எனது பதிமூன்று நூல்கள்

புதன், 31 மே, 2017

மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.நம்மை அரசாண்டவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன். சண்டைக்கு வரவேண்டாம்பா யாரும். J

சில சிலைகள் மிக அற்புதமாகக் கரவு செறிவோடு வடிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில சிலைகள் அவர்கள்தானா என உற்று நோக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதில் இரண்டு ரகமாகவும் இருக்கின்றன. நீங்களே முடிவு செய்துக்குங்க. இது அவங்க சிலைதானான்னு. என் கண்ணோட்டத்தில் நான் எடுத்ததைப் பகிர்ந்திருக்கிறேன்.

 
தகடூர் ராஜா அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி அளிக்கும் இடம் அதியமான் கோட்டம். தர்மபுரிஅதியமான் கோட்டை என்னும் ஹோட்டலுக்குத் திரும்பும் வழியில் உள்ள ரவுண்டானா சிலை.  


செவ்வாய், 30 மே, 2017

புஸ்தகாவில் என் நாலாவது மின்னூல் . ”நீரின் பயணம்”

புஸ்தகாவில் என் நாலாவது  மின்னூல் . ”நீரின் பயணம்”

புஸ்தகாவில்   என் நாலாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஒன்பதாவது நூல் ) “நீரின் பயணம்” வெளியாகி உள்ளது.

இது எனது கவிதைகளின் தொகுப்பு. . 184 கவிதைகள் உள்ளன.
 உள்ளன.

பக்கங்கள் - 201.

விலை ரூ. 125. 00 / $ 3.99.

 இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.

http://www.pustaka.co.in/home/ebook/tamil/neerin-payanam

புஸ்தகாவில் என் மூன்றாவது மின்னூல் “ தேன் சிறுகதைகள்”

புஸ்தகாவில் என் மூன்றாவது மின்னூல் “ தேன் சிறுகதைகள்”

புஸ்தகாவில் நேற்று  என் மூன்றாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , எட்டாவது  நூல் ) “ தேன் சிறுகதைகள்”  வெளியாகி உள்ளது.

இது எனது சிறுகதைகளின் தொகுப்பு. 29 சிறுகதைகளும் ஒரு நாடகமும் உள்ளன.

பக்கங்கள் - 125.

விலை ரூ. 75. 00 / $ 1.99.

இந்த இணைப்பை க்ளிக் செய்து வாங்கலாம். 

http://www.pustaka.co.in/home/ebook/tamil/thean-sirukathaigal

தேன் பாடல்கள்.- 27. ராஜாவும் ரோஜாவும்.நேருக்கு நேர். மனம் விரும்புதே உன்னை உன்னை.. சிம்ரன் தோன்றிய முதல் படம். ஹிப் டான்ஸ்களின் முன்னோடி. J

அதே சிம்ரனின் முதிர்ச்சித் தோற்றம். ஆனால் க்ளாஸான பாட்டு.

Vaaranam Aayiram - Mundhinam Video | Harris Jayaraj | Suriya

மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKSதுபாய் புர்ஜ் அல் அராப் முன்பு. 

குவாலியர் கோட்டை. ராஜாக்களையும் ராணிகளையும் கண்ட உப்பரிகை அன்று எங்களையும் கண்டது. ஐ மீன் நாங்க பார்த்தோம்பா . அது எங்களை பார்த்துச்சு அவ்ளோதான்.

திருவல்லிக்கேணியில் பாரதியார் இல்லம்.
குல்பர்காவில் மதுராஇன்ன் ஹோட்டல்.
கானாடுகாத்தான்/செட்டிநாடு நாராயணா இன்ன்.ஹெரிட்டேஜ் ஹோம். 

மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.பூம்புகாரின் ஆக்ரோஷ அலைகள் கரைந்து போன நகரின் மிச்சமும் எச்சமும் என்னவோ செய்தன. 

பாச நாய்க்குட்டிகள்

பிட்ஸ்ட்ரிப்ஸ் கலாட்டா.பிட்ஸ்ட்ரிப்ஸ் கலாட்டா.

இது ஒரு ஃபேஸ்புக் அப்ளிகேஷன். கொஞ்சநாள் நான் இதன் பிடியில் அகப்பட்ட பிடியாய் இருந்தேன். ஹிஹி .. 


**பாஸ்டாவில் ஆராய்ச்சிதிங்கள், 29 மே, 2017

மகளிர் தரிசனத்தில் கவிதை, கோலம், சமையல்.

மகளிர் தரிசனத்தில் கவிதை, கோலம், சமையல்.

மகளிர் தரிசனம் ஸ்பெஷல் இதழில் என்னுடைய கூலம் கவிதை,

விழிப்புணர்வுக்கோலங்கள்,

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.

