ஞாயிறு, 5 ஜூலை, 2015

காதல் அகராதி :-


காதல் அகராதி :-
பால்யக் காதல், பள்ளிக்கூடக் காதல், கல்லூரிக் காதல், வேலை செய்யுமிடத்தில் ஏற்படும்காதல்.,ஆன்லைன்காதல், டூரிஸ்டாக வந்த இடத்தில் காதல் என்று பலவகைக் காதல் இருக்கிறது. 

ப்ளேடானிக் லவ்.
பள்ளியில் படிக்கும் போது டீச்சரைக் காதலிப்பது, சக வகுப்புத் தோழியைக் காதலிப்பது இதெல்லாம் ப்ளேடானிக் லவ். இது கல்லூரிப் பருவத்திலும் ஏற்படும். இன்பாச்சுவேஷன் எனப்படும் கன்னுக்குட்டிக் காதல் ( பப்பி லவ் ) மற்றும் க்ரஷ் எனப்படும் இனக்கவர்ச்சி மயக்கம் காதல் என்று கொள்ளப்படுகிறது. இதனால் படிப்பு பாதிக்கப்பட்டு எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் இருக்கிறது.
ஸ்டூபிட் லவ் ,
இந்தமாதிரி ஸ்டூபிட் லவ் எல்லா வயதிலும் ஏற்படுகிறது. ஆன்லைன் காதலும் அப்படித்தான். ஃபேஸ்புக், ட்விட்டர் மாதிரியான இணைய தளங்களில் சந்தித்து நட்பு பாராட்டி இது ஒரு வகையான காதலாக உருவெடுத்து சில சமயம் திருமணத்திலும் பல சமயம் கள்ளத் தொடர்பு, பாலியல் வன்முறை, பாலியல் வல்லுறவு இணையத்தில் இருவரும் சேர்ந்திருக்கும்போது எடுத்த புகைப்படம் போடுதல், ப்ளாக் மெயிலிங்க் கடத்தல் கொலை போன்றவற்றில் முடிகிறது.
பெண்கள் ஏன் மோசமான ஆண்களையே காதலிக்கத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதையும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். கெட்டவன் என்று தெரியாமலோ அல்லது ப்ளேபாய் போன்ற ஒருவனைத் திருத்துகிறேன் என்றோ ஏற்படும் இதனைக் கண்மூடித்தனமான காதல் என்று சொல்வது சாலவும் பொருந்தும்.
சைக்கலாஜிக்கலாக அயோக்கியர்களிடம் ஏற்படும் ஒரு விதமான கவர்ச்சி இவர்களுக்கு நேர்மையானவனிடம் வருவதில்லை என்றே கூறலாம். குடிப்பது புகைப்பது பெண்களோடு சுற்றுவது இரவு பார்ட்டிகளுக்குச் செல்வது போதைப்பொருள் உபயோகிப்பது என்று இருக்கும் ஆசாமிகள் உண்மையாக இருப்பதாக இவர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட பழக்கம் இல்லாத ஆணை இவர்கள் ஆண்மகன் என்றும் ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். கண்ணைத் திறந்துகொண்டே பள்ளத்தில் விழுவதைப் போல இவர்கள் அயோக்கியர்களை நோக்கி காதல் என்ற மாயையில் விழுகிறார்கள். ஆனால் இது குழந்தைகள் விளையாட்டுப் போலக் குறுகிய காலக் கவர்ச்சியில் முடிந்துவிடுகிறது.   
சில பெண்கள் வேண்டுமென்றே தங்கள் வாழ்க்கையில் இத்தகைய ரிஸ்க் எடுக்க விரும்புகிறார்கள். ஒரே மாதிரியான ஒழுக்க வாழ்க்கை அவர்களுக்குச் சலித்து விடுவதால் இப்படியான ஒரு காதலைத் தேர்ந்தெடுத்து அவஸ்தைப்படுகிறார்கள். மிக நல்ல ஆண்மகனோடு உருவாகும் காதல் இவர்களுக்கு சீக்கிரத்தில் உப்புச் சப்பற்றதாகிறது. எக்ஸைட்மெண்ட் & த்ரில்லை விரும்பும் இவர்கள் தங்களுக்கு அத்தகைய த்ரில்லை வழங்கும் ஆண்மகனின் பின்னால் சென்று விடுகிறார்கள்.
