அடிச்சுப் பெய்ற
மழை மாதிரி அடிச்சு ஆடுது வெய்யில். யம்மா வெளியே போயிட்டு வந்தா சுக்கா உலர்ந்து போயிடுறோம்.
கொஞ்ச நஞ்ச வெய்யிலா நெசம்மாவே கருவாடுதான். வேனல்கட்டி, வேர்க்குரு எல்லாம் படை எடுத்து
எரிய ஆரம்பிச்சது போக இப்ப எல்லாம் டைரக்டா இருப்புச் சட்டி வதக்கல்தான் போடுது வெய்யில்.
சுருண்ட தக்காளிப்பழம் மாதிரி வெய்யிலை வெறிச்சிக்கிட்டு வீட்ல உக்கார்ந்திருந்தபோது
( ஏன் மழையை மட்டும்தான் வேடிக்கை பார்க்கணுமா என்ன J ) போன வருஷம் போன ஹொகனேக்கல் ஞாபகம் வந்துச்சு.
அப்ப அங்க எண்ணெய்க் குளியல் போட்டு மீன்குழம்பு வறுவல் எல்லாம் வைச்சு தலைவாழை இலையில்
சுட சுட சாப்பிட்ட ஞாபகம் வந்தது. ஞாபகச்சூடு ஆறுறதுக்குள்ள எடுத்தேன் ஃபோட்டோ ஆல்பத்தை.
,போட்டேன் ப்லாகில் உடனே. J
போய் ஒரு ரவுண்ட் அடிச்சுக் குளிச்சிட்டு வரலாம்போல இருந்தது.
ஆனா எம்மாந்தூரம். சோ நினைவலையில் ஒரு குளு குளு உலா
இப்ப எல்லாம் எண்ணெய்க் குளியல் போடக்கூடாது வயல் வரப்புக்குப் போற தண்ணீ கெட்டுப் போகுதுன்னுட்டாங்களாம். சோ எண்ணெய்க்குத் தடா.
இது அங்கே இருந்த பாலத்து மேலேருந்து எடுத்தது.
தட தடான்னு கொட்டுற தண்ணீ டைரக்டா நம்ம மேல கொட்டுறதுல்ல. ஏதோ பைப்புக் குழாய் மாதிரி மேலே இருந்து கொட்டுது.
ஆண்கள் குளிக்கும் பகுதியிலும் கம்பிப் பாதுகாப்பு பலமாய்த்தான் இருக்கு. நெம்பக்கூட்டம்.
எண்ணெய் மாலிஷ்
பண்றேன்னு இடத்தை எல்லாம் கருப்பாக்கி வைச்சிருந்தாங்க. இப்பவாவது சுத்தமா இருக்கான்னு
தெரில. கால் வைச்சா வழுக்கிடுமோன்னு பயந்துட்டே நடந்தேன்.
ஆளைச் சுழட்டும்
தண்ணீர். என்னா வேகம் என்னா வேகம்.
மகிழ்ச்சியுடன்
வாருங்கள்
மது அருந்திவிட்டு வராதீர்கள்
குதூகலமாகச் செல்லுங்கள்.
குப்பையைப் போட்டுவிட்டுச்
செல்லாதீர்கள்.
அப்பிடின்னு போர்டு
வைச்சிருக்காங்க.
அருவிக் கரையோரமே
சுட சுட போளி அடை மாதிரி பலகாரமெல்லாம் சுட்டு வைச்சிருந்தாங்க. மீனு கூட சுட சுட செவப்பா
பொரிச்சு வைச்சிருந்தாங்க. ரங்க்ஸுக்கு இப்பிடி ரோட்ல வாங்கித்திங்கிறது எல்லாம் பிடிக்காதா..
அதான் நேரே அரை கிலோமீட்டர் வெளியே போய் இருக்கதுலேயே சுத்த பத்தமான ஹோட்டல் ஒண்ணுல
சாப்பிட்டோம். J
செம பசி. என்னதான் அங்கே பெரிய மீனா இருந்தாலும்
நமக்கு கடல்ல பிடிக்கிற வஞ்சிரம்தான் ருசி. J
ஃபோட்டோ எல்லாம்
பார்த்ததும் நெசம்மாவே கொஞ்சம் குளு குளுன்னு ஆயிட்டுதான்.:)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இந்தப் பதிவு என் நினைவுகளையும் கிளறி விட்டது நாங்கள் என் அன்னா கும்பத்துடன் ஹொகனேகல் சென்றது நினைவில் ஆனால் அப்போது வலை எழுத்துப்பக்கம் இருக்கவில்லை பரிசலில் ஏறி நாங்கள் ஆறு பேர் நீரில் செல்லும் போது பயம் தெரியவில்லை. சின்னப் பையன்கள் அருகில் இருந்த மலையின் உச்சிக்குச் சென்று அங்கிருந்து ஜம்ப் செய்கிறார்கள் அருகில் வரும் பரிசல்களுக்குச் சென்று காசு வசூல் செய்கிறார்கள் பழைய புகைப்படங்கள் இருக்கின்றன தேடவேண்டும்
பதிலளிநீக்குseekiram eduthu post seinga Bala sir. summer post soodu pidikkum :)
பதிலளிநீக்கு