சனி, 27 மே, 2017

புஸ்தகாவில் என் இரண்டாவது மின்னூல் . ”தீபலெக்ஷ்மி”

 புஸ்தகாவில் என் இரண்டாவது மின்னூல் . ”தீபலெக்ஷ்மி”

புஸ்தகாவில் நேற்று  என் இரண்டாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஏழாவது நூல் ) “தீபலெக்ஷ்மி” வெளியாகி உள்ளது.

இது எனது சிறுகதைகளின் தொகுப்பு. 16 சிறுகதைகள் உள்ளன.

பக்கங்கள் - 126.

விலை ரூ. 75. 00 / $ 1/99.

http://www.pustaka.co.in/home/ebook/tamil/deepalakshmi

 படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.

சாட்டர்டே போஸ்ட். ஜிஎம்பி சாரின் தேடல்களும் பகிர்வுகளும்.பாலா சார் என்று நான் அழைக்கும் ஜி எம் பாலசுப்ரமணியன் சார் நான் வியக்கும் ஒரு பதிவர். பூவையின் எண்ணங்கள், gmb writes ஆகிய இரு பதிவுகளில் எழுதி வருகிறார். 

எல்லாரும் பாராட்டும் ஒரு விஷயத்தில் அவர் கேள்விகள் எழுப்பி இருப்பார். தற்போது அவரும் தன்மையாகவே பாராட்டிச் சென்றுவிடுகிறார். அவ்வப்போது அவரது ஆதங்கமும் கேள்விகளும் ஒளிந்துதான் இருக்கும் அவற்றுள்ளும்.

பதிவுகள் எழுதுவதிலும் வித்யாசம்தான். ஏனெனில் அவர் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் தேடி எழுதி இருப்பார். நான் ஆத்திகனா, நாத்திகனா, நான் ஏன் பிறந்தேன், ஆலயம் சென்றதனாலாய பயன், தொடரும் தேடல்கள் ஆகியன மிகவும் சிந்திக்கவைத்த இடுகைகள். இடையறாத தேடல்தானே மனித வாழ்க்கை. 

அவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது உடன் எழுதி அனுப்பினார். அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். 


அன்பின்  தேனம்மைக்கு இத்துடன் ஒரு பதிவு எழுதி அனுப்பி இருக்கிறேன்


 தேனம்மை லக்ஷ்மணனுக்காகபதிவுலகில் நேரில் சந்தித்திராத  ஒரு நண்பி. அட்டகாசமாக எழுதுகிறார் நான்  என் மக்களுக்கு கூறும் ஒரு அறிவுரை நட்சத்திரங்களைக் குறி வை ஒரு மரத்தின்  உச்சிக்காகவாவது  போகலாம் ( Aim at the stars At least you will reach the tree top) பரிவை குமாரின் தளத்தில் அவரது அபிலாக்ஷைகளை கூறி இருந்தார் . அப்போதே என் மனதில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டார்அவர் என்னிடம் எது பற்றி வேண்டுமானாலும்  எழுதுங்கள் சாட்டர்டே போஸ்டுக்கு பதிவிடலாம்  என்றார் எழுதி முடித்தபின்  பார்த்தால் பதிவின் நீளம் பயமுறுத்துகிறது ஒரு தலைப்புக்காக எழுதும்போது நீளம் பற்றிய எண்ணம் தோன்றவில்லை. இத்தனைக்கு பதிவுலகில் லிங்க்  கொடுத்தால் படிப்பவர்குறைவு என்று தெரிந்ததால் அவற்றை விட்டு விட்டிருக்கிறேன்
                  என் எழுத்தைப் பற்றி

புதன், 24 மே, 2017

பெல்லட் - குறுநாவல்.


பெல்லட்:-

அத்யாயம் – 1. சிபிஐ கோர்ட்

ஒரு கோடி ரூபாயைக் கையாடல் செய்த வழக்கில் கைதாகி கோயமுத்தூரில் இருந்த அந்த சிபிஐ கோர்ட்டில் ஆஜராகி தலைகுனிந்து அமர்ந்திருந்தார் முருகானந்தம். மது மாது சூது என்று எந்தப் பழக்கமும் இல்லாத நேர்மையான மனிதர், மிகப் பெரும் நிலக்கிழார் என்று பெயரெடுத்திருந்த, மிகப்பெரும் நிறுவனத்தின் உயர் பொறுப்பிலிருந்த அவருக்கு ஒரு கோடி ரூபாய் எடுக்கும்படி அப்படி என்னதான் தேவை பணத்துக்கு என்று அவரது அலுவலகச் சிப்பந்திகளே அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்கள்.

”முருகானந்தம் முருகானந்தம் முருகானந்தம்..” மூன்று முறை அழைத்தார் டவாலி.

நேரே எழுந்து சென்றவரை சைகை காட்டி பக்கவாட்டில் வரச் சொன்னார் டவாலி. மாண்புமிகு நீதிபதியின் முன் குறுக்கே செல்வதோ பின்புறம் திரும்பி நடப்பதோ சிபிஐ கோர்ட்டில் அனுமதிக்கப்படுவதில்லை.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றார் முருகானந்தம். ஆறடி உடம்பும் ஆறு சாண் ஆகிவிடாதா எனக் குறுகியபடி இருந்தது அவர் முகம். எந்தப் பக்கம் திரும்பினாலும் எல்லாம் தெரிந்த முகங்கள்.

சாட்சிக் கூண்டில் ஒரு கோடி ரூபாய்க்கான அந்த செக் மாற்றப்பட்ட வங்கியின் ஊழியர்  ராஜன் நின்றிருந்தார். அவர் அங்கே இண்டர்னல் ஆடிட்டிங்கில் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்டில் இருந்தார். ராஜனுக்கு முருகானந்தத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது. இருந்தும் என்ன செய்ய ?. கோர்ட் நடைமுறை. நடந்ததை சொல்லித்தானே ஆகவேண்டும்.

ஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.ஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் இது ஜி எம் பி சார் எழுதியதுதானா என்று ஐயப்பாடு தோன்றவே இதை முதலில் படித்தேன். மிக அருமையான கட்டுக்கோப்பான நாவல். ஆனால் பாபுவின் முடிவை மாற்றி இருக்கலாம் என்று தோன்றியதை மறுக்க முடியாது.

இருபது அத்யாயங்களில் பழமைவாதத்துடன் போராடும் நிறைய தர்க்கரீதியான உரையாடல்கள் அதிகம் இடம் பெற்றிருந்தது என்பதே இது ஜி எம் பி சாரின் எழுத்து என்பதற்குச் சான்று. 

செவ்வாய், 23 மே, 2017

அகல்யா :-

அகல்யா :-
****************

வாகேட்டர் பீச்சில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. சூரியமீனின் தங்கச் செதில்களுடன் நீந்திக் கொண்டிருந்த கடலுடன் வெண்மணலும் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளிழுப்பதும் வெளித்தள்ளுவதுமான விளையாட்டில் இரண்டும் ஈடுபட்டிருந்தன. கைப்பையை இறுகப்பற்றியபடி இளசுகளின் கூச்சல்களையும் கும்மாளங்களையும் பார்வையிட்டபடி நடந்துகொண்டிருந்தார்கள் கபிலனும் அகல்யாவும்.

அங்கங்கே வட்டம் போட்டு அமர்ந்து நாலைந்து வாலிபர்கள் பாட்டில்களைக் கவிழ்த்துத் தானும் மட்டையாகிக் கிடந்தார்கள். சேஃப் கார்டுகளின் விசில்களில் அலைகளில் ஆடியவர்கள் அவ்வப்போது பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஹெனின்கைனும் கிங்ஃபிஷரும் பட்வைஸரும் கடலின் உப்புநீருடன் கசப்புநீராய்க் கலந்துகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெண் நீச்சல் உடையுடன் தண்ணீருக்குள் தற்கொலைக்கு முயல்பவள் போல கைகளை நீட்டியபடி பாய்ந்து சென்றுகொண்டிருந்தாள்.

மணலும் நீரும் சேருமிடத்தில் லேசாகக் காலை நனைத்தபடி சொன்னான் கபிலன். ” அப்பாவுக்கு ரெண்டு தரம் அட்டாக் வந்திருச்சு இனி எங்க அப்பா அம்மா என் கூடத்தான் இருப்பாங்க.”.

”ஹ்ம்ம். நல்லதுதான் ஆனா பார்த்துக்க முடியுமா. டயப்படி மருந்து கொடுக்கணும். சாப்பாடு ஜூஸ், சூப் கொடுக்கணும். நீங்க இந்தியாவுல இருந்தா பரவாயில்லை. நான் வேற வேலைக்கு போறேன்.  ””.

“பார்த்துக்கத்தான் வேணும். வேலையை விட்டுடு. நான் அனுப்புறது போதும். வீடு துடைக்க, பாத்திரம் கழுவ, மேவேலைக்கு ஒரு ஆள் போட்டுக்க. வாஷிங் மெஷின் போட்டு சமையல் செய்றதுமட்டும்தானே . உனக்கு ஈஸிதான். “


சேலம் கேஸிலின் ராயல் ட்ரீட் ரெஸ்டாரெண்ட்.சேலத்தில் கோட்டை என்றொரு இடம் இருக்கிறது. இங்கே மாரியம்மன் கோயில், பெருமாள் கோயில் இருக்கின்றன.
நாம் தங்கியிருந்தது சேலம் ஸ்வர்ணபுரி, பாரதிசாலையில் உள்ள சேலம் கேஸில் ஹோட்டல் ரொம்ப காம்பாக்டான இடம். ரூம் சின்னதாக இருந்தாலும் நல்ல வசதியாக இருந்தது. சேர்வராயன் மலைகளும் பாதி சேலமும் தெரியும் பால்கனி ஸ்பெஷல் அம்சம். 

