ஒவ்வொரு முறையும்
அகண்ட பிரபஞ்சத்தை
அவள் கண்களில் பார்க்கிறேன்...
விடுதியிலோ.,
மணமுடித்தோ,
வெளிநாட்டில் வேலையிலோ..
எங்கிருந்தாலும்
வருகிறாள் முடிந்துகொண்டு
குசேலனின் அவலாய் அன்பை...
வாசனை வீசும் சொற்களுக்குச்
சொந்தக்காரியல்ல...
அநேகமாகக் காரம்தான்...
வைய வைய வைரக்கல்...
சிறுவயதில் கோழியைப்போல்
அவ்வப்போது முடிபற்றி மிதிப்பாள்..
இப்போது வார்த்தைகளால்...
சிலசமயம் புரிந்து கொள்ளாமல்...
சில சமயம் கொடுந்தவறுக்காய்...
அவள் புன்னைகைத்தால்
காலடியில் முயலகனாய்...
என்றென்றும் மயங்கி...
அவளுக்குப் பிடிக்குமென
பலதும் செய்து அவளை
அவதியுற வைத்திருக்கிறேன்...
சமையலாகட்டும்...
செயல்களாகட்டும்...
உதிரத்தில் உருவாக்கி.,
உருவாய் செதுக்கியவளே.,
உன்னோடு கிடந்தே
உழன்று கிடப்பேன் என்று
அவ்வப்போது ஒதுக்கி வைத்து
ஒளிந்து கொள்கிறாயா...?
என் தேவையறிந்து
பசியறிந்து.,
ருசியறிந்து.,
வயசறிந்து.,
நிறைவேற்றியவளே...
செல்லமாக வேண்டாம்...
கோபமாக வேணும் உன் குரலை
சிந்திச்செல் அவ்வப்போது...
டிஸ்கி:- இந்த இடுகை அன்னையர் தினத்துக்காக
இளமை விகடனில் மே 8 அன்று வெளி வந்தது...
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem080510.asp

அகண்ட பிரபஞ்சத்தை
அவள் கண்களில் பார்க்கிறேன்...
விடுதியிலோ.,
மணமுடித்தோ,
வெளிநாட்டில் வேலையிலோ..
எங்கிருந்தாலும்
வருகிறாள் முடிந்துகொண்டு
குசேலனின் அவலாய் அன்பை...
வாசனை வீசும் சொற்களுக்குச்
சொந்தக்காரியல்ல...
அநேகமாகக் காரம்தான்...
வைய வைய வைரக்கல்...
சிறுவயதில் கோழியைப்போல்
அவ்வப்போது முடிபற்றி மிதிப்பாள்..
இப்போது வார்த்தைகளால்...
சிலசமயம் புரிந்து கொள்ளாமல்...
சில சமயம் கொடுந்தவறுக்காய்...
அவள் புன்னைகைத்தால்
காலடியில் முயலகனாய்...
என்றென்றும் மயங்கி...
அவளுக்குப் பிடிக்குமென
பலதும் செய்து அவளை
அவதியுற வைத்திருக்கிறேன்...
சமையலாகட்டும்...
செயல்களாகட்டும்...
உதிரத்தில் உருவாக்கி.,
உருவாய் செதுக்கியவளே.,
உன்னோடு கிடந்தே
உழன்று கிடப்பேன் என்று
அவ்வப்போது ஒதுக்கி வைத்து
ஒளிந்து கொள்கிறாயா...?
என் தேவையறிந்து
பசியறிந்து.,
ருசியறிந்து.,
வயசறிந்து.,
நிறைவேற்றியவளே...
செல்லமாக வேண்டாம்...
கோபமாக வேணும் உன் குரலை
சிந்திச்செல் அவ்வப்போது...
டிஸ்கி:- இந்த இடுகை அன்னையர் தினத்துக்காக
இளமை விகடனில் மே 8 அன்று வெளி வந்தது...
