புதன், 10 மார்ச், 2010

மருதாணிசெடிக்கு

இதுவும் 1986 கவிதை கோபியை சேர்ந்த நண்பர்
பா.மா. மனோகரன் நடத்திய பூபாளம் இதழுக்காக
எழுதியது ..

எனக்குள்ளேயும் கப்பு வெடித்துப்
பூச்சொரியும் பய மரங்கள்
பிரசவிக்கும்..

நீ இருந்தது என் வீட்டின்
வடக்கு மூலையில்..
என் மனதின் வசந்த மூலையில்..


கையிலும் காலிலும்
பச்சையாய்க் கருத்தரித்து
சிவப்பாய் உமிழும் உன்னை
உதிர்க்கவே மனசில்லை..

மனசெல்லாம் மணக்க .,மணக்க..
உன் மிருதுத் துகள்கள்
உள்ளங்கையை வருடிக்
கொடுக்கும் போது .,

என்னுள் குளிர்ச்சி
ரத்தம் செலுத்தும் போது .,
அடி வயிற்றின் பயச்செடிகள்
உன்னை யாரிடமும் உதிர்த்து
விடுவாயோவென கிளை வெடிக்கும் ...

தெருவோரப் பொறுக்கிகள்
உன்னைப் பறிக்கும் போது .,
உன் முட்களின்
தலை வணங்கல்கள் வருத்தும் ..

வெளிச்சப் பாதுகை தடம் பதிக்கும்
அகலிகைக்கல்லாய் நீ என்னை
உயிர்க்கச்செய்து..

சிவப்பு வெளிரும்போது
உன்னைஅடைய வருவேன்
திரும்ப . .திரும்ப ..

இழப்பு என்பது
யார்க்குள்ளும் ஏற்படலாம்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
பிரிவின் தரிசனம் கூட எதிர்படக்கூடாது...

33 கருத்துகள் :

Chitra சொன்னது…

சிவப்பு வெளிரும்போது
உன்னைஅடைய வருவேன்
திரும்ப . .திரும்ப ..


........ very nice!

ஹாய் அரும்பாவூர் சொன்னது…

இழப்பு என்பது
யார்க்குள்ளும் ஏற்படலாம்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
பிரிவின் தரிசனம் கூட எதிர்படக்கூடாது...

நேசமித்ரன் சொன்னது…

மலர்தலைய உலகம் என்பது உங்களுக்குத்தான் பொருந்தும் தேனம்மை .. பிடித்திருக்கிறது இந்தக் கவிதையும்

செந்தில் நாதன் சொன்னது…

ரசித்தேன்.. :)

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அட, செடிக்கும் கவிதையா!! கலக்கல்.

நாய்க்குட்டி மனசு சொன்னது…

பூச்சொரியும் பய மரங்கள்//
'பய' மரங்கள் பூச்சொரிதல் contravercy ஆகத் தெரிந்தது. சின்ன சின்ன விஷயங்களைக் கூட அழகா கவிதையாக்கி இருக்கீங்க. முக்கியமான விஷயம் பழையன கழியாமல் இருத்தல்.

சசிகுமார் சொன்னது…

/என்னுள் குளிர்ச்சி
ரத்தம் செலுத்தும் போது .,
அடி வயிற்றின் பயச்செடிகள்
உன்னை யாரிடமும் உதிர்த்து
விடுவாயோவென கிளை வெடிக்கும் .../

நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Jaleela சொன்னது…

மருதாணி செடி கவிதை ரொம்ப அருமை.

ஸாதிகா சொன்னது…

கவிதைகண்டு மருதாணியும் சிவந்திடுமோ நெகிழ்வி???அருமையான கவிதை சகோதரி!

பிரபு . எம் சொன்னது…

உள்கூட்டி சிலிர்க்கவைத்தே உள்ளங்கை சிவக்கவைத்த மாயாஜால மருதாணி வரிகள் அக்கா...

ரொம்ப ரசித்துப் படித்தேன்....

