சனி, 1 மே, 2010

கம்பன் விழாவில் கவிக்கோ

காரைக்குடியில் சென்ற மாதம் கம்பர் விழா
நடந்தது..அதில் திருநாள் மங்கலத்தை கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தொடங்கி வைத்துப் பேசினார்..
இந்த முறை 72 ஆண்டுகால கம்பன் விழாவில் புதுமையாக”யாதும் ஊரே “ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகள் தலைப்பும் பொருளுமாக வைக்கப்பட்டுத் தலைவர் உரை அதன்பாற் பொருட்டு அமைந்தது மிக அருமையாய்..
விகடனில் கவிக்கோ அவர்களின் கவிதைகளை படித்து மகிழ்ந்திருக்கிறேன் ..அன்று கவிதையே கவிதை படிக்கக் கேட்டு இன்புற்றேன்..
தலைவர் உரையில் அனவரையும் வாழ்த்தி கம்பனடிப் பொடியினை வணங்கித் தனதுரையை ஆரம்பித்தார் ..ரஷ்யாவின் ” லுகும்பா பல்கலைக்கழக வரவேற்பு வளைவில் பொறிக்கப்பட்ட வாசகம் ..எல்லா மொழியிலும் அலசி ஆராய்ந்து ..தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த வாசகம் ...--ஒப்பற்ற வாசகம்..”யாதும் ஊரே” என்ற கணீயன் பூங்குன்றனாரின் வாசகமாம் ... அவர் ஒரு வானியல் அறிஞரென்று புறநானூறு சொல்கிறது.. என்றார்..


மேலே உயர உயரப் பற்றுகள் அறுந்து போகின்றன..கீழே வரவரப் பற்றுக்கள் அதிகம்,..”யாவரும் கேளிர் “ என்பதற்கு பெரிய மனம் வேண்டும்...மனித நேயம் வேண்டும்..
பிரச்சனையில்லாத உலகம் வேண்டுமா ..? ஊர்ப்பற்று நாட்டுப் பற்று ஒழியுங்கள்.. மனிதர்களைத்தான் இறைவன் படைத்தான்..ஜாதி., மதம்., ஊர் ., நாடு., எல்லாம் மனிதன் படைத்தான் ..சில மதங்களில் இருப்பது போல் போன ஜென்மம் அடுத்த ஜென்மம் அனைத்திலும் எங்கே பிறந்திருப்போமோ ?? எங்கே பிறக்கப் போகிறோமோ??

“இன்னும் எத்தனை எத்தனை சண்டையோ” பட்டினத்தாரின் வரிகள் இவை ..அது சமயம் யார் உறவினர்...? யார் பகைவர்..? வயிற்றுப்
பிழைப்புக்காக., வியாபாரத்துக்காக ., கடல் கடந்து செல்லும் ஊரில் எல்லாம் உறவினர்கள் யார்...?..அண்டை அயலார்கள் தாம் நம் உறவினர்கள்.. அறிஞர்களுக்கு ., கலைஞர்களுக்கு சொந்த ஊர் இல்லை.. உலகம் சார்ந்தவர்கள் அவர்கள் .

கிழக்கு ஆப்ரிக்காவில் முதல் தாய். தந்தை ஆதாம் ஏவாள்..எனவே விஞ்ஞான ஆராய்ச்சிப்படியும் அனைவரும் கேளிர் தான்.. ஒன்றுமில்லாமலே இருந்தது ...அதற்கு இல்லையென்ற ஒன்றுதான் பிறந்தது ..கடைசியில் ஒன்றுமில்லாமல்தான் முடிந்தது... இன்மையில் தான் அனைத்தும் பிறந்தது,.. இன்மையில் தான் அனைத்தும் முடிந்தது..
முப்பாலுக்கப் பாலாய் முடிவில்லா சூனியமாய்...
அப்பாலும் பாழாய் “ இந்த வரிகளை கவிக்கோவின் சொற்கோவில் கேட்டு அசந்து போனேன் எல்லா தேடல்களுக்கும் விடை கிடைத்தது போல் இருந்தது ..