ஒவ்வொரு கெஸ்டையும் ராயலா ட்ரீட் பண்றாங்க. அதான் ராயல் ட்ரீட் ரெஸ்டாரெண்ட். சாப்பாடு – ப்ரேக்ஃபாஸ்ட் உண்மையிலேயே சூப்பர்ப்.

திங்கள், 22 மே, 2017

பத்மயக்ஞம்.

பத்மயக்ஞம் :-

“என்னை ஏன் படைத்தாய் ?” ஒன்றல்ல இரண்டு பெண்கள் கேள்விக்கணைகளோடு கண்கசிய நின்றிருந்தார்கள் பிரம்மனின் முன். ரூப தீர்த்தத்தில் நீராடிய ஒருத்தியும் நாக குண்ட் இல் நீராடிய ஒருத்தியும் கூந்தல் நீர் சொட்ட கைகூப்பி நிற்க, தலையைப் பாரமாக்கிய க்ரீடத்தைக் கழட்டி வைத்துவிடலாமா என்று யோசித்தபடி நாலாபுறமும் பார்த்தார் நான்முகன்.

”ஏன். ஏன்?” என்று எத்தனை கேள்விக்கணைகள் அவர்முன். ’என்னை ஏன் படைத்தாய்’ என்று நித்தம் நித்தம் எத்தனை கோபாக்கினிகள் ?. அவருக்கு மட்டும் பதில் தெரியுமா என்ன. கைக்கு வந்ததை உருவாக்கி உலவவிடுதலே பணி. கிடைத்த மண்ணில் வனைந்த பாண்டம். கண்மூடி மௌனித்தார் இதைக் கேட்கவேண்டியே டெல்லியிலிருந்து ஒருத்தியும் சிதம்பரத்திலிருந்து ஒருத்தியும் புஷ்கருக்குக் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.

”பிதுர்வரம்.” என்ற வார்த்தைகள் உதிர்ந்தன அவர் வாயிலிருந்து. பிரம்மனா பேசினார் ?. ’என்னது, பிதுர்வரமா ?’ சன்னதியில் எதிரெதிரே நின்றிருந்த இருவரும் உடல் சிலிர்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன அழகு எத்தனை அழகு கோடிமலர் கொட்டிய அழகு என்றிருந்த நீரஜாவைப் பார்த்த கணத்தில் பத்மாவதியின் புத்தி பேதலித்தது. பிள்ளைகுட்டிகள் நட்சத்திரங்களாய்ச் சூழ பூரணநிலவைப் போலிருந்த பத்மாவதியின் களை நீரஜாவை வைத்தகண் மாறாமல் பார்க்கச் செய்தது.

வெள்ளிக் காசுகளை வெள்ளிக்  கூர்மத்தின் மேல் பதித்துக் கொண்டிருந்தார்கள் பத்மாவதியின் பிள்ளைகளும் மருமக்களும். நாற்பத்தி மூன்று வயது பத்மாவதிக்குப் பதினெட்டிலேயே ராஜகோபாலுடன் திருமணமாகிப் பத்தொன்பதில் பெண்ணும் இருபது வயதில் பிள்ளையும் பிறந்திருந்தார்கள். அவளது நாற்பதாவது வயதில் பெண்ணுக்குத் திருமணமாகி நாற்பத்தி ஒன்றில் பேத்தியும் பிறந்துவிட்டாள். இரண்டு வயது அபியும் அம்மா அப்பாவோடு தொத்திக்கொண்டு காசு பதித்து சந்தோஷத்தில் கைதட்டியது.

பாட்டியைப் பார்த்து ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்ட அபியை அணைத்த பத்மாவதியின் கண்களில் இருந்து யாரும் பார்க்குமுன் இருசொட்டுக் கண்ணீர் சுண்டித் தெறித்தது கூர்மத்தின் மேல். சிலிர்த்தார் விஷ்ணு. பிரியத்தைக் கொட்டும் கணவன். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த இவளுக்கென்ன குறையென்று நோக்கினார்.

தொப்பக்கா என்று உறவினர்களாலும் ஜப்பான் சுந்தரி என்று தாத்தாவாலும் கட்டச்சி என்று தம்பியாலும் கருவாச்சி என்று புகுந்த வீட்டாராலும் நாமம் சூட்டப்பட்ட தனக்கு கொள்ளைப் பிரியம் காட்டும் கணவன் கிட்டியிருந்தாலும் என்ன மனக்குறை என்று இவருக்குத் தெரியாதா என்ன ? என் அப்பா அம்மா தாத்தா பாட்டி அனைவரும் என்னைப் போலில்லையே. நான் மட்டும் ஏன் கறுப்பாய்க் குட்டையாய் குண்டாய் சப்பைமூக்காய் இருக்கிறேன் என யோசனையாய் நிமிர்ந்து பார்த்தவள் கண்ணுக்குள் பிரம்மனின் உதடு அசைந்தது.

