எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
HOGENAKKAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
HOGENAKKAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஜனவரி, 2019

ஹோகனேக்கல் தொங்கு பாலம்.- HOGENAKKAL HANGING BRIDGE.

ஹோகனேக்கல் - காவிரி ஆறு பாயும் தமிழக கர்நாடக எல்லையில் இருக்கும் ஊர். இங்கே வட்டு எனப்படும் பரிசல் ப்ரயாணம் பிரசித்தம். இந்தியாவின் நயாகரான்னு கூட சிலாகிக்கிறாங்க. தர்மபுரியிலேருந்து பக்கம்.

அங்கே தொங்கும் பாலத்துல போய் பார்த்ததையும் அங்கே இருந்த பச்சைப் புல்வெளிகளையும் என் காமிரா கண்ணால பார்த்து எடுத்துட்டு வந்திருக்கேன் உங்களுக்காக மக்காஸ்.

தமிழ்நாடு வனத்துறை போர்டு.

வனவிலங்குகள் செல்லும் பாதை என்பதால் முன் அனுமதி பெற்றே போகணும்.

வியாழன், 29 ஜூன், 2017

ஓடமும் ஒரு நாள்...

ஹொகேனக்கலில் பரிசலில் சென்றபோது  பாதி தூரத்துக்குப் பின் இறங்கி நடக்க வேண்டியதாகப் போய்விட்டது.

காரணம் பின்னால் சொல்றேன்.

பரிசலுக்குப் பணம் ( 750 /-ன்னு நினைக்கிறேன் ) கட்டியவுடன் (இருவர் என்றால் கூட. மூவர் நால்வர் என்றால் குறைத்து.). நம்மை வேயிங் மெஷினில் நிற்கவைத்து வெயிட் பார்த்து லைஃப் ஜாக்கெட்டை மாட்டி விடுறாங்க.

நமக்கு ஜலத்துல கண்டமான்னு தெரியாது. ஏன்னா நீச்சல் தெரியாது. ஒவ்வொரு தரமும் பயத்தோட ஆத்தைப் பார்த்துட்டுத்தான் இறங்கி போட்ல உக்கார்றது :)

இது பரிசில் என்பதால் கால் வைக்கும்போதே சுழலுது. திகில் திகில்தான்.

ரங்க்ஸ் முதலடி வைச்சு உக்கார்ந்து கூப்பிட்டதால கொஞ்சம் தைரியமா இறங்கினேன். வண்டியில் தொப் என உக்காருவது போலவே பரிசலிலும் தொப் என விழுந்து அமர்ந்து ஆட்டம் காணவைத்து திகிலானேன் ஹாஹா


வட்ட வட்டமாய் சுழலுடன் சிறிது தூரம் சென்ற வட்டு ஓரிடத்தில் நின்றது.

செவ்வாய், 16 மே, 2017

கொளுத்தும் வெய்யிலில் ஹொகனேக்கலில் ஒரு குளு குளு குளியல்



அடிச்சுப் பெய்ற மழை மாதிரி அடிச்சு ஆடுது வெய்யில். யம்மா வெளியே போயிட்டு வந்தா சுக்கா உலர்ந்து போயிடுறோம். கொஞ்ச நஞ்ச வெய்யிலா நெசம்மாவே கருவாடுதான். வேனல்கட்டி, வேர்க்குரு எல்லாம் படை எடுத்து எரிய ஆரம்பிச்சது போக இப்ப எல்லாம் டைரக்டா இருப்புச் சட்டி வதக்கல்தான் போடுது வெய்யில். 

