எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜூன், 2014

பென்னிங்க்டன் லைப்ரரியில் அன்ன பட்சி.

ஸ்ரீவில்லிப் புத்தூரில் பென்னிங்க்டன் லைப்ரரி இருக்கிறது. அங்கே என் நூல் அன்ன பட்சி இருக்கிறது. நான் வட மாநிலங்களில் ஒன்றில் இருக்க என் நூலைப் படிப்பதற்காக என் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு ரத்னவேல் ஐயா அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

அவர்கள் அதைப் படித்ததோடு மட்டுமல்ல. இன்னும் சிலருக்கும் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் பென்னிங்க்டன் லைப்ரரிக்கும் என் பெயர் போட்டுக் கடிதம் எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து என் பெயர் போட்டு ஒரு கடிதத்தின் நகலும் அதைப் பெற்றுக் கொண்டதற்கான கடிதமும். ஒரு பாராட்டுப் பத்திரமும் வந்தது.

தான் படித்ததோடு மட்டுமல்லாமல் அதை நூலகத்துக்கும் வழங்கி அன்னபட்சியைச் சிறப்பித்து இருக்கிறார் ரத்னவேல் ஐயா. மேலும் பென்னிங்க்டன் லைப்ரரிக்காரர்களும் அதை வாங்கி முத்திரையிட்டு எனக்குக் கடிதமும் ( என் சார்பாக ஐயா எழுதிக் கொடுத்ததற்குப் பதில் கடிதம் ) கொடுத்து பாராட்டுப் பத்திரமும் போஸ்ட் மூலமாக அனுப்பி இருந்தார்கள்.

சனி, 28 ஜூன், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், இசை, அரசியல், ஆன்மீகம் பற்றி எல் கே.


வலையுலகம் வந்த புதிதில் கார்த்திக்கின் பாகீரதி, கவிச்சோலை படித்ததுப் பின்னூட்டமிட்டதுண்டு. அவரும் என் இடுகைகளில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக ஃபைன், சூப்பர் என்று மினி கமெண்ட்ஸ் போடுவார். :)

2010 லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்காகக் கேட்டபோது ஒரு கவிதை அனுப்பி வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரமானது. அதன் பின் இவள் புதியவளில் திருமண ஸ்பெஷலுக்காகக் கேட்டபோது புகைப்படத்துடன் அனுப்பி வைத்தார்.

வெள்ளி, 27 ஜூன், 2014

சிகரம் ஃபைனல் ஸ்கிரிப்ட்.

இதுதான் ஃபைனல் ஸ்க்ரிப்ட் :-

சிகரம். ஸ்க்ரிப்ட்.:-
******************************

சீன் :- 1
************

காரெக்டர்ஸ் :-
**********************

1. பெண்ணின் அப்பா

2. அவரின் நண்பர்.

3. பெண்ணின் அம்மா.

லொகேஷன்-
*******************

புதன், 25 ஜூன், 2014

சிகரம் ஸ்க்ரிப்ட் தீம்ஸ் டயலாக்ஸ்.


கான்செப்ட்.
சிகரம் மாட்ரிமோனியல்
சிகரம் டூர்ஸ் & ட்ராவல்ஸ்.
சிகரம் ஆன்லைன் ஷாப்பிங்
சிகரம் ப்ராப்பர்டி
சிகரம் கிஃப்ட்ஸ்
இது சம்பந்தமான விளம்பர வாசகங்கள்.

திங்கள், 23 ஜூன், 2014

பாசங்கள் பலவிதம் (அ) பகைவனுக்கருள்வாய்..

பாசங்கள் பலவிதம் (அ) பகைவனுக்கருள்வாய்..
*******************************************************************************
( பகவான் மகாவீர் அகிம்சா சங்கத்தின் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. )

கருணாமூர்த்தி துடித்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் கண்ணீரும் கம்பலையுமாக அவன் மனைவி சாந்தி. அவர்களது செல்வக் குழந்தை – மூன்று மாதமே நிரம்பிய அருணை அந்தப் பெரிய ஆண்குரங்கு தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வேலைக்காரர்களுக்குக் கையும் காலும் செயல்படவில்லை. கருணாமூர்த்தியின் அப்பா குமரேசனோ புலம்பிக் கொண்டிருந்தார்.


