புதன், 8 ஜூலை, 2015

”இணைய”ற்ற தெப்பம். ( சொல்வனத்தில் )

”இணைய”ற்ற தெப்பம்..
******************************
 மந்திர உச்சாடனங்களுக்குள்
மிழற்றுகின்றன மாயக் கிளிகள்.
தாழி தப்பிய ஆலிலை வெண்ணைய்
பில்லையில் சுமந்தபடி பயணிக்கிறார் பெருமாள்.
சவ்வுமிட்டாயும் சீனிமிட்டாயும்
சிவப்பாய் சிதறிக்கிடக்கின்றன காடா விளக்கில்.
வாழையை வாளெடுத்து
வெட்டிச் செல்கிறாள் கரகமஹாராணி.

மின்சாரமற்ற தெருக்களை
ஒளியேற்றுகிறது திருவிழா.
ஒன்பது தலைமுறை கடந்தும்
ஒய்யாரமாய் ஓடிவரும் தேர்.
இணையங்களற்ற வெளியில்
இன்றொரு நாளாவது
இணைந்து ஏறுகிறோம்
மிதக்கும் தெப்பத்தில்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 29.12.2014 சொல்வனத்தில் வெளியானது.

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இணையங்களற்ற வெளியில்
இன்றொரு நாளாவது
இணைந்து ஏறுகிறோம்
மிதக்கும் தெப்பத்தில்.//

ஆஹா!!! ஆஹா! ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜெகமும்.....நிலவும் மலரும் ஆடுது...பாடல் கள் நினைவுக்கு வந்தது....ரசித்தோம் வரிகளை...

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

கவிதைத் தேரில் பயணித்தேன்! அருமை!

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

கவிதைத் தேரில் பயணித்தேன்! அருமை!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

நன்றி சுரேஷ் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...