எனது நூல்கள்.

புதன், 19 ஜூன், 2019

ஸ்ரீ மஹா கணபதிம். நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்.

ஸ்ரீமஹா கணபதிம் நமஹ.

காக்கும் கடவுள் கணேசனை நினை
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை!!!

பசவங்குடி விநாயகர்.

செவ்வாய், 18 ஜூன், 2019

பஞ்சபூதங்கள் சிறப்புக் கோலங்கள்.

ஐம்பெரும் பூதங்கள்.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றைக் கோலங்களில் வரைந்துள்ளேன்.

திங்கள், 17 ஜூன், 2019

முக்கனிகளும் முத்தமிழ்ப் பாட்டியும். தினமலர் சிறுவர்மலர் - 19.

முக்கனிகளும் முத்தமிழ்ப் பாட்டியும்.
முக்கனிகள் என்றதும் மா பலா வாழை என்று நினைத்திருப்பீர்கள். இங்கே முக்கனிகள் என்று மா, நாவல், நெல்லி ஆகிய கனிகள் பற்றியும் அவற்றோடு சம்பந்தப்பட்ட முத்தமிழ்ப் பாட்டி ஒருவர் பற்றியும் கூறப்போகிறேன். கவனமாகக் கேளுங்கள் குழந்தைகளே.
கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது வருகிறார் கலகக்கார நாரதர். அவர் கையிலோ ஒரு மாங்கனி. அதை பவ்யமாக சிவபெருமான் அருகில் சென்று கொடுக்கிறார்.கையில் கனியை வாங்கிய சிவன் அதை அன்னை பார்வதியிடம் கொடுத்து பிள்ளைகளுக்குக் கொடுக்கச் சொல்கிறார்.

சனி, 15 ஜூன், 2019

பொன்முடி , மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.

கேரளாவுக்குச் சென்றிருந்தபோது பொன்முடியை தரிசித்தோம். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த இந்தச் சிகரம் நிஜமாகவே பொன்முடிதான்.


திருவனந்தபுரத்தில் இருந்து பாலோடு போய் அதன் பின் பொன்முடி போனோம்.  அதன் பல்வேறு படங்களைப் பகிர்ந்துள்ளேன். பல அடுக்கு மலைத்தொடராக அமைந்தது பொன்முடி. பாறை, மண், பசுமை என வெரைட்டியான மலை.


வெள்ளி, 14 ஜூன், 2019

விஜயதசமியில் தஞ்சைப் பெரியகோவில்.

ஜகதிப்படை கல்வெட்டு, மெய்கீர்த்தி, பாந்து என சகோ கரந்தை ஜெயக்குமாரின்  “ ஜகதிப்படை “ இடுகையில் படித்தவுடன்  சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சை ப்ரகதீஸ்வரர் கோயிலுக்கு விஜயதசமியன்று சென்றதும் இரவில் புகைப்படங்கள் எடுத்ததும் ஞாபகம் வந்தது.

இராஜ ராஜ சோழன் பற்றிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமாவில் சிவாஜியையே ராஜ ராஜ சோழனாகக் கண்டிருக்கிறோம். ( படம் பார்த்ததில்லை என்றாலும் பாடல்கள் சில பார்த்திருக்கிறேன். ) இப்படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் இதற்கான ரசிகர்கள் அநேகம் பேரை அறிவேன். இனிமையாய் இருக்கும் எதையும் விரும்புவதுதானே மனித இயல்பு.

அந்த வருடம் ராஜ ராஜ சோழனின் 1027 ஆம் ஆண்டு சதயத் திருவிழா வேறு கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்தது. கோயில் தொல்லியல்துறையின் பராமரிப்பில் இருப்பதால் அதன் சாந்நித்தியம் எல்லாம் சிறுவயதில் உணர்ந்ததோடு போய்விட்டது. இதுவும் தாராசுரம் கோயில் எல்லாம் சுத்தமாக இருக்கின்றன ஆனால் நமக்கு பூக்கள், கற்பூரம், நெய்தீபம், அபிஷேக திரவியங்கள், அர்ச்சனைப் பொருட்கள் அதன் பழமைத்துவம் என்று ஏதோ வாசனை மிஸ்ஸிங். அதனால்  கோயிலுடன் கூடிய அந்தப் பழைய ஆத்மார்த்தம் போய்விட்டது. கோயில் என்பதும் ஒரு உள்ளுறை உணர்வு.

அங்கே விஜயதசமியின் போது எடுத்த சில படங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.

{கோவில்களிலும் ரயில்வே & பஸ் நிலையங்களிலும் ஒரு பயம் தரும் விஷயம் என்னன்னா அங்கங்கே பைரவர்கள் சுதந்திரமாக உலாவி நம்மைப் பயப்படுத்துகிறார்கள். அவ்வப்போது உரக்க திடீரென்று குரைத்துத் தள்ளுகிறார்கள்.குறுக்கும் மறுக்கும் ஓடுகிறார்கள். இதற்கு அறநிலையத்துறை ,தொல்பொருள் துறை , ரயில்வே  நிர்வாகம் எல்லாம் ஏதாவது செய்தால் தேவலாம். }

கோயில் பற்றிய பல்வேறு தகவல்கள் விக்கிபீடியாவில் கொட்டிக் கிடக்கின்றன. இது சதுரவடிவில் அமைக்கப்பட்ட கருவறைக் கோபுரம்

வியாழன், 13 ஜூன், 2019

அமேஸானில் எனது இருபத்தியோராவது மின்னூல்.

எனது இருபத்தி ஒன்றாவது நூல்,”ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/- மட்டுமே

https://www.amazon.in/dp/B07SBH9ZK4

காங்கையும் கண்ணாடி வளையங்களும்.

2221. ஜாம்பவானும் சாம்பனும்

2222. நெருப்புச் சட்டியில் இருந்து என்னை ஃப்ரிட்ஜுக்குள் போட்ட மாதிரி இருக்கு. ஜில் ஜில் பெங்களூரு

புதன், 12 ஜூன், 2019

செல்லாத பணம் – ஒரு பார்வை.


செல்லாத பணம் – ஒரு பார்வை.

வரதட்சணைக் கொடுமையாலோ சந்தேகத்தின் அடிப்படையிலோ, தீக்குளித்து இறக்கும் பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்த இக்கதையைப் படித்ததும் அவற்றின் தீவிரம் புரிந்தது.

இமையத்தின் மற்ற நூல்களை நான் படித்ததில்லை. சென்ற வருடம் காரைக்குடியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மரப்பாச்சி அரங்கத்தில் இந்நூலை வாங்கி வந்தேன். மிகை கற்பனை, இயற்கை வர்ணனைகள், காதல் ரசங்கள் ஏதுமின்றி யதார்த்தத்தை உள்ளது உள்ளபடி நிகழ்வுகளின் வழியாகவே சொல்லிச் சென்றிருக்கிறது இக்கதை. கதாநாயகி ரேவதி மட்டுமே ஒருமுறை மனதுக்குள் பேசுகிறாள், கனவு காணுகிறாள் அவ்வளவே.

செவ்வாய், 11 ஜூன், 2019

பெடலிங்க் குதிரையும் ஏஜ் ஆஃப் எம்பயர்ஸும்.

2201. ஜென்சியின் குரலில் நிறம் மாறாத பூக்கள் பாடலில் ராதிகா அணிந்ததுபோல் ஃப்ரில் வைத்த மாக்ஸி அணிந்திருக்கிறேன்.மலேஷியாவில் இருந்து சபாபதி மாமா வாங்கி வந்தது :) ப்ரில் வைத்த ஜெர்சி பாவாடைகள், டபுள் நெட்டட் டாப்ஸ், சாட்டின் ஹவுஸ்கோட் எல்லாம் அப்போதைய ஃபேஷன், இப்ப விளம்பரங்களில் கையில் ஃப்ரில் வைத்த ப்ளவுஸஸ். :) பேஷன் திரும்பிருக்குபோல :)

2202. பெடலிங் குதிரையில் பெரியம்மா பேரன்


திங்கள், 10 ஜூன், 2019

நமது மண்வாசம் ஐந்தாவது ஆண்டு தொடக்க விழாவில் மஞ்சளும் குங்குமமும் வெளியீடு.

எனது பத்தாவது நூலான ”மஞ்சளும் குங்குமமும் ” நமது மண்வாசம் இதழின் ஐந்தாவது ஆண்டுத் தொடக்க விழாவில் வெளியிடப்படுகிறது. மதுரையில் 10.6.2019, திங்கட்கிழமையன்று காலை 10 மணிக்கு பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடாக எனது நூல் மலர்கிறது.

சனி, 8 ஜூன், 2019

அவள் விகடனில் அசத்தல் அப்பாக்களும் அன்பு மகள்களும். ( அப்பா ரொம்ப ஸ்பெஷல் )

அவள் விகடனில் அசத்தல் அப்பாக்களும் அன்பு மகள்களும்.

அவள் விகடனின் நிருபர் தினேஷ் இந்தத் தலைப்பில் பேட்டி எடுத்து இருந்தார். அப்பாவைப் பற்றிப் பொதுப்படையாகப் பகிர்ந்திருந்தேன். அதில் நான் கூறியதில் அழகானதை எடுத்துப் போட்டிருக்கிறார். அன்பும் நன்றியும் தினேஷ் & அவள் விகடன். என் கூட இருக்கும் எழுவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

வெள்ளி, 7 ஜூன், 2019

மைசூர் அரண்மனை. மை க்ளிக்ஸ். MYSORE PALACE. MY CLICKS.

பெங்களூரில் இருந்தபோது மைசூருக்கு ஒருமுறை சென்று வந்தோம். தசராவின் போது பெருங்கூட்டம் இருக்குமாம். எப்போதுமே போக வாய்க்கவில்லை.

பள்ளிப்பருவத்தில் கேரளா மைசூர் சுற்றுலா சென்று வந்திருந்தாலும் தற்போதும் ஒரு தரம் சென்று பார்த்துவந்தோம். அதே பிருந்தாவன், அதே அரண்மனை, அதே கோட்டை கொத்தளங்கள். செல்ஃபோன் காலமென்பதால் இன்னும் கெடுபிடியும் செக்யூரிட்டி செக்கும் ஜாஸ்தி . அங்கே இருக்கும் லாக்கரில் செல்ஃபோன்களை வைத்துவிட்டுச் செல்லவேண்டும்.


வியாழன், 6 ஜூன், 2019

காதல் பொதுமறை – ஒருபார்வை.


காதல் பொதுமறை – ஒருபார்வை.

அமீரகத்தில் தமிழ்த்தேர் உலாவரக் காரணமானவர் காவிரிமைந்தன். கவியரசு கண்ணதாசன் பற்றி இரு நூல்கள் வெளியிட்டிருக்கிறார். இவரது நூலான காதல் பொதுமறை காதலர் தினத்தன்று எனது காதல் வனம் நூலோடு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்பட்டது.

இவர் எழுதிய நெறிபிறழாக் காதல் கடிதங்களின் /கட்டுரைகள் /கவிதைகளின் தொகுப்பு இந்நூல். காதல் வேதம் என்பதால் பொதுமறை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்நூலில் 143 கடிதங்கள் / கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதென்ன 143 என்ற கணக்கு .  அது I LOVE YOU வின் கணக்காக இருக்கலாம். எல்லாம் ஒரு யூகம்தான் J

புதன், 5 ஜூன், 2019

அழகப்பர் முன்னாள் மாணவர் பூங்கா. ALAGAPPA ALUMNI PARK.

ஒரு மாலை நேரம் இந்தப் பூங்காவுக்குச் சென்று வந்தோம். அழகப்பா கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அமைத்த பூங்கா இது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5. 30 மணிக்கு இப்பூங்காவின் திறப்புவிழா நடைபெற்றுள்ளது.

இது மேலாண்மையியல் வளாகத்தின் எதிர்ப்புறம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டில் கோட்டையூர் ஸ்ரீராம் நகர் செல்லும் பாதையில் ஸ்ரீ ப்ரசன்ன மஹாலின் எதிர்ப்புறம் ரயில்வே ட்ராக்கை ஒட்டி அமைந்துள்ளது.

அப்போதைய துணைவேந்தர் சுப்பையா அவர்கள் தலைமையேற்க பேராசிரியரும் முன்னாள் மாணவருமான ஆதிச்சபிள்ளை அவர்கள் திறந்துவைத்திருக்கிறார்கள்.

காரைக்குடியிலேயே மிகப் பிரம்மாண்டமான பூங்கா. உள்ளே செல்ல எண்ட்ரன்ஸ் டிக்கெட் உண்டு !. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு நடைபாதை பாவப்பட்டுள்ளது. வாருங்கள் பார்ப்போம்.

எல்லாப் பூங்காக்களையும் போல் இங்கேயும் ப்ளேகிரவுண்ட் உள்ளது.

செவ்வாய், 4 ஜூன், 2019

துடுக்குத்தனத்தால் ஒளியை இழந்த சூரியனும் சோமனும். தினமலர் சிறுவர்மலர் - 18.

துடுக்குத்தனத்தால் ஒளியை இழந்த சூரியனும் சோமனும்
எப்பவும் எங்கயும் நம்ம துடுக்குத்தனம் செல்லுபடி ஆகாது. அகந்தையும் ஆணவமும் விளைவிக்கும் அவமானத்தை துடுக்குத்தனமும் விளைவிக்கும். சாதாரண மக்கள் மட்டுமில்ல. இந்த உலகத்துக்கே ஒளி கொடுக்குற சூரியனும் சோமனும் கூட துடுக்குத்தனமா செயல்பட்டதால தங்களோட ஒளியை இழந்தாங்க. அப்புறம் தவறை உணர்ந்து திருத்திக்கிட்டதால திரும்ப ஒளி பெற்றாங்க. அது என்ன கதைன்னு பார்ப்போம் குழந்தைகளே.
காசியப முனிவர் அதிதி தம்பதிகளின் புதல்வர்தான் சூரியன். இவருடைய ரதத்தை அருணண் என்பவன் செலுத்தி வந்தான். ஆனால் இவன் அங்கஹீனம் உள்ளவன். அதே சமயம் அன்பும் பக்தியும் கொண்டவன்.
இவன் ஒரு முறை சூரியனிடம் கைலாயம் சென்று சிவனை தரிசிக்க வேண்டும் என்ற தன்னுடைய நியாயமான கோரிக்கையைத் தெரிவித்தான். அதற்காக சூரியனிடம் அனுமதி கேட்டான். ஆனால் சூரியனோ அருணனின் உடற்குறையைச் சொல்லி கிண்டலடித்து ”நீயெல்லாம் எங்கே கைலாயம் செல்லப் போகிறாய், சிவனை தரிசிக்கப் போகிறாய்” என்று எள்ளினான்.