பண்ணையாரான குமரேசன் தன் மகனுக்குக் கருணாமூர்த்தி என்று ஏந்தான் பெயர் வைத்தாரோ..சின்னப் பிள்ளையிலிருந்து அவனிடம் வளர்ந்ததெல்லாம் முரட்டுத்தனமும் விலங்குகளைச் சித்திரவதைப்படுத்துவதும்தானே தவிர கருணை அல்ல. தந்தையின் கண்டிப்பில் வாழ்ந்த அவனுக்குத் தாயின் அரவணைப்புக் கிட்டாததுதானோ என்னவோ..

சனி, 21 ஜூன், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், செல்வி சங்கரின் எண்ணச்சிறகுகள் முளைத்த கதை.

 ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்துக்குப் போனபோது சீனா சாரையும் செல்வி மேடத்தையும் சந்தித்தேன். ஒரே ஹோட்டலில் பக்கத்துப் பக்கத்து ரூமில் தங்கி இருந்தோம். ரொம்ப தன்மையானவங்க ரெண்டு பேரும் . அவ்வளவு அன்போடு பேசினாங்க. நிகழ்ச்சிக்கும் தாமோதர் சந்துரு அண்ணா ஏற்பாடு செய்திருந்த காரில் மண்டபத்துக்கு ஒன்றாகப் போனோம். வலைப்பதிவு குறித்தும் பதிவர் சந்திப்பு குறித்தும் உரையாடிக் கொண்டே போனோம்.  

பட்டறிவும் பாடமும், எண்ணச்சிறகுகள்னு இரண்டு வலைப்பதிவு எழுதுறாங்க  இவங்க. அதிலும் பாரதியார், இந்திராகாந்தி அம்மையார், திருக்குறள் பத்தின இடுகைகள் ரொம்பப் பிரமாதம். இதில் இவங்க பெண் பள்ளியில் பேசிப் பரிசு வாங்கினதும் இருக்கு. 2008 ல இவங்களோட பெண்ணோட குரல்ல பதிவு பண்ணி இருக்காங்க. 

இருவருமே பதிவர்கள். அதிலும் ஒரே வீட்டில் ஒரே துறை சார்ந்த இருவர் இருப்பது கடினம். ஆனா இவங்கள எழுத ஊக்குவிச்சதே சீனா சார்தானாம். அவங்ககிட்டயே அதுபத்திக் கேட்டேன். 


/// கணவர் வலைத்தளம் எழுதுறாங்க. ஆனா ஒரே வீட்டில் இருவர் வலைத்தளம் எழுதுவது சொற்பம்தான். எனக்குத் தெரிந்து இல்லை. ஆனால் யாரேனும் இருக்கலாம். உங்க வீட்டில் உங்க கணவர் பேர் பெற்ற ப்லாகரா இருக்கும்போது உங்களுக்கும் அதே துறையில் ஈடுபாடு வந்தது எப்படி. பெண்களுக்கு இது எந்த விதத்தில் உதவுதுன்னு சொல்லுங்க //

அன்பின் தேனம்மை லக்‌ஷ்மணன் 

வெள்ளி, 20 ஜூன், 2014

தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலயமணியும்.

161. பூங்காற்று திரும்புமா.
மனசை வருடும் பாட்டு. பாராட்ட , மடியில் வச்சு தாலாட்ட ஒரு தாய் மடி கேட்டு ஏங்கும் பாடல். ராதாவும் சிவாஜியும் பாடும் பாடல். முதல் மரியாதை படம். அன்பையும் காதலையும் தேடித் தேடி அலையும் வரிகள். 

