செட்டி நாட்டுத் திருமணங்களில் பெண்ணுக்கு குறைந்தது 4 அலமாரிகளாவது வைப்பார்கள். தேக்கு மர அலமாரி, கண்ணாடி அலமாரி ( இதுவும் தேக்குதான் ). காட்ரெஜ் பீரோ, அடுப்படி வலை பீரோ என்று.
106. கருங்காலி மரத்தில் மரப்பெட்டகங்களும் செய்து கொடுப்பார்கள். அவற்றில் சாமான்களை வைப்பார்கள்.
107. திருமண காலங்களில் மாப்பிள்ளை பெண்ணுக்குக் கவரி வீசுவதுபோல இந்த விசிறியால் விசிறுவார்கள். பிரம்பு விசிறியில் கைப்பிடி அழகாக சுற்றப்பட்டு முழுவதும் ஸாட்டின் துணியினால் வெட்டி ஒட்டித் தைக்கப்பட்டு ஜால்ரா மடிப்பு அமைக்கப்பட்டு எம்ப்ராடரி லேஸால் அழகுபடுத்தப்பட்ட கண்கவர் விசிறி இது :)
இது கொஞ்சம் சிம்பிள் பேட்டர்ன். கைபிடித்து விசிற அழகான இடைவெளியும் அதன் மேல் இதழ் போன்ற அமைப்பில் துணித்தையலும் மிக அழகு இல்லயா :)
108. அம்மி திருகை போன்றவை. ( ஆட்டுக்கல் இதில் இல்லை ). இந்தத் திருகையில்தான் உப்புமா, புட்டுமா , கொழுக்கட்டை மாவு போன்றவை திரிப்பார்கள். ஒரு பெரிய கொட்டானைக் கீழே வைத்து அதில் ந்யூஸ் பேப்பர் போட்டு அதில் இந்தத் திருகையைத் துடைத்து வைப்பார்கள். இதில் இரு பாகம் உண்டு. கீழே ஒரு பீடம் அதனுடன் நடுவில் ஒரு மரக் கட்டை. மேலே உள்ள பாகத்தில் நடுவில் வட்டமான ஓட்டை இருக்கும்., அதை கீழ்பாகத்தில் பொருத்தும் அளவுக்கும் சிறிது அதிகமாக. மேல் பாகத்தில் ஒரு பக்கத்தில் நீண்டு அதன் மேல் ஒரு கழி ( கைப்பிடி ) பொருத்தப்பட்டிருக்கும். கழுவி காயவைத்த அரிசியைக் கைப்பிடி கைப்பிடியாய் இதில் போட்டு சிகப்பி அக்கா உப்புமா உடைக்கும் அழகே அழகுதான்.
மாவைச் சலித்து மெல்லிசு மாவை கொழுக்கட்டைக்கும் அதைவிடப் பெருபெருக்கையாக உள்ளதை புட்டுக்கும். அதைவிட ரவை போன்று இருப்பதை உப்புமாவுக்கும் பயன்படுத்துவார்கள். உப்புமா ஒன்றுபோல சுவையுடன் இருக்கும். ( துவரம் பருப்பு, மிளகு சீரகம் போன்றவையும் பொடித்துப் போடுவார்கள் )
109. இவை அலங்காரக் கொட்டான்கள். இதில் திருகையை வைக்க முடியாது. அவை பெரிய கொட்டான்கள். இவற்றில் பொங்கலன்று அரிசி களைந்து அரித்து வைப்பார்கள் வடிகட்டி போல ஒரு பாத்திரத்தின் மேல் சாய்வாக வைத்து அரிசியை அரித்து நீர் வடிய வைப்பார்கள். மேலும் மற்ற அலங்காரக் கொட்டான்களில் வீட்டு விசேஷங்களுக்கு வருபவர்களுக்கு பூ, பிஸ்கட், மிட்டாய் போன்றவற்றை வைத்துக் கொடுப்பார்கள். திருமணங்களில் முன்கால முறைச்சிட்டைகளில் இந்த சிவப்பு ஓலைக்கொட்டான்கள்தான் எல்லா இடத்திலும் சீராக மாற்றி மாற்றி வழங்கப்பட்டிருக்கும்.
அதாவது ஒரு விசேஷம் என்றால் ( திருமணம் பேசி முடித்துக் கொள்ளுதல், பிள்ளை பிறந்ததுக்கு, சமைஞ்சதுக்கு மற்றுமுள்ள அனுவல்களுக்கு ) இன்று எவர்சில்வர் வாளி மற்றும் சட்டிகள் கொடுத்து அதில் வகைப்பழங்கள், தேங்காய் வெற்றிலை பாக்கு முறைப்பணம் எல்லாம் வைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால் ஐம்பது வருடத்துக்கு முன் எல்லாம் சிவப்பு ஓலைக் கொட்டாந்தான் இந்தப் பரிமாற்றத்துக்கு எல்லாம் பயன்பட்டிருக்கின்றது. எனவே இதுக்கு கிராக்கி அதிகம். :)
ஓலையை ஊறவைத்துக் கீறி சாயத்தில் நனைத்து முடையும் இத்தொழிலை பர்மியர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கக்கூடும் செட்டிநாட்டார். ஏனெனில் செய்கோன் ரெங்கோனுக்கு கொண்டுவிக்கச் சென்ற செட்டியார்கள் இம்மாதிரிப் பொருட்களை வாங்கி வந்திருக்கலாம். அதைப் பார்த்தும் அங்கே சென்ற ஆச்சிகள் அதைப் பார்த்தும் ஓலைக்கொட்டான்கள் முடையக் கற்றுக் கொண்டிருக்கலாம்.
சில டபுள் சைடட். உள்ளே ப்ளெயின் வெளியே கலர் ஓலைகள் கொண்டது. சிலது டபுள் சைடிலும் டபுள் டிசைன் கொண்டது. ஹ்ம்ம் எப்படித்தான் பொறுமையா இதெல்லாம் முடைஞ்சாங்களோ தெரியல. :)
110. வெள்ளிச்சாமான் வைக்கும் லெதர் பொட்டிகள்.
லாக்கரிலோ மரப் பெட்டகத்திலோ இரும்புப் பெட்டகத்திலோ வெள்ளிச் சாமான்களை அப்படியே வைத்தால் கறுத்துவிடும். எனவே வேஷ்டித் துணியில் நன்கு சுற்றி முடிச்சிட்டு அதை இந்த லெதர் பெட்டிகளில் வைத்து லாக்கரில் அல்லது காட்ரெஜ் பீரோவில் அல்லது பெட்டகத்தில் வைப்பார்கள். இன்றைக்கு பாங்க் லாக்கரில் இப்படி பெட்டி வைக்க பெரிய சைஸ் லாக்கர் வேண்டும். அதுக்கு வருடம் 10,000, 12, 000 / = பணம் கட்ட வேண்டும். :) !
மேலும் இதில் வெள்ளிக்குடம் , வேவுக்கடகாம் , விளக்குச் சட்டி போன்ற பெரிய பாத்திரங்களை வைக்க முடியாது.
111. மரக்குந்தாணி. இது ஈட்டி மரமா,கருங்காலியா தெரியவில்லை. ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கும். பிறப்பிலிருந்து இறப்புவரை தேவைப்படும் ஒரு பொருள். மருமகள் மாசமானால் ஐந்தாம் மாதத்தில் மருந்து இடிக்கவும் வீட்டில் பெரியவர்கள் சிவபதவி அடைந்தால் பச்சை குத்தவும் ( தந்தை அல்லது தாய் அல்லது இறந்தவுடன் மகள் பச்சரிசி நெல்லை இதில் போட்டுக் குத்தி அரிசி எடுத்து வாய்க்கரிசி போட வைக்கவேண்டும் ) இது கட்டாயம் தேவைப்படும். மற்ற காலங்களில் இதில் புட்டு , இடியாப்பம் போன்றவற்றிற்கும், கோயில் திருவிழாக்களின் போது மாவிளக்குக்கு இடிக்கவும் பயன்படுத்துவார்கள். நெல்லைத் தீட்ட கோதுமையைத் தீட்டவும் பயன்படுத்துவார்கள்.
112. அதேரெங்குப் பொட்டிதான் -- ட்ரெங்குப் பொட்டிதான். லெதர் பொட்டியைச் சுற்றித் துணி தைத்து எம்பிராய்டரி செய்திருக்கிறார்கள். இதுவும் வெள்ளிச் சாமான் வைக்கத்தான். நகைகளும் வைக்கலாம். வைர நகைகள் , தங்க நகைகள், செட் நகைகளைத் தனித்தனியாக டப்பாக்களில் வைக்கலாம்.