திங்கள், 3 ஜூன், 2019

காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.

இது மட்டும் காரைக்குடியில் உள்ள வீடு. மற்றவை கானாடுகாத்தானில் உள்ள வீடுகள். 

தற்போதுதான் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் கீழ்த்தளம் மட்டும். நிலைக்கு மேலே உள்ள சிற்பத்தொகுதியைப் பாருங்கள். கண்கவர் காட்சி. 

திருவாச்சியின் கீழ் தாமரையில் பொலியும் கஜலெக்ஷ்மி. பக்கத்தில் இரு பணிப்பெண்கள் சாமரம் வீச மேலே எட்டுக் காவல் பெண்கள் நிற்பது கொள்ளை அழகு. இவர்கள் போக மேங்கோப்பின் இருபுறமும் பெண் தெய்வங்கள் காவல் காக்கிறார்கள். 

இடி மின்னல் தாக்காமலிருக்க வீட்டின் மேலேயே கோபுரங்களில் இருப்பது போல் சாணி, வரகு, சாமை தாங்கிய இடிதாங்கிக் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. சனி, 1 ஜூன், 2019

வெட்டாட்டம் – ஒரு பார்வை.


வெட்டாட்டம் – ஒரு பார்வை.

சுஜாதா, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், போன்ற எவர் மாதிரியும் இல்லாத புதுமாதிரிக் கதை சொல்லி ஈர்த்திருக்கிறார் ஷான். ஏகப்பட்ட அரசியல் வில்லங்கப் படங்கள் பார்த்திருப்போம். இது ஹைடெக் இண்டர்நெட் வகை. முதலில் வெட்டாட்டம் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தோன்றியது இதற்குப் பொருத்தமான ஆள் விக்ரம் அல்லது அரவிந்தசாமி. இந்த வருண் கேரக்டரின் முழு வலுவையும் தாங்கும் சக்தி அவர்கள் இருவருக்கே உள்ளது.

மாமனிதர்கள்.மை க்ளிக்ஸ். GREAT PERSONALITIES. MY CLICKS.

பெங்களூரு ஷில்பாராமம் எதிரில் கம்பீர நடை போடும் இந்திராகாந்தி அம்மையார்.


வெள்ளி, 31 மே, 2019

இருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்றவள். தினமலர் சிறுவர்மலர் - 17.


இருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்றவள்

சிலர் தம்மிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதில் துளிக்கூடப் பிறருக்குக் கொடுக்க மாட்டார்கள். மாடி வீடு, மகிழுந்து, மாடு மனை என்றிருப்போரும் கூட அடுத்தவருக்குக் கிள்ளிக் கூடக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஒரு ஏழைப் பெண்மணி , எளிய ஓட்டுவீட்டில் வசித்தவள் தன்னிடம் இருந்த ஒரே ஒரு பொருளை உணவாக தானம் கொடுத்தாள். அதனால் அவள் பெற்றதோ அவள் வறுமையை நீக்கும் வளமான தங்கமழை. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா குழந்தைகளே. வாருங்கள் அவள் கதை பற்றிப் பார்ப்போம்.
அது நான்காம் நூற்றாண்டுக்காலம். கேரளாவில் காலடி என்னும் சிற்றூரில் ஆர்யாம்பாள் சிவகுரு தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஆதி சங்கரர். தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு கோவிந்த பகவத் பாதரிடம் சீடராகச் சேர்ந்தார்.
இளம் துறவிகள் தங்கள் குருமார்களுக்கு சேவை செய்ய வேண்டும். வேதம், தத்துவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் துறவியாயிருப்பதால் தனக்கான உணவை அன்றன்றே உஞ்சவிருத்தியாகப் பெற்று அன்றைக்கே உண்டு விட வேண்டும். எதையும் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடாது.

வியாழன், 30 மே, 2019

புதன், 29 மே, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.


1221. நட ஒட - நடை உடை என்பதைப் பேச்சுவழக்கில் இப்படிச் சொல்லுவார்கள்.

1222. பொறகாடி - பின்னாடி, பின்னால், அதன் பிறகு, ஒருவருக்குப் பின்னால் பேசுதல், பின்னால் நடப்பதைக் குறித்தல்.

1223. சிஞ்சமிருதம் - ஒருவருக்கு /அவர் சொல்வதற்கு ஆமாம் சாமி போடுதல், ஜால்ரா அடித்தல். காக்கா பிடித்தல், ஐஸ் வைத்தல். சோப்புப் போடுதல். 

1224. தோது - சரிக்குச் சரி. தோது என்றால் பொதுவாக சீர் செனத்தியில் வரும். பெண்ணுக்கு என்ன தோது கொடுப்பார்கள் என்றால் மூணும் ஒண்ணும், ஐஞ்சும் ரெண்டும், பத்தும் மூணும் எனக் குறிப்பார்கள். சிலர் கோடிக்கணக்கில் கூட கொடுப்பார்கள். இதில் முதலில் சொல்வது தொகை, பின்னே சொல்வது நகை. மூன்று லட்சம் ஒரு வைர நகை, ஐந்து லட்சம், இரண்டு வைர நகை, பத்து லட்சம், மூன்று வைர நகை. ( வரதட்சணைதான். - இப்ப இதெல்லாம் கிடையாது.  பெண் வீட்டில் கொடுப்பதை பெண் அல்லது பையன் & பெண் பெயரிலேயே போட்டு விடுகிறார்கள், போட்டு விடுகிறோம் . நகை பெண்ணுக்குக் கொடுப்பது, அவள் போட்டுக்கொள்வது என்பதால் அதிலும் இப்போது டிமாண்ட் கிடையாது. போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி என இருக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். ) 

செவ்வாய், 28 மே, 2019

ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

தினமணியின் சிறுகதைக்கான ஆறுதல் பரிசைப் பெற  ( நாரத கான சபாவில் சிவசங்கரி கையால் பரிசு வாங்க ) சென்னை சென்றிருந்தபோது ஹோட்டல் சென்னை கேட்டில் தங்க நேரிட்டது.

எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிரிலேயே உள்ளது இந்த ஹோட்டல். இருவர் தங்க 1300/- ரூபாய் ஒரு நாளைக்கு.

கண்கவர் எக்மோரின் காட்சியைக் கண்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம்.  


டபுள் காட் & பெட், ஏசி, ஹாட்வாட்டர், வைஃபை வசதி இருக்கு. 

வெள்ளி, 24 மே, 2019

ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.


ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.

முழுப்பரிட்சை லீவ் விட்டாச்சு. லீவுக்கு எங்கேயெல்லாம் போகலாம்னு ஆராதனாவுக்கும் ஆதித்யாவுக்கும் ஏகப்பட்ட ஆலோசனை. தாத்தாவிடம் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். ”தாத்தா, இங்கே ஒரே ஹாட். நாம குளுகுளுன்னு எங்காவது போலாம். ஷிம்லா, டார்ஜிலிங் மாதிரி”.

”இல்ல கண்ணுங்களா, நாம இந்தவாட்டி என்னோட பால்யகால நண்பன் மகாதேவன் இருக்குற பெங்களூருக்குப் போகப்போறோம். பெங்களூர்ல லால்பாக், கப்பன்பார்க், விதான்சௌதா, மியூசியம் எல்லாம் பார்த்துட்டு மைசூர் போய் அரண்மனையும் பார்த்துட்டு வரப்போறோம் “

திருக்கடையூரில் அம்மா அப்பாவின் விஜயரத சாந்தி - 2.

