எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 ஜூலை, 2015

பெண் பூக்கள்.

உங்கள் பேரன்புடனும் பேராதரவுடனும் என் அடுத்த கவிதைத் தொகுதி பெண்பூக்கள் வெளிவந்துவிட்டது .

////// 3 1/2  வருடங்களுக்கு முன்



”ங்கா” வும் சாதனை அரசிகளும் வெளிவருவதற்கு முன் ஆழி பதிப்பகம் திரு செந்தில்நாதன் அவர்கள் பூக்கள் பற்றி நான் எழுதிய  சில கவிதைகளுக்குப் ”பெண் பூக்கள்” என்ற தலைப்பிட்டு அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து அனுப்பும்படி என்னிடமும் திரு மீனாக்ஷி மதனிடம் அதற்கான ஓவியங்களும் கேட்டிருந்தார்.  ( மீனாக்ஷி ஒரு சிறந்த ஓவியர் . சென்னையில் வடபழனி மேம்பாலத்திற்கு அருகில் இவருடைய ஹீயூஸ் ஆஃப் ஹார்ட் என்ற ஸ்டூடியோ இருக்கிறது. அதில் இவர் பல குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுத் தருகிறார். மேலும் ஓவிய விற்பனையும் உண்டு. ஓவியக் கண்காட்சியில் கட்டாயம் இவரது படங்கள் இடம்பெறும். மிகப் பிரபலங்கள் தொடர்பு உண்டு. இவர் கணவர் டைரக்டர்  ராஜிவ் மேனனனுடன் பணிபுரிகிறார்.  )

அப்போது இந்தியா டுடேயில் பணியில் இருந்தார் ஆழி பதிப்பகம் செந்தில்நாதன். அதிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியபின் இந்த ப்ராஜெக்டை செய்ய அவருக்கு சமயம் வாய்க்கவில்லை. எங்களுக்கும் முன்னெடுக்கத் தெரியவில்லை.

அப்படியே கிடப்பில் இருந்தது   இரு வருடங்களுக்கும் மேலாக இந்தப் புத்தக  ஆக்கம்.  இது காதல் ஆழிக்காக திட்டமிடப்பட்டது.
செந்தில்நாதனின் கடிதமும் புத்தக வெளியீடு பற்றிய முன்னறிவிப்பும் இதோ.

/////
நண்பர்களுக்கு, வணக்கம்.

ஆழியிலிருந்து காதலைப் பற்றி சுமார் 30 நூல்கள்.

ஜனவரி 5, 2012ல் தொடங்கவுள்ள சென்னை புத்தகத் திருவிழாவின் போது ஆழி பப்ளிஷர்ஸ் ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இனி ஒவ்வொரு சென்னைப்புத்தகக் கண்காட்சியின் போதும் ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்த நூல்களை தொகுப்பாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டில் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்பு - காதல்.
காதலை பிடிக்காதார் நம்மில் யார்?

இந்த தலைப்பின் கீழ் வெளிவரவுள்ள நூல்கள்:

உலகின் தலைசிறந்த காதல் சிறுகதைகள் பாகம் 1- தொகுப்பு சா. தேவதாஸ்
உலகின் தலைசிறந்த காதல் கவிதைகள் பாகம் 1- தொகுப்பும் மொழிபெயர்ப்பும் செ.ச.செந்தில்நாதன்
முதல் காதல் அனுபவங்கள் - தொகுப்பு குட்டிரேவதி
தாஸ்தயேவ்ஸ்கியின் White Nights - புதிய மொழிபெயர்ப்பு பேயோன்
நீயே நோய், நீயே மருந்து - காமத்துப்பாலிலிருந்து, நவீ ன கவிதை வடிவில் செ.ச.செந்தில்நாதன்
சிவந்த நிலம், கொட்டும் மழை - சங்க இலக்கிய காதல் கவிதைகள், மூலமும் நவீன வடிவமும் செ.ச.செந்தில்நாதன்
புகழ்பெற்ற ரஷ்ய காதல் கதைகள் - தொகுப்பு யூமா வாசுகி
ஏனெனில் முத்தமும் சிவப்பானதுதான் - தொகுப்பு வளர்மதி
முத்தத்தின் அலகு - காதல் கவிதைகள் குட்டிரேவதி
தீண்டும் இன்பம் - சாதிமறுப்புத் திருமண அனுபவங்கள் தொகுப்பு ஜெயராணி, சமதர்மன்
பாரதி காதல் - தொகுப்பு ஞாநி
ராஜன் மகள் - பா வெங்கடேசன் சிறுகதைகள்
பதினாறு வயது பதற்றம் - டீன்ஏஜ் பிரச்னைகள் குறித்து. உமா சக்தி
Why this கொலவெறி - காதலின் பல பரிமாணங்கள் செ.ச.செந்தில்நாதன்
காதல் இரவு - கவிதைகள் பேயோன்
மன்மதம் - தெய்வீக காதல் கவிதைகள் தொகுப்பு தாரா கணேசன்
காதல் சினிமா (இரண்டு தொகுதிகள்): தொகுப்பு குலசேகர்
லைலா மஜ்னு - செ ச செந்தில்நாதன்
ரோமியோ ஜூலியட் - செ ச செந்தில்நான்
காளிதாசரின் மேகதூதம் - மொழிபெயர்ப்பு செ.ச.செந்தில்நாதன்
சரத் சந்திரரின் தேவதாஸ் - மொழிபெயர்ப்பு கிருஷ்ணமூர்த்தி
வரலாற்றை வழிமறித்த காதல்கள் - முருகானந்தம்
ரோட்டோரம் வீட்டுக்காரி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி - காதல் தெம்மாங்கு பாடல்கள் தொகுப்பு சமதர்மன்
பெண் பூக்கள் - தேனம்மை லக்ஷ்மணன்
காதல் தான் பரிசு - பல்வண்ணத் தொகுப்பு
ஜமீலா - நாவல் சிங்கிஸ் ஐத்மாத்தவ்

மற்றும் மேலும் சில தலைப்புகள் கூடலாம்.

வாருங்கள், வந்து காதலில் விழுங்கள்.

அன்புடன்
செ.ச.செந்தில்நாதன்
ஆழி பப்ளிஷர்ஸ்////

 இந்தக் கவிதைகளை அதன் பின் இருவர் மொழிபெயர்க்க முன்வந்தும்  எனக்கான அதிர்ஷ்டமாக அவர்களுக்கு சமயம் கிடைக்கவில்லை.

இந்த ஜனவரி மாதம் புத்தகத் திருவிழாவுக்குப் பின் புதிய தரிசனம் ஆசிரியர் திரு. ஜெபகுமார் அவர்கள் இதைப் புத்தகமாக்க முன்வந்தார். நான் மிக ஆவலோடு எதிர்பார்த்த இந்தப் புத்தகத்தைப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் புதிய தரிசனத்தின் வெளியீடாகக் கொண்டுவந்துவிட்டார்.

இதைப் புத்தகமாக ஆக்க முதலில் முயற்சி எடுத்த திரு.ஆழி செந்தில்நாதன்  அவர்களுக்கு என் நன்றிகள்.

புத்தககங்கள் வெளியிடுவது என்பது திருமணம் செய்து பார், வீட்டைக்கட்டிப்பார் என்று சொல்வதற்கு நிகரான சிரமம் உடையது. என் கனவு புத்தகமான இதை நனவு வடிவமாக்கிய புதிய தரிசனம் ஜெபகுமார் சார் அவர்கட்கும், அழகாக வடிவமைப்புச் செய்துள்ள எஸ். ஸ்ரீனிவாசராவ் அவர்கட்கும் புதிய பாதையில் புத்தகங்கள் படைக்கும் புதிய தரிசனம் பதிப்பகத்துக்கும் அழகுற அச்சிட்டு இருக்கும் ராசி ப்ரிண்டர்ஸுக்கும் மிக்க நன்றிகள்.

புதிய தரிசனம் பத்ரிக்கைத் துறையில் ஈட்டி வரும் சாதனைகள் அசாத்தியமானவை. மாதமிருமுறை வெளிவரும் இவ்விதழில் பெயர்பெற்ற பத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்கள் சிறப்புக் கட்டுரைகள் படைத்துள்ளார்கள். முகநூலில் சிறப்பாக எழுதிவரும் அனைவருக்கும் தனியிடம் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறது புதிய தரிசனம். திறமையாளர்களை ஊக்குவிப்பது மட்டுமல்ல . தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையிலும் புத்தகங்களை வெளிக்கொணர்ந்து சாதனை படைத்திருக்கும் ஜெபகுமார் சார் அவர்கட்கு  என்னுடைய நன்றியும் அன்பும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். .