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem080510.asp

66 கருத்துகள்:
சின்ன வயசில ரொம்ப திட்டு வாங்கியிருப்பீங்க போல
வாழ்த்துக்கள் அக்கா
விஜய்
அம்மா என்றால் அன்பு.
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்...
அருமையான கவிதை.
விகடனிலேயே வாசித்தேன்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.. கவிதையின் வரிகள் அருமை....
அன்னையர் தின வாழ்த்துக்கள். அருமையான கவிதை,விகடனில் வந்ததற்க்கு வாழ்த்துக்கள் அக்கா!!
வாழ்த்துக்கள்
விகடனிலேயே வாசித்தேன்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
அம்மா பற்றிய உங்க கவிதை சூப்பர் அக்கா..
//வாசனை வீசும் சொற்களுக்குச்
சொந்தக்காரியல்ல...
அநேகமாகக் காரம்தான்...
வைய வைய வைரக்கல்...//
ரொம்ப அழகு இந்த வரிகள்.. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..!! :)
எங்கிருந்தாலும்
வருகிறாள் முடிந்துகொண்டு
குசேலனின் அவலாய் அன்பை...]]
அருமை வரிகள்.
அன்னையர்(க்கு) தின(மும்) வாழ்த்துகள்
அருமையான கவிதை.
அம்மா என்றால் அன்பு மட்டும்தானா, அதட்டலும் கூடத்தான்...
'வைய வைய வைரக்கல்' ரொம்பவும் அழகு.
வாழ்த்துக்கள்!
//வைய வைய வைரக்கல்//
இவள்தான் அம்மா.ஊறவின் உச்சம்.
வாழ்த்துக்கள் உங்களுக்கும் கூட.
அன்னையர் தின வாழ்த்துகள்
\\எங்கிருந்தாலும்
வருகிறாள் முடிந்துகொண்டு
குசேலனின் அவலாய் அன்பை...]]\\
அருமை வரிகள்.
வாழ்த்துக்கள்!
குசேலனின் அன்பாய் அவலை..என்ன ஒரு அருமையான வார்த்தைப்ரயோகம்!!
மீன்தொட்டியின் சுவர்களில் படிந்திருக்கும் எச்சில் மாதிரி நீர் வற்றும் வரை தெரிவதில்லை நமக்கும்
வளர வளர விளங்குகிறது தாய்மையும் பிறகான தவிப்பும்
கவிதை நல்லா இருக்கு
அந்த முயலகன் ல் நின்றிருந்தேன் கொஞ்ச நேரம்
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
ஆஹா அம்மா , வை பற்றி அருமையான கவிதையே படைத்து விட்டீர்கள்.
விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
தேனம்மை உங்கள் கவிதை அன்பென்றால் நேசரின் பின்னூட்டம் அழகு :)
சில சமயம் எது கவிதை எது பின்னூட்டம் என எண்ண வைக்கிறது
வாழ்த்துக்கள்
D.R.Ashok கூறியது...
//தேனம்மை உங்கள் கவிதை அன்பென்றால் நேசரின் பின்னூட்டம் அழகு//
இதேதான் தேனு மக்கா..வாழ்த்துகள்,அம்மாவிற்கும் உங்களுக்கும்.
நல்லாயிருக்கு தேனக்கா. விகடன்ல வந்ததுக்கு வாழ்த்துகள்.
அந்த 'வைய வைய வைரக்கல்'லை மிக ரசித்தேன்.
//என் தேவையறிந்து
பசியறிந்து.,
ருசியறிந்து.,
வயசறிந்து.,
நிறைவேற்றியவளே...
செல்லமாக வேண்டாம்...
கோபமாக வேணும் உன் குரலை
சிந்திச்செல் அவ்வப்போது...//
ஆஹா...அருமை தேனக்கா மிகவும் ரசித்தேன்...மூன்று முறை படித்து விட்டேன் விகடனுக்கு வாழ்த்துகள் அக்கா..