ஷார்ஜாவின் கார்னிஷ் – ஒரு இளமாலை நடைப்பயிற்சிஷார்ஜா சென்றிருந்தபோது என்னைக் கவர்ந்த இடங்களில் முக்கியமானது கார்னிஷ். புல்வெளிகள் நிறைந்து பேரீச்சை மரங்கள் அணிவகுக்கும் இந்த இடம் காலையிலும் மாலையிலும் காத்தாட சுகமானது.அழகான பார்க். நிறைய பெஞ்சுகள் போடப்பட்டு விளக்கொளியில் ஜொலிக்கும் கட்டிடங்கள் என பார்வைக்கும் மனதுக்கும் இதமான இடம். 


இந்த கார்னிஷ் ரோட்டில் நிதானமாக வாக்கிங் செல்லலாம். கார்பார்க்கிங் கிடைப்பதுதான் தாமதமாகும். 

மரபும் அறிவியலும் :- முளைப்பாரி.மரபும் அறிவியலும் :- முளைப்பாரி.   

உழவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது கிராமங்களும் சிறு நகரங்களும் இன்றும் பண்பாடும் பழமையும் மாறாமல் கொண்டாடும் திருவிழாக்களில் முளைப்பாரியும் மதுக்குடமும் பெரும்பங்கு வகிக்கின்றன. வேளாண் தொழில் செழித்து வளரவும் பயிர்பச்சைகள் பல்கிப் பரவவும் முளைப்பாரி எடுத்தல் பெரும் பங்கு வகிக்கிறது.

- இக்கட்டுரை அமேசான் கிண்டிலில் வெளியாகி உள்ள எனது ”மஞ்சளும் குங்குமமும் - மரபும் அறிவியலும் “  என்ற நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கிருந்து எடுத்துவிட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன் மக்காஸ் :)  
ஞாயிறு, 21 மே, 2017

தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி. சீதா தேனப்பன்.


தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி. சீதா தேனப்பன்


வெப்சைட் மூலமா வெற்றிகரமா மசாலா விற்க முடியுமா.? அதுவும் இங்க இல்ல ஐக்கிய பிரிட்டன் ராஜ்யத்தின் எரித் என்னும் இடத்திலிருந்து ..! வித்யாசமா வடிவமைச்சுக் கொடுத்தா, தரமா இருந்தா, தாராளமா விற்க முடியும் என்கிறார் திருமதி சீதா தேனப்பன். ! அறுபட்டைக் கண்ணாடிச் சாடிகளில் அணிவகுக்கும் மசாலாக்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. பார்க்கும்போதே அவற்றின் மணமும் சுவையும் நாசியையும் சுவை மொட்டுக்களையும் ருசிகரமாகத் தாக்குகின்றன.

மெரினா பீச்சில் தண்ணீர்.!!!மெரினா பீச்சில் கொஞ்சம் காத்து வாங்குவோம். 

தம்பி பிள்ளைகள் சம்மர் லீவுக்கு வந்திருந்தார்கள். இந்தக் காலத்தில் லீவுக்கு அத்தை சித்தப்பா பெரியப்பா வீட்டுக்குச் செல்லும் பிள்ளைகள் குறைவு. அத்தையிடம் ( என்னிடம் ) தம்பி பெண் கோலம் , பூத்தொடுப்பது போன்றவை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தம்பியின் கட்டளை ( மகளுக்கு J ) சமையல் கற்றுக் கொள்ள நாள் இருக்கிறதே. ஆனாலும் தோசை அழகாக ஊற்றுவாள். 

வீட்டில் சோஃபாவின் இருபக்கக் கைப்பிடிகளும் இருவருக்கு விதிக்கப்பட்டது. மாறி அமர்ந்தால் நாம் பஞ்சாயத்துத் தலைவராக அவதாரம் எடுக்க வேண்டிவரும். ( நம்ம ரெண்டு பசங்களுக்கும் அவதாரம் எடுத்தது மறக்கலைல J ) இப்ப புனர் ஜென்மம். 