162. ஆயர்பாடி மாளிகையில்
கண்ணதாசன் வரிகளில் கண்ணன் துயிலும் காட்சி விரிவது அழகு. என் ஆயா ஒரு முறை பட்டாலையில் என் ஐயா திண்டில் சாய்ந்து தூங்குவதைப் பற்றி இந்தப்  பாடலோடு குறிப்பிட்டார்கள். நினைக்கும்போதெல்லாம் திகைப்பாய் இருக்கும் கணவரைப் பற்றிப் பரிவோடு குறிப்பிடும் அளவு எவ்வளவு அன்பும் காதலும் இருந்திருக்க வேண்டும்.

163. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கல்லூரியில் ஃபோ(ல்)க் டான்ஸ் போட்டியில் ஆடியது மறக்க முடியுமா. டென்த் ப்ளஸ்டூ படிக்கும்போதே பக்கத்துவிட்டு பாமாக்கா மார்கழியில் பாவை நோன்பு இருப்பார்கள். என்னையும் சேர்த்துக் கொள்வார்கள். புகைப்படத்தில் இருக்கும் கிருஷ்ணரை நடுவில் வைத்து சுற்றிச் சுற்றி வருவோம். அதன் பின் கல்லூரியில் இந்தப் பாடலையும் மயங்கி மயங்கிப் பாடி ஆடி இருக்கிறோம். ஒவ்வொரு வரியும் மறக்காது . கண்ணன் மேல் அவ்வளவு காதல். :) // குளத்தில் மூழ்கி குளிக்கையில் கோவிந்தன் பெயரைச் சொன்னால் கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி. சேலை திருத்தும் போது சீரங்கன் பேரைச் சொன்னால் அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி.

வியாழன், 19 ஜூன், 2014

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை.

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு பற்றி 1953 இல் ஒரு புத்தகம் வந்துள்ளது. அதன் மறுபதிப்பு 2003 ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தில் மலர்ந்துள்ளது.

நாகநாட்டில் இருந்து காஞ்சீபுரம், காவிரிப் பூம்பட்டினம், சிதம்பரம் அதன் பின் பாண்டிநாடு என்று அவர்கள் வலசை வந்தது குறித்தும் அவர்கள் வணிகம், தெய்வ வழிபாடு, கொண்டுவிக்கப் போய் பொருளீட்டியது,தரும வட்டி வாங்கியது, சிவாலயங்கள் அமைத்தது, தருமமே குலதர்மமாகக் கொண்டது, வேத பாடசாலைகள், பசுமடங்கள் அமைத்தது, குளங்கள் வெட்டியது, அன்னதான மடங்கள் அமைத்தது, இறைத் தொண்டு  பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது

புதன், 18 ஜூன், 2014

என் முதல் புத்தக வெளியீடு பற்றி.. பரிவு இலக்கிய இதழில்

எழுத்து எனக்கு ஒரு முகம் கொடுத்தது. அதை என் புத்தக வெளியீடு அங்கீகரித்தது. அதனால் பத்ரிக்கைகள் , தொலைக்காட்சிகள், வானொலிகள் ,  சில சந்தர்ப்பங்களில் என்னிடமும் (  முக நூல் சர்ச்சைகள் பற்றியும், சாதனைப் பெண்கள் பற்றியும், சர்வதேச சினிமா பற்றியும் )  கருத்துக் கணிப்புக் கேட்டன.

ஒரு குடும்பத்தலைவியாய் இருந்து மத்திம வயதில் திரும்ப எழுத வந்து எனக்கான ஒரு இடத்தை வலைத்தளத்தில் பெற்றதே என்னுடைய கடின மற்றும் தொடர்ந்த உழைப்பின் பலனாகும். லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த நான் பேட்டி கண்ட போராடி ஜெயித்த பெண்களின் கதைகளைத் தொகுத்து  சாதனை அரசிகள் புத்தகமாக வெளியிட்டேன். என் அப்பா அம்மா பெயரில் பதிப்பித்தேன். மிக எளிதாக ஆரம்பித்த அந்த முயற்சி பலத்த அயற்சிகளுக்குப் பின் கடைசியில் மிக எளிதாக நிறைவேறியது.

