எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 மே, 2010

சவலைப் பலா..

அரும்பிக் கொண்டே
இருக்கிறது ஆசை..
பூத்துக் கொண்டே
இருக்கிறது மனசு...

துளிர்விட்டுக் கொண்டே
இருக்கிறது ஏக்கம்..
விருட்சமாகிக் கொண்டே
இருக்கிறது எல்லாம்...
அடைய முடியாமல்..


குறுக்கிக் குறுக்கி
போன்ஸாயாய் வளர்க்கப்பட்ட
மனசில் வெடித்துக்கிளம்பி.,

சீண்டுவாரற்று விளைந்து
கிடக்கும் சவலைப் பலா..
முட்களைந்து உண்ணத்
தெரியா உலகில்...

முந்தானையோ.,
பேனாவோ.,
மடிக்கணனியோ கண்டு..
என்னை எடுத்துக்கொள் என
முகம் புதைத்துக்கொண்டு........

டிஸ்கி:- முந்தானைக்கு பதில் துப்பட்டான்னு
கூட வைத்துக்கொள்ளலாம் ஹுசைனம்மா:))

32 கருத்துகள்:

  1. நல்ல கவிதை தேனக்கா... வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு
  2. டிஸ்கி:- முந்தானைக்கு பதில் துப்பட்டான்னு
    கூட வைத்துக்கொள்ளலாம் ஹுசைனம்மா:))
    ***********************************
    ஒரு நொடியில்.. தன் தோழிக்காக
    முந்தானைக்குப் பதிலாக இன்னொரு OPTION-னை வழங்கும் சக்தியும் மனமும் உள்ள அக்காவால்
    சவலைப் பழத்தை சக்கைப் பழமாக மாற்ற யுகங்கள் ஒன்றும் ஆகாது..
    -அக்காவின் அம்மு..

    பதிலளிநீக்கு
  3. ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு கவிதை.

    பதிலளிநீக்கு
  4. வரிகள் எல்லாம் நல்லா இருக்கு, என்னவோ சொல்கிறது!

    பதிலளிநீக்கு
  5. //சீண்டுவாரற்று விளைந்து
    கிடக்கும் சவலைப் பலா..
    முட்களைந்து உண்ணத்
    தெரியா உலகில்...
    //

    நல்ல வரிகள்.

    உண்ணத்தெரிய உலகிற்கே நம்மை நாமே தான் வெளிக்காட்ட வேண்டும்

    பதிலளிநீக்கு
  6. நேசமித்ரன் சார் பதிவுல உங்க பின்னூட்டம் படிச்சேன். இலக்கியவாதிகள் பேசுறது புரியறதுக்கே ஒரு நோட்ஸ் தேவைப்படுகிறது. நான் பயணிக்க வேண்டியதூரம் நிறைய இருக்கு, செலவுக்கு அன்பும் இருக்கு.

    நன்று தேனக்கா.

    பதிலளிநீக்கு
  7. கவிதை ரொம்ப அருமை தேனக்கா..

    பதிலளிநீக்கு
  8. //சீண்டுவாரற்று விளைந்து
    கிடக்கும் சவலைப் பலா..
    // தமிழனின் சீந்துவாரற்ற சிந்தனைகளால் விடியலில்லா முழிப்புகள் ஒவ்வொரு நாளும்....போன்ஸாயாய் வளர்க்கப்பட திட்டமிடல் இந்த இலக்கிய சிந்தனைகள்...புரிவோமாக!!!!

    பதிலளிநீக்கு
  9. //சீண்டுவாரற்று விளைந்து
    கிடக்கும் சவலைப் பலா..//

    சவலைப் பிள்ளையின் ஏக்கங்களைக் கொண்டு கவிதையின் கருத்தை கணிக்க முயல்கிறேன்.

    //VELU.G சொன்னது…
    உண்ணத்தெரிய உலகிற்கே நம்மை நாமே தான் வெளிக்காட்ட வேண்டும்//

    ஓ, அப்படியா!!

    பதிலளிநீக்கு
  10. /டிஸ்கி:- முந்தானைக்கு பதில் துப்பட்டான்னு
    கூட வைத்துக்கொள்ளலாம் ஹுசைனம்மா//

    ஹி. ஹி.. கவிதை புரியாம உளறிடக்கூடாதேன்னு முதல்லயே சொல்லி வக்கிறீங்க... சரி.. சரி..

