எனது அன்பிற்குரிய உறவினரான ( சின்னாயா மகன் வீட்டுப் பேத்தி ) சீதா என்னுடைய நூல்களை அவர் வாழும் நாடான அமெரிக்காவின் நூலகங்களுக்குக் கொடுக்க விரும்பினார். சென்ற சில மாதங்களுக்கு முன்னால் இங்கே தனது தந்தையின் சஷ்டியப்தபூர்த்திக்கு வந்திருந்தபோது ( எனது மாமா திரு. சங்கரன் அவர்களின் மகள்தான் சீதா ) எனது நூல்களைக் கேட்டிருந்தார். அவரைச் சந்திக்க அவகாசமில்லாத காரணத்தால் எனது அம்மாவிடம் நூல்களைக் கொடுத்துவிட்டு ஜெர்மனிக்குச் சென்றுவிட்டேன். அவர் என் அம்மாவிடம் இருந்து பெற்றுச் சென்று வர்ஜினியாவில் உள்ள தமிழ்ப் பள்ளி நூலகத்துக்கு வழங்கி உள்ளார். இங்கே உள்ள நூலகத்தில் 1000 க்குமேல் தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன என்ற தகவலையும் கொடுத்தார்.
அமெரிக்க வாழ் தமிழ்மக்களே. வெர்ஜினியா வாழ் நாட்டுத் தமிழர்களே.. எனது நூல்களை நீங்கள் இருக்குமிடத்திலேயே படித்திடலாம். எனவே லூடோன் கவுண்டி நூலகத்துக்கு வருகை தாருங்கள்.
அமெரிக்க வாழ் தமிழ்மக்களே. வெர்ஜினியா வாழ் நாட்டுத் தமிழர்களே.. எனது நூல்களை நீங்கள் இருக்குமிடத்திலேயே படித்திடலாம். எனவே லூடோன் கவுண்டி நூலகத்துக்கு வருகை தாருங்கள்.
இந்நூல் வெர்ஜினியாவில் உள்ள தமிழ்ப் பள்ளி நூலகத்தில் இந்நூல் வரிசை எண் கொடுத்து அடுக்கப்பட்டவுடன் அதையும் புகைப்படம் எடுத்து அனுப்புவதாகக் கூறி இருக்கிறார்.
அவர் ஃபேர்ஃபேக்ஸ் கவுண்டி என்ற இடத்தில் வசித்து வருகிறார். அங்கே உள்ள நூலகத்தில் வெளியார் நூல்களை அனுமதிக்க மாட்டார்களாம். அதனால் இந்நூல்களைக் கொடுக்க இயலவில்லை. எனவே லூடோன் கவுண்டி என்ற இடத்துக்குச் சென்று கொடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தில் எனது நூல்களைப் பெற்றுக் கொண்டு காட்சிப்படுத்துபவர்கள் ப்ராம்பிள்டன் கம்யூனிட்டியின் வைஸ் பிரசிடெண்ட் திரு. ராம் வெங்கடாசலம் அவர்களும் லைப்ரரி அட்மினிஸ்ட்ரேட்டரும்.
இந்தத் தமிழ்ப் பள்ளியின் நூலகத்தில் இதுவரை ஆயிரம் தமிழ் நூல்கள் சேர்ந்துவிட்டனவாம். அதைக் கொண்டாடும் விதத்தில் இந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி அதை ஒரு விழாவாக எடுப்பித்துக் கொண்டாடப் போகிறார்களாம். அன்றிலிருந்து இந்நூல்கள் உங்கள் பார்வைக்கும் வாசிப்புக்கும் கிடைக்கும்.
எனது புத்தகங்களை அமெரிக்காவரை எடுத்துச் சென்று சிரமப்பட்டு அலைந்து திரிந்து உரிய இடம் தேடிக் கண்டுபிடித்து அளித்து இந்தத் தகவல்களை எனக்கு வாட்ஸப்பில் தெரிவித்த எனது அன்பிற்குரிய அம்மான் மகள் சீதாவுக்கு எனது அன்பான , மனம் நிறைந்த நன்றிகள் & வாழ்த்துக்கள்.
.
அமேஸானில் புக் போட்டிருக்கிறேன். என்று கரடியாகக் கத்தினாலும் அவ்வப்போது முகநூல், டிவிட்டர், ப்லாகில் பிராண்டினாலும் அவ்வப்போது வாரத்தில் ஒன்றுதான் விற்கும். ஆனால் அது யார் எனத் தெரியாது.
ஆனால் எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு. ஜெயராஜ் ஜெயராமன் எனது ”உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்” என்ற நூலை வாங்கியதோடு அதை வாட்ஸப்பிலும் ஸ்க்ரீன் ஷாட்டாக அனுப்பி உள்ளார். அவரது அன்பிற்குத் தலை வணங்குகிறேன்.
படிச்சீங்களா ஜெஜெ . எப்படி இருக்குது நூல் ? அதையும் அறிய ஆவலாக உள்ளேன்.
அதேபோல் ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் புக் ஃபேர் சென்று எனது ”சிவப்புப் பட்டுக் கயிறு “நூலை வாங்கித் தோழிக்கும் பரிந்துரைத்துப் பரிசளித்த அன்புச் சகோதரர் கவிமதி அவர்களுக்கும் அன்பான நன்றிகள்.
ஆமா நீங்க எல்லாம் எப்ப எனது நூலை வாங்கப் போறீங்க. படிச்சு கருத்துச் சொல்லப் போறீங்க. :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!