எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 மார்ச், 2010

சந்திர காந்தக்கல்

சிரிக்கிறாய்..
கிறுக்காகிறேன்...!
என் சந்தோஷத்
தின்பண்டமே ...!!

சர்க்கரைப் பாகாய்
சிரிப்புறைந்த
உன் புகைப்படத்தில்
சாரிசாரியாய் எறும்புகள்...


ஒரு முறைதான் காதல்,,,
நான் இருமுறை விழுந்தேன்,,
உன் இரு கன்னக் குழியிலும்..

சூரியப் பார்வை..
சந்திர காந்தக்கல்..
உன் சிரிப்புச் சம்மட்டியில்
எஃகிரும்பான நான் இளகி..

திடப் பொருளான நான்
திரவமாகி .,ஆவியாகி ...
எதிர் ஜவ்வூடு பரவலில்
இனம்புரியாது ...

உன் மந்தஹாசப் புன்னகையில்
நியூரான்களின்
தாறுமாறான உற்பத்தி..

சிரித்துச் சிரித்து
இளகுகிறாயா..?
இளக்குகிறாயா..?

வாழும் வரை உன் சிரிப்பையே
என் வரமாகக் கொடு...
வாழ்வு நிறைய்ய...!!!

49 கருத்துகள்:

  1. சிரித்துச் சிரித்து
    இளகுகிறாயா..?
    இளக்குகிறாயா..?


    ..... super!

    பதிலளிநீக்கு
  2. இது உங்கள் பழைய டைரியில் இருந்தா ?

    :)

    பதிலளிநீக்கு
  3. நன்றி சித்ரா உன் பின்னூட்டம் இளக்கி விட்டது என்னை ... பொண்ணு பிறந்த நாளுக்கு என்ன ஸ்பெஷல் செஞ்சம்மா..?

    பதிலளிநீக்கு
  4. ஏன் நேசன் ஒரே கெமிஸ்ட்ரியா வருதுன்னு கேக்குறீங்களா..? இப்போ எழுதினதுதான் இது..!!

    பதிலளிநீக்கு
  5. சவ்வூடு பரவல் என் சிந்தனையிலும் இருந்தது

    முந்திவிட்டீர்கள் அக்கா

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. விதவிதமா பதார்த்தங்கள் தான் செய்வீங்கன்னு நினைச்சோம். கவிதைகளையும் இப்படி வித விதமா, அழகா எழுதி அசத்துறிங்க.

    பதிலளிநீக்கு
  7. //வாழும் வரை உன் சிரிப்பையே
    என் வரமாகக் கொடு...
    வாழ்வு நிறைய்ய...!!!// அருமை அக்கா..அசத்தலான கவிதை!!

    பதிலளிநீக்கு
  8. சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்
    super ka

    பதிலளிநீக்கு
  9. //வாழும் வரை உன் சிரிப்பையே
    என் வரமாகக் கொடு...
    வாழ்வு நிறைய்ய...!!!//

    இதுபோதும் வாழ்க்கை.....
    Love is life
    life is love
    என்று சொல்லுவாங்களே... அது இப்படிப்பட்ட தேடலுடன் கூடிய காதலாக இருக்கணும்!!

    பதிலளிநீக்கு
  10. சந்தோசத்தின் திண்பண்டம் இனிக்கிறது. சிரித்து இளகுகிறது . கவிதையும் அல்லவா இனிக்கிறது .வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. நன்றி விஜய் நீங்க எழுதாத வார்த்தைகளா நான் எழுதிடப் போறேன்..:)))

    பதிலளிநீக்கு
  12. நீங்க கருத்துக்களை விதம் விதமாகப் படைக்கிறீங்க ரமேஷ்

    பதிலளிநீக்கு
  13. நீங்க கருத்துக்களை விதம் விதமாகப் படைக்கிறீங்க ரமேஷ்

    பதிலளிநீக்கு
  14. நன்றி மேனகா உங்க ஓட்ஸ் மற்றும் பார்லி ரெசிப்பி அருமை

    பதிலளிநீக்கு
  15. நன்றி பத்மா நீங்களும் சிறைப்பட்டது போல இருக்கே :))

    பதிலளிநீக்கு
  16. பிரபு அது உங்களுக்கு கிடைச்சுருச்சுன்னு நினைக்கிறேன் ..

    அதுதான் இப்படி
    love is life
    life is love nu
    சொல்லுறீங்க.. correct aa ?

    பதிலளிநீக்கு
  17. என்ன மதுரை சரவணனைக் காணோமேயென்று நினைத்தேன் ..வந்து விட்டீர்கள் .. என்ன லீவில் எங்காவது சென்று இருந்தீர்களா..?

    பதிலளிநீக்கு
  18. பெண்களை ரசித்து ஆண்களுக்கு தான் கவிதை எழுத வரும்னு நினைத்திருந்தேன். அது பொய்த்து விட்டது. ஒரு வேளை கன்னக் குழி ஆண்களுக்கும் பொது தானோ ?