என் புத்தகத்தில் இடம் பெற்ற அனைவரையும் ஒருங்கிணைத்துப் புத்தகத்தை அவர்கள் கையாலேயே வெளியிட எண்ணினேன். ஒருவரைச் சேர்த்தால் இன்னொருவரைக் கோர்க்க முடியவில்லை. நவம்பரில் முடிவான  புத்தகம் ஜனவரியில்தான் வெளிவந்தது. வெளியிட எண்ணிய நாளில் எல்லாம் ஏதோ ஒரு இடையூறு இருந்தது.

செவ்வாய், 17 ஜூன், 2014

சாதனை அரசிகள் பற்றி திரு நல்ல தம்பி அவர்கள்.



மதிப்பிற்குரிய தேனம்மை அவர்களுக்கு,
வணக்கம்..

நாம் தினம் வீதிகளில் பார்க்கும் முகங்கள்தான், அந்த முகங்களுக்குள்
எத்தனை வலிகள் , பயங்கள்., குறைகள்.அத்தனை தடங்கல்களையும் தாண்டி - ரம்யாதேவி என்ற ஃபீனிக்ஸ், மோகன சோமசுந்தரம் புற்றுநோய்ப்போராளி (A cancer warrior) , தலித் சமூதாய பெண்களுக்காக, அநாதரவாய் குரல் எழுப்பிய மணிமேகலை ரோட்டில் கிடப்பவருக்கு வாழ்வளிக்க தங்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியை ஒதுக்கிய சாருமதி, தமிழரசி, வெங்கடேசன், ஒன்பது பட்டம் நினைக்கவே பெருமிதம் கொள்ளச்செய்யும் ஆஸ்வின் ஸ்டாலின்,

திங்கள், 16 ஜூன், 2014

அடையாளம்.



அடையாளம்.:-
****************************
ராதா முழித்துக் கொண்டது. ரூமுக்குள் இருட்டு. ராதா உருவமில்லாமல் வார்த்தை துப்பியது. கையையும் காலையும் படுக்கையில் தொமால், தொமாலெனத் தூக்கிப் போட்டது. ‘என்ன அம்மா இன்னும் ஓடிவரக் காணோம்.?’

ராதா கட்டிலின் முழு விஸ்தீரணத்திற்கும் புரண்டது. ‘படாரெ’ன மண்டை தரையிடிக்க இசகுபிசகாகக் கட்டிலிலிருந்து கீழே விழுந்தது. வலது முழங்கைப் பக்கம் ஒரு ‘மளுக்’. காய்ங், மூய்ங் என்று கத்திக் கொண்டே இடதுகையால் தரையை அடித்தது. படுக்கை அறையிலிருந்து தம் தம்மென்று அதிர நடந்து சமையற்கட்டு சென்று இரும்பு உலக்கை கொண்டு வந்து தரையில் குத்திப் பேர்த்துக் கொண்டிருந்தது. ஸ்டீல் கட்டிலின் விளிம்பில் நாலு போட்டது.

உலக்கையைக் கடாசிவிட்டு வாசல் கதவை இழுத்தது. கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. அசுரபலத்தோடு இழுத்தும் வரவில்லை. ராதா தொண்டையைப் பிடுங்கிக் கொண்டு கத்தியது.

