திங்கள், 15 மார்ச், 2010

சொற்கப்பல் ..தமிழ் அலை ..டிஸ்கவரி

சொற்கப்பல்
-----------------
சென்றவாரம் டிஸ்கவரி புக் பாலஸில் இரண்டு
புத்தகங்கள் விமர்சனம் நடந்தது..முகப்புத்தக
நண்பர் அஜயன் பாலா சொற்கப்பல் என்ற விமர்சன
தளத்தை அறிமுகம் செய்ய அழைத்து இருந்தார் ..
செல்ல நினைத்து சில வேலைகளால் செல்ல
இயலவில்லை..வரவேற்புரை அகநாழிகை பொன் .
வாசுதேவனும் அறிமுகம் அஜயன் பாலாவும்..
விளக்குபரிசு பெற்ற விக்கிரமாதித்யனுக்கு சொற்
கப்பல் சார்பாக டிஸ்கவரி புக் பாலஸின் உரிமை
யாளர்கள் முகுந்தும் வேடியப்பனும் பொன்னாடை
போர்த்தினார்கள் ,, சொற்கப்பலின் மாலுமிகள்
தமிழ்மகன் ., அகநாழிகை.,தடாகம்.காம் டிஸ்கவரி
புக் பேலஸ்....


அந்த விழாவில் விக்கிரமாதித்தன் அவர்கள் பேசி
யதில் இருந்து ..உயிர்மைகாலச்சுவடு போன்ற
பத்திரிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டும்..
ஏனெனில் அவை பதிப்பிடும் குறிப்பிட்ட சிலதையே
இலக்கியம் என்றும் குறிப்பிட்ட சிலரால் எழுதப்படு
பவையே இலக்கியம் என்று கருதும் மனப்பான்மை
தான் காரணம் என்று கூறினார் ...என்று செய்தி
வந்தது..சொற்கப்பலின் முதல் கூட்டமே களை
கட்டிவிட்டது.. வாழ்த்துக்கள்..!!அஜயன் .,அகநாழிகை
வாசுதேவன்., தடாகம்.காம் .,தமிழ்மகன் மற்றும்
டிஸ்கவரி புக் பேலஸ்...!!!
*******************************************************************
இசாக்
--------
முகப்புத்தக நண்பர் இசாக்கின் கவிதை நூல்
(தமிழ் அலை) வெளியீடு ,"துணை இழந்தவளின்
துயரம்" பிப்ரவரி 28 ம் தேதி ஹோட்டல் பெனின்
சூலாவில் நடைபெற்றது. இதற்கும் அழைப்பு வந்தும்
செல்ல இயலவில்லை.. இவரின் படைப்புகள் சில
வற்றைப் படித்து இருக்கிறேன் ..தனிமையையும்.,
வலியையும்., துயரையும் சொல்லும் தீரா எண்ணங்
களை வரையும் வரிகள் அவை ..அறிவுமதி
தலைமையில் இந்நூலை வெளியிட்டவர் தமிழச்சி
தங்கபாண்டியன் ...கருத்து பழநி பாரதி ., நங்கை
குமணராசன்.,மீரா கதிரவன்.,வன்னி அரசு....
ஏற்புரை இசாக்..

