எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 மார்ச், 2024

கழனிவாசல் ஸ்ரீ இடைச்சியம்மன் திருக்கோவில்

 காரைக்குடி கழனிவாசலில் அமைந்துள்ளது இடைச்சி அம்மன் திருக்கோயில். இக்கோயில் 1989 ஆம் வருடம் யாதவ சமூகத்தினரால் அமைக்கப்பட்டது. 

கோபுரத்தில் புல்லாங்குழலுடன் கிருஷ்ணரும் துவாரபாலகியரும் சிங்கங்களும் காவல் தேவதைகளும் காட்சி அளிக்கிறார்கள். 

கோயிலின் இடப்புறம் ஸ்ரீ நாகநாதருக்குக் குட்டியாகத் தனிச்சந்நிதி. 

ஸ்ரீ ஆஞ்சநேயரும் தனிச்சந்நிதியில் கோயிலின் எதிரே அருள் பாலிக்கிறார். 
இக்கோயிலில் ஆண்டுக்கொருமுறை நடக்கும் பொங்கல் திருவிழாவும் பால்குடம் எடுத்தலும் விசேஷம். 
ஒரு சந்நிதியில் விநாயகரும் இன்னொரு சந்நிதியில் இடைச்சியம்மனும் அருள் பாலிக்கிறார்கள். 
விநாயகருக்கான சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார். 
கோவிலுக்கு எதிரில் நாகநாதர், அனுமன்,  மற்றும் நவக்கிரகங்களுக்கான தனிச்சுற்றுக்கள் உள்ளன. 

எதிரில் இடைச்சி ஊரணிக்கரை உள்ளது. ஊரணித் திருச்சுற்று முழுக்க இப்போது இரும்புக் கம்பிகளால் அழகுறத் தடுக்கப்பட்டு நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த நவக்ரகங்களை ஒன்பது முறை சுற்றி வந்தோம். 
தெற்கு நோக்கிய தனிச்சந்நிதியில் தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார். 
இங்கே இப்போது விநாயகருடன் சிவனுக்கான தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் மற்றும் சிவன் கோவில்

”பண்ணிய உலகில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே”

முழுமுதற்கடவுளாம் ஸ்ரீ சக்தி விநாயகரே
எங்களைச் சங்கடமின்றி
என்றென்றும் வாழ வைப்பாய் 

என எழுதப்பட்டுள்ளது. 

வேழ முகத்தோன் சந்நிதி. இங்கே இருந்துதான் நாங்கள் எங்கள் முதல் வீட்டிற்குக் குடி புகுந்தோம். மிகுந்த ராசியான விநாயகர். 

பிரகாரத்தில் அரசின் கீழ் ஆசுவாசமாய் அமர்ந்து அருள் பாலிக்கும் தொந்திக் கணபதி. 

இக்கோவிலில் வைகாசியில் பொங்கலிடும் திருவிழாவும் பால்குடம் எடுப்பதும் பிரசித்தம். என் ஜி ஓ காலனி ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து வந்து இடைச்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். 

சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்கு ஒரு முறை வந்து பாருங்கள். காலையும் மாலையும் திறந்திருக்கும். காரைக்குடி கழனி வாசலில் அமைந்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...