சனி, 14 ஜூன், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். கௌதமி வேம்புநாதன். ப்ளாக் கரெண்டும், சிவப்பு நெருப்பும்



சாட்டர்டே ஜாலி கார்னர். கௌதமி வேம்புநாதன். ப்ளாக் கரெண்டும், சிவப்பு நெருப்பும்,

ராஜிக்கா சென்னை வந்தபோது என் வீட்டுக்கு ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் வருவதாகக் கூறி ஃபோன் செய்தார். மதியம் வெய்யிலில் ஒரு பைக்கில் கணவருடன் ஜில் ஜிலென்று வந்திறங்கிய அந்த ஸ்பெஷல் கெஸ்ட் கௌதமி வேம்புநாதன்.  நிஜமாகவே அவர் ஸ்பெஷல்தான். முதல் பார்வையிலேயே ரொம்ப சிநேகபாவத்துடன் கைகோர்த்துப் புன்னகைத்து மனதுக்கு நெருக்கமாகிவிட்டார்.

வந்தவுடன் நான் பேச்சு வாக்கில் சாப்பிட்டவுடன் ஐஸ்க்ரீம் கொடுக்கணும்னு பையன்கிட்ட வாங்க சொன்னேன் அவன் வர லேட்டாகும் போலே இருக்குன்னு சொன்னேன். உடனே தன் கணவரை ஒரே ஒரு பார்வைதான் பார்த்தார்.அவர்  உடன் கிளம்பி கேகே நகரில் இருக்கும் ”க்ரீமி இன்”னில் ஒரு பெரிய பாக் ப்ளாக் கரண்ட் ஐஸ்க்ரீம் வாங்கி வந்துவிட்டார். இனிக்க இனிக்க வெய்யிலில் ஜில் ஜில்லென்று அனைவரும் இரண்டுமுறை ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம்.

வெள்ளி, 13 ஜூன், 2014

தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

151. மாயா மச்சேந்திரா.
மைக்கேல் ஜாக்சன் பாடல் பாணியில் ( REMEMBER THE TIME AND THRILLER ) எடுக்கப்பட்ட பாடல் காட்சி. மனீஷாவும் கமலும் அற்புதமாக நடனமாடுவார்கள்.

152. நிலவைக் கொண்டுவா.
வாலி படத்தில் அஜீத்தும் சிம்ரனும் ஆடிப் பாடும் காட்சி. தாளமிடவும் பாடவும் வைக்கும் பாடல். அஜீத் இளவரசனாகவும் சிம்ரன் இளவரசியாகவும் நம் கண்ணுக்குத் தெரிவது நிஜ அற்புதம்.

153. எனக்கொரு சினேகிதி சினேகிதி.
ப்ரியமானவளே படத்தில் விஜயும் சிம்ரனும் நடித்த காட்சி.சிம்ரன் எப்போதும் ஸ்லிம்ரந்தான். அனுராதா பட்வாலின் குரல் இனிமை. விஜயின் சிறு கண்கள் பேசுவதும் அழகு.

வியாழன், 12 ஜூன், 2014

நிலவு படைத்த நிலாச்சோறு.

நிலா என்றதும் சித்திரா பௌர்ணமியும் நிலாசோறும் கதைகளும் மலரும் நினைவுகளாக வருவதுண்டு. இருளும் நிலவும் அதன் பால் ஒளியும் இன்னும் கவிஞர்களுக்கு மயக்கம்தரும் பாடற்பொருட்கள்தாம். சித்ரா பௌர்ணமிக்காக பகலில் பூஜை செய்வார்கள். இங்கே இரவில் நிலவுக்குப் பூஜை செய்திருக்கிறார்கள்.

நமது பண்பாடு, கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக நிலாச்சோறு கொண் டாடும் நிகழ்வுகள், இன்று கிராமங்களிலும் மறந்து போன நிலையில், ஈரோட்டில் தாமோதர் அண்ணன் அவர்கள் வீட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அவர்கள் பேத்தி ஆராதனா ( என் ”ங்கா”வின் நாயகி ) என்ற நிலவு படைத்த நிலாச்சோறு நிகழ்வைப் பற்றி முகநூலில் படித்தேன். காரைக்குடிப் பக்கம் சித்திரா பௌர்ணமி விழா உண்டு. இந்த நிகழ்வில் தைமாதப் பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. வித்யாசமாக இருந்ததால் இதை என் வலைத்தளத்தில் பகிர்கிறேன்.