”யுகயுகமாய் எங்கே இருந்தாய் நீ..?”
ராமன் ஒவ்வொரு தேசமாகச் சென்று பின் அனைத்து இந்தியாவுக்கும் சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொள்கிறான் ..இலங்கை உட்பட..
குகன் என்ற படகோட்டி மீது பாசம்.. சுக்ரீவன் என்ற விலங்கு மீது பாசம்.,விபீஷணன் என்ற அரக்கர் மீதும் பாசம்..... எதையும் கருதி அன்பு பாராட்டாதே....உயிருக்கு ஜாதியில்லை., மதமில்லை...பேதமில்லை...எல்லா உயிரையும் அடைகின்றதுதான் பரம்பொருள்...

வானில் பறக்கும் புள்ளெலாம் நான் மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான் ....................... மரமெல்லாம் நான் ........... மனிதர்கள்எல்லாம் நான்..

எவன் எல்லாவற்றையும் ஒன்றாகக் காண்கிறானோ அதுவே ஞானம் ., காட்சி தரிசனம்..அவனுக்கு வீடு பேறு ., மோட்சம் கிடையாது எல்லாம் ஒன்றுதான்..
நீரிடை உறங்கும் சங்கு., நிலமிடை உறங்கும் மேனி.,தாரிடை உறங்கும் வண்டு...தாமரை உறையும் திருமகள் ...இதுபோல் அது அது உறையும் இடத்தின் பாற்பட்டு விளங்குகிறது ...
யாரையும் சின்னவன் என்று நினைக்காதே என்று சுக்ரீவனுக்குச் சொல்கிறான்..எந்த உயிருக்கும் இடையூறு செய்யாதவன் எவனோ அவனே சிறந்த பண்பாளன்..
அனைவரும் சகோதரர்கள் என்றால் ஏன் இட ஒதுக்கீடு..?வெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் மரபு இது ......சமம் அனைத்தும் ..யாதும் ஊரே..யாவரும் கேளீர்..

ராமாயணத்தில் எல்லோருக்கும் சம பங்கு உண்டு விலங்கினத்துக்கு ரெப்ரசண்டேஷன் உண்டு.,. , எல்லோருக்கும்சமமாக உயர்ந்த அந்தஸ்து தருவதுதான் ராமாயணம்.. எனவே ராமன் ஆட்சியே உயர்ந்த ஆட்சி. இவ்வாறு
கவிக்கோ தன்னுரையில் விஞ்ஞானம்., மெய்ஞானம் ., அறிவியல் ., பூகோளம்., சரித்திரம்., ஆன்மீகம் ., இலக்கியம்., கலந்து தஞ்சாவூர் தலைவாழையிலையில் கணியனின் ”யாதும் ஊரே” என்ற இராமாயண இலக்கிய விருந்துபடைத்தார்கள்...வயிறு புடைக்கப்புசித்தவர்கள் அந்த விருந்தின் பெருமை பகர்வதில்லையா அதுபோலத்தான் என்னுடைய இந்தக் கட்டுரையும்..உங்களிடம் யாம் பெற்ற இன்பம் பெறுகவென்று பகர்கிறேன்..

டிஸ்கி:- செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு உரிய பெருமை கிடைக்கச் செய்ய கவிக்கோ முதல்வரிடம் கூறி ஆவன செய்வார் என கம்பனடி சூடி சொன்னார்கள்..