ஹோமம் முடிந்து இந்தக் கும்பங்களை பிரதட்சணமாக பிரகாரங்களில் எடுத்து வரவேண்டும்.  சிவன் சந்நிதியின் பின்புறம் கிழக்குப் பக்கமாக இந்த கும்பம் சொரிதல்/அபிஷேகம் நடைபெறுகிறது.

முதலில் ஹோமம் செய்வித்த வேதியர் கும்பம் சொரிதல். இவர் அபிஷேகித்ததும் மற்றையோரும், பெண் மக்கள், பிள்ளை பெண்டுகளும் , கடைசியாகப் பெற்றோருக்குத் தலைமகனும் மருமகளும் தம்பதி சமேதராகக் கும்பம்சொரிய வேண்டும்.

இந்த சல்லடை போன்ற அமைப்பு நீரை சீராக வடியச் செய்ய உபயோகப்படுகிறது.

வியாழன், 23 மே, 2019

திருக்கடையூரில் அப்பா அம்மாவின் விஜயரத சாந்தி - 1 .

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி சந்நிதியில் நித்தமும் ஆயுஷ்ஹோமங்கள், ம்ருத்யுஞ்செய ஹோமங்கள், உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம் என ஒரே கோலாகலம்தான். கனகாபிஷேகம் , மகுடாபிஷேகம் ஆகியனவும் இருக்கலாம் தெரியவில்லை.

கோவிலின் பிரகாரமெங்கும் பிறந்த நட்சத்திரம் கொண்டாடும் தம்பதிகள்.

மார்க்கண்டேயனின் பதினாறாம் வயதின்போது அவருக்கு ஆயுள் முடிந்துபோக எமன் கவர்ந்து செல்ல வருகிறார். அப்போது மார்க்கண்டேயர் சிவனுக்கு பூஜை செய்து சிவலிங்கத்தை வாரியணைக்க அதிலிருந்து சிவன் தோன்றி எமனை எட்டி உதைத்து மார்க்கண்டேயரை சிரஞ்சீவி ஆக்கினார் என்பது ஸ்தல வரலாறு.  இவர் கால சம்ஹார மூர்த்தியாகவும் எழுந்தருளி இருக்கிறார். இதனால் இங்கே இந்த ஹோமங்கள் , சாந்திகள் செய்வது சிறப்பு.

அமிர்தமே லிங்கமாக அமைந்ததால் இங்கு இருக்கும் மூலவர் அமிர்த கடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர். அம்மை அபிராமி. அம்மனின் எழிலில் மூழ்கியிருந்த அபிராமி பட்டர் அமாவாசையை பௌர்ணமி என்று அரசனிடம்  கூறிவிட்டார். அதனால் அபிராமியை அந்தாதியால் பாட அவள் தன் தாடங்கத்தை எறிந்து அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருத்தலம். இன்னும் பல்வேறு சிறப்புக்களும் உண்டு.

இங்கே சென்ற ஆண்டு அம்மா அப்பாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா நடந்தது. நான், அப்பா, அம்மா மூவர் மட்டுமே சென்றுவந்தோம். அந்நிகழ்வின் தொகுப்பாக இப்புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

இங்கே நவக்ரஹ சந்நிதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஸ்தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் அமிர்த புஷ்கரணி, கால தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், மூவர் தேவாரம் பாடிய திருத்தலம்.  ( மாணிக்கவாசகர் பாடவில்லை ).

கோவில் வாசலில் வேதியர் கூறியபடி  முதலில் மாலை மாற்றிக் கொண்டார்கள் அப்பாவும் அம்மாவும்.


தாய்வீடு – ஒரு பார்வை.


தாய்வீடு – ஒரு பார்வை.

தனித்திசை தேர்ந்து  பயணப்படும் கவிதைகள் ராஜசுந்தரராஜனுடையவை. இசையும் தாய்மையும் சேர்ந்தே பயணிக்கின்றன. பல்வேறு கவிதைகளில் இசையே பாடுபொருளாகவும் இயக்கமாகவும் இருக்கிறது.  வாழ்வுக்கான தேடலும் இழந்துவிட்ட உறவுகளுக்கான ஏக்கமும் தொற்றி இருக்கின்றன அநேகக் கவிதைகளில்.

அம்மா பற்றி

சாவிலும்கூட
தாயோடு வருவன
அடிவயிற்றுத் தழும்புகள்.

என்ற இக்கவிதை மிகச் சிறப்பானது. காண்கின்ற அனைத்துப் பெண் உருவங்களிலும், மனைவியிலும், தான் தேடிச்சேரும் பெண்ணிலும் கூட அம்மாவைத் தேடி ஏங்கும் குழந்தைமனம் புலப்படுகிறது. தாய் வீடு என்ற கவிதையில் “ ஒளியா, உருவா, நிழல் செய்வதெது? “ என நம்மையும் தேடல் தொற்றுகிறது.

புதன், 22 மே, 2019

சில மொக்கைக் குறிப்புகள் :- 13

**இரைக்காகக் கண்டம்விட்டுக் 

கண்டம் தாண்டுகின்றன பறவைகள். 

இறகைக் காயவைக்க தீபகற்பம்

தேடிக்கொண்டிருக்கிறாய் நீ.


**நான் பூமியாய்த் தவழ்கிறேன்.

நீ வானமாய் ஏந்துகிறாய்

நிலவும் சூரியனும் சவலையாகின்றன.


**போகவா போகவா என

எத்தனை முறை அசையாமல் கேட்பாய்

காலை எடுத்துவைத்தால்தானே 

பயணம் நிகழும்.


**முட்களைத் தாண்டியும்

பூத்துக்கொண்டுதான் இருக்கிறது பூ.

வண்ணத்துப் பூச்சிதான்

வழிமாறிவிட்டது. 

செவ்வாய், 21 மே, 2019

செய்.. செய்யாதே - ஒரு பார்வை.

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்ட 34 கேள்விகளும் அவற்றுக்கான சத்குருவின் பதில்களும் அடங்கியது இந்நூல். சுபாவின் எழுத்தாற்றல் மேலும் மெருகூட்டுகிறது இந்நூலை. ஓரிரு கேள்விகளுக்கு சத்குரு அளித்துள்ள பதில்கள் எனக்கு தெளிவான பதிலாகத் தோன்றவில்லை எனினும் மொத்தத்தில் சிறந்த புத்தகம்தான்.

வல்லாரை சரஸ்வதியும் வெற்றிலை வேந்தனும்.

வெய்யிலைத் தாக்குப்பிடிக்க உணவில் கொஞ்சநாளைக்குக் கீரைகள் எடுத்துக் கொள்ளுங்களேன். பதினோரு வகையான கீரைகளையும் அவற்றின் மருத்துவப் பயன்களையும் கொடுத்துள்ளேன். மேலும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளன. 

1. அரைக்கீரை :- கடைந்தும் கூட்டாகவும் சாப்பிடலாம். செரிமானம், மூளைவளர்ச்சி, பத்தியம், குளிர்ச்சி, உடல்வலி அகற்றி உடல் வலுவுண்டாக்கும். வாய்வுக் கோளாறு, மலச்சிக்கல் அகற்றும். குருதித் தூய்மை உண்டாக்கும். 

