ஜெர்மனி சென்றதும் அங்கே உலாவந்த பஸ், ட்ராம், மெட்ரோ மற்றும் சிட்டி, ஸ்டேட் ட்ரெயின்களில் பயணித்தோம் . சாலையின் நடுவில் ட்ராம் ட்ராக் அமைக்கப்பட்டிருக்கிறது. இருபுறமும் பேருந்துத் தடம். வித்யாசமான அமைப்பு
!. புல்லட் ட்ரெயின்கள் கூட ஓடுவதாகச் சொல்கிறார்கள்.
பொதுவாகவே மணிக்கு 200 மைல் வேகத்தில் பறக்கும் ட்ரெயின்கள் இவை.
நம்மூரு போல இங்கேயும் பஸ் ட்ரெயின் பாஸ் உண்டு. பஸ்ஸிலும் ட்ரெயினிலும் எல்லாரும் டிக்கெட்டை ஸ்வைப் செய்தபின்தான் போய் அமரவேண்டும். இல்லாவிட்டால் டிக்கெட் செக்கிங் வரும்போது பிரச்சனையாகிவிடும்.
தனித்தனி ட்ராம் ஸ்டாப் , பஸ் ஸ்டேஷன்களில் பரவாயில்லை. ஆனால் சிட்டி, ஸ்டேட் ஸ்டேஷன்களில் ட்ரயின் எங்கே சென்று எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டு கொள்ள கொஞ்சம் மொழிப்பயிற்சியும் ஞானதிருஷ்டியும் அதீத புத்திசாலித்தனமும் வேண்டும். இல்லாவிட்டால் எதிர்திசையில் எங்கேயோ போய் விடுவோம் அர்த்த ராத்திரியில்.
இங்கே பயில வரும் மாணவர்களுக்கு ஃப்ரீ பாஸ் உண்டு. தினமும் மாலை ஏழுமணியிலிருந்தும் வார இறுதியில் இரண்டு நாட்களும் சிட்டிக்குள் ட்ராம், பஸ், ட்ரயினில் சென்று வர நூறு யூரோ டிக்கெட் பாஸ் யதேஷ்டம். இதிலேயே இன்னும் ஒருவரையும் இதே நேரத்தில் மட்டுமே கூட்டிச் செல்லலாம்.
காலை பத்துமணிக்கு மேல் செல்லவேண்டும் என்றால் பணம் கூடுதலாகக் கட்ட வேண்டும்.
இது டூயிஸ்பர்க்கில் வரும் ட்ராம்.
இந்த ட்ராமில்தான் டூயிஸ்பர்க் செண்ட்ரலுக்கும் , அதன் பின் இன்னொரு ட்ரயினில் டுசில்டார்ஃப், டோர்ட்மெண்ட், ஹம் எல்லாம் சென்று வந்தோம்.
ட்ராமின் பாதை துல்லியமாக சுத்தமாக இருக்கும். எதிரே இன்னொரு ட்ராம் பாதை அமைக்கிறார்கள். இரவில்தான் இங்கே வேலை நடைபெறும். ஒருநாள் பகலில் இப்புறம் ஏறினால் மறுநாள் காலை அப்புறம் ஏறுமாறு ட்ராக்கையே மாற்றி இருப்பார்கள். ட்ராமுக்கு இருபுறமும் சாலை உண்டு. நடுவில் ட்ரெயின் ட்ராக் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். க்ரேன் போன்றவை இருந்தாலும் துளி சத்தம் கூடக் கேட்காது. சத்தமில்லாமல் வேலை செய்வதில் கில்லாடிகள் ஜெர்மானியர்கள்.
ஒரே ட்ராம் ஸ்டாப்பிலேயே இருவேறு ஏறுமிடங்கள் உண்டு. இது டுசில்டார்ஃப் என்றால் அது டூயிஸ்பர்க் செண்ட்ரலாக இருக்கும்.
டூயிஸ்பர்க் செண்ட்ரலில் எடுத்தது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போலிருக்கிறது அல்லவா. அண்டர்கிரவுண்ட் பாதை. ட்ரெயின் வரும்போதெல்லாம் காற்று கம்மியாக மூச்சடைப்பது போல் இருக்கும் என்பதால் மக்கள் புழக்கத்துக்காக காற்றை வேகமாகப் பாய வைத்து ஆக்ஸிஜனை அதிகப்படுத்துவார்கள். குளிர்காலத்தில் அதுவேறு குளிரும். இல்லாவிட்டால் சஃபகேட் ஆன மாதிரி மூச்சு விட முடியாது.
டுசில்டார்ஃப் செல்லும் வழியில் கோதுமை வயல்கள்.
இருபுறமும் உயர்ந்து நீண்ட மரங்கள். பனிக்காலம் வரைதான் இவை பசுமையோடு நிற்கும். அதன் பின் இலைகள் உதிர்த்துக் குச்சியாகிவிடும். பனிப்பூக்கள் தொங்க குளிர் கடந்தபின் கோடையில்தான் துளிர்விடும்.
ஓரடி தூரத்தில் உரசாமல் பக்கத்தில் உள்ள ட்ராக்கில் செல்கிறது இம்ஷ்லிங்க் செல்லும் இன்னொரு ட்ராம். எல்லாமே கண்ணாடிக் கதவுகள் என்பதால் யாரும் கரம் சிரம் புறம் நீட்டும் பயம் இல்லை. நோ டென்ஷன்.
ஹம் காமாட்சியம்மன் கோவிலுக்கருகில் பஸ்ஸூக்காக நின்றிருந்தோம்.
இம்ஷ்லிங்கிலிருந்து செல்லும் மெட்ரோ ட்ரெயின்.
இது ரைன் நதிக்குச் செல்லும் ட்ராம் வண்டி.
மகனாரின் கட்டளையை மீறி லேசாகச் சாய்த்துக் க்ளிக்கியது. இது ட்ராமின் உட்புறம்.
இதுதான் டூயிஸ்பர்க் செண்ட்ரல் ஸ்டேஷன். எல்லா இடத்திலும் இருக்கும் செண்ட்ரல் ஸ்டேஷனை ஹாபனாஃப் என்கிறார்கள். இங்கிருந்துதான் டுசில்டார்ஃப், டோர்ட்மெண்ட், ஹம், சுந்தர்ன், ஷோலிங்கன் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தோம்.
இதில் டபிள் டெக்கர் ட்ரெயின்களும் உண்டு.
டூயிஸ்பர்க்கில் தூரத்தில் இருந்து ஓடிவரும் ட்ராம். ட்ராம் போக வர இருபுற தண்டவாளம். அதன் இருபுறங்களிலும் கார் பேருந்து செல்லப் பாதை, அதன் இருபுறங்களிலும் நடைபாதை. இந்த நடைபாதைகளிலும் ட்ராம் வரும் பாதையைக் கடக்க குறிப்பிட்ட இடங்கள் உண்டு. அங்கே காத்திருந்து பச்சை ஒளிர்ந்தபின் தான் கடக்க வேண்டும்.
நாம் சாலையை அல்லது ட்ராம், ட்ரெயின் பாதையைக் கடக்க வேண்டும் என்றால் கடக்கும் இடத்தில் இருக்கும் மஞ்சள் பட்டனை ( கை வரைந்திருக்கும் ) அமுக்கினால் சிறிது நேரத்தில் சிக்னல் பச்சைக்கு மாறி வழிவிடும்.
டூயிஸ்பர்க்/ டுசில்டார்ஃபில் இருக்கும் தமிழ்க்கடைகளுக்குப் பிரதி வியாழன் தோறும் புதுக்காய்கறிகள் வரும் என்பதால் அங்கே சென்றோம்.
டுசில்டார்ஃபில் ஓடிய பெரிய சைஸ் ட்ராம் இது.
ட்ராம்களில் ஒருபக்கம் நால்வரும் மறுபக்கம் இருவரும் அமரும் விதத்தில் இருக்கும். மெட்ரோ & ட்ரெயின்களில் இருபக்கமும் நால்வர் அமரும்படியும் எதிர் எதிரான சீட்டுகளாகவும் இருக்கும்.
விதம் விதமான ட்ராம்கள். கண்ணை உறுத்தாத விளம்பரங்களோடு ஓடுகின்றன. டாஸன் காஃபிக்கான விளம்பரம்.
ஆங்காங்கே குப்பைத் தொட்டி இருக்கிறது.
இது பஸ். முன்புறம் முழுவதும் முதியவர்களுக்கானது.மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கானது. முன்புறம் டிக்கெட்டைப் பஞ்ச் செய்து ஏற வேண்டும்.
நடுவில் இருக்குமிடத்தில் சைக்கிளில் வருபவர்கள், வீல் சேரில் வரும் முதியவர்கள், உடல்நிலை குறைபாடு உள்ளவர்கள் தங்கள் சேரோடு நிற்கும் இடம். தாங்களே வீல் சேரை பேட்டரியின் உதவியுடன் நகர்த்திக் கொண்டு இறங்கி ப்ளாட்ஃபார்மில் போய்விடுவார்கள்.
ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் பஸ் நிற்கும்போது பஸ்ஸின் வலது பக்கம் ப்ளாட்ஃபார்மை ஒட்டினாற்போல் இறக்கி நிறுத்தப்படுகிறது. பயணியர் ஏறிக்கொண்டதும் அந்தப் பக்கம் ஏர் லாக்கினால் மேலேற்றப்பட்டு பஸ் கதவு மூடிக் கொள்ள அதன் பின் நகர்கிறது. இந்த மாதிரி பஸ்ஸை இறக்கி ஏற்றுவது ட்ரைவரின் பணிதான். இவை கண்டக்டர் இல்லாத பஸ்கள். இந்த பஸ்களில் முதியோர் தங்கள் கார்டுகளை ட்ரைவரிடம் காண்பித்து முன்புறமாக ஏறிக் கொள்வார்கள்.
இது இம்ஷ்லிங் ஸ்டேஷன்.
ட்ரெயினிலும் வாசிக்கும் ஒருவர்.
இது மூங்க்ஸ்டன் பாலம். இரண்டு குன்றுகளை இணைத்து ரைன் நதியின் மேல் கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்தில் மெட்ரோ ட்ரெயின் ஓடுகின்றது.
இது ஷோலிங்கன் - வூபர்டால் சஸ்பென்ஷன் ட்ரெயின். ஹாங்கிங் ட்ரெயினில் பயணித்தது வித்யாசமான அனுபவம். இது ரைன் நதியின் மேலும் பயணித்தது த்ரில் எக்ஸ்பீரியன்ஸ்.
இது ஷோலிங்கன் - வூபர்டால் சஸ்பென்ஷன் ரயில்வே ஸ்டேஷன். பறக்கும் ரயில். வூபர்டால் சஸ்பென்ஷன் மோனோ ரயில் பற்றி இன்னொரு இடுகையில் பார்ப்போம்.
இது ஓபர்ஹௌசனில் கந்தையா முருகதாசன் சார் இல்லத்தில் இருந்து டூயிஸ்பர்க் இம்ஷ்லிங்க்குக்கு மெட்ரோவில் வந்தபோது.
இம்ஷ்லிங்க் ரயில்வே ஸ்டேஷன்.
குளிர் நிரம்பிய நாட்களில் மிக அழகான பயணங்கள். இங்கே பனியே இனித்தான் வரப்போகிறதாம். நமக்கு அங்கே இருக்கும்போது ஜூலை ஆகஸ்ட், செப்டம்பரிலேயே டிஸம்பர்போல் மிகக் குளிரியது. டெல்லிக் குளிர் போல இருந்தது. ஆனால் அங்கே வசித்தவர்கள் அந்த க்ளைமேட்டை என்ஜாய் செய்து கொண்டு விதம் விதமான ஸ்லீவ்லெஸ், த்ரிஃபோர்த், டிசைனர்வேர்களில் உலா வந்தார்கள். ட்ரெயிலின் ஏறினாலே ஜெர்மனியர்கள், தென்னாப்பிரிக்கர்கள், எகிப்து, சிரியா , துருக்கி மக்களைப் பார்ப்பதும் இனம் கண்டு கொள்வதும்தான் மிகப் பெரும் பொழுதுபோக்கு. !
ரயில் டிக்கட்டை பேரம் பேசி வாங்கமுடியாது என்று ஜோக்கெல்லாம் இங்கேதான் செல்லுபடியாகும். ஆனால் ஜெர்மனியிலும் யூரோப் முழுமையும் டிக்கெட் பாஸ் வாங்கலாம். மேலும் முன்பே பாஸ் வாங்கிவிட்டு மூன்று மாதங்களுக்கு ஸ்டேட் விட்டு ஸ்டேட் குறைந்த விலையில் முன்பே டிக்கெட் புக் செய்து சென்று வரும் வசதியும் உண்டு.
லீவு நாளில் கார்டுக்கு
ரெண்டு பேர் ஏழு மணிக்கு மேல் சிட்டிக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். ஃப்ளைட் போல் முன்பே புக் செய்தால் ரயில் டிக்கெட் ஃபேர் குறைவு.

மகா சுத்தமாக இருக்கிறது. குப்பைகளை எங்கு கொட்டி அழிப்பார்களோ, ரீசைக்கிள் செய்வார்களோ... அழகிய ஊர். அழகிய காட்சிகள்.
பதிலளிநீக்குஎத்தனை எத்தனை train ...மிக அழகு
பதிலளிநீக்குஹாங்கிங் ட்ரெயினில்...wow
மகிழ்வாக ரசித்தேன் அனைத்தையும் ..
அதுதான் தெரில ஸ்ரீராம். உண்மைதான் மிகச் சுத்தமான ஊர் ஜெர்மனி.
பதிலளிநீக்குநன்றி அனு :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!