தாமோதர் சந்துரு அண்ணன் முகநூலில் பகிர்ந்ததை இங்கே பகிர்கிறேன். இது போன வருடம் நிகழ்ந்தது.

திங்கள், 9 ஜூன், 2014

இளம் குடிமகன்களும் குடிமகள்களும் :-

இளம் குடிமகன்களும் குடிமகள்களும் :-
 "மது லோகா " இது பெங்களூருவில் இருக்கும் ஒரு மதுபானக் கடை.. ஆணுக்குப் பெண் சளைத்தவரில்லை எனக் காட்ட இங்கே இரு பாலாரும் மதுப் புட்டிகளைக் க்யூவில் சரிசமமான அளவில் நின்று வாங்கும் கண் கொள்ளாக்காட்சியைக் காணலாம். பெற்றவர்கள் பிள்ளைகளைப் படிக்கவும் வேலை செய்யவும் அனுப்பி வைக்க அவர்கள் இங்கே வெளிநாட்டுக் கலாச்சாரப்படி உடை உடுத்தி வெளிநாட்டுப் பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் குளிரான க்ளைமேட்டுக்காகக் குடிக்கிறார்கள்

சனி, 7 ஜூன், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். கிரிக்கெட் அன்றும் இன்றும் என்றும். ஸ்ரீராம் பாலசுப்ரமண்யம்.


 வலையுலகம் வந்த சில நாட்களில் எங்கள் ப்லாகிலிருந்தும் ஸ்ரீராம் என்ற பெயரிலும் பின்னூட்டம் வரும்.டிசம்பர் 2009 இல் இருந்து இன்று வரை அநேகப் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டவர் ஸ்ரீராம். கிட்டத்தட்ட 230 பின்னூட்டங்கள். அடேங்கப்பா.. கிட்டத்தட்ட 5 வருடங்கள். ! இந்த மாதிரி அவர் இட்ட பின்னூட்டங்களில் என்னால் மறக்கமுடியாதது ஆற்றைக் கடப்போம் ஆற்றலோடு கடப்போம் இதுக்குப் போட்ட பின்னூட்டம்தான்.

///நாடகம் மனதில் எழுப்பிய தாக்கத்தை எழுத்துகளில் கொண்டு வந்து விட்டீர்கள். சமீபத்தில் நண்பர் ஒருவருடன் ஒரு சிறு பிணக்கு. காரணம் அவர் சொன்னார் 'ராமன் வாழ்வைப் பின்பற்ற வேண்டும், கண்ணன் சொன்னதைப் பின் பற்ற வேண்டும்' என்று. 'ராமன் வாழ்வைப் பின் பற்ற வேண்டுமென்றால் மனைவியைத் தீக் குளிக்கச் சொல்ல வேண்டும், வண்ணான் பேச்சைக் கேட்டு வெளியில் அனுப்ப வேண்டும்' என்றேன். அதில் ஆரம்பித்த வாக்கு வாதம் சிறு பிணக்கில்!

வெள்ளி, 6 ஜூன், 2014

தேன் பாடல்கள் யமுனையும் ஓடமும்.

141. மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு.

பாரதியும் எம்ஜியாரும் பாடும் பாடல் காட்சி. எம்ஜியார் படங்களில் பாடல் காட்சிகள் அதுவும் டூயட்டுகள் பிரம்மாண்டமான செட்டுகளோடு படமாக்கப்பட்டிருக்கும்.  படம் அன்னமிட்ட கை.

142. திரும்பி வா. அழகே திரும்பி வா

நாடோடி படத்தில்  எம்ஜியாரும் சரோஜா தேவியும் பாடும் பாடல். திரும்பி வா ஒளியே திரும்பி வா விரும்பி வா என்னை விரும்பி வா என்ற வரிகள் அழகு. இளையவர்களைப் போல குறும்பு ஆட்டம் போடுவதில் வல்லவர் எம்ஜியார்.