இதுவரை புதிய தரிசனம் வெளியீடாக 6 நூல்கள் வெளிவந்துள்ளன.

இதில் ஆறாவது நூல் என்னுடைய கவிதைத் தொகுதியான  “ பெண் பூக்கள் “ மிச்ச நூல்களைப் பற்றிய விபரமும் அடுத்து அடுத்துப் பகிர்வேன். ( காந்தி தேசம் - ப. திருமலை அவர்களின் நூல் பற்றிய விமர்சனம் என் வலைத்தளத்திலேயே வெளியாகி உள்ளது. )

என்னுடைய கவிதைத் தொகுதியான பெண் பூக்கள்

Discovery Book Palace
New Book Land
Aashiq book centre, vadapalani
Maran book centre, kodambakkam

சென்னை கே கே நகரில் இருக்கும் டிஸ்கவரி புத்தக நிலையம்,

ந்யூ புக் லேண்ட்,

ஆஷிக் புக் செண்டர், வடபழனி

மாறன் புக் செண்டர், கோடம்பாக்கம்

Pen Pookkal available at

Chennai
New Book land
maran book centre
Aashiq book centre
Discovery book palace
UG book stall
Panuval book shop
Kanthalagam book shop

Madurai
Malligai Book centre
Bharathi Puththagaalayam


Kanchipuram.
Pathi book shop

NCBH, Vellore
Book Station, Vellore. 


எனது நாலாவது நூல் “பெண் பூக்கள்  கவிதைத் தொகுதி 

சென்னையில்

நியூ புக் லேண்ட்
மாறன் புக் செண்டர்
ஆஷிக் புக் செண்டர்
டிஸ்கவரி புக் பேலஸ்
யூஜி புக் ஸ்டால்
பனுவல் புக் ஷாப்
காந்தளகம் புக் ஷாப் 

மதுரையில்

மல்லிகை புக் செண்டர்
பாரதி புத்தகாலயம்


காஞ்சிபுரம் 
பதி புத்தக நிலையம்.

வேலூர்
என்சிபிஹெச்
புக் ஸ்டேஷன்.
 
ஆகியவற்றில் கிடைக்கும். 


--- என்றும்  உங்கள் பேராதரவை வேண்டுகிறேன் மக்காஸ்  :) 

 அன்பும் நன்றியும். தேனம்மைலெக்ஷ்மணன்.

14 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்...சாதனை தொடர விரும்புகிறேன்..

    -ஆரூர் பாஸ்கர்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் சகோதரி! உங்கள் சாதனைகள் தொடர வேண்டி வாழ்த்துகின்றோம்...

    பதிலளிநீக்கு
  3. நன்றி குமார் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி பாஸ்கர்

    நன்றி துளசி சகோ :)

    பதிலளிநீக்கு
  4. அன்பின் தேனம்மை

    கருத்துகளை தெரிவிக்கும் போது வாழ்த்துக்கள் என எழுதும் பதிவர்கள் இனி மேல் வாழ்த்துகள் என எழுதுவதைக் கடைப் பிடித்தார்களென்றால் நன்றாக இருக்கும்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் தேனம்மை

    கருத்துகளை தெரிவிக்கும் போது வாழ்த்துக்கள் என எழுதும் பதிவர்கள் இனி மேல் வாழ்த்துகள் என எழுதுவதைக் கடைப் பிடித்தார்களென்றால் நன்றாக இருக்கும்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. அன்பின் தேனம்மை

    கருத்துகளை தெரிவிக்கும் போது வாழ்த்துக்கள் என எழுதும் பதிவர்கள் இனி மேல் வாழ்த்துகள் என எழுதுவதைக் கடைப் பிடித்தார்களென்றால் நன்றாக இருக்கும்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. அன்பின் தேனம்மை

    கருத்துகளை தெரிவிக்கும் போது வாழ்த்துக்கள் என எழுதும் பதிவர்கள் இனி மேல் வாழ்த்துகள் என எழுதுவதைக் கடைப் பிடித்தார்களென்றால் நன்றாக இருக்கும்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. அன்பின் தேனம்மை

    கருத்துகளை தெரிவிக்கும் போது வாழ்த்துக்கள் என எழுதும் பதிவர்கள் இனி மேல் வாழ்த்துகள் என எழுதுவதைக் கடைப் பிடித்தார்களென்றால் நன்றாக இருக்கும்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் தேனம்மை... எங்கள் ஊரில் கிடைப்பதில்லையா?...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...