ஓர் ஆணாக மருதாணிமீது எனக்குக் காதல் எதுவும் இருந்ததில்லை...
மருதாணி வைத்த கைகளால் சிறுவயதில் எனக்கு பால்சோறு ஊட்டிவிட்ட என் சித்தியின் கைமணமத்தை நினைவுக்கு வரவழைத்தது உங்கள் எழுதுகைமணம்!! :)

உங்க கவிதைகளில் எனக்கு இப்போதைக்கு இதுதான் என் ஃபேவரைட் :)

ராமலக்ஷ்மி சொன்னது…

அழகான கவிதை தேனம்மை.

//இழப்பு என்பது
யார்க்குள்ளும் ஏற்படலாம்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
பிரிவின் தரிசனம் கூட எதிர்படக்கூடாது...//

அருமை.

அக்பர் சொன்னது…

மருதாணி செடி போலவே சிவந்து விட்டது. அருமை.

தமிழ் உதயம் சொன்னது…

மருதாணி... யாருக்கு தான் பிடிக்காமல் போகும்.
மருதாணி செடி கவிதை- யாரை தான் கவராமல் போகும்.

சத்ரியன் சொன்னது…

//தெருவோரப் பொறுக்கிகள்
உன்னைப் பறிக்கும் போது .,
உன் முட்களின்
தலை வணங்கல்கள் வருத்தும் ..//


தேன்(ள்) வரிகள்...!

D.R.Ashok சொன்னது…

மருதாணி நல்லாவே பத்திருக்கு.. சூப்பருங்க :)

ஹுஸைனம்மா சொன்னது…

//பச்சையாய்க் கருத்தரித்து
சிவப்பாய் உமிழும் உன்னை
உதிர்க்கவே மனசில்லை..//

அழகு!!

அம்பிகா சொன்னது…

மருதாணி கையின் மணத்தை போல கவிதையும் மணக்கிறது.

1986 ல் வெளிவந்த கவிதை!!!!

\\சிவப்பு வெளிரும்போது
உன்னைஅடைய வருவேன்
திரும்ப . .திரும்ப ..\\

அழகு.

ஸ்ரீராம். சொன்னது…

அப்பவே கலக்கி இருக்கீங்க..

வானம்பாடிகள் சொன்னது…

நல்லாருக்குங்க. யூத்ஃபுல் விகடன் கவிதையில் வந்த கவிதை எங்கே?
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem110310.asp

திவ்யாஹரி சொன்னது…

//இழப்பு என்பது
யார்க்குள்ளும் ஏற்படலாம்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
பிரிவின் தரிசனம் கூட எதிர்படக்கூடாது..//

நல்லா இருக்கு அக்கா இந்த வரிகள்..

Muniappan Pakkangal சொன்னது…

1986 la irunthu kavitahiyaa? Maruthaani nice thenammai.

Jaleela சொன்னது…

மருதாணி செடிக்கே இவ்வளவு அழகான கவிதையான்ன்னு எனக்கு ரொம்பவே ஆச்சரியம், தேன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்ரா

நன்றி அரும்பாவூர்

நன்றி நேசன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி செந்தில்

நன்றி சை கொ ப

நன்றி நாய்க்குட்டி மனசு

thenammailakshmanan சொன்னது…

நன்றி சசிகுமார்

நன்றி ஜலீலா

நன்றி ஸாதிகா

thenammailakshmanan சொன்னது…

நன்றி பிரபு

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி அக்பர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரமேஷ்

நன்றி சத்ரியன்

நன்றி அஷோக்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹுசைனம்மா

நன்றி அம்பிகா

நன்றி ராம்

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலா சார்

நன்றி திவ்யாஹரி

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஜலீலா

நன்றி முனியப்பன் சார் உங்களைப்பார்த்து ரொம்ப நாளாச்சு

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

Jaleela சொன்னது…

தேனக்கா, ஆகா பெயரை சொல்லவே எவ்வள்வு நல்ல இருக்கு.

வாங்களேன் நான் கொடுக்கும் மலர் விருது பெற்று கொள்ளுங்கள்.

பெயரில்லா சொன்னது…

hi, new to the site, thanks.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...