#அரைக்கீரை மசியல்.2. தூதுவளை:- ஈளை, இருமலைப் போக்கும்.

திங்கள், 20 மே, 2019

இரணிக்கோயில் ஆக்ரோஷச் சிம்மங்களும் சிம்ம யாளியும். மை க்ளிக்ஸ். IRANIKKOIL , MY CLICKS.

நூற்றுக்கணக்கான ஆக்ரோஷச் சிம்மங்களை நீங்கள் இரணிக்கோயில் முழுவதும் தரிசிக்கலாம். பிரகாரத் தூண்கள் தோறும் எக்காளமிடும் சிம்மங்கள்.

ஒரு சிலவற்றில் ஒற்றையாகவும் ஒருசில தூண்களில் நாற்புறங்களிலும் கவினுற செதுக்கப்பட்டுள்ள இவற்றின் கோபமுகம் சிலசமயம் சாந்தமாகவும் சில சமயம் உக்கிரமாகவும் அச்சமூட்டுவதாகவும் உள்ளது.

வக்கிர அமைப்பில் அமைந்த கோவில் இரணிக்கோவில் இதுபற்றி முன்பே பல இடுகைகள் எழுதி  உள்ளேன். இப்போது தனியாக சிம்மங்கள் பற்றி.

ஏனெனில்  இரணியனை அழித்த உக்கிர நரசிம்மரை சரபேஸ்வரராக ஈஸ்வரன் சாந்தப்படுத்திய ஸ்தலம் இது. எனவே அசுரனை வதைத்த உக்கிர சிம்மங்கள் பொலிந்திருப்பதில் ஆச்சர்யமில்லை.


ஞாயிறு, 19 மே, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.

1201.சாத்து ( வணிகர்) - வியாபார நிமித்தம் இடம் பெயர்ந்து செல்லும் குழுவினர். எனவே சாத்தப்பன் என்ற பெயர் இங்கே உண்டு. சாத்தையனார் என்பதும் ஐயனார் பெயர். ஊனையூர் கோவிலில் உள்ள சாமிக்கு முத்துவெள்ளைச் சாத்தையனார் என்று பெயர். 

1202. செலவு நடை - நடைமுறைச் செலவுகள்/ தினசரிச் செலவுகள் / ஒரு வருடச்செலவு / செலவானவைகளைக் குறிப்பெடுத்தல்.  

1203. மேலாள், அடுத்தாள், சமையலாள், எடுபிடிப் பையன்கள் - சைகோன், மலாயா, சிங்கப்பூர் போன்ற ஊர்களில் வட்டிக்கடைக் கிட்டங்கியில் வேலை செய்தோர். மேலாள் மேனேஜர் போன்ற பதவி, அடுத்தாள் அதற்கு அடுத்த உத்யோகமான கணக்குவழக்குப் பார்ப்பவர் ,  சமையலாள் இவர்களுக்கு சமையல் செய்து கொடுப்பவர், எடுபிடிப்பையன்கள் இவர்கள் வட்டிப் பணம் வசூல் செய்யப் பணிக்கப்பட்டவர்கள். கிட்டங்கியிலேயே வசிப்பார்கள். காலையில் பெட்டியடியை சுத்தம் செய்வதும் இறைவன் திருவுருவங்களைத் துடைத்து பூமாலை பாமாலைகளால் ( திருப்புகழ்) தொழுது, தினப்படி நடைமுறைச் செலவுகளை அடுத்தாளிடம் ஒப்புவித்து பின் கிஸ்தி ( தினப்படி வட்டி ) வசூலுக்குச் செல்வார்கள். 

சனி, 18 மே, 2019

ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 9.


ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 9.

தீபாவளிக்காகப் பட்டாசுக் கடைகள் நகரெங்கும் திறந்திருந்தன. புத்தாடைகளும் இனிப்பு வகைகளும் விற்றுத் தீர்த்துக் கொண்டிருந்தன. ஒவ்வொருவர் வீடுகளில் இருந்தும் அதிரசம், முறுக்கு, லட்டு, மைசூர்ப்பாகு போன்றவை செய்யும் எண்ணெய் வாசமும் வெல்லப்பாகின் மணமும் வந்து கொண்டிருந்தன.

“குலோப் ஜாமுன் மட்டும் செய்திடு. என் ஆஃபிசிலேயே ஸ்வீட்ஸ் டப்பா கிஃப்ட் கிடைக்கும். மத்த ஸ்வீட்ஸெல்லாம் அதிலேயே இருக்கும். அதுனால செய்ய வேண்டாம்.” என்றான் ராஜன்.

”தீபாவளிக்கு எண்ணெய்ப் பலகாரம் செய்யணும். அடுப்புல எண்ணெய்ச் சட்டி வைக்கணும். அதுனால இட்லியும் அரைச்சுவிட்ட சாம்பாரும் போட்டு வடையும் செய்திடுறேன்"  என்றாள் ரம்யா. 

”சரி பசங்களுக்கும் நமக்கும் இன்னிக்கு ட்ரெஸ் வாங்கப் போவோம். அப்பா நீங்களும் ரெடியா இருங்க” என்று கூறியபடி அலுவலகம் புறப்பட்டான் ராஜன்.

புதன், 15 மே, 2019

கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.

வேர்ல்ட் ட்ரேட் செண்டர், எமிரேட்ஸ் டவர்ஸ், ஃபைனான்ஷியல் செண்டர், துபாய் மால், புர்ஜ் கலீஃபா, புர்ஜ் அல் அராப்  ( இதை காரில் சென்று பார்த்தோம் )  பிஸினஸ் பே, துபாய் அட்லாண்டிஸ் , பாம் ஜுமைரா ஆகியவற்றின் அழகைக் காண மெட்ரோவில்தான் போகவேண்டும்.

ஸ்கை ஸ்க்ராப்பர்ஸ் எனப்படும் மதினாத் ஜுமைரா, மற்றும் புர்ஜ் கலீஃபா கட்டாயம் காணத்தகுந்தவை. இவை செல்லும் மெட்ரோ ரயில் பாதை ஃபேண்டம் காமிக்ஸில் வரும் கௌதம் சிட்டியை ஒத்திருக்கிறது.

துபாய் மெட்ரோவில் புறப்பட்டு எமிரேட்ஸ் விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டிஸ்/ புர்ஜ் அல் அராப் வரை சென்றதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

இந்த புகைப்படங்கள் 2009 இல் எடுக்கப்பட்டவை. :) இப்போதுதான் ப்லாகில் பகிர்கிறேன். ( என்னே சுறுசுறுப்பு ). இப்போது இங்கே சென்னை,ஹைதை, பெங்களூருவிலும் மெட்ரோ சர்வீஸ் வந்துவிட்டது.


மிக மிக பிரம்மாண்டமான எமிரெட்ஸ் விமான நிலையம்.

செவ்வாய், 14 மே, 2019

1987 காதல் கடிதம் !


அன்புள்ள, ஆசையுள்ள, இதயங்கவர்ந்த, ஈதல் குணம் நிறைந்த, உள்ளங்கவர்ந்த ( என்), ஊருக்கெல்லாம் உழைப்பவளான, என்னுடைய, ஏங்கவைக்கும் ( என்னை ), ஐம்புலன்களிலும் நிறைந்திருக்கும் ( என்னுடைய ), ஒருவனை ( என்னை)யே நினைத்திருக்கும், ஓட்டைவாய் தேனு பொம்மிக்கு,

நான் இங்கே என் நினைவுகள் அங்கே.

