எனது பதிமூன்று நூல்கள்

திங்கள், 31 அக்டோபர், 2016

கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

சேலத்தில் ஓமலூர் ரோட்டில் அமைந்திருக்கிறது ஹோட்டல் கற்பகம் பேர்ல் இண்டர்நேஷனல்.மிக அருமையான ஃபேமிலி ரூம்.  வாடகை ரொம்ப சீப்தான். ஆயிரம் ரூபாய்தான். நெசம்தான் நம்புங்க. ( மித்த ஹோட்டல்களில் 1200 இல் இருந்து 1750 வரை டாக்ஸ் லொட்டு லொசுக்கு என்று இருவருக்கு 2500 ஆக்கிடுவாங்க. )
ரிஸப்ஷனில் செம்புத் தகட்டில் எம்போஸிங் பிள்ளையார்.
ரூமில் வழக்கம் போல் டிவி, அலமாரி, ( கப்போர்டு )  கண்ணாடி, தண்ணீர், கெட்டில், பெட், சேர், அழகான விளக்குகள், பெயிண்டிங். சுத்தமான பாத்ரூம்  எக்செட்ரா..இதில் ஃப்ரீ வைஃபையும் அடக்கம் !!
நல்ல அடர்த்தியான திரைச்சீலை.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

வளம்தரும் வளரொளிநாதரும் வடிவுடை நாயகியும் அருள்தரும் கருப்பரும்.

கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது வைரவன்பட்டி வைரவன் கோயில். காரைக்குடியில் இருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வைரவன் பட்டி. குன்றக்குடி, பிள்ளையார்பட்டி தாண்டியவுடன் ஒரு கிலோமீட்டர் பயணத்தில் வைரவன்பட்டியை அடையலாம். இது நகரத்தாரின் ஒன்பது நகரக் கோயில்களில் ஒன்று.  நகரத்தார் திருப்பணி செய்த நகரச் சிவன்கோயில்.இங்கே நகர சத்திரம், திருமண மண்டபம் உணவுக்கூடம் எல்லாம் இருக்கிறது. திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன.

சிற்பக் கலைக்குப் பெயர்பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. கிழக்கு நோக்கிய கோவில். ஐந்து நிலை ராஜகோபுரம், சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து லெட்சுமணனைக் காப்பாற்றியதால் விசுவரூப ஆஞ்சநேயரை வணங்கும் ராமர், நாய்வாகனத்துடன் காட்சி தரும் வைரவர், ஏழிசைத்தூண் மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, தோஷம் நீக்கும் பல்லி, குடைவரைக் கோயில் பாணியில் அமைந்த சண்டீசர் சன்னதி, போருக்குச் செல்லும் குதிரை வீரன், கண்ணப்ப நாயனார், கொடிப்பெண்கள் சிற்பங்கள், ஏறழிஞ்சில் மரம் , வைரவர் தனது சூலத்தால் உருவாக்கிய வடுகதீர்த்தம்/வைரவதீர்த்தம் என்ற புஷ்கரணி ஆகியன சிறப்பு.

பிரம்மாவின் அகந்தையை அழிக்க சிவன் உருவாக்கிய பைரவர் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார். அந்த பைரவர் தண்டமும், பிரம்மன் தலையும், முத்து மாலை, சிலம்பு அணிந்து கோயில் கொண்டுள்ள ஸ்தலம் இது. பைரவர் காக்கும் கடவுள். எல்லா சிவன் கோயில்களிலும் எழுந்தருளி இருப்பார். தினமும் திருக்கோயில் சாவியை பைரவர் சன்னதியில் அனுமதி பெற்று எடுத்து அர்த்தசாம பூசையின்போது அவரிடம் ஒப்படைத்துத்தான் கதவை சாத்துவார்கள்.