40 கருத்துகள் :

நேசமித்ரன் சொன்னது…

இந்த இடுகையில் சில விரும்பத்தகாத வரிகள் இருக்கின்றன

அவற்றை நீக்கினால் மகிழ்வேன்
தேனம்மை

நேசமித்திரனின் வேண்டுகோள் அது

Chitra சொன்னது…

அருமையான நிகழ்ச்சி தொகுப்பு. நன்றி, அக்கா.

thenammailakshmanan சொன்னது…

நேசன்..உங்களின் பின்னூட்ட்டம் படித்த பின்தான் உணர்ந்தேன்..தேவையற்ற சில வரிகளை எழுதாமல் இருந்து இருக்கலாம் என்று...அவர் கூற வந்த அர்த்தம் வேறு... இங்கு புரிந்து கொள்ளப்படும் அர்த்தம் வேறு என உணர்ந்து அவற்றை நீக்கி விட்டேன்..

நன்றி நேசன்....

thenammailakshmanan சொன்னது…

நன்றீ சித்ரா...

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

வர்ணனை நன்று.

ஜெய்லானி சொன்னது…

//கடல் கடந்து செல்லும் ஊரில் எல்லாம் உறவினர்கள் யார்...?..அண்டை அயலார்கள் தாம் நம் உறவினர்கள்.. //

:-)))))

தமிழ் வெங்கட் சொன்னது…

//நாட்டுப் பற்று ஒழியுங்கள்.. மனிதர்களைத்தான் இறைவன் படைத்தான்..ஜாதி., மதம்., ஊர் ., நாடு., எல்லாம்மனிதன் படைத்தான் ..//

நாட்டு பற்று வேண்டாம் என்றால் கிரிகெட்டில் இந்தியா வென்றால் ஏன்
மகிழ்சி கொள்கிறோம்..

ஜாதி மதங்களை மட்டுமல்ல ஆண்டவணையும் மனிதந்தான் படைத்திருக்க வேண்டும்..

nerkuppai thumbi சொன்னது…

//அன்று கவிதையே கவிதை படிக்கக் கேட்டு //
ஆனால் இந்த வரிகள் என்னை உலுப்பி விட்டன. (இது உங்கள் எழுதும் முறையை பாராட்டுவதே அன்றி, கவிக்கோ கவிதைகளைப் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது.). இந்த வலைப்பதிவு விஞ்சி நிற்பது உரைநடையிலா , கவிதையிலா எனப் பட்டி மன்றம் நடத்தலாம் போல , கவிதையிலா எனப் பட்டி மன்றம் நடத்தலாம் போல

ஈரோடு கதிர் சொன்னது…

நல்லதொரு பகிர்வு

நன்றி

யாவரும் கேளீர்... மனதில் ஆழப்பதிகிறது

ஸ்ரீராம். சொன்னது…

நீங்கள் பெற்ற இன்பம் நாங்களும் சற்றுப் பெற்றோம்...

நேசமித்ரன் சொன்னது…

நன்றி தேனம்மை

செ.சரவணக்குமார் சொன்னது…

மிக நல்ல பதிவு அக்கா. கவிக்கோவின் 'ஆலாபனை' யில் 'பித்தன்' ஆனவன் நான். பகிர்வுக்கு நன்றி.

அம்பிகா சொன்னது…

\\..எல்லா மொழியிலும் அலசி ஆராய்ந்து ..தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த வாசகம் ...--ஒப்பற்ற வாசகம்..”யாதும் ஊரே” என்ற கணீயன் பூங்குன்றனாரின் வாசகமாம் ...\\
:-))
அருமையான பகிர்வு. நன்றி தோழி.

சே.குமார் சொன்னது…

நல்ல இடுகை தேனக்கா.

கம்பன் விழாவில் கவிஞரின் உரையைக் கேட்டது போலிருந்தது உங்கள் பகிர்வு.

பகிர்வுக்கு நன்றி.

சி. கருணாகரசு சொன்னது…

பகிர்வுக்கு மிக்க நன்றிங்க

உங்களுக்கு மேதின வாழ்த்துக்கள்.

