எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 ஜூலை, 2020

விதுரநகரா என்ற மஹமூதாபாத் என்ற பிதார்.

கர்நாடகாவில் அமைந்துள்ள கவின்மிகு கோட்டைகளுள் ஒன்று பிதார். ஹைதையிலிருந்து 130 கிமீ தூரத்திலும் குல்பர்காவிலிருந்து 116 கிமீ தூரத்திலும் உள்ளது. பஹாமனி மன்னர்களின் ஆட்சியில் செழித்துத் தழைத்தோங்கிய கோட்டை இது. சுல்தான் அஹமது வால் என்பவரால் பதினாலாம் நூற்றாண்டில் தக்காணப்பீடபூமியில் கட்டப்பட்டது இக்கோட்டை.  17 ஆம் நூற்றாண்டில் அஹமது ஷா பஹாமனி என்ற அரசர்தான் இதை விரிவுபடுத்தியவர்.

இதுபற்றிப் பல்வேறு இடுகைகள் வெளியிட்டுள்ளேன். 5.5 கிமீ சுற்றளவு உள்ள மதிலால் சூழப்பட்டது இக்கோட்டை.  சிதைந்த கோட்டையே பொக்கிஷம் என்றால் முழுமையான கோட்டை எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் !.

பாரசீக இஸ்லாமியக் கட்டிடக் கலையின் உச்சம் இக்கோட்டை.சோலா கம்பா மாஸ்க், தாரகேஷ் மஹால், முகல் கார்டன், கல்வீணை, ஏழு வாயில்கள், எண்ணற்ற சுரங்கங்கள் , கரேஸ் என்ற நீர்வரத்து முறை கொண்டது இக்கோட்டை. 15 ஆம் 16 ஆம் நூற்றாண்டுகளில் செழித்துக் கிடந்ததுதான் இன்று சிதைந்திருக்கும் இக்கோட்டை.

மஹமூதாபாத் என்று பஹாமனி சுல்தான்களின் காலத்தில் பெயர்பெற்ற இந்நகரம் மகாபாரதத்தில் விதுரர் இங்கே வாழ்ந்ததால் விதுரநகரா எனப் பெயர் பெற்றிருக்கிறது.  ராஜ பீமா மன்னரின் மகளான தமயந்தியும் நளனும் கூட இங்கேதான் சந்தித்துக் கொண்டார்கள் என்று இன்னொரு கதை சொல்கிறது. பித்ரி வேலைப்பாடுகள் என்று சொல்லப்படக்கூடிய உலோகச் சித்திரக் கைவேலைப்பாடுகள் இங்கே ஸ்பெஷல் என்பதால் இந்நகரம் பிதார் என்று அழைக்கப்படுகிறது. !



ரங்கீன் மஹால்( வண்ணக் கலைக்கூடம் ) , தக்த் மஹால் ( அரசதர்பார் - சிம்மாசனம் இருக்குமிடம் ) , ஜாமி மஸ்ஜித் ( பெரிய மசூதி ) , சோலா கம்ப் மஸ்ஜித் ( பதினாறு தூண் மசூதி ), தாரகேஷ் மஹால் ( சுல்தானின் துருக்கிய மனைவிக்காகக் கட்டப்பட்ட ஆடம்பர மாளிகை ) , ககன் மஹால் ( வானளாவிய மாளிகை/சொர்க்க மாளிகை ) , ஷாஹி மத்பக் ( அரசாங்க சமையலறை) , நௌபத் கானா ( சாப்பாட்டு ஹால்)  , திவான் இ அம் ( பொதுமக்கள் அமரும் சபை)  ஆகியன இங்கே உள்ளன.

சோலா கம்ப் மாஸ்கைச் சுற்றிச் செல்லவேண்டும் பிதார் கோட்டை முழுமையும் பார்க்க.

சிக் சாக் வடிவில் அமைக்கப்பட்டவை இக்கோட்டை வாயில்கள். இது மெயின் தர்வாஜா

இதன் மதில்களில் 3000 வீரர்கள் வரை நின்று காவல் காக்க முடியுமாம் !

ஏழு தர்வாஜாக்கள் உள்ள கோட்டை இது ஒன்றுதான். அவற்றில் சில சார்ஸா தர்வாஜா,  கும்பத் தர்வாஜா. இங்கிருந்து ஆறு ரகசிய வழிகளில் கோட்டையை விட்டு வெளியேற முடியுமாம். ( சுரங்கப்பாதை அமைப்பு ! ) மண்டூ தர்வாஜாவிற்கருகில்தான் நிலத்தடி நீர் வரத்து முறையான காரேஸ் அமைப்பு உள்ளது.





மூடுமந்திரக் கோட்டைகள். கோட்டைக்குள் கோட்டைகள். :)


சார்நிலைக் கருவூலம் அல்லது கஜானா அல்லது தானியக் களஞ்சியமாக இருக்கலாம்.



இதே போன்ற துண்டு துண்டான அமைப்புகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.


தூரத்தே பாருங்க டைனோஸர் முதுகு எலும்பு போல் முள்ளு முள்ளாய் மதில் சுவர் தெரிகிறது.

கோட்டைக்குப் பக்கவாட்டில் வேறு ஏதோ இடத்துக்குச் செல்லும் பாதை.

துண்டு துண்டாய்ச் சிதைந்த மஹல்கள்.



ஒவ்வொரு படத்தையும்பெரிது படுத்திப்பார்த்தீர்கள் என்றால் இதன் பிரம்மாண்டம் புரியும்.


ஏதோ ஆஸ்ரமம் டைப்பில் புதுக் கட்டிடங்கள். மேலே அஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டுத் தற்காலிகத் தங்குமிடங்கள் மாதிரித் தோற்றம் அளிக்கின்றன.



தூரத்தே காபா டைப்பில் ஒரு ரவுண்ட் கோட்டை.

அதுவே க்ளோஸப்பில்

பீரங்கி வைக்கப் பயன்பட்ட பாஸ்டியன்ஸாக இருக்குமோ !!!

காரைக்குடியின் வீடுகளை இன்றளவும் தாங்குகின்றன செம்புராங்கற்கள். இந்த செம்புராங்கற்கள்  என்ற லேட்டரைட் பாறைக்கற்களால் கோட்டை கட்டப்பட்டிருப்பதால் மண்ணில் இறங்குவதே இல்லை.

இக்கல்லில் இரும்பும் அலுமினியமும் அதிக அளவில் உள்ளது எனவே இரும்பைப் போல உறுதியானது. அடித்தளத்துக்கு ஏற்றது.


அரசவை மாதிரி இருந்த ஹால் ஒன்றிலிருந்து நகரம்.


எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் மதிலைப் பாருங்கள்.

அது பாட்டுக்கு பரமபதப் பாம்பு போல் சுற்றிக் கொண்டே திரிகிறது.

படத்தைப் பெரிதாக்கினால் உள்ளே வயல்களும் நீர் நிலைகளும் பாதைகளும் தெரியும். ஆங்காங்கே லாரி போன்றவை ஒடுவது கூடத் தெரிகிறது. !




விதுரநகரா என்ற மஹமூதாபாத் என்ற பிதாரை மதிய வெய்யிலில் இவ்விதமாகக் கால்வலிக்க வலிக்கச் சுற்றிப் பார்த்தோம். :) 

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. பிதார் கோட்டையும் 16 தூண் மசூதியும். ( BIDAR FORT AND SOLAH KAMBAH MOSQUE

2. பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில். 

3.  ஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்.

4.  குருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்

5.  பிதார் கோட்டையில் கல்வீணை ?! 

6. பிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிகள்.

7. ஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட்டை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...