மும்மூர்த்திகளிலும் யார் பெரியவர் என்ற போட்டி வந்தபோது அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையாராக நின்று ஒளிவடிவமாகத் தோன்றி மலையாகக் குளிர்ந்ததாலேயே இவர் வளர் ஒளி நாதரானார்.
இரண்டு கோபுரங்கள். கட்டுக்கோப்பாக நிர்வாகிக்கப்படும் கோயில் வளாகம். ( இதன் புஷ்கரணியை முன்பே ஒரு இடுகையில் போட்டிருக்கிறேன்.

ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும். )

சனி, 29 அக்டோபர், 2016

சாட்டர்டே போஸ்ட். கரந்தை ஜெயக்குமாரின் உயிர்காத்த நண்பன்.எனது வலைப்பூ சகோதரர் கரந்தை ஜெயக்குமார். இவர் ஆசிரியப் பணியில் இருப்பதாலோ என்னவோ இவரின் பதிவுகள் நச்சென்று இருக்கும். மிகத் தெளிவான கருத்துகள் கொண்டதாக மிளிரும்.  வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் என்று தற்போது ஒரு தொடர் வெளியிட்டு வருகிறார். பரவலாக வலைப்பூ எழுத்தாளர்கள் பேராதரவைப் பெற்றவர். எட்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார். எழுத்து அருமையாக இருந்தால் யாவரையும் ஈர்க்கும்தானே. :) -- ( தேனம்மை நோ பொறாமை ப்ளீஸ் - எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் :) 

இவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக எழுதித் தரும்படி கேட்டேன். அவரது பதிவு அதிர வைத்தாலும் படிப்பினை கொடுத்தது. எல்லாம் தெரிந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் நாம் செயலற்று இருக்கிறோம் என்பதை அறைந்தது.  இனி அவரைப் பற்றியும் அவரது எதிர்நீச்சல் பற்றியும் படியுங்கள்.

இது அவரைப் பற்றி அவர் வலைப்பூவில் கொடுத்திருக்கும் சுயவிபரம்.


///கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்.///

 வடவாறு :-
************

முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் விடுமுறை நாள்,தஞ்சாவூர், கரந்தை, வடவாற்றின் பாலத்தின், அகன்ற கைப் பிடிச்சுவற்றில் ஏறி நிற்கின்றேன்.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி ரெசிப்பீஸ் தனி இணைப்பு புத்தகமாக 30 ஸ்வீட் காரம் பிரசாதம்.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். 

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

1.அஞ்சீர் ஹல்வா ( அத்திப்பழம் )
2.டயமண்ட் கட்
3.உண்டம்பொரி
4.பின்னி
5.சுக்டி ( வெல்ல பாப்டி)
6.மலாய் சந்தேஷ்
7.ட்ரைஃப்ரூட் பர்ஃபி
8.ஃப்ரூட்டி ஃபிர்னி
9.கம்பு அதிரசம். ( பாஜ்ரா -  சாஜ போரேலு)
10.ஜோவர் லட்டு. ( சோள லட்டு )
11.சுர்மா லாடு
12.மில்கி நெஸ்ட்
13.ஃப்ரூட் & நட்ஸ் கச்சோரி
14.பிங்க் கத்லி
15.சாக்லெட் அக்ரூட் பர்ஃபி
16.மல் பூரி
17.ஆக்ரா ஸ்வீட் – அங்கூரி பேடா.
18.சேப் பாதாம் அல்வா
19.ஃபார்சி பூரி (பில்லாலு).


20.சீஸ் வெஜ் பால்ஸ்
21.மாத்ரி
22.டிக்கா கதியா
23.மிக்ஸ்ட் வெஜ் முதியா
25.ஆலு புஜியா
25.கட்டா மீட்டா நம்கின்
26.ரிங் முறுக்கு
27.தினை தேன்குழல்.
28.சிப்பி சோஹி
29.சேவ் சோளாஃபலி
30.குழலப்பம்


தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

வியாழன், 27 அக்டோபர், 2016

கல்கி தீபாவளி மலரில் பண்பு நிறைந்த பாத்திரங்கள்.

புராண இதிகாச நாயகி நாயகர்களின் அருங்குணங்கள்.