மேலும் நல்ல ஆண்மகனின் காதல் ஒரு போதும் கைவிடுவதில்லை என்றாலும் அது தொடர்ந்து வருவதும் பின்னேயே அலைவதும் அலைய வைப்பதும் இவர்களுக்குப் பிடிப்பதில்லை என்று சைக்கலாஜிக்கலாகச் சொல்லப்படுகிறது. இதே நல்லவனில்லாத ஒருவன் தன் போக்குக்கு சுகம் அனுபவித்துவிட்டுச் செல்வது போல அந்த உறவில் இருந்து எந்த விதமான இமோஷனல் தொந்தரவும் இல்லாது வெளிவருவது இவர்களுக்கு இயல்பாய் இருப்பதால் அத்தகைய காதலையும் உறவையும் தேர்ந்தெடுக்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஏதோ ஒரு உளவியல் காரணமாகவும் இத்தகைய கவர்ச்சி ஏற்படக்கூடும் என்கிறார்கள். இது உதவி செய்யும் மனப்பான்மை பார்த்தும் ஹாஸ்யமாகப் பேசுவதும் பழகுவதும் பார்த்தும் உருவாகக் கூடும் என்றும் அந்த முதல் மயக்கம் தீர்ந்ததும் பரஸ்பரம் காதலும் விடைபெற்றுவிடும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிற்து.
ஊடகங்களில்  - சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்களிலும் காட்டப்படுவது போல – எல்லாக் கெட்ட ஆண்களும் டாட்டூஸ் போட்டுக்கொண்டோ, குடித்துக்கொண்டோ புகைத்துக் கொண்டோவும் பார்ட்டி கொண்டாடிக்கொண்டும் இருப்பதில்லை. நல்ல அழகான பக்கத்து வீட்டு  ஆண்மகன் கூட இத்தகைய பழக்க வழக்கங்கள் இல்லாமல் வுமனைசராகவோ யூஸ் அண்ட் த்ரோ என்ற மனப்பான்மை உள்ள கெட்டவனாகவோ இருக்கக்கூடும். 
  • இதில் சில பெண்கள் சொல்லக்கூடியதுதான் வியப்புக்குறியது; கள்வனின் காதலி படத்தில் கதாநாயகி கள்வனைக் காதலிப்பது போல ஒரேயடியாக நல்லவனாக இருப்பவனைக் காதலிக்க முடியாது. நல்லது கெட்டது இரண்டும் கலந்த மிக்ஸ் ஆக ஸ்டேபிள் ஆக இருக்கும் ஆண்மகன்கள்தான் காதலுக்கு உரியவர்கள் என்று ஒரு சர்வேயில் பெரும்பான்மைப் பெண்கள் கூறி இருக்கிறார்கள்.
மேட் லவ்,
வெளிநாட்டிலிருந்து சுற்றிப்பார்க்க வரும் பெண் டூரிஸ்டுகள் இந்தியாவில் தாங்கள் தங்கும் ஹோட்டலின் மேனேஜர், வெயிட்டர், சேல்ஸ்மேன் ,டூரிஸ்ட் கைட், ஆட்டோ ட்ரைவர்கள் ஆகியோரின் பால் காதல் வசப்பட்டுத் திருமணம் செய்துகொண்டு இங்கேயே செட்டில் ஆகி விடுகின்றார்கள். அல்லது இங்கே அவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் அங்கே சென்று வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுகின்றார்கள்.
கலாசார மாறுபாடுகள் இருந்தாலும் பெரும்பான்மை இடங்களில் காதல் ஜெயித்து விடுகின்றது. இங்கேயே சிலர் கணவருடன் தங்கி ஏதேனும் தொழிலில் ஈடுபடுகின்றார்கள். அல்லது இந்தியக் கலாச்சாரத்துடனும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளுடனும் ஒத்துப் போகாவிடில் தங்கள் நாட்டுக்குக் கணவனை அழைத்துச் சென்று வேலை வாங்கித் தந்துவிடுகின்றார்கள்.
சில சமயம் இந்தக் காதல்ஜோடிகளில் பெண்ணுக்கு முதல் திருமணமாகவும் ஆணுக்கு இரண்டாம் திருமணமாகவும் அமைந்துவிடுவதும் உண்டு. ஆக்ரா போன்ற டூரிஸ்ட் ஸ்பாட்டுகளில் சந்தித்து காதல் கொள்ளும் ஜோடிகள் அநேகம். ஆனால் அவர்கள் இந்தியாவில் வாழ நேரும்போது பொது இடங்களில் சிறுவர்கள் முதற்கொண்டு பாலியல் தொந்தரவு கொடுப்பதால் தங்கள் நாட்டிற்கே திரும்பிச் செல்கிறார்கள்.
