸ்கி :- இந்நிகழ்வில் எடுத்த குறிப்புகளை அடுத்த அடுத்த இடுகைகளில்
பகிர்வேன் :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!