ண்பு நிறந்தத்ிரங்கள்.:-ஐப்பசி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

1.இனிப்பு சேவு:-

தேவையானவை:- பச்சரிசி மாவு – 1 கப், கடலை மாவு – 1 கப், சர்க்கரை – 3 கப், தண்ணீர் – 1 கப், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசி மாவையும் கடலைமாவையும் கலந்து நன்கு பிசைந்து எண்ணெயில் காராச் சேவு அச்சில் போட்டுப் பிழித்து தாம்பாளத்தில் பரத்தி வைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து முற்றியபாகு வைக்கவும். பாகு தண்ணீரில் போட்டால் உருண்டையாக எடுக்க வரவேண்டும். இந்தப்பாகை சேவில் போட்டு எல்லாப் பக்கமும் படும்படி நன்கு குலுக்கிக் கலக்கிவிட்டு ஆறியவுடன் உபயோகப்படுத்தவும்.


2.மிளகு சேவு :-

தேவையானவை:- பச்சரிசிமாவு – 1 கப், கடலை மாவு – 1/2கப், பாசிப்பருப்பு மாவு – ½ கப், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – 1 கைப்பிடி, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசி மாவு, கடலை மாவு, பாசிப்பருப்பு மாவுடன் உப்பு வெண்ணெய், ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, பொடியாக அரிந்த கருவேப்பிலை போட்டு நன்கு கலக்கவும். காய்ந்த எண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றி நன்கு கெட்டியாகப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து காராசேவு அச்சில் போட்டுப் பிழிந்து மொறுமொறுப்பானதும் எடுக்கவும்.

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம்.

என் உறவினர் ஒருவர் இல்லத்துக்கு ஒரு நாள் மாலை சென்றிருந்தோம். அங்கே  அன்று லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்தார்கள்.வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த தோழியர் குழாமுடன் பாராயணம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. கோரஸாக மந்திரம் சொல்லும்போது கேட்கும் ஒலி இனிமையானது. அவ்வப்போது வீட்டில் படித்திருக்கிறேன் என்றாலும் சமஸ்கிருதம் என்பதால் ஓரிரு இடங்களில் உச்சரிப்பில்  பிழை வந்துவிடக் கூடாதே என்று மெதுவாக வாசித்தேன். 

ஹயக்ரீவர்  இந்த சகஸ்ரநாமத்தை அகஸ்தியருக்காக    உபதேசித்திருக்கிறார். அம்பிகையின் (சகஸ்ர) ஆயிரம் நாமங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றனவாம். இதை ஒரு முறை லாசரா புகழ்ந்து எழுதியதைப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு வார்த்தையையையும் ஆத்மசுத்தியுடன் ஸ்பஷ்டமாக உச்சரிக்கும்போது ஒவ்வொரு பெயர் சொல்லும்போதும் தேவி பிரத்யட்சமாவதை உணரலாம். மிகுந்த சக்தி வாய்ந்த மந்திரம் இது. 


தேன் பாடல்கள். - 26. குட்டிராணியும் கண்மணியும்.

351. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

மிக அழகாகச் செல்லும் காதல். அப்பாஸும் ஐஸும். ஆனா நடுவுல புகுந்து அவர் ஏதோ சுயநலமி மாதிரி கெடுத்துடுவாங்க. அப்பத்தானே அழகன் வரலாம் ஐ மீன் மம்முட்டி. :) 
352. என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா..இதை அஜீத் தபுவிடம் கேட்டபடி பாடும்போது மிக அழகாக இருக்கும். தபு கொஞ்சம் மஸ்குலைன் ஃபீமேல். அஜீத் கொஞ்சம் மென்மையான ஹீரோ. கடும் பாலைவனமும் வெய்யிலும் கூட தன்மையாக மாறிவிடும் அற்புதம். இசை சான்ஸே இல்லை. ஒருசில தமிழ்ப் பாடல்கள்  ஆல்பம் மாதிரி மாறிக் கொண்டு வருகின்றன. அதில் இதுவும் ஒன்று.