மிக எளிமையாசொல்லப்பட்ட இந்தக் கவிதை
யில் பாடு பொருளாவது வாழ்க்கைதான் .. அந்த
வாழ்க்கை நெடும் பிரிவால் அலைக்கழிகிறது..
குறுகிய நாட்களில் குமிழியிடுகிறது என விமர்சித்து
இருக்கிறார் இன்குலாப் ...வாழ்த்துக்கள் இசாக்..!!
மேலும் படைப்புகள் வெளியிடவும் வெற்றி
பெறவும் வாழ்த்துக்கள்..!!!
***************************************************************
டிஸ்கவரி புக் பேலஸ்
-----------------------------
புத்தகங்கள் தெய்வம் நமக்கு... புத்தக நிலையங்கள்
ஆலயம்.... அதில் சென்னையில்உள்ள டிஸ்கவரி
புக் பேலஸ் புத்தகப் பிரியர்களுக்கு மட்டுமல்ல..
புத்தகவெளீயீட்டாளர்களுக்கும் உகந்த இடம்..சகோ
தரர் வேடியப்பனும் அவர் தம்பி முகுந்தனும் இதை
நடத்தி வருகிறார்கள்..வேடியப்பன் எழுத்துக்களில்
உள்ள நேசத்தால் இந்த நிலையத்தை நடத்தி வரு
கிறார்..மிக நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்கள்..
நல்ல காற்றோட்டமும் கண்ணாடிகளும் பொருத்
தப்பட்ட இடம்.. ஒரு 50 லிருந்து 100 பேர்வரை
தாங்கும் இடம்.. வெளீயீட்டு விழாக்களுக்கு குறைந்த
வாடகைகளில் அனைத்துவசதிகளும் செய்து தரு
கிறார்கள்.. சேர்கள்., மைக்., ஃபேன் .,ஹால்.,
எல்லாம்..சென்னையின் ஹிக்கின்ஸ் பாதாம்ஸ் .,
லாண்ட்மார்க் போன்ற கடைகளில்வாங்குபவர்கள்
ஒருதரம் இங்கும் வாங்கிப் பார்க்கலாம்..

இலக்கியத்தில் ஈடுபாடு இருக்கும் சகோதரர் வேடி
யப்பனுடைய புத்தகம் ஒன்று நியூ செஞ்சுரி புக்
ஹவுஸால் வெளியிடப்பட்டு இருக்கிறது ..முதல்
முறை சென்ற போது சொன்னேன் வேடியப்பனிடம்
வலைத்தளம் ஆரம்பித்து படைப்புகளை வெளி
யிடும்படி.. அடுத்த முறை சென்ற போது கணனி
யுடன் அமர்ந்து இருந்தார்..வலைத்தளமும் ஆரம்
பித்து .. நீங்களும் விசிட் செய்து பாருங்கள் ..அவர்
வலைத்தளமுகவரி http://vediyappanpages.blogspot.com/
அப்புறம் ஒண்ணு முக்கியமான விஷயம் சொல்ல
மறந்துட்டேன்..அவருடைய 6 மாத பெண் குழந்தை
யின் பெயர்," மதிவதனி " என்ன செய்வது ..?
என்னால் செய்ய முடிந்தது இதுதான் என் அன்பைத்
தெரிவிக்க என்றார்.. நெகிழ்ந்துவிட்டேன்..
வாழ்க..! வளர்க..!!

36 கருத்துகள் :

நேசமித்ரன் சொன்னது…

இன்னும் நல்லா எழுதி இருக்கலாமோ

:)

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

(எனக்கு) புதிய விசயங்களுக்கு நன்றி.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

நான் போனேங்க..:))

Chitra சொன்னது…

நல்ல பதிவு....... நன்றி.

Mrs.Menagasathia சொன்னது…

நல்ல பகிர்வு!!

சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு தேனம்மை

தமிழ் உதயம் சொன்னது…

அவருடைய 6 மாத பெண் குழந்தை
யின் பெயர்," மதிவதனி " என்ன செய்வது ..?
என்னால் செய்ய முடிந்தது இதுதான் என் அன்பைத்
தெரிவிக்க என்றார்.. நெகிழ்ந்துவிட்டேன்..


நானும் நெகிழ்ந்தேன்.

ரிஷபன் சொன்னது…

நல்ல தகவல்கள்

ஜோதிஜி சொன்னது…

பெயர்," மதிவதனி " என்ன செய்வது ..?

புதிய செய்தி?

விஜய் சொன்னது…

இதை விட தெளிவாக, அழகாக புரியும்படி எழுதுமுடியாது.

