3. இறைவன்
:-
*கூடையிலே
பழங்கள்
விற்பதற்காய்.
*கூடைக்காரன்
பயணம்
முட்கள்
விதைத்த
*கம்பீரக்
க்ரீடமாய்க்
கூடை,
தலைமேல்.
*மனிதம்
அறைபடும்
சாலைகளில்,
சந்துகளில்,
பொந்துகளில்,
கூடைக்காரன்
கூவல்.
*மனிதர்கள்
மனிதர்கள்
நித்ய
வேலைகளில்,
*கூடைக்காரன்
நா வரளும்,
பழங்கள்
சுருளும்.
*மறுநாளும் மனிதம் தேடி
அதே
கூடையில் (ஞானம் )
பழங்கள்
ஏந்தி
பயணம்
செல்லும் கூடைக்காரன்.
//*மறுநாளும் மனிதம் தேடி அதே கூடையில் (ஞானம் ) பழங்கள் ஏந்தி//
பதிலளிநீக்குதினமும் கூவிக்கூவி ’மனிதம் தேடி’ விற்றால் தானே அவனுக்கும் வியாபாரம் ஆகும். :)
நல்லதொரு ஆக்கம். பாராட்டுகள்.
"கடை விரித்தேன் வாங்குவாரில்லை "
பதிலளிநீக்குஎன்கிற வரிகளை நினைவில் நிறுத்திப் போகும்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
(அடைப்புக் குறியிலிட்டுருந்த ஞானத்தை
தலைப்பாக்கி இருக்கலாமோ )
ஞானம்... ஆகா...!
பதிலளிநீக்குஇறைவன் இங்கே என்று கூவி விற்கிறானோ. வலைப்பதிவர்கள் ஒற்றுமை ஓங்குக. வலைச்சரம் காண அழைப்பு.
பதிலளிநீக்குபிடித்த வரியை குறிப்பிட்டு சொல்லலாமென்றால் , எல்லா வரிகளும் நன்றாக இருக்கிறது..
பதிலளிநீக்குஎந்த வரியை மெச்ச என்று ஒரே குழப்பம்....எல்லா வரிகளும் போட்டி போடுவதால்...
பதிலளிநீக்கு*கூடைக்காரன் நா வரளும்,
பழங்கள் சுருளும்.
*மறுநாளும் மனிதம் தேடி
அதே கூடையில் (ஞானம் )
பழங்கள் ஏந்தி
பயணம் செல்லும் கூடைக்காரன்.// ஆஹா ஞானம்! எங்கேயோ போய்ட்டீங்க சகோதரி!
நன்றி விஜிகே சார்
பதிலளிநீக்குநன்றி ரமணி சார் . ஆமாம் ஞானம் என்ற தலைப்பும் நன்றாகத்தான் இருக்கும் :)
நன்றி டிடி சகோ
இருக்கலாம் பாலா சார் :)
நன்றி செல்லபாண்டியன் !!!!!
நன்றி துளசிசகோ & கீத்ஸ்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!