புதன், 15 ஜூலை, 2015

புரவியாய் ஒரு ஆளுமை.

நிறத்திலும் புறத்திலும்
நிரம்பும் காற்று
சுவாசத்தைச் சீராக்கி
முன்னெடுக்கச் சொல்கிறது.


தனித்திருக்கிறேன் ஆனாலும்
சேணங்களற்ற பயணம்

பூரண சுதந்திரமும்
தடுமாற்றுகிறது திசையை.


ஆண்டான் அடிமை
ஒன்றுடன் ஒன்றாகும்போது
பொய்யாய் ஒரு கடிவாளம்
பூட்டிக்கொள்கிறேன்.


புரவியாய் ஒரு ஆளுமை
படர்ந்துகிடக்கிறது வெளியெங்கும்.


5 கருத்துகள் :

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

ஆண்டான் அடிமை ஒன்றுடன் ஒன்றாகும்போது பொய்யாய் ஒரு கடிவாளம் பூட்டிக்கொள்கிறேன்
புரவியாய் ஒருஆளுமை படர்ந்து கிடக்கிறது வெளியெங்கும்----அருமையான வரிகள் சூப்பர்
சரஸ்வதி ராசேந்திரன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை சகோதரி...

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சரஸ் மேம்

நன்றி டிடி சகோ

நன்றி சுரேஷ் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...