புதன், 26 அக்டோபர், 2016

வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.

சில மாதங்களுக்கு முன் சென்னை சென்றிருந்த போது சென்னை வடபழனி அம்பிகா எம்பயர் முன்னிருக்கும் நம்மவீடு வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்துக் கொண்டாட்டம்.

கிட்டத்தட்ட 2009 இல் முகநூலில் சந்தித்து இன்றுவரை அதே புரிந்துணர்வோடும் நட்போடும் இருக்கும் என் இரு தோழிகளைச் சந்தித்தேன். வசுமதி வாசன், கயல்விழி லெக்ஷ்மணன். இவர்கள் இருவரையும் பற்றிச் சொல்ல ஏராளமாய் இருக்கு. மிக இனிமையான தருணங்களிலும் மிக வருத்தமான தனிமையிலும் உடனிருந்தவர்கள். அநேக இடங்களுக்கு ஒன்றாகவே சென்றிருக்கிறோம். பேசிக் கொள்ளவே பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் திடீரென்று ஒரு நாள் பேசும்போது விட்ட இடத்தில் தொடர்வது போல ஒரு சௌஜன்யம் இருக்கும். எங்கே இருந்தாலும் எங்கள் வேவ்லெந்த் ஒன்று. எனது தன்னம்பிக்கைத் தோழிகள் என ஒரே வரியில் சொல்லி விடலாம். அன்பும் பாசமும் மிக்கவர்கள்.

சரி வசந்தபவன் விருந்துக்கு வருவோம். முதலில் ஸ்வீட் கார்ன் சூப் & கிளியர் வெஜ் சூப்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.

கும்பகோணத்தில் இருக்கும் பாலாறு. பாலும் தேனும் பாயாமல் மண்ணாறாக ப்ளாஸ்டிக் குப்பை சூழக் கிடக்கு ஆடி பதினெட்டிலும்.
மதுரையில் கருவைக்காட்டுக்குள் ஒரு பச்சை மயில்.
கேரளா கொச்சுவேலி பீச்சில் வெங்காயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு. ஆனாலும் கண்ணுக்கு அழகா இருந்துச்சு.

கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .

இது PITTED PRUNES. செரிமானத்துக்கு நல்லது.
இது காரைக்குடி முனியையா கோயில் ப்ரசாதம். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் குட்டிப் பிள்ளைகளிடம் வொயிட் பால்ஸ் & டோநட்ஸ் என்று சொல்லி சாப்பிடக் கொடுத்தோம். :)

பிள்ளையார் நோன்புப் பொரி பாக்கெட். இதில் 5 வித பொரியும் கோலக்கூட்டும், திரியும், பிள்ளையார்நோன்பு இழையும் இருக்கும். முன்னெல்லாம் வீட்டில் செய்வது , இப்போது கடைகளில் கிடைக்கிறது. பிள்ளையார் நோன்பு இழை மாவும்கூட. ( இதில் கருப்பட்டிப் பணியாரமும் செய்யலாம். )

திங்கள், 24 அக்டோபர், 2016

அரசனும் ஆண்டியும்.

1061. லேடீஸ் ஸ்பெஷல்ல கொடுத்தாக.:)
#லேடீஸ்_ஸ்பெஷல்_விருது.

1062. மடல் வாழை மேல் குளிர் வாடை போல்..   :)

1063. இட்லி, மணத்தக்காளி வத்தல் குழம்பு, காரட் ஜூஸ். 

1064. பத்ரமா வீட்ல கொண்டுவந்து சேர்த்ததுக்கு நன்றி அம்மா :)

#எக்மோர்_ரயில்வே_ஸ்டேஷன்_பிள்ளையாரப்பா

சனி, 22 அக்டோபர், 2016

சாட்டர்டே போஸ்ட். வெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம். - முனைவர் ஜம்புலிங்கம்.