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
\\உதிரத்தில் உருவாக்கி.,
உருவாய் செதுக்கியவளே.,
உன்னோடு கிடந்தே
உழன்று கிடப்பேன் \\
அருமையிலும் அருமை வார்தைகள்
:))
நன்றி விஜய்
நன்றி கோமதி
நன்றி காஞ்சனா
நன்றி தோழி
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி அஹமது இர்ஷாத்
நன்றி மேனகா
நம்றி பத்மா
நன்றி அருணா
நன்றி ஆனந்தி
நன்றி ஜமால்
நன்றி சுந்தரா
நன்றி ஹேமா
நன்றி பாசமலர்
நன்றி அம்பிகா
நன்றி ஆரண்யநிவாஸ் ராம மூர்த்தி
நன்றி நேசன்... எனக்கு முயலகனின் சிரிப்பு பிடிக்கும் ... தாய் முகம் நோக்கும் சேய்போல்..
நன்றி தலைவன்
நன்றி ஜலீலா
நன்றி மயில்
உண்மை அஷோக்..:))
நன்றி தென்றல்
நன்றி மக்கா
நன்றி சரவணா
நன்றி கனி
நன்றி ஜெய்லானி
நன்றி ஜில்தண்ணி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்
//அவள் புன்னைகைத்தால்
காலடியில் முயலகனாய்...
என்றென்றும் மயங்கி...//
புதுமையான வரிகள் அக்கா...
அழகான கவிதை
நல்லாயிருக்கு அக்கா
அன்னையர் தின வாழ்த்துக்கள்.....
முயலகனாய்...
வார்த்தை
தேடலை
சிந்திக்கிறேன்
இங்கே .......
HAPPY MOTHER'S DAY, akka!
அருமையான வரிகளுடன், அழகாய் கவிதை தந்து இருக்கிறீர்கள், அக்கா. பாராட்டுக்கள்!
மிகவும் அருமையாக இருக்கின்றது...வாழ்த்துகள்...அனைவருக்கும் இனிய அன்னையர் தினவாழ்த்துகள்...
அன்னையர் தின வாழ்த்துக்கள்..
அன்புள்ள அன்னையருக்கு வாழ்த்துக்கள்!!!
அன்னையர் தினத்திற்கு அழகு சேர்க்கும் அருமையான கவிதை
எத்தனைமுறை எழுதி தீர்த்தாலும்கூட அடங்காத அதே அன்பு = அம்மா
நல்ல கவிதை....
கவிதையை ரசித்தேன் அக்கா.
அன்னையர் தின வாழ்த்துகள்.
வரிவரியாய் மனதிலிருந்து வரும் சொற்கள்...உண்மையான இயல்பான அன்பு தெறிக்கும் அழகான....என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
அட்டகாசம் அக்கா!! வாழ்த்துக்கள்.
beautiful..
கவிதை மிக அருமை.
’என் அம்மா’ சொல்லும்போதே என்ன ஒரு சுவாதீனம்.. அதே அழகு கவிதை முழுவதும் நிரவிக் கிடக்கிறது..
//எங்கிருந்தாலும்
வருகிறாள் முடிந்துகொண்டு
குசேலனின் அவலாய் அன்பை...//
very beautiful lines...
pengalidam... athuvum thirumanamaana pengalidam mattum annayar en athiga anbu seluththugiraargal??
கவிதை மிக அருமை.வாழ்த்துக்கள்.அக்கா...
நன்றீ பிரபு
நன்றி செந்தில்
நன்றி சித்ரா..
நன்றி கீதா
நன்றி புலிகேசி
நன்றி தேவன் மாயம்
நன்றி வேலு
நன்றி பாலாசி
நன்றி அக்பர்
நன்றி கண்ணகி
நன்றி சை கொ ப
நன்றி கலகலப் பிரியா
நன்றீ கருணாகரசு
நன்றி ரிஷபன்
நன்றி மயிலு
நன்றி மலிக்கா
கருத்துரையிடுக