எவ்ளோ நேரம்தான் கார்ட்டூன் நெட்வொர்க்கையே ( நாமளும் ! )  பார்ப்பது. J அதான் வாங்கடா என்று பீச்சுக்குக் கூட்டிச் சென்றேன். துபாயில் காரிலேயே பயணித்திருந்தாலும் இங்கே பஸ்ஸில் சமர்த்தாக .
வந்தார்கள். பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டிலும் செல்ல குழந்தைகளைப் பழக்கலாம் என்று எண்ணம். இந்தியாவுக்கு மேல்படிப்புப் படிக்க வந்தால் எல்லாவற்றிலும் பயணம் செய்யப் பழகித்தானே ஆகணும் J

சேட்டையா கிலோ என்ன விலை என்று பால் வடியும் இந்தப் பூக்குட்டிகளுடன் மெரினா பீச்சில் சுகமாகக் காத்து வாங்கி கோன் ஐஸ் சாப்பிட்டு, அலையில் விழுந்து, பலூன் சுட்டு, பாலைச் சுத்தி விளையாடி வந்தோம். பஜ்ஜி கேட்கவே இல்லை பசங்க. ’என்ன எண்ணையோ’ என்று நானும் நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். குழந்தைகளைக் கூட்டிச் செல்வதால் வீட்டிலிருந்து சுண்டல் செய்துகொண்டு போயிருந்தேன். ஆனாலும் அந்தப் பேப்பர் வாடையோடு சுண்டல் சாப்பிடும் சுவை மிஸ்ஸிங் J
 
இனி கொஞ்சமென்ன நிறையவே காத்து வாங்குவோம் வாங்க J  

வெய்யில் கொளுத்தி எடுக்குது. தண்ணீர் தண்ணீர்னு மக்கள் குடத்தோட  
அலையிறாங்க. இங்க கடல் நிறையத் தண்ணீரும் ஆளைக் குளிர்விக்கும் அலையும் இருக்கே. கொஞ்சம் கடலாடலாம் J


நாங்க ரொம்பச் சமத்தாக்கும் Jஐஸ்ஸ்ஸ் ஜில்லுங்குது J


சனி, 20 மே, 2017

பிரிவின் வெறுமையும் காலிக்குடங்களும்

1401. Laughter is a tranquilizer with upside effects

1402. அஞ்ஞாதவாசம் ரொம்பக் கஷ்டம்பா :)

1403. குடிசையைக் காலி பண்ணிவிடலாமென நினைக்கும்போது ஒட்டடை அடித்துவிரட்டிவிடுகிறார்கள்

-- புலம்பல் பை பட்டகாலிலேயே ஒட்டடைக் கம்பு பட்ட எட்டுக்கால் பூச்சி. :) :)

1404. யாரை நம்பி யாருமில்லை.. போங்கப்பா போங்க :)

1405. ஒரு பிரிவு
துக்கத்தைத் தரலாம்
வேதனையைத் தரலாம்
வருத்தத்தைத் தரலாம்
விரக்தியைத் தரலாம்
ஆனால் வெறுமையைத் தந்திருக்கிறது.

சாட்டர்டே ஜாலி கார்னர். துளசி கோபால் நடத்திய ஒரு கிவி இந்தியன் கல்யாணம் !

 துளசி கோபால் . கிட்டத்தட்ட 2009 இல் இருந்து என் தோழி. வேறென்ன புதுசா சொல்ல. :)

இவள் புதியவள், சூரியக் கதிர், லேடீஸ் ஸ்பெஷல் ஆகியவற்றில் எழுதிக்கிட்டு இருந்தோம். துளசிக்கும் கோபாலுக்கும் நடந்த சஷ்டியப்த பூர்த்திக்குத்தான் போக முடியலைன்னா அவங்க பொண்ணு கல்யாணத்துக்கும் போக முடில. ஏன்னா அது கிவில இல்ல நடந்துச்சு :)(துளசி பொண்ணு கல்யாணம்னா நம்ம பொண்ணு கல்யாணம் மாதிரிதானே. அதான் ஒரு நாள் பூரா கொண்டாடலாம்னு மிட்நைட்ல போஸ்ட் போட்டுருக்கேன். வாங்க அவங்க கூடவே போய் கொண்டாடுவோம். )


சரி அந்த சுவாரசியமான அனுபவங்களை நாம படிச்சாவது அனுபவிப்போம்னு எழுதித்தரச் சொன்னேன். உடனே அவங்க வாஷிங்க்டனில் திருமணம் மாதிரி எழுதி அனுப்பிட்டாங்க. அவ்ளோ பெரிசு மட்டுமில்ல . செம ஹியூமரும் கூட. நான் சிரிச்சு ரசிச்சத. நீங்களும் ரசிங்க :)/////அன்புள்ள தேனே,

நலமா?

இப்பதான் எழுத உக்கார்ந்தேன். துளசியின் வழக்கபடி மஹாபாரதமாப் போகுது.

இதுவரை எழுதியது இப்போ இங்கே அனுப்பறேன். பார்த்துட்டுச் சொல்லுங்க. ஓக்கேன்னா எழுதி முடிச்சுடறேன்!!!!!!!!
================================================

 கல்யாணம்...  ஹஹஹ  கல்யாணம்

மகளும் நண்பனும் கல்யாணம் கட்டிக்க முடிவு செஞ்சுட்டாங்க. என்ன மகளே.... உன் கல்யாண நிச்சயம் ஆனதைக் கொண்டாட வேணாமா? 