சுருண்ட தக்காளிப்பழம் மாதிரி வெய்யிலை வெறிச்சிக்கிட்டு வீட்ல உக்கார்ந்திருந்தபோது ( ஏன் மழையை மட்டும்தான் வேடிக்கை பார்க்கணுமா என்ன J ) போன வருஷம் போன ஹொகனேக்கல் ஞாபகம் வந்துச்சு. அப்ப அங்க எண்ணெய்க் குளியல் போட்டு மீன்குழம்பு வறுவல் எல்லாம் வைச்சு தலைவாழை இலையில் சுட சுட சாப்பிட்ட ஞாபகம் வந்தது. ஞாபகச்சூடு ஆறுறதுக்குள்ள எடுத்தேன் ஃபோட்டோ ஆல்பத்தை. ,போட்டேன் ப்லாகில் உடனே. J


போய் ஒரு ரவுண்ட் அடிச்சுக் குளிச்சிட்டு வரலாம்போல இருந்தது.

ஆனா எம்மாந்தூரம். சோ நினைவலையில் ஒரு குளு குளு உலா

வெள்ளி, 13 ஜனவரி, 2017

மேகம் கருக்கையிலே..

இப்பிடி ஒரு பாட்டு கேட்டிருப்பீங்க. ஹொகனேக்கல் போனபோது இந்தப்பாட்டு மனசுல ரீவைண்ட் ஆயிட்டே இருந்தது. விலாவாரியான இடுகை பின்னாடி போடுறேன். இப்ப சில புகைப்படங்கள்

இந்த வட்டு/பரிசல்ல சுத்தும்போது கொஞ்சம் பயமா கூட இருந்தது. நாலு பேர் போனா சீப். ரெண்டுபேர் போனோம். ரெண்டு பேர் போனா 750 ரூ ந்னு நினைக்கிறேன் ( ரங்க்ஸ் கிட்ட கேக்கணும் ) .போட்காரர் பத்ரமா திருப்பி கொண்டாந்து விட்டதுக்காக (!) அவருக்கு 100 ரூ டிப்ஸ் கொடுத்தார்.

என்ன கொடுத்தீங்க ஏது கொடுத்தீங்கன்னு எதையும் அதிகம் விசாரிச்சா எகனை மொகனை ஆயிடும்னு கேக்குறதுல்ல. கூட்டிட்டுப் போனாங்களா ஜம்முன்னு சுத்திட்டு ஃபோட்டோவை சுட்டமான்னு வந்திட்டா யாருக்கும் பிரச்சனை இல்லை பாருங்க. ஹிஹி.

ஹொகனேக்கல் கர்நாடகா பார்டரில் இருப்பதால் இங்கிருந்து அந்த பார்டர் உள்ள கரை வரை சென்றுவிட்டு திரும்பி வரலாம். அவர்கள் ஹொகனேக்கல் வந்து திரும்பலாம்.

போட்காரர்களுக்கும் யூனிஃபார்ம். நீல யூனிஃபார்ம் போட்டவங்க தமிழ்நாட்டுத் தோணியர்கள். மஞ்சள் யூனிஃபார்ம் போட்டவங்க கர்நாடகா தோணியர்கள்.

நாங்க போட்டிருந்த லைஃப் ஜாக்கெட்டுமே இரு கலர்கள். நமக்கு ஆரஞ்ச் கலர் லைஃப் ஜாக்கெட். கர்நாடகா மக்களுக்கு ப்ளாக் கலர் லைஃப் ஜாக்கெட் கொடுத்திருக்காங்க. அதையும் வெயிட் பார்த்து அணிந்து கொண்டு போட்டில் ( வட்டில் ) ஏறணும்.

ஓகே இனி கொஞ்சம் போட்டும் ஃபோட்டோஸும்.

ஹைட்டுப் பார்த்து வெயிட்டுப் பார்த்து பாலன்ஸ் பண்ணி வட்டுல ஏறி உக்கார்ந்தாச்சு. 

அடித்துச் செல்லும் தண்ணீர்ப்பயணம்.
ஆகாச கங்கை பூந்தேன் மலர் தூவி..
அங்கே இருந்த பொந்துக்குள்ள போய் பார்த்துட்டு வர்றாங்க இளைஞர்கள்.. என்னே ஒரு ஆராய்ச்சி. செய்யாதேன்னா செய்யணும்.

Related Posts Plugin for WordPress, Blogger...