ரோகிணிசிவா சொன்னது…

//யாரையும் சின்னவன் என்று நினைக்காதே என்று சுக்ரீவனுக்குச் சொல்கிறான்..எந்த உயிருக்கும் இடையூறு செய்யாதவன் எவனோ அவனே சிறந்த பண்பாளன்//

//ராமாயணத்தில் எல்லோருக்கும் சம பங்கு உண்டு விலங்கினத்துக்கு ரெப்ரசண்டேஷன் உண்டு.,. , எல்லோருக்கும்சமமாக உயர்ந்த அந்தஸ்து தருவதுதான்
ராமாயணம்.. //
-good one mam , thnks for sharing

LK சொன்னது…

நல்ல பதிவு

காரைக்குடி நாக. மெ. சுப. வ நாகப்பன் சொன்னது…

சிறு வயதில், ஒவ்வொரு ஆண்டும் தவறாமல், கூட்டத்தின் பின்னால், கடைசியில், கால் கடுக்க நாள் முழுவதும் நின்றுகொண்டே கம்பன் கழக பேச்சுக்களைக் கேட்ட நினைவுகள்! கம்பன் அடிப்பொடியின் சட்டை போடாத உருவம், முன்னாள் நீதி அரசர் எம் எம் இஸ்மாயில் போன்ற சான்றோரின் உரைகள், தரமான பட்டி மன்றங்கள், சுவையான வழக்காடு மன்றங்கள், மேல் முறையீடு, எட் ஆல், . . . ஹூம் . . .

Matangi Mawley சொன்னது…

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

Sivaji Sankar சொன்னது…

நல்ல பகிர்வு அக்கா... புரிதலின் பயன் உங்கள் மூலம் வாய்த்தலில் மகிழ்ச்சி..

அக்பர் சொன்னது…

அருமையான பகிர்வு அக்கா.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

அன்பின் தேனம்மை அக்கா நான் ஊருக்கு வருகிறேன்.உங்களைக் காரைக்குடியில் சந்திக்க இயலுமா? இயலுமென்றால் 09443191248 இந்த எண்ணில் தெரிவிக்கவும்.இது என் தம்பியின் எண்.
நன்றி! அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்

விஜய் சொன்னது…

கவிக்கோவின் ரசிகன் நான். அழகான கருத்துகள். தெளிவான விளக்கங்கள்.

தந்தமைக்கு நன்றி அக்கா

விஜய்

thenammailakshmanan சொன்னது…

அன்பின் சாந்தி., மொத்தமாக தொகுப்பில் உங்கள் பின்னூட்டமும் வெளியாகிவிட்டது,,,,

சசிகுமார் சொன்னது…

வழக்கம் போல கலக்கீடீங்க அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ சை கொ ப

உண்மை ஜெய்லானி

thenammailakshmanan சொன்னது…

உண்மை வெங்கட்

நன்றி கதிர்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ நெற்குப்பைத் தும்பி

உங்கள் அறிவுரைப்படி கேளிர் என்பதுதான் சரி என்பதால் அப்படியே மாற்றீ விட்டேன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி நேசன்.,

நன்றி ஸ்ரீராம்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சரவணன்

நன்றீ அம்பிகா

thenammailakshmanan சொன்னது…

நன்றீ குமார்.,

நன்றி கருணாகரசு

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரோஹிணி சிவா

நன்றி LK

thenammailakshmanan சொன்னது…

நன்றி காரைக்குடி நாக. மெ. சுப. வ. நாகப்பன்... உங்க கருத்துக்கு.. நானும் அதை மிஸ் செய்றேன்..

thenammailakshmanan சொன்னது…

நன்றி Matangi Mawley

thenammailakshmanan சொன்னது…

நன்றீ சிவாஜி சங்கர்

நன்றி அக்பர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சாந்தி.. தொடர்பு கொள்கிறேன்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ விஜய்

நன்றி சசி

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

nerkuppai thumbi சொன்னது…

I appreciate this.

thenammailakshmanan சொன்னது…

நன்றி நெற்குப்பைத்தும்பி

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...