அதெல்லாம் எதுக்கு?  நாங்க கல்யாணத்துக்குப் பணம் சேர்க்கவேணாமா?

ஓஹ்.... அப்படியா?  எங்க இந்திய வழக்கப்படி கல்யாண நிச்சயதார்த்தமே ஒரு சின்னச் சடங்கா செய்றதுதான் வழக்கம்.  இங்கெதான் அப்படி ஒன்னுமில்லையே :-)  ஒன்னு வேணாச் செய்யலாம்.... உங்க கல்யாணம் கட்டிக்கப்போகும் முடிவை நம்ம நண்பர்களுக்கு அறிவிச்சு ஒரு சின்ன பார்ட்டி வச்சுக்கலாமா? 

மகளும் வரப்போற மாப்பிள்ளையுமாக் கொஞ்சம் யோசனையில் இருந்தாங்க. அப்பா அம்மா தரும்  பார்ட்டின்னு வச்சுக்குங்களேன்!  
சரின்னு முடிவாச்சு.  ஏற்பாடுகளையெல்லாம் மகளையே செய்யச் சொல்லியாச்சு. பொண்ணு வீட்டில் இருந்து அஞ்சு பேர், மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒரு பத்து பேர்,  பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்குமான  நண்பர்கள் கூட்டம் இப்படி விழா நடந்தது மே மாதம் 2016 ஆம் ஆண்டு. 

மகளும் வரப்போகும் மருமகனுமா கேக் வெட்டி ஒரு கொண்டாட்டம். என்ன கேக்காம்?  வெல்வெட் கேக்!  ஆஹா.... அப்டிப்போடு! 

வெள்ளி, 19 மே, 2017

கவிதைப் பட்டறை - சில ஆளுமைகள் - சில புகைப்படங்கள்.

கவிதைப் பட்டறை -சில ஆளுமைகள் - சில புகைப்படங்கள்.தமிழ்நாடு இயல் இசை   நாடக மன்றத்தில் நடந்த கவிதைப் பட்டறை நிகழ்வில் ஃபிப் 28 , 2011 அன்று கலந்து கொண்டேன்

ழ கஃபே - முதல் பதிவர் சந்திப்பு - சில புகைப்படங்கள்.


2011 இல் ழ கஃபேயில் நடந்த முதல் பதிவர் சந்திப்பின் ( ஃப்ரெண்ட்லி மீட் ) சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.
ஜாக்கி சேகர், பபாஷா, மணிஜி, அதியமான்.
நான், ஈஸ்வரி ரகு, ரம்யா, வித்யா, அகநாழிகை பொன் வாசுதேவன்.


அஹா என்னா அழகான சிரிப்பு ஈஸ்வரி.. :)


வியாழன், 18 மே, 2017

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் இன்று என் முதல் மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஆறாவது நூல் ) “பெண்மொழி” வெளியாகி உள்ளது. இது ஆஸ்த்ரேலிய மெல்லினத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. பக்கங்கள் - 309.
விலை ரூ 150/-/ $3.99
http://www.pustaka.co.in/home/ebook/tamil/penmozhi 

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.


பெண்கள் பற்றி, பெண்கள் கையாளவேண்டிய சூழ்நிலைகள் பற்றி , அவர்கள் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி, பேதை பெதும்பை முதல் பேரிளம் பெண்வரையான பெண்களின் எழுச்சி முன்னேற்றம் பற்றிக் கூறும் நூல் இது. இயல்பாய் ஒன்றிக் கலக்கப் பேச்சு நடையில் எழுதி இருக்கிறேன்.

நூற்றாண்டும் நாற்பதாண்டும்.காரைக்குடியில் இருக்கும் இந்து மதாபிமான சங்கத்தின் நிருவாக சபைக் கூட்டத்தின் அழைப்பு அம்மா வீட்டில் யதேச்சையாகக் கையில் கிடைத்தது. நூற்றாண்டுகள் கடந்த இச்சங்கம் இன்றும் செயல்பட்டு வருகிறது. 

புதன், 17 மே, 2017

காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.கிருஷ்ணலீலையைப் படமாக வரைந்து வைத்திருக்கிறார்கள். பல்வேறு ஆண்டுகள் பராமரிப்பு இன்மையால் பூட்டிய வீட்டின் அறைகளுக்குள் எல்லாம் காரை பிடித்துப் போய்க் கிடக்கின்றன. 
கிருஷ்ணனின் ராசலீலை ஓவியங்களில் நான்குதான் தேறியது.

செவ்வாய், 16 மே, 2017

கொளுத்தும் வெய்யிலில் ஹொகனேக்கலில் ஒரு குளு குளு குளியல்அடிச்சுப் பெய்ற மழை மாதிரி அடிச்சு ஆடுது வெய்யில். யம்மா வெளியே போயிட்டு வந்தா சுக்கா உலர்ந்து போயிடுறோம். கொஞ்ச நஞ்ச வெய்யிலா நெசம்மாவே கருவாடுதான். வேனல்கட்டி, வேர்க்குரு எல்லாம் படை எடுத்து எரிய ஆரம்பிச்சது போக இப்ப எல்லாம் டைரக்டா இருப்புச் சட்டி வதக்கல்தான் போடுது வெய்யில். 

சுருண்ட தக்காளிப்பழம் மாதிரி வெய்யிலை வெறிச்சிக்கிட்டு வீட்ல உக்கார்ந்திருந்தபோது ( ஏன் மழையை மட்டும்தான் வேடிக்கை பார்க்கணுமா என்ன J ) போன வருஷம் போன ஹொகனேக்கல் ஞாபகம் வந்துச்சு. அப்ப அங்க எண்ணெய்க் குளியல் போட்டு மீன்குழம்பு வறுவல் எல்லாம் வைச்சு தலைவாழை இலையில் சுட சுட சாப்பிட்ட ஞாபகம் வந்தது. ஞாபகச்சூடு ஆறுறதுக்குள்ள எடுத்தேன் ஃபோட்டோ ஆல்பத்தை. ,போட்டேன் ப்லாகில் உடனே. J


போய் ஒரு ரவுண்ட் அடிச்சுக் குளிச்சிட்டு வரலாம்போல இருந்தது.

ஆனா எம்மாந்தூரம். சோ நினைவலையில் ஒரு குளு குளு உலா

கௌரிகங்கா & ரங்கவிலாஸ் டிஃபன்.கௌரிகங்கா & ரங்கவிலாஸ் டிஃபன்.

நல்ல டிஃபனை நிறைவு செய்வதே நல்ல காஃபிதான்.  
 

பொள்ளாச்சியிலிருக்கும் கௌரிகங்காவுக்கு பல ஊர்களில் கிளைகள் இருக்கின்றன. ஆனால் அங்கே கிடைக்கும் காஃபிபோல் ருசியாக எங்குமே இல்லை. நல்ல பசுமாட்டுப் பாலில் டிக்காக்‌ஷனை அப்படியே விட்டு லேசாக சீனி போட்டு ஆற்றிப் பதமாகக் குடிக்கும் சுவை ( ஒரு படத்தில் விசு சொல்வது போல ) எங்குமே இல்லை. இந்த கும்பகோணம் டிகிரி காஃபி என்று ஹைவேஸில் பத்தடிக்கு ஒரு கடை வீதம் இருக்கின்றன. தப்பித்தவறி உள்ளே போனோம் என்றால் அது சிக்ரியை ( 60:40 ) விகிதத்தில் கலந்த காஃபியாக நாக்கைவிட்டு நாலுமணி நேரம் ஆனாலும் போகாமல் உமட்டும்.

திங்கள், 15 மே, 2017

பாகுபலி – 2 BAHUBALI – 2 REVIEW. இது ’இராஜ’ மௌலியின் காலம்.பாகுபலி – 2  BAHUBALI – 2 REVIEW.

ரொம்ப ரொம்ப அழகான காதல் கதை என முதல் பகுதியின் ஒரு பாட்டை எதேச்சையா பார்த்துட்டுப் போனா திரை பூரா ஒரே அரசியல் நெடி. அதுதான் பாகுபலி -2. 

இராஜமாதா சிவகாமியும் தேவசேனாவும் மனசுல நிரம்பி இருக்காங்க. யப்பா என்னா கம்பீரம். சான்ஸே இல்லை. முன்னே எல்லாம் எனக்குக் கம்பீரமான பெண்கள் என்றால் முதலில் பானுமதிதான் தோன்றுவார். இந்தப் படம் பார்த்த பின்னாடி ரம்யாகிருஷ்ணனும், அனுஷ்காவும் அந்த இடத்துக்குப் போட்டி போடுறாங்க!

சனி, 13 மே, 2017

சாட்டர்டே போஸ்ட், பாரீசில் நடப்பது கதையல்ல நிஜம் - நலந்தா திரு செம்புலிங்கம்

நண்பர் நலந்தா  நலந்தா செம்புலிங்கம் ஒரு ஆசு கவி. இன்றைய ட்ரெண்டிங்குக்கு ஏற்றாற்போல் அவர் எழுதி இருக்கும் இக்கவிதை வித்தியாசமான ஒன்று

 திரு செம்புலிங்கம் அவர்களின் கவிதையை சாட்டர்டே போஸ்டில் பகிர்வதில் மகிழ்கிறேன்  
பாரீசில் நடப்பது
கதையல்ல நிஜம்
-நலந்தா செம்புலிங்கம்

---------------------------------

உலகம் கழுத்தொடிய
பிரான்சு நாட்டைத்
திரும்பிப் பாா்க்கிறது !
புதிய அதிபாின் புண்ணியத்தால் !

Related Posts Plugin for WordPress, Blogger...