வலைப்பதிவராக அறிமுகமான திரு. இரத்தின வேல் ஐயா என்னுடைய கவிதைகளைப் படித்து வாழ்த்துக்கள் சொல்வார்கள். சிறந்ததைப் பகிர்வார்கள்.
என்னுடைய படைப்புக்கள் மட்டுமல்ல. சிறந்த எந்தப் படைப்பைப் பார்த்தாலும் பகிர்வார்கள். அவர்கள் மூலம் பலரையும் நல்ல விஷயங்கள் சென்று சேரும். தண்ணீர் யுத்தம் பற்றி, ப்ளாஸ்டிக் தீமை பற்றி, வெளிநாட்டில் பயிலும் பெண்களின் பாதுகாப்பு பற்றி, ஆன்லைன் கல்வி சேவை பற்றி எல்லாம் பகிர்ந்திருக்கிறார்கள். என்னைப் போல நிறையப் பேரை ஊக்குவித்திருக்கிறார்கள்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் பற்றி அங்கே அருகே உள்ள மலைக் கோயில்கள் பற்றி எல்லாம் அவர்கள் வலைத்தளத்தில் படித்து அறிந்து கொண்டிருக்கிறேன்.
அவர்களுக்கு என்னுடைய மூன்று நூல்களையும் அனுப்பி வைத்தேன். அவர் அதற்கான விமர்சனங்களை அவ்வப்போது முகநூலில் பகிர்ந்து வந்தார். அதை எடுத்து நான் இங்கெ என்னுடைய வலைத்தளத்தில் பகிர்கிறேன்.
/////நான் படித்த புத்தகம்.
சாதனை அரசிகள் – எழுதியவர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்.
வெளியீடு: முத்து சபா பதிப்பகம்
முதல் பதிப்பு: ஜனவரி 2012 – விலை ரூ.50 – பக்கங்கள் 80
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.
புத்தகத்தைப் பற்றி: