ஞாயிறு, 21 மே, 2017

மெரினா பீச்சில் தண்ணீர்.!!!மெரினா பீச்சில் கொஞ்சம் காத்து வாங்குவோம். 

தம்பி பிள்ளைகள் சம்மர் லீவுக்கு வந்திருந்தார்கள். இந்தக் காலத்தில் லீவுக்கு அத்தை சித்தப்பா பெரியப்பா வீட்டுக்குச் செல்லும் பிள்ளைகள் குறைவு. அத்தையிடம் ( என்னிடம் ) தம்பி பெண் கோலம் , பூத்தொடுப்பது போன்றவை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தம்பியின் கட்டளை ( மகளுக்கு J ) சமையல் கற்றுக் கொள்ள நாள் இருக்கிறதே. ஆனாலும் தோசை அழகாக ஊற்றுவாள். 

வீட்டில் சோஃபாவின் இருபக்கக் கைப்பிடிகளும் இருவருக்கு விதிக்கப்பட்டது. மாறி அமர்ந்தால் நாம் பஞ்சாயத்துத் தலைவராக அவதாரம் எடுக்க வேண்டிவரும். ( நம்ம ரெண்டு பசங்களுக்கும் அவதாரம் எடுத்தது மறக்கலைல J ) இப்ப புனர் ஜென்மம். 

எவ்ளோ நேரம்தான் கார்ட்டூன் நெட்வொர்க்கையே ( நாமளும் ! )  பார்ப்பது. J அதான் வாங்கடா என்று பீச்சுக்குக் கூட்டிச் சென்றேன். துபாயில் காரிலேயே பயணித்திருந்தாலும் இங்கே பஸ்ஸில் சமர்த்தாக .
வந்தார்கள். பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டிலும் செல்ல குழந்தைகளைப் பழக்கலாம் என்று எண்ணம். இந்தியாவுக்கு மேல்படிப்புப் படிக்க வந்தால் எல்லாவற்றிலும் பயணம் செய்யப் பழகித்தானே ஆகணும் J

சேட்டையா கிலோ என்ன விலை என்று பால் வடியும் இந்தப் பூக்குட்டிகளுடன் மெரினா பீச்சில் சுகமாகக் காத்து வாங்கி கோன் ஐஸ் சாப்பிட்டு, அலையில் விழுந்து, பலூன் சுட்டு, பாலைச் சுத்தி விளையாடி வந்தோம். பஜ்ஜி கேட்கவே இல்லை பசங்க. ’என்ன எண்ணையோ’ என்று நானும் நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். குழந்தைகளைக் கூட்டிச் செல்வதால் வீட்டிலிருந்து சுண்டல் செய்துகொண்டு போயிருந்தேன். ஆனாலும் அந்தப் பேப்பர் வாடையோடு சுண்டல் சாப்பிடும் சுவை மிஸ்ஸிங் J
 
இனி கொஞ்சமென்ன நிறையவே காத்து வாங்குவோம் வாங்க J  

வெய்யில் கொளுத்தி எடுக்குது. தண்ணீர் தண்ணீர்னு மக்கள் குடத்தோட  
அலையிறாங்க. இங்க கடல் நிறையத் தண்ணீரும் ஆளைக் குளிர்விக்கும் அலையும் இருக்கே. கொஞ்சம் கடலாடலாம் J


நாங்க ரொம்பச் சமத்தாக்கும் Jஐஸ்ஸ்ஸ் ஜில்லுங்குது J

சுண்டல் நேரம் Jமணல்வீடு கட்டாம ஒரு பீச் விசிட்டா J

நம்ம என்ன மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கா. சும்மா கைக்கு வந்ததை குவிச்சுக் கட்டவேண்டியதுதான். J  
 
பீச்சுல தண்ணீதாங்க இருக்கும் அத எழுதலீங்க. இது தம்பி பையர் பேரு J மலை மலை தண்ணீர்மலை  !!!


இது எம்பேரு ஹிஹி
இது தம்பி பொண்ணு பண்ணிய சிற்பம். மென்முறுவல் காட்டும் பெண் Jபயப்புடாதீங்க டப்பு டுப்புன்னு சுடலாம் வாங்கத்தைன்னு தம்பி பையர் கூப்பிட்டார். அவங்க சுடுறதப் பார்த்து ரசிச்சேன் Jடப்பு டப்புன்னு சத்தம் கேட்டுச்சு அட ஒன்றிரண்டு பலூனும் புஸ்ஸாச்சு !

aநல்ல வேளை ஒளிரும் இந்தக் கொம்பைக் கேக்கலை. கையில சுத்துற பால் கேட்டாங்க. அது வீடு போகும் வரை கூடத் தாங்கல.:)
பீச்சை நல்லா சுத்திட்டோம். வெக்கை தணிஞ்சிருச்சு. வீட்டுக்குப் போலாம் ரைட். !!!

நல்லா இருட்டிப் போச்சுன்னு ஆட்டோவிலேயே வந்திட்டோம். இன்னொரு நாள் வள்ளுவர் கோட்டமும் சிவன் பார்க்கும் போலாம். ரைட் J9 கருத்துகள் :

கோமதி அரசு சொன்னது…

குழந்தைகளுடன் குழந்தையாக தேனம்மையும் ரசித்தேன், அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Palani Chamy சொன்னது…

பிர்லா கோளரங்கம் செல்லுங்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

ahaa thanks Gomathi Mam and Palanichamy sir :) next time pona porom :)

G.M Balasubramaniam சொன்னது…

பீச்சுக்குப் போய் வந்ததும் குளிக்கணும் உடலெல்லாம் ஒட்டும்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கடற்கரை என்றும் சந்தோசம் தான்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தம்பி பிள்ளைகள் சம்மர் லீவுக்கு வந்திருந்தார்கள். இந்தக் காலத்தில் லீவுக்கு அத்தை சித்தப்பா பெரியப்பா வீட்டுக்குச் செல்லும் பிள்ளைகள் குறைவு. அத்தையிடம் ( என்னிடம் ) தம்பி பெண் கோலம் , பூத்தொடுப்பது போன்றவை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தம்பியின் கட்டளை ( மகளுக்கு J ) சமையல் கற்றுக் கொள்ள நாள் இருக்கிறதே. ஆனாலும் தோசை அழகாக ஊற்றுவாள். // கொடுத்து வைச்சவனக...கண்ணு போடலைப்பா சந்தோசம் தான்...மெய்யாலுமே!! குழந்தைகளோடு குழந்தைகளாக நீங்களும் சூப்பர் தேனு!!

முடிஞ்ச முதலியார் குப்பம் போய்ட்டு வாங்களேன் ஆனா 1 1/2 மணி நேரம் ட்ராவல் பா...முதலைப் பண்ணை, முட்டுக்காடு..கோவளம் பீச் நு.... ஈசிஆர் ல போன ஒரு நாள் முழுக்க கவர் பண்ண நிறையவே இருக்கே...ஆனா வெயில் சுட்டெரிக்குது....

படங்கள் சூப்பர். குழந்தைகள் என்றுமே குழந்தைகள்தான்..

கீதா

Thenammai Lakshmanan சொன்னது…

aamaa Bala sir

yes DD sago

Mahabalipuramum, kovalam beach mattum ponompa.

Thenammai Lakshmanan சொன்னது…

Thanks Geeths.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...