ஒரு முறை வந்து தங்கிச் சென்ற வெளிநாட்டுப் பெண்கள் அடுத்தடுத்த முறையும் அதே ஹோட்டலுக்கு வருவது அங்கே பணிபுரியும் பணியாளர்களின் சேவையைப் பார்த்துத்தான். அதிலும் அவர்கள் மொழி பேசி உதவி செய்யும் ஆண்களைப் பார்த்ததும் அவர்களுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. யுகி இனோயி என்ற ஒரு ஜப்பானியப் பெண் பயணி இவ்வாறு தங்க வந்தவர் புத்தகயாவில் ஒரு ஹோட்டலில் மேனேஜராகப் பணி புரிந்த சுதாமா குமார் என்பவரின் ஜப்பானிய உச்சரிப்பையும் அதில் தொனித்த காதலையும் உணர்ந்து அவரைத் திருமணம் செய்திருக்கிறார்.அவருடைய குரல் ரொமாண்டிக்காகவும் மிகவும் நெருக்கமாகவும் இருப்பதாகவும், மேலும் அவர் ரொம்ப ஹாண்ட்சமாக இருந்ததால் மணந்து கொண்டதாகவும் கூறி இருக்கிறார். இவர்கள் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகின்றன.
இவ்வாறு திருமணம் செய்த ஜோடிகள் பலர் தங்கள் குழந்தைகளுடன் பல்லாண்டுகாலமாக சேர்ந்து வசித்தும் வருகிறார்கள். ஆனால் சில கேஸ்களில் இந்தக் காதல் அதீதமாகிப் போய் வழக்கமான சந்தேகத்தில் ஆரம்பித்துக் கொலையிலும் கத்திக் குத்திலும் முடிகிறது.
34 வயதுள்ள எரின் மிக்கேல் என்ற அமெரிக்கப் பெண்மணி ( இவர் ஒரு டூரிஸ்ட் கைடும் கூட ) ஆக்ராவுக்கு டூர் வந்தபோது பண்டி ஷர்மா என்ற 32 வயது ஆட்டோ ட்ரைவரை மணந்துகொண்டுள்ளார். வீட்டிலிருந்து மாலை வேளைகளில் சைக்கிள் எடுத்துக் கொண்டு வந்து தன் கணவர் பணி செய்யும் ஹோட்டலுக்கு அருகிலேயே உள்ள பூங்காவில் இருவரும் சேர்ந்து யோகா செய்திருக்கிறார்கள். ஆனால் இருவருக்குள்ளும் திடீரென ஏதோ தகராறு வந்து பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு இரண்டு மாதம் கழித்து பண்டி தன் மனைவியை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு தானும் வீட்டிற்குச் சென்று காஸ் சிலிண்டரைத் திறந்து பற்றவைத்துக்கொண்டிருக்கிறார்.
இம்மாதிரி சில வெளிநாட்டுப் பெண்களின் இறப்பையும், வேலைவாய்ப்புக்காக இப்படிக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு அவர்கள் கணவன் என்ற ஹோதாவில் வெளிநாடு சென்று தங்கி சம்பாதிக்கும் ஆண்களையும் பார்த்த வெளிநாட்டுத் தூதரகங்கள் இப்போதெல்லாம் இம்மாதிரித் திருமணங்களை அனுமதிப்பதிலும், பாஸ்போர்ட் விசா வழங்குவதிலும் எச்சரிக்கையாக இருக்கின்றன.
ஆனாலும் இப்படிப்பட்ட காதலும் காதல் கதைகளும் திருமணங்களும் ஓய்வதாயில்லை. அவை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

டிஸ்கி:- மாசி 2015 மெல்லினத்தில் வெளியானது.
 

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காதல் அதீதமாகிப் போய் இப்படியுமா...? ஆனால் அதுவும் ஒரு காதல் என்று சொல்லிக் 'கொல்ல'லாம்...!

ஆய்வு சில சமயங்கள் சரியாகத் தான் உள்ளது...

Seeni சொன்னது…

அட..
அறியாத தகவல்கள்

நன்றி..

பரிவை சே.குமார் சொன்னது…

காதல்... காதல்... நல்ல கட்டுரை அக்கா...
வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்! அது சில சமயங்களில் சர்வே சொல்லுவது போல் ஆகி விடுகின்றது.. எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல்தான்....நல்ல முதிர்ந்த மனப்பக்குவம் உள்ள காதல் முழுமையான அன்புடன் வாழ்வாங்கு வாழும்...

மெல்லினத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்...

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் டிடி சகோ. காதல் “கொல்கிறார்கள் “ !

கருத்துக்கு நன்றி சீனி

நன்றி குமார் தம்பி

நன்றி துளசி சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...