எனது மதிப்புக்கும் பிரமிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் பௌத்தம் பற்றி எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள். இவரைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார், முனைவர், பௌத்தம், சமணம், பிறதுறைகள், விக்கிபீடியா, சிறுகதைகள் போன்றவற்றில் 800 க்கும் மேற்பட்ட அரிய பதிவுகளை எழுதியவர். பௌத்தம் பற்றிய தொல்பொருள் ஆய்வுக் கட்டுரைகளை நான் இவரது தளத்தில் விரும்பி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் கீழடி பற்றிய இவரது தொல்பொருள் ஆய்வுக் கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. 

இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம். பூமிக்கடியிலும் தேடல்கள் நிகழ்த்தி சாதித்திருக்கும் இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இவரைப் பற்றி முழுமையாக இங்கே வாசியுங்கள் :) ! . 

தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800+ பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள் 

இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக ஏதேனும் எழுதித்தரும்படிக் கேட்டபோது இன்றைய சூழலில் அதி முக்கியத் தேவையான இலக்கு நோக்கிய பயணம் என்ற கட்டுரையை அனுப்பி இருந்தார்கள். ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய கட்டுரை இது. 

வெள்ளி, 21 அக்டோபர், 2016

மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.

மலேஷியா பத்துமலையில் எடுத்தது. பளிச்சென்று வேல்போல் பாயும் சூரியனின் பசிய கிரணங்களில் கடவுட் காட்சி.
துபாய்க்குச் சென்றபோது ஃப்ளைட்டில் இருந்து எடுத்தது.  துபாய் நகரம் கொள்ளை அழகு.
அட்லாண்டிஸின் வெளிப்புறம்.
மிக அழகான ஏசி துபாய் பஸ் ஸ்டாப், துபாய்.. :) !!!

வியாழன், 20 அக்டோபர், 2016

வயலட் கேபேஜ் சாலட் :- கோகுலம், GOKULAM KIDS RECIPES.

ர்ப்பிள் கேபேஜ் சாலட் :-


சிலைகள் சொல்லும் சேதி.

பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறு குன்றில் அமர்ந்திருக்கும் நிஷ்டை சிவன் :) --

சொல்லும் சேதி - மௌனம் பரமசௌக்கியம்.
நடிகர் நெப்போலியன் அவர்களின் அலுவலகத்தில் நடிகர் பார்த்திபன் பரிசளித்த சிந்தனையைத் தூண்டும் சிற்பம். -

சொல்லும்சேதி - சேவை & பொதுநலம்.
சென்னை டி நகர் பிகேஆர் ஹோட்டலின் முன்புறம் உள்ள மீனவர் சிற்பம்.

திங்கள், 17 அக்டோபர், 2016

கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-கெட்டி மக்கள் நம் செட்டி மக்கள்.:-
****************************************************

NBIG (Nagarathar Business Initiative Group ) துபாயின் ஏற்பாட்டில்  IBCN - 2017, செயலாளரான திரு. ரமேஷ் ராமனாதன் அவர்களின் சோழபுரம் இல்லத்தில் (பங்களா ) வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் குழந்தைகளுக்கு  நம் கலாச்சாரத்தைப் பயிற்றுவிக்கும் முகம், முகாம் ஒன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பார்வையாளராகப் பங்கேற்கும் வாய்ப்புப் பெற்றேன். 

வெள்ளி, 14 அக்டோபர், 2016

சட்கடியும் பிச்காரியும்.

இது ஆறுமாசமா வீட்ல உள்ளவங்க உபயோகிச்சது. :) முன்னே.. இப்ப கொறைச்சிட்டாங்க :)
சடுக்கடியும் பிச்காரியும். பட்டம் விடும் மாஞ்சா நூல் சுற்றிய கட்டைக்கு சட்கடி என்று பெயர். ஹோலியில் வண்ண நீரைப் பீச்சி விளையாடும் இந்தப் பீச்சாங்குழலுக்குப் பிச்காரி என்று பெயர். :) பிள்ளைகள் விளையாடியது.
காயின் கலெக்‌ஷன். யூரோஸ். :)

வியாழன், 13 அக்டோபர், 2016

மனிதர்கள் பலவிதம்.