113. இது குறிச்சி. இன்றைய ஈஸி சேரின் மூதாதை. மரத்தால் செய்யப்பட்ட இது பிரம்பு ஒயர்களால் முடையப்பட்டிருக்கும் விதம் வெகு அழகு. இதில் இரண்டு கைப்பக்கமும் உள்பக்கம் மடித்தாற்போல இரண்டு ஹாண்டில்கள் இருக்கும். அவற்றை வெளிப்புறம் எடுத்து விட்டால் எக்ஸ் போல வைத்து கால்களை அவற்றில் நீட்டி நன்கு ரிலாக்ஸாகலாம். குறிச்சியின் மேல் பகுதியில் வெல்வெட் சால்வைத் துணி எல்லாம் போட்டிருப்பார்கள். இது எங்கள் ஐயாவுடையது. நாங்களும் அவ்வப்போது அமர்வோம் என்றாலும் மிகப் பழசாகப் பராமரிப்பில்லாமல் கிடக்கிறது.
114. பிள்ளைத் துண்டு. - பிள்ளை அங்கவஸ்த்திரம். விசேஷங்களில் பிள்ளைகளுக்கும் பட்டுச் சட்டை வேஷ்டி பட்டு அங்கவஸ்திரம் அணிவித்து மகிழும் பழக்கம் உண்டு. அதன்படி அந்தக் காலத்தில் புதுமை, சூள்பிடி (சூப்பிடி ) ஆகிய விசேஷங்களில் இந்தப் பட்டுப் பிள்ளைத் துண்டைக் குழந்தைகளுக்கு அணிவித்திருந்திருக்கிறார்கள்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5.
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.
டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.
1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம்
2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....
3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை
4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.
5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.
6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்
7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்
8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.
9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..
11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.
12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )
13. வைரமே வைரம்...
14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.
15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை
16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்
17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்
106. கருங்காலி மரத்தில் மரப்பெட்டகங்களும் செய்து கொடுப்பார்கள். அவற்றில் சாமான்களை வைப்பார்கள்.
107. திருமண காலங்களில் மாப்பிள்ளை பெண்ணுக்குக் கவரி வீசுவதுபோல இந்த விசிறியால் விசிறுவார்கள். பிரம்பு விசிறியில் கைப்பிடி அழகாக சுற்றப்பட்டு முழுவதும் ஸாட்டின் துணியினால் வெட்டி ஒட்டித் தைக்கப்பட்டு ஜால்ரா மடிப்பு அமைக்கப்பட்டு எம்ப்ராடரி லேஸால் அழகுபடுத்தப்பட்ட கண்கவர் விசிறி இது :)
இது கொஞ்சம் சிம்பிள் பேட்டர்ன். கைபிடித்து விசிற அழகான இடைவெளியும் அதன் மேல் இதழ் போன்ற அமைப்பில் துணித்தையலும் மிக அழகு இல்லயா :)
108. அம்மி திருகை போன்றவை. ( ஆட்டுக்கல் இதில் இல்லை ). இந்தத் திருகையில்தான் உப்புமா, புட்டுமா , கொழுக்கட்டை மாவு போன்றவை திரிப்பார்கள். ஒரு பெரிய கொட்டானைக் கீழே வைத்து அதில் ந்யூஸ் பேப்பர் போட்டு அதில் இந்தத் திருகையைத் துடைத்து வைப்பார்கள். இதில் இரு பாகம் உண்டு. கீழே ஒரு பீடம் அதனுடன் நடுவில் ஒரு மரக் கட்டை. மேலே உள்ள பாகத்தில் நடுவில் வட்டமான ஓட்டை இருக்கும்., அதை கீழ்பாகத்தில் பொருத்தும் அளவுக்கும் சிறிது அதிகமாக. மேல் பாகத்தில் ஒரு பக்கத்தில் நீண்டு அதன் மேல் ஒரு கழி ( கைப்பிடி ) பொருத்தப்பட்டிருக்கும். கழுவி காயவைத்த அரிசியைக் கைப்பிடி கைப்பிடியாய் இதில் போட்டு சிகப்பி அக்கா உப்புமா உடைக்கும் அழகே அழகுதான்.
