எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 ஜூன், 2015

செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

கிட்டத்தட்ட  40 லட்சத்துக்கு இந்த சூர்யப் பலகை ஒன்று சமீபத்தில் விலை போயிருக்கிறது. அதை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று  2 1/2 கோடிக்கு விற்பனை செய்கிறார்கள் என்று கேள்வி.

சூர்யப் பலகைகளில் பொதுமையான தன்மை சில உண்டு. தெய்வீக உருவச் சிலைகள் அமைக்கப்பட்டது சூர்யப் பலகை.  சில வேறுபாடுகளுடன் அமையும் ஆனால் நிலைப்பலகைகள் ஒவ்வொருவீட்டுக்கும் ஒவ்வொரு கதவுக்கும்கூட வித்யாசமாக அமையும். நிலைப் பலகையில் தெய்வீகச் சிலைகள், இயற்கைக் காட்சிகள், தாமரைப் பூக்கள், சூரியகாந்திப் பூக்கள், சிறுபூக்கள், பறவைகள் ( பட்சிகள் )  அமையும்.

இந்த இணைப்பைப் படித்துவிட்டு இந்தப் படங்களைப் பாருங்க. :)

http://now.rtbi.in/pudhuvayal/index.php?option=com_content&view=article&id=78&Itemid=64&lang=ta

95.  சூர்யப் பலகை.

சூர்யப் பலகை பற்றி என் ராமு மாமா விரிவாக ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்கள். இவை அனைத்தும் தேக்கில் செய்யப்பட்டவை என்பது சிறப்பு. அதுதான் தலைமுறை தாண்டியும் நீடித்து வருகின்றன. சில புதுசாக இருந்தாலும் பல பழையனவாக ஆகிவிட்டன.  வருடம் ஒரு முறையாவது பார்த்துப் பராமரித்து கரையான் இருந்தால் மருந்தடித்து பாலிஷ் செய்துவைத்தால் இன்னும் அதிக ஆண்டுகள் இவை நீடிக்கும்.

இது மெயின் நிலையில் பதிக்கப்படுவது. முகப்புக்கும் பட்டாலைக்கும் இடைப்பட்ட கதவு நிலை இதுதான்.

///1.துவார பாலகர் 2.,3,4 வள்ளி,தெய்வானையுடன் முருகன் 5. நாரதர் 6. கவரி வீசும் பெண் 7.திருமால் 8.மீனாட்சி 9.சுந்தரேஸ்வரர் 10. கவரிப்பெண் 11.பிரம்மன் 12,13,14 வினாயகரும் அவருக்குப் படையல்கள் சுமந்து நிற்கும் கணங்களும் 15 துவாரபாலகர். வாயில் நிலையில் சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் காட்டி இல்லத்திற்கு புனிதம் சேர்க்கும் அருமையான சிற்பத்தொகுதி 16. சிங்கம் , 17. சூர்யப் பலகை. ///


96. இது சாமி வீட்டு நிலைக்கதவு. அன்னப் பறவைகளும் பூக்களும்.கீழே சூரியகாந்திப் பூக்கள் போன்ற வடிவம்.


விநாயகர் லெக்ஷ்மி சரஸ்வதி என்று கிட்டத்தட்ட 7 தெய்வங்கள் கொண்ட நிலைவாசல் கதவுப் பலகை இது. பக்கத்திலேயே கவரிப் பெண்ணோ பணிப்பெண்களோ இருக்கின்றார்கள்.
விநாயகர், லெக்ஷ்மி , சரஸ்வதி கொண்ட சாமி வீட்டு நிலைவாசல் கதவுப் பலகை இதுவும். .

பளபளக்கும் சூரியப் பலகையுடன் நிலைவாசல் .:)

ஒரு பழைய வீட்டில் இலட்சக் கணக்கில் பெறும் மிக அற்புதமான வேலைப்பாடு உள்ள நிலை பராமரிப்பு இன்மையால் இப்படி ஆகிவிட்டது. வீட்டையும் சிமிண்ட் பூசி புதுப்பித்து வருகிறார்கள்.

இந்த நிலைக்கதவில் கண்ணாடிக்குள் வெள்ளியால் ஆன விநாயகர், லெக்ஷ்மி சரஸ்வதி சிலைகள் உள்ளன.
இது பிள்ளையார்பட்டி நகரத்தார் ட்ரஸ்ட் அமைப்பில் உள்ள நிலை. இந்த நிலையில் இருக்கும் மகாலெக்ஷ்மி பிடித்திருந்ததால் எடுத்துப் போட்டுள்ளேன்.

பெரும்பாலும் பிள்ளையார் லெக்ஷ்மி சரஸ்வதி, மீனாக்ஷி திருமணம், முருகன் வள்ளி தெய்வானை ஆகிய சிற்பங்களே இடம்பெற்றாலும் பறவைகள் பூக்கள் யாழிகள் நாகங்கள் கொண்ட சிற்பங்களும் சில நிலைகளில் இடம்பெற்றுள்ளன. நிலை என்பதே நன்மை எல்லாம் நிலைத்து நிற்கக் கட்டப்படுவது . எனவே அவற்றில் நன்மை வழங்கும் தெய்வத் திரு உருவங்களைச் செதுக்கி வைத்துத் தினம் வணங்கி வந்திருக்கின்றார்கள் முன்னோர். :)


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


special disky :-

தந்தையர் தினத்துக்கு ..என் காணிக்கை. !!!

http://summavinmama-rama.blogspot.in/2015/06/50.html
 


10 கருத்துகள்:

  1. அட! இதுக்கு இப்படி சூரியப்பலகைன்னு பெயர் இருக்குன்னு நீங்க சொல்லிதான் தெரியும். நன்றி தேனே!

    பதிலளிநீக்கு
  2. கலையம்சம் பொருந்திய சூரியப்பலகை அற்புதம் எத்தனை நுணுக்கமான வேலைப்பாடு ?அருமையான பதிவு தேனு ----சரஸ்வதி ராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  3. சூர்யப்பலகை! எனக்கும் புதுச்சொல் அறிமுகம் ஆனது. அழகான நிலைப்படிகளை படம் பிடித்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. மனதில் என்றும் நிலையாக நிற்கும் செட்டிநாட்டு நிலைப்படங்கள் அத்தனையும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. சூரியப் பலகை.....

    என்னவொரு பெயர். புதிய விஷயம் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அத்தனையும் அழகோ அழகு... பல தகவல்களை அறிய முடிந்தது... நன்றி...

    பதிலளிநீக்கு
  7. அழகான படங்களும் விளக்கங்களும் அருமை...ஊர்போயிட்டு வந்த உணர்வு....ஹஹஹா...

    பதிலளிநீக்கு
  8. சூரிய பலகை...அட ரசனை மிக்கதாக இருக்கின்றதே...என்ன ஒரு நுணுக்கமான வேலைப்பாடுகள்...மனதை அள்ளுகின்றது...

    பதிலளிநீக்கு
  9. அஹா நன்றி துள்சி :)

    நன்றி சரஸ் மேம் :)

    நன்றி தளிர் சுரேஷ்

    நன்றி விஜிகே சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி உமையாள்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...