    //அக்பர் சொன்னது…
    இலக்கியவாதிகள் பேசுறது புரியறதுக்கே ஒரு நோட்ஸ் தேவைப்படுகிறது.//

    இப்படி ஒரு அணியும் வைங்க உங்க சங்கத்துல!! நாந்தான் முதல் அதுல!! :-))

    பதிலளிநீக்கு
  11. நாங்க எல்லாம் பிதாமகன் விக்ரம் சூர்யா ரேஞ்சுங்க

    ரெண்டாப் பிச்சு தின்னுட்டு போய்ட்டே இருப்போம்

    @அக்பர்

    சிநேகிதா !இலக்கியவாதில்லாம் இல்ல மக்கா

    எல்லாம் எழுத்துதான் ! துபாய் டூட்டி ப்ரீ சாக்லேட் ஒரு விதம் கம்மர்கட் ஒருவிதம் சுத்தி இருக்குற பேப்பர பிரிச்சுட்டா எல்லாம் ஒண்ணுதானே மக்கா குழந்தைக்கு

    :)

    பதிலளிநீக்கு
  12. ஏக்கமும் இருப்பதை எடுத்துப் பயன்படுத்தா பொறுமையும் கவிதை அழகு தேனுவக்கா.

    பதிலளிநீக்கு
  13. ஒல்லிபலாவிற்கு வாழ்த்துக்கள் Honey அக்கா


    விஜய்

    பதிலளிநீக்கு
  14. மனம் ஒரு குரங்கு அக்கா!!! கவிதை சூப்பர்.

    பதிலளிநீக்கு
  15. வலைச்சரத்திலும் எழுதி இங்கயும் எழுதி கலக்கறீங்களே...

    பதிலளிநீக்கு
  16. //முட்களைந்து உண்ணத்
    தெரியா உலகில்...//

    ஆஹா...என்ன ஒரு வார்த்தை கையாடல் தேனக்கா...சூப்பர்....வலைச்சரத்தில் பார்பதில் மனதுக்கு மகிழ்ச்சி...வாழ்த்துகள்..அக்கா..

    பதிலளிநீக்கு
  17. பலா மூசும் ருசிதான் தேனம்மை ...
    எதுவும் சீண்டுவாராற்று என்றில்லை .....இது எனக்கும் சேர்த்து நான் கூறிக்கொள்வது .
    நல்லதொரு மன வெளிப்பாடு

    பதிலளிநீக்கு
  18. //சீண்டுவாரற்று விளைந்து
    கிடக்கும் சவலைப் பலா..
    முட்களைந்து உண்ணத்
    தெரியா உலகில்...
    //

    நச் வரிகள்....

    பதிலளிநீக்கு
  19. துளிர்விட்டுக் கொண்டே
    இருக்கிறது ஏக்கம்..
    விருட்சமாகிக் கொண்டே
    இருக்கிறது எல்லாம்...
    அடைய முடியாமல்..


    தலைப்பில் லேசான குழப்பம் அக்கா எனக்கு

    ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ள் ஏக்கம், ஆசை, போன்ஸாயாய் அழகிய‌ வார்த்தைக‌ள்

    பதிலளிநீக்கு
  20. நன்ற் அஹமத்

    நம்மை வளரவிடாம செய்றாங்கள்ல LK அதுதான் சவலைப் பலா

    பதிலளிநீக்கு
  21. அட அம்மும்மா வாங்க... நீங்க வந்து பின்னூட்டம் போட்டா எழுதுறதை நிறுத்திடலாம்னு நினைச்சிருந்தேன்.. ஆனா முடியல..:))

    பதிலளிநீக்கு
  22. ஆம் வேலு

    அப்படி எல்லாம் ஒன்றூமில்லை அக்பர்.. எல்லா மிட்டயும் ஒன்றுதான் நேசன் சொன்னது போல்

    பதிலளிநீக்கு
  23. நன்றீ arise..

    உ்ண்மைதான் ஹுசைனம்மா சவலைப் பிள்ளைதான்

    பதிலளிநீக்கு
  24. நன்றி நேசன் சரியா சொன்னிங்க

    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  25. நன்றீ நேசன்., மயிலு., ஸ்ரீராம்.,சித்ரா., கனி., ஜெய்லானி., முனியப்பன் சார்., பத்மா.,புலிகேசி., செந்தில்குமார்

    பதிலளிநீக்கு
  26. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...