மாவைச் சலித்து மெல்லிசு மாவை கொழுக்கட்டைக்கும் அதைவிடப் பெருபெருக்கையாக உள்ளதை புட்டுக்கும். அதைவிட ரவை போன்று இருப்பதை உப்புமாவுக்கும் பயன்படுத்துவார்கள். உப்புமா ஒன்றுபோல சுவையுடன் இருக்கும். ( துவரம் பருப்பு, மிளகு சீரகம் போன்றவையும் பொடித்துப் போடுவார்கள் )
இந்தத் திருகைகளில் கைப்பிடி பொறுத்தப்படவில்லை |
அதாவது ஒரு விசேஷம் என்றால் ( திருமணம் பேசி முடித்துக் கொள்ளுதல், பிள்ளை பிறந்ததுக்கு, சமைஞ்சதுக்கு மற்றுமுள்ள அனுவல்களுக்கு ) இன்று எவர்சில்வர் வாளி மற்றும் சட்டிகள் கொடுத்து அதில் வகைப்பழங்கள், தேங்காய் வெற்றிலை பாக்கு முறைப்பணம் எல்லாம் வைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால் ஐம்பது வருடத்துக்கு முன் எல்லாம் சிவப்பு ஓலைக் கொட்டாந்தான் இந்தப் பரிமாற்றத்துக்கு எல்லாம் பயன்பட்டிருக்கின்றது. எனவே இதுக்கு கிராக்கி அதிகம். :)
ஓலையை ஊறவைத்துக் கீறி சாயத்தில் நனைத்து முடையும் இத்தொழிலை பர்மியர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கக்கூடும் செட்டிநாட்டார். ஏனெனில் செய்கோன் ரெங்கோனுக்கு கொண்டுவிக்கச் சென்ற செட்டியார்கள் இம்மாதிரிப் பொருட்களை வாங்கி வந்திருக்கலாம். அதைப் பார்த்தும் அங்கே சென்ற ஆச்சிகள் அதைப் பார்த்தும் ஓலைக்கொட்டான்கள் முடையக் கற்றுக் கொண்டிருக்கலாம்.
சில டபுள் சைடட். உள்ளே ப்ளெயின் வெளியே கலர் ஓலைகள் கொண்டது. சிலது டபுள் சைடிலும் டபுள் டிசைன் கொண்டது. ஹ்ம்ம் எப்படித்தான் பொறுமையா இதெல்லாம் முடைஞ்சாங்களோ தெரியல. :)
110. வெள்ளிச்சாமான் வைக்கும் லெதர் பொட்டிகள்.
லாக்கரிலோ மரப் பெட்டகத்திலோ இரும்புப் பெட்டகத்திலோ வெள்ளிச் சாமான்களை அப்படியே வைத்தால் கறுத்துவிடும். எனவே வேஷ்டித் துணியில் நன்கு சுற்றி முடிச்சிட்டு அதை இந்த லெதர் பெட்டிகளில் வைத்து லாக்கரில் அல்லது காட்ரெஜ் பீரோவில் அல்லது பெட்டகத்தில் வைப்பார்கள். இன்றைக்கு பாங்க் லாக்கரில் இப்படி பெட்டி வைக்க பெரிய சைஸ் லாக்கர் வேண்டும். அதுக்கு வருடம் 10,000, 12, 000 / = பணம் கட்ட வேண்டும். :) !
மேலும் இதில் வெள்ளிக்குடம் , வேவுக்கடகாம் , விளக்குச் சட்டி போன்ற பெரிய பாத்திரங்களை வைக்க முடியாது.
111. மரக்குந்தாணி. இது ஈட்டி மரமா,கருங்காலியா தெரியவில்லை. ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கும். பிறப்பிலிருந்து இறப்புவரை தேவைப்படும் ஒரு பொருள். மருமகள் மாசமானால் ஐந்தாம் மாதத்தில் மருந்து இடிக்கவும் வீட்டில் பெரியவர்கள் சிவபதவி அடைந்தால் பச்சை குத்தவும் ( தந்தை அல்லது தாய் அல்லது இறந்தவுடன் மகள் பச்சரிசி நெல்லை இதில் போட்டுக் குத்தி அரிசி எடுத்து வாய்க்கரிசி போட வைக்கவேண்டும் ) இது கட்டாயம் தேவைப்படும். மற்ற காலங்களில் இதில் புட்டு , இடியாப்பம் போன்றவற்றிற்கும், கோயில் திருவிழாக்களின் போது மாவிளக்குக்கு இடிக்கவும் பயன்படுத்துவார்கள். நெல்லைத் தீட்ட கோதுமையைத் தீட்டவும் பயன்படுத்துவார்கள்.
