எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 14 ஜூன், 2015

செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

செட்டிநாட்டின் வீடுகளில் பெரும்பாலும் தேக்குமரம், ஆத்தங்குடிக் கல், பித்தளைத் தாழ்வாரம், பட்டியக் கல் போன்றவை சிறப்பு. கொண்டுவிக்கச் சென்றவர்கள் என்பதால் பெல்ஜியம் கண்ணாடி, மலேயாச் சாமான்கள், ரெங்கோன் ( செய்கோன் ) சாமான்கள், சிங்கப்பூர் சாமான்கள், சிலோன் சாமான்கள் அநேகர் வீடுகளில் இருக்கும். 

இது கடியாபட்டியில் உள்ள ஒரு வீட்டின் முகப்பு. முன்புறத் தோற்றம். கேரள பாணியில் சில அமைப்புகளும் முகலாய சிற்ப பாணியில் சிலவும்,கோயில் கோபுரங்கள் போன்று நடுவில் உயர்ந்தும் அமைக்கப்பட்டிருக்கும் முகப்புகள்.

சில வீடுகள் ஆங்கிலோ இந்திய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 
ஆல்வீடும் ஊஞ்சலும். மேலே உள்ள மேங்கோப்பு மரத்தால் ஆனது. அது முழுக்க ஓவியங்களால் அழகு செய்யப்பட்டுள்ளது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் அளவு உள்ள 80. தொங்கு விளக்குகள் (  மங்கு ஷேட் உடன் உள்ள குண்டு பல்புகள் ). தூசி படியாமல் இருக்க 81. சுவற்றலமாரிகளில் உள்ள கண்ணாடிக்கும் மற்ற பீரோக்களுக்கும் 82. துணி உறைகள்.  83. இரட்டையாக மடிக்கப்படும் ஜன்னல் கதவுகள். தரையில் 84. ஆத்தங்குடி டிசைன் கற்கள்.

வளவுக் கதவில் 85. எனாமல் பெயிண்டிங்கில் இரட்டை மயில்.மேலே 4 எனாமல் ரோஜாக்கள்.

விருந்தினர் வந்தால் அமர வைத்து உபசரிக்க தடுக்குப் போடுவார்கள். இது 86. துணித்தடுக்கு. ஓரத்தில் க்ரோஷா வொர்க்.

 இது ரெண்டாங்கட்டில் உள்ள உள் மாடிப்படி. அந்தக்கால சினிமாபோல 87. சுழன்று செல்லும் மரப்படிகள்.
உள் நடை மேலே 88. வண்ணக் கண்ணாடிகளும் ஷாண்ட்லியரும்.
சீரோடும் சிறப்போடும் அமைந்த சிறுகூடல்பட்டி லண்டன் செட்டியார் வீடு. அருமையான பராமரிப்பு.
அங்கே இருந்த தூணில் வேலைப்பாடுகளுடன் கூடிய 89. மர யாழிச் சிற்பமும் 90. தாமரை மொட்டும்.
ஜன்னலில் 91. விபூதி மடலும்., காலண்டரும் ., 92. இறக்கை விசி்றியும், அது போக ஜன்னலில் கோவலன் கதையும் ஓவியமாக ( கோவிலன் எனப் பேர் போட்டிருந்தது ) வரையப்பட்டிருந்தது.  முருகனையும் விநாயகனையும் நேசிப்பவர்கள். மேலும் ஜன்னலுக்கும் கூட 93. இரும்பு வலை பாருங்க. கெட்டி. :)


 94.. இதுதான் பெட்டகம். அந்தக்கால லாக்கர். நாலு பேர் சேர்ந்து தூக்கினாலும் அசைக்கக் கூட முடியாது. மகாகனம் பொருந்தியது. மூன்று இடங்களில் பூட்டும் ரகசியப் பூட்டுகளும் கூட உண்டு.

இதில்தான் சாமிக்கு சார்த்தும் வெள்ளிக் கவசங்கள். தங்க வெள்ளி வைர நகைகள், முக்கிய ஆவணங்கள், வீட்டு பத்திரங்கள் ஆகியவற்றை வைத்திருப்பார்கள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
 
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

 

10 கருத்துகள்:

 1. எல்லாமே அழகு தேனம்மை! சமீபத்தில் எங்கள் வீட்டில் ஆத்தங்குடி டைல்ஸ் போட்டு ஒரு சிறு பகுதியை முடிக்க நினைத்து விசாரித்ததில் தற்போதெல்லாம் முன்போல டைல்ஸ் அத்தனை தரமானது அல்ல என்றார்கள்!

  பதிலளிநீக்கு
 2. செட்டி நாட்டு வீடு - படங்களில் பார்த்ததோடு சரி... இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா?

  பதிலளிநீக்கு
 3. எத்தனை எத்தனை விஷயங்கள்.... உங்கள் மூலம் சில செட்டி நாட்டு வீடுகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. ஆஹா.... என்ன ஒரு அருமையான வேலைப்பாடு!!!!

  நன்றி தேனே!

  ஒருமுறை கானாடுகாத்தான் மாளிகைக்குப்போய் அசந்து நின்னேன்!

  பதிலளிநீக்கு
 5. நகரத்தார் வீட்டழகை படம்பிடித்து காட்டிய பதிவு சிறப்பு! கலைநுணுக்கங்கள் வியக்க வைத்தன! நன்றி!

  பதிலளிநீக்கு
 6. சூப்பர் ! கீழிருந்து முதல் படமும் நாலாம் படமும் என்னை மீண்டும் சொக்க வைக்கின்றன. :)

  பதிலளிநீக்கு
 7. அருமை செட்டிநாடு பகிர்வு! பெட்டகம் சாயல் இலங்கையிலும் இருக்கு அது போர்த்துக்கல் நாட்டின் கொடை! அருமையான பகிர்வு!

  பதிலளிநீக்கு
 8. நன்றி மனோ மேம். எனக்கு தற்போதைய டைல்ஸ் ( ஆத்தங்குடி ) பற்றித் தெரியவில்லை மேம். இது எல்லாம் சுமார் 70 வருடத்துக்கு முற்பட்டது. இப்போது தரம் குறைந்திருக்கலாம்.

  நன்றி டிடி சகோ

  ஆம் கார்த்திக் சரவணன் :)

  நன்றி வெங்கட் சகோ

  என் பையன்கள் திருமணத்துக்கு அழைக்கிறேன் அப்போது எங்கள் வீட்டையும் வந்து பாருங்க துளசி :)

  நன்றி தளிர் சுரேஷ்

  நன்றி விஜிகே சார்

  நன்றி தனிமரம். ஓ அப்படியா இருக்கலாம். !!!

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...