143. மன்மத மாசம்.

லாரன்ஸின் ஃபாஸ்ட் டான்ஸ். விந்தியாவும் நன்கு நடனமாடி இருப்பார். பார்த்தாலே பரவசம் படம். மாதவன் தன் மனைவி சிம்ரனுக்கு இன்னொரு திருமணத்துக்கு மாப்பிளையைப் பார்க்க வந்து திருப்தியில்லாமல் உட்கார்ந்து இருப்பார்.

புதன், 4 ஜூன், 2014

அகநாழிகையின் அன்ன பட்சி அறிமுக நிகழ்வில் அன்புள்ளங்களின் வருகை.

அகநாழிகையில் அன்ன பட்சி அறிமுக நிகழ்வுக்குத் தோழி பரமேசுவரி திருநாவுக்கரசு ( எழுத்தாளர் கவிஞர், மபொசி அவர்களின் பேத்தி ), தோழி நாச்சிமகள் சுகந்தி ( அவள் விகடனில் பணி புரிகிறார். கவிஞர் ) , என் மாமா மகள் வள்ளிக்கண்ணு , ( எழுத்தாளர், விமர்சகர், என் மூன்று நூல்களையும் காரைக்குடி புத்தகத் திருவிழாவில் வாங்கியவர் ) , நண்பர்கள் பாலசுப்ரமணியன் முனுசாமி ( பாண்டிச்சேரியில் இருந்து இதற்காக வந்தார்.

செவ்வாய், 3 ஜூன், 2014

பூக்குட்டி வைத்த புதுப் பொங்கல்.

தமிழர்களுக்கே உள்ள ஒரு திருவிழா என்றால் அது பொங்கல்தான். ஒவ்வொரு வருடமும் தை மாதம் அறுவடை முடிந்த முதல் விளைச்சல் நெல்லிலிருந்து எடுத்த பச்சரிசியில் வெல்லமிட்டுப் பொங்கல் வைத்து விளைச்சலுக்கு வெப்பம்தந்து வெள்ளாமையைச் செழிப்பமாக்கிய சூரியனுக்கு நன்றி சொல்லிப் படைக்கும் திருநாளே பொங்கல். அதற்கு அடுத்த நாட்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த மாடு கன்னு ஆகியவற்றையும் பூசிக்கும் தினங்களாகக் கொண்டாடப்படுகின்றன.

என்னுடைய ”ங்கா” கவிதைத் தொகுதியின் நாயகியான ஆராதனாவின் முதல் பொங்கலுக்கு தாமோதர் சந்துரு அண்ணன் ஈரோடுக்கு  அழைத்திருந்தார்கள். ஆனால் போக இயலவில்லை.அந்த பூக்குடி வைத்த புதுப்பொங்கல்  நிகழ்வுகளை இங்கே பகிர்வதில் பெருமையடைகிறேன்.

தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி.தைப் பொங்கலன்று வீட்டில் பிறந்த முதல் பெண் குழந்தை முதல் பொங்கலிட அனைத்தும் செழிக்கும் என்று கொங்கு நாட்டில் பெண்மகவினைக் கொண்டாடுகிறார்கள். 

ஞாயிறு, 1 ஜூன், 2014

நீங்க திரைப்படத் தயாரிப்பாளர் ஆகணுமா..

நீங்க சினிமா தயாரிப்பாளர் ஆகணுமா. அதிகமில்ல ஒரு லட்சம் ( மினிமம் )  போதுமாம்.. டிஸ்கவரி புத்தக நிலையத்தின் வேடியப்பன் சொல்றாரு.டிஸ்கவரி சினிமாஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கும் வேடியப்பன் சொல்றது என்னன்னா

/// சினிமா என்பது சமூக அக்கறையுடன் கூடிய ஒரு வணிகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால் ஒரு லட்சம் முதலீடு செய்து தயாரிப்பாளர் ஆகுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...