112. அதேரெங்குப் பொட்டிதான் -- ட்ரெங்குப் பொட்டிதான். லெதர் பொட்டியைச் சுற்றித் துணி தைத்து எம்பிராய்டரி செய்திருக்கிறார்கள். இதுவும் வெள்ளிச் சாமான் வைக்கத்தான். நகைகளும் வைக்கலாம். வைர நகைகள் , தங்க நகைகள், செட் நகைகளைத் தனித்தனியாக டப்பாக்களில் வைக்கலாம்.
113. இது குறிச்சி. இன்றைய ஈஸி சேரின் மூதாதை. மரத்தால் செய்யப்பட்ட இது பிரம்பு ஒயர்களால் முடையப்பட்டிருக்கும் விதம் வெகு அழகு. இதில் இரண்டு கைப்பக்கமும் உள்பக்கம் மடித்தாற்போல இரண்டு ஹாண்டில்கள் இருக்கும். அவற்றை வெளிப்புறம் எடுத்து விட்டால் எக்ஸ் போல வைத்து கால்களை அவற்றில் நீட்டி நன்கு ரிலாக்ஸாகலாம். குறிச்சியின் மேல் பகுதியில் வெல்வெட் சால்வைத் துணி எல்லாம் போட்டிருப்பார்கள். இது எங்கள் ஐயாவுடையது. நாங்களும் அவ்வப்போது அமர்வோம் என்றாலும் மிகப் பழசாகப் பராமரிப்பில்லாமல் கிடக்கிறது.
114. பிள்ளைத் துண்டு. - பிள்ளை அங்கவஸ்த்திரம். விசேஷங்களில் பிள்ளைகளுக்கும் பட்டுச் சட்டை வேஷ்டி பட்டு அங்கவஸ்திரம் அணிவித்து மகிழும் பழக்கம் உண்டு. அதன்படி அந்தக் காலத்தில் புதுமை, சூள்பிடி (சூப்பிடி ) ஆகிய விசேஷங்களில் இந்தப் பட்டுப் பிள்ளைத் துண்டைக் குழந்தைகளுக்கு அணிவித்திருந்திருக்கிறார்கள்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5.
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.
டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.
1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம்
2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....
3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை
4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.
5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.
6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்
7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்
8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.
9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..
11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.
12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )
13. வைரமே வைரம்...
14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.
15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை
16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்
17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்
படங்களுடன் ஒவ்வொரு விளக்கும் அசர வைக்கிறது சகோதரி...
பதிலளிநீக்குநன்றி...
நன்றி டிடி சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அழகான பொருட்கள் அதுவும் விளக்கங்களுடன்.....படங்களும் அழகாக இருக்கின்றன...சகோதரி...திருகை, உரல் எல்லாம் இப்போதும் வீட்டில் கிராமத்தில் இருக்கின்றன ஆனால் பயன்படுத்த ஆள் இல்லாமல்....
பதிலளிநீக்குஆம் துளசி சகோ. எல்லாரும் மிக்ஸி, கிரைண்டருக்கு மாறிட்டோம். :)
பதிலளிநீக்குமரப்பெட்டகங்கள் போத்துக்கேயர் வருகையால் மர அலுமாரியாக, திருகை, கொட்டான், மரவுரல்,சாய்வு நாற்காலி போன்றவை எங்கள் வீட்டிலும் இருந்தன.
பதிலளிநீக்குஅருமையான படங்களும் விளக்கங்களும்.
செட்டிநாட்டவர்கள் இலங்கையிலும் வியாபாரத் தொடர்பு இருந்ததால், இந்த பர்மா கொட்டான்கள்
பரவியதோ தெரியவில்லை.
விரிவான கருத்துரைக்கு நன்றி யோகன்.
பதிலளிநீக்குபர்மா கொட்டான்கள் பற்றிய தகவல் நீங்கள் கூறியபடி இருக்கலாம்.