    பதிலளிநீக்கு
  19. //ஒரு முறைதான் காதல்,,,
    நான் இருமுறை விழுந்தேன்,,
    உன் இரு கன்னக் குழியிலும்..//

    தேனம்மை,

    ம்ம்ம்ம்ம்ம்....என்னன்னு சொல்லட்டும் போங்கோ!

    பதிலளிநீக்கு
  20. வாவ்!!!!..........அட்டகாசமாய் இருக்கிறது, இது மாதிரி அடிக்கடி எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
  21. கவிதை வார்த்தைப் பூக்களால் கட்டிய அழகுச் சரம்..

    பதிலளிநீக்கு
  22. கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு.

    நீங்க கெமிஸ்ட்ரி ஸ்டுடண்டா அக்கா.

    பதிலளிநீக்கு
  23. நல்ல கவிதை. "சந்தோஷத் தின்பண்டமே.." பிடித்த விஷயங்களை பிடித்தவர்களோடு ஒப்பிடுதல் அழகு. சிரித்துச் சிரித்து இளக்குகிறாயா இளகுகிறாயா .. நல்ல சந்தேகம்.
    "வாழும் வரை உன் சிரிப்பையே வரமாகக் கோடு..." இந்தத் திருப்தி கிடைப்பதுதான் பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  24. //சிரித்துச் சிரித்து
    இளகுகிறாயா..?
    இளக்குகிறாயா..?//

    எல்லாம் காதல்செய்யும் மாயம்தான்.

    பதிலளிநீக்கு
  25. இளக வைப்பதில் பெண்ணுக்கு நிகர் உண்டோ? உங்கள் கவிதைகளும் சேரும் போது?

    பதிலளிநீக்கு
  26. ”சந்தோஷத் தின்பண்டம்” வார்த்தைப் ப்ரயோகம் வெகு ஜோர்!!

    பதிலளிநீக்கு
  27. என் "உன் சிரிபினில்" கதைக்கேற்ற கவிதை...நல்லா இருக்குங்க...

    பதிலளிநீக்கு
  28. ஒரு முறைதான் காதல்,,,
    நான் இருமுறை விழுந்தேன்,,
    உன் இரு கன்னக் குழியிலும்..]]

    simply romantic ...

    பதிலளிநீக்கு
  29. நான் படிக்கும் போதெல்லாம் உங்க தளத்தை பற்றியெல்லாம் தெரியாமல் போனது, தெரிஞ்சிருந்தால் உங்களுடைய எல்லா கவிதைகளையும் XXXXXXXXXXXXXXX . இதெல்லாம் வெளியில சொல்ல கூடாது அதனால தான். நல்ல கவிதை அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. ஆமாம் செல்ல நாய்க்குட்டி மனசு ஆண்களுக்கும் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுமே

    பதிலளிநீக்கு
  31. நன்றி சத்ரியன் கன்னக் குழியில் விழுந்த அனுபவம் இருக்கு உங்களுக்கு சரியா :)))

    பதிலளிநீக்கு
  32. நன்றீ சை கொ ப சொல்லிட்டீங்கள்ல கலக்கிருவோம்

    பதிலளிநீக்கு
  33. சிரிப்பு ஒரு சரம் தான் ரிஷபன் நன்றி

    பதிலளிநீக்கு
  34. நன்றி ஒருவனின் அடிமை
    உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  35. உண்மை அக்பர் எப்படி கண்டு பிடிச்சீங்க நான் கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட் தான்

    பதிலளிநீக்கு
  36. சிரிப்பே உணவான பெண்ணுக்கு வேறென்ன வேண்டும் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  37. சிரிப்பே உணவான பெண்ணுக்கு வேறென்ன வேண்டும் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  38. உண்மை ஸ்டார்ஜன் சரியா சொன்னீங்க நன்றி

    பதிலளிநீக்கு
  39. நன்றி ஜோதிஜி உங்கள் பின்னூட்டமும் சேரும் போது கவிதை மிக அழகுதான் என தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  40. நன்றி பனித்துளி சங்கர் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  41. நன்றி ராமமூர்த்தி உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  42. நன்றி புலிகேசி உங்க கதையப் படித்த பின் சொல்றேன்

    பதிலளிநீக்கு
  43. நன்றி ஜமால் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  44. நன்றி சசி இப்போ கூட நீங்க இதை சுடலாம் எல்லா உரிமையும் உங்களுக்கே :))))

    பதிலளிநீக்கு
  45. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  46. யாரை பார்த்து உங்களுக்கு இந்த சிரிப்பு வருதுண்ணு சொல்லுஙளேன்.

    பதிலளிநீக்கு
  47. நான் யாரைன்னு சொல்லுவேன் மயிலு
    நீயே புரிஞ்சுக்கலையா மாமான்னு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...