மலேஷியாவில் இருக்கும் பிரபல மசூதி ஒன்றில் தினப்படியான மதிய நேர ப்ரேயர்.
ஏதோ ஒரு சிறு தமிழக கிராமத்தின் பேருந்துநிலையம்.
விவேகானந்தர் சொன்னது. எழுமின், விழிமின், நில்லாது செல்மின். ஆமாம் விழுமின்னு போட்டுருக்காங்க ??? ARAISE AWAKE STOP NOT TILL THE GOAL IS REACHED.. தானே.

சனி, 8 அக்டோபர், 2016

திருநிலை. - தினமலர் வாரமலரில் வெளியான சிறுகதை.

திருநிலை.

டிங் டிடிங் டிங் டிடிங் என்று தொடர்ந்து ஒலித்த காலிங்பெல் திருநெலை ஆச்சியின் நெஞ்சத்துடிப்பை அதிகமாக்கியது. பூக்காரம்மா, பேப்பர்காரன், பால்காரப்பையன், தண்ணி கேன் கடைக்காரர், கூரியர் போஸ்ட், வேலை செய்யும் முத்தி யாராக இருந்தாலும் ஏன் இப்பிடி மண்டையிலடிப்பதுபோல காலிங்க்பெல்லை அடிக்கிறார்கள் என்று அவுகளுக்கு நெஞ்சப்பாரடித்தது. டிடிங் டிடிங் என்று பூட்டைத் திறக்கும்போதெல்லாம் மணியடித்தது போல் சத்தமிடும் பெரியவீட்டின் பட்டாலை முகப்புக்கதவு அவர்களின் கண்ணுக்குள் வந்து போனது.

எழுபத்தியைந்து வயதைச் சுமந்த உடம்பை அசைத்துச் சென்று கதவைத் திறந்தால் பேரமிண்டியும் பேரனும் நின்றிருந்தார்கள். வாசப்படி நிலையில் நிக்கமுடியாமல் யார் இப்பிடிக் காலிங்பெல்லை உடைக்கிறது என்று கோபமாகக் கேட்க நினைத்தவர் மௌனமாகத் திரும்பி வந்து தன்னுடைய திண்டில் அமர்ந்தார். அப்பத்தா வீட்டு ஐயாவின் பெயரிட்டுக் கொண்ட அவுக பிரியத்துக்குரிய பேரன் ஐயப்பனைக் கோச்சுக்க முடியுமா. புள்ளகூட்டியே வந்த வீட்டில் மொதமொதலாப் பொறந்த பேரன். அவனுக்காகத்தானே எல்லாம். கேட்ட விளையாட்டுச் சாமானை எல்லாம் வாங்கிக் கொடுத்தமாதிரி இப்ப கேட்ட பூர்வீக வீட்டையும் உடைக்கக் கொடுத்திருக்கிறாக.

சாட்டர்டே ஜாலி கார்னர். பத்மா வந்த பஸ்ஸைக் காணோம்.. ??!!

என் அன்புத் தங்கை புவனா மூலம் அறிமுகமான அன்புத் தோழி இளமதி பத்மாவிடம் இந்த வார சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எதுவும் எழுதித் தரும்படி கேட்டிருந்தேன்.

பத்மா மிக அன்பானவர், குழந்தை உள்ளம், வெள்ளந்தி, நேர்மறை சிந்தனைகள் கொண்டவர். காதல் பொங்கும் சிறு சிறு கவிதைகள் மூலம் என்னைக் கவர்ந்தவர், பத்ரிக்கைத் துறையில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

எனது சிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியீட்டிலும், அதன் மதிப்புரைக் கூட்டத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர். அவர் எழுதிய அனுப்பிய ஜாலி  பதிவு இதோ உங்களுக்காக.