வாழ்த்துக்கள் உங்கள் எழுத்து நடைக்கு

விஜய்

இராகவன் நைஜிரியா சொன்னது…

அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.

வேடியப்பன் அவர்களின் வலைப்பூ தகவலுக்கு நன்றி.

புலவன் புலிகேசி சொன்னது…

நல்லப் பகிர்வு..அவரின் வலைத்தளம் பார்க்கிறேன்...

அஜயன்பாலா சித்தார்த் சொன்னது…

தேன்ம்மை உங்களின் எளிய அழகான் நடையில் சொற்கப்பலுக்கு பார்வை கூட்டியுள்ளீர்கள் மகிழ்ச்சி.உடன் இசாக் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் வேடியப்பன் ஆகியோர் பற்றியும் சில வரிகளில் பலசேதிகளி சொல்லி பெருமை படுத்தியுள்ளீர்கள்.பெருந்தன்மையும் அன்பும் கூடிய உங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்து

சத்ரியன் சொன்னது…

//அப்புறம் ஒண்ணு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. அவருடைய 6 மாத பெண் குழந்தை
யின் பெயர்," மதிவதனி " என்ன செய்வது ..? என்னால் செய்ய முடிந்தது இதுதான் என் அன்பைத் தெரிவிக்க என்றார்.. நெகிழ்ந்துவிட்டேன்..//

தேனம்மை,

நல்லதொரு பகிர்வு.

மேற்குறிப்பிட்டுள்ள வரிகளால் நானும் நெகிழ்ந்து விட்டேன்.

சசிகுமார் சொன்னது…

மற்றவர்களின் பக்கங்களை புகழ்ந்து பதிவிட்ட உங்களின் நல்ல உள்ளதிருக்கு மிக்க நன்றி, உங்கள் புகழ் ஓங்குக, தொடரட்டும் உங்கள் சேவை

சசிகுமார் சொன்னது…

மற்றவர்களின் பக்கங்களை புகழ்ந்து பதிவிட்ட உங்களின் நல்ல உள்ளதிருக்கு மிக்க நன்றி, உங்கள் புகழ் ஓங்குக, தொடரட்டும் உங்கள் சேவை

அகநாழிகை சொன்னது…

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்தலுக்கு நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல பதிவு. நன்றி.

மைதீன் சொன்னது…

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல பகிர்வு...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

பகிர்வுக்கு நன்றி !

மீண்டும் வருவான் பனித்துளி !

thenammailakshmanan சொன்னது…

Ishaq Idayath March 16 at 9:05am
தங்கள் இணைப்பைக்கண்டேன்
மகிழ்ச்சியும் நன்றியும்.
அன்பும் நட்பும் தொடரட்டும்

அன்பு
இசாக்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

அக்பர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

ஹுஸைனம்மா சொன்னது…

:-))

thenammailakshmanan சொன்னது…

நன்றி நேசன் ஆமாம்

நன்றி சை கொ ப

நன்றி ஷங்கர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்ரா

நன்றி மேனகா

நன்றி குமார்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரமேஷ்

நன்றி ரிஷபன்

நன்றி ஜோதிஜி

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய்

நன்றி இராகவன் நைஜீரியா

நன்றி புலவரே

thenammailakshmanan சொன்னது…

நன்றி அஜயன் அவர்கள் சார்பாகவும் நீங்கள் வாழ்த்தியதற்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி சத்ரியன்

நன்றி சசிகுமார்

நன்றி அகநாழிகை

thenammailakshmanan சொன்னது…

நன்றி பித்தனின் வாக்கு

நன்றி மைதீன்

நன்றி ஸ்ரீராம்

thenammailakshmanan சொன்னது…

நன்றி பனித்துளி சங்கர்

நன்றி இசாக்

நன்றி RDX அந்நியன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி அக்பர்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி ஹுஸைனம்மா

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...