எனது புது நாவல்.

புதன், 3 ஜூன், 2015

அமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)


நண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :)

/////http://tamilonline.com/thendral/authnew.aspx?aid=10009

     தெரியுமா?: வலைப்பதிவர் தேனம்மை லெக்ஷ்மணன்
April 2015இவரது வலைப்பதிவு 'சும்மா' நன்கு அறியப்பட்ட ஒன்று. கவிஞராகத் துவங்கி, வலைப்பதிவராக வளர்ந்து, பத்திரிகையாளராக, எழுத்தாளராக இன்று கோலோச்சிக் கொண்டிருப்பவர் தேனம்மை.

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10009///////

அஹா அமெரிக்கத் தென்றல் இவ்வளவு இனிமையா.. ஸ்ரீவித்யா ரமணன் அவர்களின் தமிழ் இனிமையா, சரஸ்வதி தியாகராஜனின் குரல் இனிமையா நெகிழ்கிறது நெஞ்சம். நன்றி மூவருக்கும். அந்த ஒற்றைச் சொல் போதுமா தெரியவில்லை. இதை வெளியிட்டு என்னைச் சிறப்பித்திருக்கும் தென்றல் ஆசிரியர் குழுமத்துக்கு அன்பும் நன்றியும்.

//////ஒலி வடிவில் கேட்க :

http://www.tamilonline.com/media/Apr2015/27/Apr2015_Pothu_ThenammaiLakshmanan.mp3 

http://www.tamilonline.com/media/Apr2015/27/Apr2015_Pothu_ThenammaiLakshmanan.mp3

டிஜிடல் டவுன்லோட்ஸ்:

http://tamilonline.com/thendral/digitaldownloads.aspx

ஈ புக் ஆக வாசிக்க :

http://tamilonline.com/thendral/ebook.aspx?id=173///////


 ** * * * * * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * * * * *


Click Here Enlargeஇவரது வலைப்பதிவு 'சும்மா' நன்கு அறியப்பட்ட ஒன்று. கவிஞராகத் துவங்கி, வலைப்பதிவராக வளர்ந்து, பத்திரிகையாளராக, எழுத்தாளராக இன்று கோலோச்சிக் கொண்டிருப்பவர் தேனம்மை. பிறந்த ஊர் காரைக்குடி. மதுரை ஃபாத்திமா கல்லூரியில் இளங்கலை வேதியல் படிக்கும்போதே கல்கி, புதியபார்வை, வைகறை, பூபாளம் போன்ற இதழ்களில் எழுதி கவிஞராகப் பெயர்பெற்றார். திருமணமானபின் முழுநேர இல்லத்தரசி ஆனார். கணவர் லக்ஷ்மணன் வங்கியில் உயரதிகாரி. மகன்கள் திருவேங்கடநாதன், சபாரெத்தினம் இருவரும் பொறியியலாளர்கள்.

மகன்கள் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்ததும் எழுத்தார்வம் மீண்டும் முகிழ்த்தது. பேட்டிக்கட்டுரை, சிறுகதை, கவிதை என்று படைப்புகளைத் தந்தவண்ணம் இருக்கிறார். நான்கு நூல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

'சாதனை அரசிகள்' என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு, வாழ்க்கையில் போராடி நிமிர்ந்த பெண்களின் வெற்றிக்கதைளாகும். 'ங்கா' அழகான குழந்தையின் புகைப்படங்களோடு கூடிய கவிதைத்தொகுப்பு. 'அன்ன பட்சி' என்ற தலைப்பில் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 'பெண்பூக்கள்' தொகுதி வெளியாக இருக்கிறது. பாடலாசிரியர், சீரியல் எழுத்தாளர். வானொலி, தொலைக்காட்சி என்று அனைத்து ஊடகங்களிலும் புகுந்து விளையாடுகிறார். இவரது கவிதைகள் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.

"எப்படியும் சினிமாவுக்கு ஒரு பாடல் எழுதிடணும்னு வலைப்பூ எழுதவந்த ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. அதுவும் ஷங்கர் டைரக்‌ஷனில், ரஹ்மான் இசையமைப்பில் என் பாடல் இடம்பெறணும்னு பேராசைகூட இருந்தது" என்று கூறும் இவரது கனவு நிறைவேறட்டும் என்று நாம் வாழ்த்துவோம்.
"ரொம்பப் பிடிச்ச விஷயம். விதம்விதமா மட்டுமில்ல. டெய்லி சமையலையே ரொம்ப ரசிச்சி செய்வேன்" என்னும் தேனம்மையின் சமையல் குறிப்புகளை நீங்களும் செய்துபார்க்க: thenoos.blogspot.in

இவரது 'பாலியல் பலாத்காரமும் ஆசிட் வீச்சும்' என்ற கட்டுரை குறிப்பிடத்தகுந்தது. கதை, கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம், வாழ்க்கை அனுபவங்கள் என்று விரியும் இவரது பிற வலைப்பதிவுகளைப் பாருங்களேன்:

கோலங்கள்: muthukkolangal.blogspot.in
உணவு: thenammailakshmanan-chumma.blogspot.in
டயரிக்குறிப்பு: thenusdiary.blogspot.in

ஸ்ரீவித்யா ரமணன்


* * * * * * * * ** * * * * * *  * * * *  * * *  * * * * * * * * * * * * * * * * * * * *  * * * * * * * * * * *

///////Article: எம்.ஏ. சுசீலா
Category: எழுத்தாளர் (Mar 2015) Posted On: Apr 07, 2015
மதிப்பிற்குரிய அரவிந்த அவர்கட்கும் தென்றல் பத்ரிக்கைக்கும் நன்றி. என் தமிழன்னை சுசீலாம்மா பற்றி எழுதி உள்ளமை குறித்துப் பெருமிதம் அடையும் நேரம் என்னைப் பற்றியும் குறிப்பிட்டு இருப்பது உங்கள் நல்லுள்ளத்தைக் காட்டுகிறது. எங்கள் அன்பின் கலைவாணியே இன்னும் தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் போது நாங்கள் எல்லாம் எம்மாத்திரம். எனினும் தென்றலின் பேரன்புக்கு நன்றி. :)Article: தெரியுமா?: வலைப்பதிவர் தேனம்மை லெக்ஷ்மணன்
Category: பொது (Apr 2015) Posted On: Apr 07, 2015
அஹா அமெரிக்கத் தென்றல் இவ்வளவு இனிமையா.. ஸ்ரீவித்யா ரமணன் அவர்களின் தமிழ் இனிமையா, சரஸ்வதி தியாகராஜனின் குரல் இனிமையா நெகிழ்கிறது நெஞ்சம். நன்றி மூவருக்கும். அந்த ஒற்றைச் சொல் போதுமா தெரியவில்லை. இதை வெளியிட்டு என்னைச் சிறப்பித்திருக்கும் தென்றல் ஆசிரியர் குழுமத்துக்கு அன்பும் நன்றியும்.

-- நன்றி தென்றல், ஸ்ரீவித்யா ரமணன், சரஸ்வதி தியாகராஜன், & அரவிந்த் :)

16 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காற்று போல எங்கும் புகழ் பரவட்டும் சகோதரி...

தென்றல் குழுமத்துக்கு நன்றிகள்...

ராமலக்ஷ்மி சொன்னது…

உங்கள் அயராத உழைப்புக்கு சிறப்பானதொரு அங்கீகாரம். நல்வாழ்த்துகள் தேனம்மை!

Ramani S சொன்னது…

மிக்க மகிழ்வாய் இருக்கிறது
திக்கெட்டும் பரவட்டும்
தேனம்மையின் ஒளிவட்டம்
வாழ்த்துக்களுடன்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தென்றலில் தென்றலாக வெளியீடு. மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Saraswathi சொன்னது…

தேனம்மை! உங்கள் 'சும்மா' பற்றிய சரியான சுட்டி தென்றல் வலைதளத்தில் இங்கே!
http://www.tamilonline.com/media/Apr2015/27/Apr2015_Pothu_ThenammaiLakshmanan.mp3
நன்றி!

yathavan nambi சொன்னது…


அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (06/06/2015) ,
தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

வலைச்சர இணைப்பு: : http://blogintamil.blogspot.fr/2015/06/5.html#comment-form

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
France.

yathavan nambi சொன்னது…


அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (06/06/2015) ,
தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

வலைச்சர இணைப்பு: : http://blogintamil.blogspot.fr/2015/06/5.html#comment-form

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
France.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

அன்புள்ளம் கொண்ட சகோதரி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (06.06.15) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/6.html

Dr B Jambulingam சொன்னது…

வலைச்சரத்தில் தங்களது வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள். எனது வலைப்பூக்களைக் காண அழைக்கிறேன்.
http://drbjambulingam.blogspot.com/
http://www.ponnibuddha.blogspot.com/

mageswari balachandran சொன்னது…

வலைச்சர அறிமுகம் கண்டு இங்கு வந்தேன். அருமை. வாழ்த்துக்கள். நன்றி.

R.Umayal Gayathri சொன்னது…

மேன் மேலும் வளர ....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோ.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

06.06.2015 வலைச்சரத்தில் தாங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளீர்கள். http://blogintamil.blogspot.in/2015/06/6.html அதற்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

yathavan nambi சொன்னது…

அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!
கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
மற்றும்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சகலகலாவல்லி எங்கள் சகோதரி அவர்களின் திறமை மேலும் மேலும் வளர்ந்து இனிமையாக பாரெங்கும் மணம் வீச எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி ரமணி சார்

நன்றி விஜிகே சார்

நன்றி சரஸ் மேம்

நன்றி வேலு சகோ & வலைச்சரம்

நன்றி இளங்கோ சார் :)

நன்றி ஜம்புலிங்கம் சார்

நன்றி மகேஸ்வரி

நன்றி உமையாள் காயத்ரி

நன்றி துளசி சகோ & கீதா :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...