வியாழன், 25 மார்ச், 2010

அன்பு அனைத்தும் ஆக்கும்

உன் மூச்சுக் காற்றும் உருவமும் உலவும் வீட்டில்
நானும் அருவமாய் உள்நுழைந்து
உன் உணர்வையெல்லாம் சுவாசித்து
எழுத்துருவில் என்னையும் நீ உணர.,
மயிலைப் போலக் கண்களும்
முயலைப் போலக் கன்னங்களும்
கலைந்த தலையழகும் எடுப்பான நாசியும்
வடிவான மோவாயும் கரங்களில் பதித்து
குழந்தையாய் அமர்ந்து இருப்பாய்..

கம்பீரமும் .,மழலைச்சிரிப்புமாய்.,
பேரன்பும் .,நகைச்சுவையுமாய்.,
உன் எழுத்தின் வழி வெடித்துச்
சிதறும் பின்னூட்டங்களாய்..
நேரமற்ற நேரமெல்லாம் கூட
விழித்து வாசித்து களைப்புற்ற நீ,
கண்களைத் தேய்த்துக் கொள்வதும்
கொட்டாவி விடுவதும் கூட கொள்ளை அழகு...
நானும் உன் போலவே எல்லாம்..
உன் தளத்தில் சகலத்தையும் நீ பகிர நானும் பகிர
நமக்கான பாதையில் எங்கெங்கும் ரோஜாக்கள்..
முட்களே இல்லாமல் ...
ஹோலியைப் போல வண்ணங்களையும்
எண்ணங்களையும் வாரி இறைத்து...
இனி முட்கள் வந்தாலும் பிடுங்கி எறிந்து
நடப்போம் இன்பமான வலியுடன்...
அன்பு அனைத்தும் ஆக்கும் ஆக்கப்பூர்வமாய்..!!!

டிஸ்கி:- என் அன்பு சித்ராவுக்கு இந்த இடுகை
பரிசு ...இந்த இடுகைக்காய்...
எங்கள் அன்பிற்குரிய சகோதரர் ஸ்டார்ஜனுக்கு
இந்த இடுகைக்காய் ...
எங்கள் அன்பிற்குரிய நண்பர் வேலனுக்கு இந்த
இந்த இடுகைக்காய் ...
எங்கள் எல்லா வாசகர்களுக்கும் கூட...

45 கருத்துகள் :

மைதிலி கிருஷ்ணன் சொன்னது…

நல்லா இருக்கு அக்கா...

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நல்ல அருமையான கவிதை தேனக்கா.

ரொம்ப நன்றி.,என்னையும் குறிப்பிட்டதுக்கு

என்றும் உங்கள் தம்பி ஸ்டார்ஜன்.

அக்பர் சொன்னது…

அருமை அக்கா.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அனைத்தையும் கவிதை ஆக்கி விடுகிறீர்களே!!!
நல்லா இருக்கு.

வானம்பாடிகள் சொன்னது…

good good

நட்புடன் ஜமால் சொன்னது…

அன்பாக (வார்த்தைகள் கொண்டு) அனைத்தால் எதுவும் ஆக்க(கு)ம் ...

ஹுஸைனம்மா சொன்னது…

அட, நட்புக்கும் கவிதை. அழகுதான்!!

தமிழ் உதயம் சொன்னது…

எதற்கும் எதையும் விட மாட்டீர்கள் போலும்.
உங்கள் பார்வை பட்ட எல்லாமே கவிதை ஆகிறது.
மகிழ்ச்சி.

நேசமித்ரன் சொன்னது…

:)

விஜய் சொன்னது…

மனதால் படித்து ரசித்து நட்பாகி அது அன்பெனும் விருட்சமாய் வளர்கிறது.

இவ்வலையுலக நட்புகள் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் நட்பையும் தாண்டி செல்கிறது.

வாழ்த்துக்கள் சகோதரி.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.

விஜய்

திவ்யாஹரி சொன்னது…

//எங்கள் எல்லா வாசகர்களுக்கும் கூட...//

நல்ல கவிதை.. நன்றி அக்கா..

Mrs.Menagasathia சொன்னது…

சூப்பர்ர் அக்கா!!

//எங்கள் எல்லா வாசகர்களுக்கும் கூட...// எனக்குமா..நன்றி அக்கா!!

seemangani சொன்னது…

வாழ்க வளர்க நட்ப்பு ..அருமை தேனக்கா...

SIVA சொன்னது…

அன்பின் பொழிவு,
வார்த்தைப் பொழிவாய்...
அருமை...
வாழ்த்துக்கள்...

padma சொன்னது…

என்ன பாக்கிற மாரி இருக்கு

ஸ்ரீராம். சொன்னது…

நட்"பூ".....வலைப்'பூ'...

Chitra சொன்னது…

அக்கா.......... அக்கா...... அக்கா............ உங்கள் அரவணைப்பும் அன்பும் கவிதை முழுவதும். இது போதும்! இறைவா, இந்த அன்புக்கும் நன்றி.

Ananthi சொன்னது…

தேன் அக்கா,

மிக மிக அருமையாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்.. :)

சசிகுமார் சொன்னது…

ரெண்டு நாள் அக்கா தளத்துக்கு வர முடியல அதுக்குள்ள என்னென்னமோ எழுதிட்டாங்க, யார்யாரோ கருத்து சொல்லிடாங்க. நல்ல பதிவு அக்கா. உங்களுக்கே உரிய பாணியில் கூறிவிட்டீர்கள். உங்கள் புகழ் மென்மேலும் வளர என மனமார்ந்த வாழ்த்துக்கள்

சத்ரியன் சொன்னது…

தேனம்மை,

அன்பு பெரு(க்)கும் செல்வம். உங்கள் கவிதையைப்போல அது “அனைத்தும்” செய்யும்.

சே.குமார் சொன்னது…

நட்புக்கு நல்ல இடுகை.

வாழ்த்துக்கள் தேனம்மை.

ஸாதிகா சொன்னது…

கவிதை அருமை.கடைசியில் போட்ட டிஸ்கி அருமையிலும் அருமை(என்னே கவித்துவமான டிஸ்கி!!!!)

Mrs.Menagasathia சொன்னது…

pls collect ur award from my blog

http://sashiga.blogspot.com/2010/03/blog-post_27.html

கண்மணி/kanmani சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ் :(((((((

Prabu சொன்னது…

கவிதையெங்கிலும் கொட்டிக் கிடக்கும் சந்தோஷத்தை அள்ளி ரசிக்க முடிகிறது.....
அக்மார்க் உங்க கவிதை அக்கா :)

Happily positive!!! :)

திவ்யாஹரி சொன்னது…

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் தேனக்கா..

thenammailakshmanan சொன்னது…

நன்றி மயிலு

நன்றி சகோ ஸ்டார்ஜன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி அக்பர்

நன்றி சை கொ ப

thenammailakshmanan சொன்னது…

நன்றி அக்பர்

நன்றி சை கொ ப

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலா சார்

நன்றி ஜமால்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹுசைனம்மா

நன்றி ரமேஷ்

thenammailakshmanan சொன்னது…

நன்றி நேசன்

நன்றி விஜய்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி திவ்யாஹரி

நன்றி மேனகா

நீங்கள் இருவரும் இல்லாமலா என் வலையுலகில் ...நிஜ உலகிலும்..

thenammailakshmanan சொன்னது…

நன்றி சீமான் கனி

நன்றி சிவா

thenammailakshmanan சொன்னது…

நன்றி பத்மா

நன்றி ஸ்ரீராம்

thenammailakshmanan சொன்னது…

உண்மை சித்ரா

இப்போது மாஷா அல்லா என கூற நினைக்கிறேன்

இந்த அன்பும் பாசமும் என்றும் நம்முள் நீடித்து நிலைத்து இருக்கட்டும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஆனந்தி உன்னோட முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சசிகுமார்

நன்றி சத்ரியன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி குமார்

நன்றி ஸாதிகா
டிஸ்கி நல்லா இருக்கா ஸாதிகா அதுக்கு தனி நன்றி உங்களுக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி மேனகா அடிக்கடி அவார்டு கொடுத்து அசத்துறதுக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி கண்மணி ... அவ்வளவு உங்களை அழ வைச்சுட்டனா கண்மணி

thenammailakshmanan சொன்னது…

நன்றி பிரபு என்ன ரொம்ப பிஸி ஆகிட்டீங்களா கொஞ்ச நாளா காணோம்

thenammailakshmanan சொன்னது…

நன்றி திவ்யா சகோதரிகள் எல்லாம் விருது கொடுத்து என்னைக் கௌரவிப்பதற்கு ..உள்ளபடியே நான் கொடுத்து வைத்தவள்தான் ..
மீண்டும் நன்றி மா

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

சசிகுமார் சொன்னது…

அடப்பாவிங்களா அதுக்குள்ள சுட்டுடாங்களே. காலையில் ஆரம்பித்து இந்த பதிவை எழுதி முடிக்கவே சுமார் நான்கு மணிநேரம் ஆனது. என்னுடைய அலுவலக வேலைகளை ஒதுக்கி கஷ்ட்டப்பட்டு எழுதிய பதிவை நான் வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் திருடி விட்டார்கள் மிகுந்த கவலையாக உள்ளது நண்பர்களே என்னோட லிங்க்
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post.html
திருடப்பட்ட லிங்க்
http://idimulhakkam.blogspot.com/2010/04/blogger.html

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...