நகுலன் தேர்ந்தெடுத்த
சிறுகதைகள் – ஒரு பார்வை.
பூமிச்செல்வம்
அவர்கள் நகுலனின் 16 கதைகளைத் தேர்ந்தெடுத்து நேர்த்தியாக அளித்துள்ளார். நகுலனின்
கதைகளில் நாம் ஆத்ம தரிசனத்தை அடையலாம். இயற்கையின் மீதான காதல், சுசீலா என்ற அரூப
ரூபத்தின் மேலுள்ள ப்ரேமை, தனிமை, உள்நிறைவுடன் விலகி இருத்தல், குதியாட்டம்போடும்
மனது, மன விசாரங்கள், பிரமை அல்லது சித்தப் ப்ரமை எனக் குறிக்கப்படும் விஷயம் குறித்தான
விவாதம், வாழ்க்கையை அதன் போக்கில் கடந்து செல்லும் ஞானம், வெறுமே அமர்ந்து மரத்தைக்
காணும் காற்றை உணரும் மனம் எனக் கலவையாக இருக்கிறார் நகுலன்.
தெருவின் கதை ஆத்மவிஞ்ஞாபனம். சவப்பெட்டி தயாரிப்பவன் அதற்கும் சலுகைகள் கொடுப்பதும் ஏமாந்துவிடாமல் இருக்கச் சொல்வதுமான இவரது எள்ளல் பிடித்திருந்தது. சிதம்பர ரகசியத்தை யாரும் தெரிந்து கொள்வதில்லை. ஏனெனில் திரை விலகுவதில்லை என முத்தாய்ப்பாகக் கூறுகிறார். உண்மைதான் இல்லாவிட்டால் கோடீஸ்வரனோ, தெருவில் நிற்பவனோ இவ்வளவு பாடுகளும் ஏது ?