எனக்கும் உன் ஞாபகமாகவே இருக்கிறது. வீட்டில் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் உன் ஞாபகம்.

இன்று ஊர் வந்து சேர்ந்ததும் நமது ரூமுக்குச் சென்று படுக்க எத்தனித்தபோது தனிமை என்னை மிகக் கடுமையாகத் தாக்கியது. நீயில்லாமல் நமது ரூமே வெறிச்சோடிக் கிடந்தது போல் ஒரு தோற்றம்.

கவிதாயினியின் பார்வையில் என் இரு கவிதைகள்.


முபின் ஸாதிகா.. இவங்க எழுதுற கவிதைகளைப் படிச்சா என் மூளை ஸ்தம்பிச்சிடும். நவீன கவிதைகளில் இவங்களை விஞ்ச ஆளே கிடையாது. இவங்க பூக்கோ, மதிப்பீடு எல்லா எழுதுறதப் படிச்சா நாம் எழுதுறதெல்லாம் கவிதையான்னு திகைப்பு வந்திடும்.
இவங்க ஒரு விமர்சனம் எழுதி அனுப்பி இருந்தாங்க. என் இரண்டு கவிதைகளைப் படிச்சிட்டு. அதையே ரெண்டு தரம் படிச்சேன்னா பார்த்துக்கோங்க. நன்றி ஸாதிகா மேம்.

ஒட்டுக் கேட்கும் யந்திரம்..

ஞாயிறு, 12 மே, 2019

சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோமதிஅம்மன் திருக்கோயில்

சங்கரன் கோவிலுக்குக் செல்லும் பாக்கியம் கிட்டியது. அதோடு அதாக அது ஒரு ஆகஸ்ட் மாதம் என்பதால் ( ஆடிமாதம் - ஆடித் தபசு ) புஷ்பப் பாவாடை வேண்டுதல்களையும் தரிசிக்க முடிந்தது. இங்கே பிரகாரத்தில் உள்ள புற்று மண் விசேஷம். பதினோரு நிலை கொண்ட ராஜகோபுரம் கம்பீரம். சங்கரனும் நாராயணனும் இணைந்து சங்கர நாராயணராகக் காட்சி அளித்த தலம். அம்பாள் ஊசிமுனையில் ஈசனுக்காகத் தவமியற்றிய ஸ்தலம்.
இறைவன் சங்கரலிங்க ஸ்வாமி, இறைவி கோமதியம்மன். இருவருக்கும் தனித்தனிச் சந்நிதிகள், தனித்தனிப் பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மஹா மண்பபங்கள். பிரம்மாண்டம்.

வெள்ளி, 10 மே, 2019

போக்கும் ப்ளாக்கும்

2181. எனது இருபதாவது நூல்,”கம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/- மட்டுமே. :)

கம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்: KAMBAN VIZHAVUM KAMBAN PATRIYA NOOLGALUM (Tamil Edition)

https://www.amazon.in/dp/B07R5CWWRH

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

///ச. கைலாசபதியின் அகலிகையும் கற்பு நெறியும் பல்கோணப்பார்வை. பழைய காப்பியக் கதைகளை நவீனத்துவமாக எழுதிப்பார்ப்பது குறித்து எடுத்துக் காட்டுக்களோடு கூறியுள்ளார். கோவிந்தன் எனப்படும் விந்தன் ( பாலும் பாவையும் – நவீன அகலிகை கதை ) , ஜெயகாந்தன் ( அக்கினிப் பிரவேசம் ) ஆகியோர் புதுமைப் பார்வையில் படைத்திருப்பதை ஐரிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் மற்றும் அமெரிக்க நாடகாசிரியர் ஓநீல் ஆகியோரின் எழுத்துக்களோடு ஒப்புமைப் படுத்துகிறார்.
கருத்து முதல் வாதம், வர்க்க சமுதாயம் தோன்றிய பின் பெண்ணினம் பெற்ற இடம். , ஆணின் யதேச்சதிகாரம், தாயுரிமையை ஒழித்துத் தந்தை உரிமையைப் புகுத்தியது, ஆண் தலைமை, அரசியல் அதிகாரம், மத அதிகாரம், வம்ச அதிகாரம், ஆண் அதிகாரம் ஆகியவற்றைச் சாடுவதோடு சாப விமோசனம் பெற பெண்ணுக்குத் தொழிலோ உத்யோகமோதான் முடிவு என்னும் கருத்தை முன் மொழிகிறார். ///

2182. சீச்சீ ஜீனியா அதெல்லாம் வெஷம் மாதிரி புளிக்கும். ஃப்ரெஷா காச்சுன பசும்பால்ல ஃப்ரெஷா எடுத்த ஃபில்டர் டிக்காக்‌ஷன் மட்டும் போட்டு சாப்பிட்டு பழகுங்க.
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ். இந்த ஜீனி எல்லாம் அந்நிய நாட்டு இறக்குமதி சதி :) ;) :p

புதன், 8 மே, 2019

பரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம். தினமலர் சிறுவர்மலர் - 16.

பரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம்
அண்ணன் தம்பி பாசத்துக்கு எத்தனையோ பேரை உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் மாற்றாந்தாய்க்குப் பிறந்து தன் சகோதரன் மேல் அதீத பாசம் வைத்து அவன் வராததால் தீப்பாயத் துணிந்தவனை நீங்கள் எங்கேனும் கண்டதுண்டா. இல்லைதானே அப்படிப்பட்ட பாசக்காரப் பரதன் என்னும் தம்பியைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் குழந்தைகளே இன்று.
அயோத்தி அரண்மனையில் ஒரே மக்கள் வெள்ளம். அமைச்சர்களும் அரச மாதாக்களான கைகேயி கோசலை சுமித்திரை ஆகியோரும் பரிதவித்துப் பார்த்திருக்கிறார்கள்.

செவ்வாய், 7 மே, 2019

சித்திரசபையின் சித்திரக் கடவுள்.

சிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் நான்கை நான் தரிசித்திருக்கிறேன்.

சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருவாலங்காடு ரத்தின சபை, திருக்குற்றாலம் சித்திர சபை ஆகியன. திருநெல்வேலி தாமிர சபையை எப்போது தரிசிக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை.

தென்காசிக்குச் சென்றபோது சித்திரசபையை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இக்கோயில் திருக்குற்றாலநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அருகிலேயே இன்னொரு குற்றாலநாதர் கோயிலும் இருக்கிறது.
இது தெப்பக்குளம்.

இது சிவன் மார்க்கண்டேயனை யமனிடம் இருந்து காத்த தலம். சிவகாமி அம்மையுடன் திருக்குற்றால நாதர் ஓவியமாகக் காட்சி அளிக்கிறார். இங்கே ஒரே ஒரு சந்நிதியும் பிரகாரமும்தான். அதைவிட அதிசயம் மூலவரிலிருந்து கோஷ்ட தெய்வங்கள் வரை எல்லாமே ஓவியங்கள்தான்.

ஞாயிறு, 5 மே, 2019

கோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்பா. (சம்மர் கேம்ஸ் & காம்ப்ஸ்.)

கோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்பா. (சம்மர் கேம்ஸ் & காம்ப்ஸ்.)
காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்ததும் குழந்தைகளைக் குதூகலிக்க வைப்பவை விடுமுறை நாட்கள். பாட்டி தாத்தா இருக்கும் கிராமத்துக்குச் சென்று இயற்கையோடு இயைந்த வாழ்க்கையும் உடலை வலுவாக்கும் விளையாட்டுக்களும் அவர்களைப் புதுப்பிக்கும்
இன்றோ அவர்கள் சம்மர் கேம்ப்களில் அடைபடும் சிறைப்பறவையானார்கள். அல்லது வீட்டுக்குள்ளேயே வீடியோ விளையாட்டிகளில் சிக்கிய ஆங்கி பேர்ட் ஆனார்கள். முன் காலத்திய விளையாட்டுகள் கூடி வாழ்வதையும் விட்டுக்கொடுப்பதையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்தெடுத்தன. இன்றைய விளையாட்டுகள் தனிமனிதர்கள் இன்னும் தனக்குள் சுருங்கிப் போவதையும் சுயநலத்தையும் தனிமை வெறுமை விரக்தியையும் உருவாக்குகின்றன். ப்ளூவேல் போன்ற சில அபாயகரமான விளையாட்டுகள் மரணம் வரை இட்டுச் செல்கின்றன.
பெருநகரங்களில் வசிப்பவர்க்கு அக்கம் பக்கத்தினரோடு அதிகம் தொடர்பு இருப்பதில்லை. இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளோடு செலவழிக்க நேரம் இருப்பதில்லை. எனவே சம்மர் கேம்ஸ் மற்றும் வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். இதில் அகாடமிக் ஆர்ட், ஸ்போர்ட்ஸ், டெக்னாலஜி, அட்வென்சர், டூர் & ட்ராவல், ட்ரெக்கிங், ஸ்விம்மிங், ட்ரைவிங், ஹார்ஸ் ரைடிங், மிலிட்டரி, டே காம்ப்ஸ், ட்ரெடிஷனல் ஓவர்நைட் கேம்ப்ஸ் ஆகியன அடங்கும். பாரம்பர்யத்தைக் கற்றுக்கொள்ளப் பல்லாயிரம் பணம் கட்டிக் கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சிகளாகும்.

சனி, 4 மே, 2019

சாட்டர்டே போஸ்ட். பத்மகிருஷ் விருதுகளால் பெருமைப்படுத்தும் காம்கேர் கே. புவனேஸ்வரி.

பார்க் கல்லூரியின் மகளிர் மன்றத்தைத் திறந்துவைக்க சிறப்பு விருந்தினராக பார்க் கல்லூரியின் முதல்வராக இருந்த திரு திருமாறன் ஜெயராமன் அவர்களால் அழைக்கப்பட்டிருந்தேன். அந்நிகழ்வு முடிந்த சில நாட்களிலேயே காம்கேர் புவனேஸ்வரி அவர்களையும் அக்கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக மற்றோர் நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் அந்நிகழ்ச்சியும் மிக்க பயனுள்ள்தாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார் முதல்வர் திருமாறன். அதற்கு முன்பே காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் எனக்கு முகநூல் தோழி என்றாலும் அதன் பின் தான் அவருடைய பணிகளை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தேன். 

பொதுநலத் தொண்டும் சமூகத் தொண்டும் மற்றைய நேர்மறைக் கருத்துக்கள் கண்டும் வியந்ததுண்டு. தன்னம்பிக்கைப் பேரரசியான அவரிடம் என் ப்லாகுக்காக நேற்று எழுதித்தரச் சொல்லிக் கேட்டிருந்தேன். உடனே அனுப்பி விட்டார். அவர் தன் தாய் தந்தை பெயரில் விருதுகள் வழங்குவது குறித்து அன்பும் பாராட்டும். நீங்களும் படித்துப் பாருங்கள். அவரது சுயவிவரத்தைச் சுருக்கும் எண்ணமில்லாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறேன். அத்தனயும் முத்து.   

////காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்
Since 1992
ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர்.

வெள்ளி, 3 மே, 2019

ஆபுத்திரனும் அமுத சுரபியும். தினமலர் சிறுவர்மலர் - 15.

ஆபுத்திரனும் அமுத சுரபியும்.
மணிமேகலை எடுக்க எடுக்க அன்னம் குறையாத அமுதசுரபி மூலம் பாரில் பசித்தவர்க்கெல்லாம் உணவிட்டாள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மணிமேகலைக்கு அந்த அமுதசுரபி எப்படிக் கிடைத்தது என்ற விபரம் தெரியுமா. அதற்கு முன்னர் ஆபுத்திரன் என்பவன் அந்த அட்சயபாத்திரத்தை எப்படிப் பெற்றான் அது எப்படி மணிமேகலையின் கைக்கு வந்தது என்பதைப்பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

வியாழன், 2 மே, 2019

சில மொக்கைக் குறிப்புகள் :- 12

**முட்களைத் தாண்டியும்
பூத்துக்கொண்டுதான் இருக்கிறது பூ.
வண்ணத்துப் பூச்சிக்குத்தான்
வழி தெரியவில்லை. :)

**முற்றுப்புள்ளி வைக்க எண்ணுகிறேன்.
அடுத்த வாக்கியத்தைத்
தொடரச் செய்கிறது அது. !

**நீரற்றபோதில்
மணலாவது அள்ளிப்போகிறேன்
என்றைக்காவது சுரக்கட்டும் நீர்

**கொட்டும் உன் வார்த்தை அருவியில்
குருவியாகிறேன்
குளியலாடுகிறது மனது.

சில மொக்கைக் குறிப்புகள் :- 11

**வண்ணத்துப்பூச்சியின்
எண்ணத்துக்கேற்பவெல்லாம்
பூப்பதில்லை பூ.

**நெருப்பை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது வீடு
மெழுகில் மாட்டிய விட்டிலாய் நான்

**உறைந்திருக்கின்றன எழுத்துக்கள்
சில கல்வெட்டுக்களில்.
சில கடல் மணலில்.

**கட்டைவிரல் கேட்கும்
முகநூல் துரோணர்
பின் முகநூல் என்னாகும்
என் கிறுக்கல் இல்லாமல்

சில மொக்கைக் குறிப்புகள் :- 10

**காதலின் தேடலைக் காலம்கடந்து தெரிவிக்கிறது
சுற்றியலைந்து கூடு திரும்பும் புறாத்தூது.

**கண்களை மறைத்துக் கன்னங்களை நனைக்கும் மழையைப் பிடிக்கிறது
தனிமையில் உதிரும் உப்புநீர்ப்பூக்களைச் சரமாகத் தொடுப்பதால்.

**எது வெருட்டுகிறது உன்னை காதலா காமமா முதுமையா பிணியா இறப்பா
எல்லோருக்கும் நிகழ்ந்ததுதானே உனக்கும் காத்திருக்கிறது.
மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ் :)

**நெகிழ்ந்த மனதை விட்டுத் தொலை
என்னை நானே மீட்டுக் கொள்வேன்.

புதன், 1 மே, 2019

சில மொக்கைக் குறிப்புகள் :- 9

**தேடுகிறாயா எனத் தெரிந்துகொள்ளவே
காணாமல் அடிக்கிறேன் என்னை.

**உலகத்து இன்பங்களை
ஒரு தட்டில் வைத்தாலும்
உன் ஒரு பார்வைக்கு ஈடாகுமா


**கோபித்துக் கோபித்துப் போவாய்
கோபத்தில் தத்தளிக்கும் உள்ளம்
பித்தாகும், பித்தாக்கும்
உன் பார்வையின் சுகம் தாங்குமா

கோரமங்களா ஃபோரம் மாலும் மல்லேஸ்வரம் மந்திரி மாலும். FORUM MALL & MANTRI MALL.

ஹோஸூர் ரோட்டில் அமைந்துள்ள  ஃபோரம் மால் பிவிஆர் சினிமாஸுடன் இணைந்தது. ஆங்கிலப் படங்கள் பார்க்க இவையே உகந்தவை.


ஐ மாக்ஸ் தியேட்டர் வசதி என்பதால் கூட்டம் அள்ளும். மிக மிக பிரம்மாண்டமான திரையில் இப்படங்களைக் காண்பது என்பதே அழகான விஷயம்.

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

புல்லா ரெட்டியும் ப்ளட் ரிப்போர்ட்டும்.

2161. அடுத்தவர்களின் சின்னச் சின்னச் சந்தோஷங்களைக் கூட அனுமதிக்காத மனிதர்களுக்கு மத்தியில்தாம் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

2162. உருளைக் கிழங்கையே விதம் விதமாத் தர்றாய்ங்க. இந்த சோறு இட்லி இதெல்லாம் உங்கூருக்கு வந்தா கிடைக்காதாடா.

ப்ரெட்டும் சீஸ் ஸ்ப்ரெட்டும் சாப்பிட பழகிக்கங்கம்மா . டெய்லி ப்ரேக்ஃபாஸ்ட் அதுதான். அப்புறம் தெனம் 5 கிலோமீட்டராவது வாக் போகணும் நீங்க. ஏன்னா இங்கே நிறைய நடக்கணும்.

விசா எடுத்துறாதே . யோசிச்சு சொல்றேன் : D

2163. அதிகம் நடந்தால் பழைய செருப்பும் கடிக்குது :D :D :D
#walk-o-maniac

திங்கள், 29 ஏப்ரல், 2019

உயிர் ஒன்று உடல் இரண்டு. தினமலர் சிறுவர்மலர் - 14.

உயிர் ஒன்று உடல் இரண்டு.
அதென்ன உயிர் ஒன்று உடல் இரண்டு. அப்படி யாரும் இருக்க முடியுமா. இருந்தாலும் எப்படி வாழ முடியும். எப்படி இரு உடலில் ஒரு உயிர் இருக்கும், கேட்கவே விநோதமாக இருக்கிறதல்லவா குழந்தைகளே. அது எப்படி எனச் சொல்கிறேன் கேளுங்கள்.
மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை ஈசன் உண்டு கண்டத்தில் நிறுத்தி உலகைக் காப்பாற்றினார்.
அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், லெக்ஷ்மி, சந்திரன், ஐராவதம், உச்சைசிரவஸ், அமிர்தம் போன்றவை வெளிப்பட்டன. இதில் அமிர்தம் கொண்ட கலசத்தை ஏந்தியபடி தன்வந்திரி வெளிவந்தார். இந்த அமிர்தம் சாகாவரம் கொடுக்கக் கூடியது. இதை வேண்டித்தானே அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள்.
அதனால் அமிர்தம் கிடைத்தவுடன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அதை அடையப் போட்டி ஏற்பட்டது. ஒரே களேபரம். பார்த்தார் விஷ்ணு . உடனே மோகினி அவதாரம் எடுத்து தன்வந்திரியின் கையில் இருந்த அமிர்த கலசத்தைத் தன் கையில் வாங்கி அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதாகக் கூறினார்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

தினமலர் திண்ணையில் விடுதலை வேந்தர்கள்.

தினமலர் திண்ணையில் முன்பே விடுதலை வேந்தர்கள் நூல் பற்றியும் வேலு நாச்சியார் பற்றியும் வெளியாகி உள்ளது.

கடந்த 21. 4. 2019 திண்ணையில் ஏவுகணை நாயகன் என்ற தலைப்பில் விடுதலை வேந்தர்களில் இருவர் பற்றி - ஹைதர் அலி, திப்புசுல்தானின் வீர தீரங்களும் வெளியாகி உள்ளது.

நன்றி திண்ணை, தினமலர் , மதுரை, திருச்சி, சேலம் , ஈரோடு பதிப்பு. & நன்றிகள் திரு. ப. திருமலை சார். 

சனி, 27 ஏப்ரல், 2019

வெண்புரவியில் ஒரு மாப்பிள்ளை அழைப்பு.

காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பம் வாழ்வில் கசக்குமா இல்லை ருசிக்குமா. :) என்ற பாடலை ஹம் செய்துகொண்டிருந்தேன். உண்மையாகவே உறவினர் ஒருவரிடமிருந்து ஃபோன். இருமணம் கூடிய திருமணத்துக்கு வரச் சொல்லி அழைப்பு.

இன்றைய காலகட்டத்தில் ஜாதி மதம் இனம் தாண்டிய திருமணங்கள் பெருகிவிட்டன. கட்டாயத்துக்காக ஒரே ஜாதியில் திருமணம் செய்து  பிரிவதை விட பிடித்த ஒருவரை எந்த ஜாதி மதம் இனமானாலும் திருமணம் செய்து வாழ்நாள் முழுக்க மனநிறைவோடு வாழ வேண்டும் என்பது என் கருத்து.

நிற்க. இப்போது எங்கள் உறவினர் இல்லங்களில் நகரத்தார் திருமணங்களோடு பையன் மற்றும் பெண்ணின் விருப்பத்திற்கேற்ப ரெட்டியார் இல்லத்து மணமகள், மராட்டிய வம்ச மணமகன் ஆகியோர் மணமக்களாக பையன் பெண்ணின் பெற்றோரால் முழுமனதோடு ஸ்வீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். காலத்துக்கேற்ற மாற்றம். ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றமும் கூட.

இவர்/இவள் எனக்கு சகலவிதத்திலும் பொருத்தமானவன்/ள் என்று பையன்/பெண் பெற்றோரிடம் தெரிவிக்கும் துணிவு பெற்றிருப்பது இத்திருமணங்களின் சிறப்பு. வாழ்க மணமக்கள். அத்திருமண வைபவத்தின் ஒரு சில துளிகளைப் பார்ப்போம். ( மறுநாள் இன்னோரு திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் முதல் நாள் நிகழ்வுகளை மட்டும் எடுத்தேன் )

தஞ்சாவூரில் ஒரு உறவினர் திருமணம். நகரத்தார் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. மணமகள் எனக்கு மகள் முறை. மாப்பிள்ளை மராட்டியர். தஞ்சையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே புலம் பெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் திருமணத்தில் மணமகள் தலையில் முந்தானையை முக்காடாக ( சரிகை மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள் ) அணிவித்து அமர வைப்பது வெகு அழகு.


விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

திருச்சி பஸ் ஸ்டாண்டின் எதிர்ப்புறம் பல்வேறு ஹோட்டல்கள் உள்ளன. ராஜ சுகம் என்ற ஹோட்டலின் அருகில் அமைந்துள்ளது இந்த விஜெய் ஹோட்டல்ஸ்!.

மூன்றடுக்கு மாடி உள்ளது. பக்கவாட்டுகளில் எல்லாம் சிங்கிள் ஸ்டேயிங் ரூம். இதுவே 1150/- ரூபாய் டாரிஃப்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

தமிழ் மாத சிறப்புக் கோலங்கள்.

தமிழ் மாத சிறப்புக் கோலங்கள்.

சித்திரை முதல் பங்குனி முடிய சிறப்புக் கோலங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...