/////சுற்றுலா பிடிக்காதவர் எவரேனும் உண்டா அதுவும் பள்ளியில் படிக்கும் போது... மதுரையிலிருந்து தூத்துக்குடி கன்யாகுமரி திருச்செந்தூர் காலையில் புறப்பட்டு மாலையில் திரும்புவது என பள்ளியில் சொல்ல ஆர்வம் அதிகமானது! அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நான் ( அம்மம்மா) செல்லம் என்பதால் பாட்டியை ராஜா செய்தால் போதும் என்றிருந்தேன்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

SUMO வும் சவாரியும்.

1041. இரும்பை இணைக்கிறது இதயம்.
இரும்புக்குத் தெரிவதில்லை அது இதயமென்று..

1042. ஒருவாரம் முன்னாடி ..

முனியம்மா :- இதென்ன ரவா உப்புமா.. நீ கடலைப்பருப்பு, பட்டாணி, வேர்க்கடலை தாளிக்கமாட்டியா.

நான் :- அதெல்லாம் போட்டா கிச்சடி . இது உப்புமா.

முனியம்மா:- நாங்க இன்னும் கொடமொளகாய், காரட்டு, பீன்ஸ் எல்லாம் உப்புமால போடுவோம். எண்ணெய் தொட்டா கையில ஒட்டும்.

நான். :- எண்ணெய் அதிகம் சேர்த்தா ஹார்ட்டுக்கு நல்லதில்ல.

இன்னிக்கி:-

முனியம்மா :- என்னா தயிர் சாதம் இது. கடலைப் பருப்பு தாளிக்க மாட்டியா...

நான் :- தயிர்சாதத்துல கடலைப் பருப்பா ?

மைண்ட் வாய்ஸ் :- டூ மச் முனியம்மா . என் புருஷன் பிள்ளைங்களே நான் சமைச்சத கொற சொல்லாம சாப்பிடுவாங்க. என் பொறுமைக்கும் எல்லை இருக்கு. --

மனசாட்சி :- வெயிட் வெயிட் ..பொறுமை பொறுமை யுவர் ஹானர். ஆ .. ஊன்னு சவுண்டு விட்டீங்கன்னா அவ வராம போயிடுவா. அப்புறம் யார் பாத்திரம் எல்லாம் தினம் தேய்ப்பா.

1043. Appada.. thank god. �vayithula puliya karaicha vishayam sambara mariduchu

1044. இதனால் என் தோழமைகளுக்கு அனுப்பும் தகவல் " நான் யாருக்கும் எந்த விதமான வீடியோ தகவல் ஏதும் அனுப்பவில்லை" இருந்தாலும் நான் அனுப்பியதாக அவரவர் பெயர் போட்டு வந்தாலும் திறக்காமல் டெலீட் செய்துவிடுங்கள்...நன்றி

1045. Kavirikkaga kavalapaduratha , kovaikkaga kavalapaduratha..

#Nalla velai nanga thappuchomkiranga pasanga :P

1046. photo edukkarathu easy. Bt orutharukku pidicha innoruthavungalukku pudikirathulla athan kavalaya ukarnthuruken ���

#sunday_sundai �

வியாழன், 6 அக்டோபர், 2016

நவராத்திரி ரெசிப்பீஸ் & கோலங்கள்.1.காராமணி இனிப்பு சுண்டல்
2.சோளே சுண்டல்
3.ஸ்வீட் கார்ன் சாட்
4.முளைவிட்ட பயறு டாகோஸ்
5.பச்சை வேர்க்கடலை சுண்டல்
6.பச்சை பட்டாணி தேங்காய் மாங்காய் சுண்டல்.
7.ப்ரவுன் மொச்சை சுண்டல்
8.கொள்ளு சுண்டல்
9.நவதானிய மிக்ஸர்.
10.நவதானியப் பாயாசம்
11.எலுமிச்சை சாதம்.
12.பச்சை அவரை சுண்டல்.
13.எள்ளு சாதம்
14.சோயா சுண்டல்.
15.பகாளாபாத்

சிவப்புப் பட்டுக் கயிறு.- விஜிகே சாரின் நூல் மதிப்புரை.


எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு விஜிகே சார் அவர்கள் எனது  ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு என்னும் சிறுகதைத் தொகுதிக்கு மிகச் சிறப்பாக ஆறுபாகங்களாக மதிப்புரை வழங்கி இருக்கின்றார்கள்.

நாமெல்லாம் ஒரு போஸ்டாக போடுவோம். ஆனால் அவர் ஆறு போஸ்டுகளாகப் போட்டு அசத்தி இருக்கிறார். இதில் ஒவ்வொரு போஸ்டிலும் கிட்டத்தட்ட 100 க்கும் குறையாமல் பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன . என்னுடைய வலைத்தளத்தில் எந்தப் போஸ்டுக்கும் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்ததே இல்லை.  ( நான் பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பதில் கால தாமதத்தையும் கடைப்பிடிக்கிறேன்.என்று லேசாக குட்டிக் கொண்டேன். ஹ்ம்ம் முகநூல் மொக்கைகளில் ஆழ்ந்து ஒரு மூணு மாசத்துக்கொருதரம்தான் ப்லாக் போஸ்டுகளுக்கு மொத்தமாக நன்றி சொல்கிறேன்.  அனைவருமே மன்னிக்க வேண்டுகிறேன் :)

புதன், 5 அக்டோபர், 2016

யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா!

நண்பர் மு இளங்கோவன் அனுப்பிய இவ்வழைப்பிதழை  முதுவை ஹிதாயத் சகோ அனுப்பி இருந்தார்கள்.  நானும் அதைப் பகிர்ந்திருக்கிறேன்.

///அன்புடையீர், வணக்கம்.

இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளாரின் பன்முக ஆற்றலை விளக்கும் ஆவணப் படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நிரலை இணைத்துள்ளேன்.

தங்கள் இணைய இதழில் வெளியிட்டு உதவுங்கள்.

தங்கள் நண்பர்களின் பார்வைக்கு வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி///

செவ்வாய், 4 அக்டோபர், 2016

மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

பிதாரில் குருநானக்கின் பாதச்சுவடு இருக்கும் குருத்துவாராவின் நீர்நிலையும் கட்டிடங்களும். தேன்கூடு போன்ற அறைகள் பக்தர்கள் தங்குவதற்காக பஞ்சாபியரால் கட்டப்பட்ட குருத்துவாராவின் எதிரில் உள்ள அம்ரித் குண்ட் என்ற புனித நீர்த் தொட்டி.
இது கர்நாடகாவில் பெங்களூருவில் இருக்கும் வாட்டர்போர்ட் பில்டிங்க். அரைவட்ட வடிவில் என்னே அழகு.. :)


இது சிங்கப்பூரில் ஜப்பானீஸ் பார்க்கில் உள்ள ஏழு மாடிக்கட்டிடம். இவை போன்றவை பகோடாக்கள் என அழைக்கப்படுகின்றன.
எதிரில் உள்ள கட்டிடம் ஒரு முறை மேம்பாலத்தில் சென்றபோது எடுத்தது.

மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

இது துபாய் அட்லாண்டிஸில் சன்செட்டில் எடுத்தது.
கும்பகோணம் கோயில் தேர்த்திருவிழா. ( ஏகப்பட்ட கோயில்கள் இருக்கு. எந்தக் கோயில்னு மறந்துருச்சு )
ஹரிக்கேன் விளக்கு. காரைக்குடியில் அம்மா வீட்டில் எடுத்தது.

திங்கள், 3 அக்டோபர், 2016

கவிஞர் ஆத்மாநாம் விருது.

விருதுக்கு வாழ்த்துகள்  நண்பர் மோகனரங்கன், 

விழா சிறக்க வாழ்த்துகள் ஆத்மாநாம் ட்ரஸ்ட், & காப்ஸ் உணவகம். 


////கவிஞர் ஆத்மாநாம் விருது விழா - 2016

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை ஆண்டுதோறும் 'கவிஞர் ஆத்மாநாம்' பெயரிலான விருதைத் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு வழங்கி சிறப்பித்து வருகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...