செவ்வாய், 18 அக்டோபர், 2016

மரபும் அறிவியலும். - கோலமிடுதல். - நமது மண்வாசத்துக்காக.


மரபும் அறிவியலும்.

இந்தியர்களின் மரபு சார்ந்த விஷயங்களில் முக்கியமானவை கோலமிடுதல் வேஷ்டி அணிதல், மிஞ்சி மூக்குத்தி தண்டட்டி போன்ற ஆபரணங்கள் அணிதல்.இவை பற்றிய மரபு சார்ந்த விஷயங்களையும் அவற்றின் அறிவியல் ரீதியான விளக்கங்களையும் பார்ப்போம்.

பல நூற்றாண்டுகளாக இந்தியர் வாழ்வில் கோலங்கள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் நாட்டில் மட்டுமல்ல தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா,ஆந்திரா , கேரளா போன்ற ஊர்களிலும் கூட கோலம் முக்கியத்துவம் பெறுகிறது. கேரளாவில் பூக்கோலம் பிரசித்தம். வடநாட்டில் ரங்கோலியும் சுவரில் வரையும் கோலங்களும் பிரசித்தம். தமிழ்நாட்டிலும் இன்னபிற மாநிலங்களிலும் கோலப்பொடி என்ற வெள்ளைக்கல்பொடியால் கோலம் போடுகிறார்கள். முன்பு பச்சரிசியால்தான் கோலமிடுவார்கள். அதனால் எறும்புகள் உணவாக எடுத்துச் செல்லும். மேலும் கோலங்கள் உடற்பயிற்சி மனப் பயிற்சி கொடுத்து உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்க உதவி செய்தன.

கம்பிக் கோலம் புள்ளிக் கோலம் ரங்கோலி என விதம் விதமான கோலங்கள் உண்டு. பச்சரிசியை அரைத்துக் கரைத்தும் கோலமிடுவார்கள். திருமணம், பூப்பெய்துதல், குடிமனை புகுவிழா, முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்கள், திருக்கோயில்கள், பண்டிகைகள், நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், அலுவலகங்கள் போன்றவற்றின்  விசேஷ நிகழ்வுகளிலும் கோலங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பூஜையறைக் கோலங்கள் என்று யந்திரங்கள் கொண்ட கோலங்கள் விசேஷ சக்தி வாய்ந்தவை. கோலங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி கொடுக்கின்றன. நளினமான இனிமையான கோலங்கள் காண்பவர் மனதை வசியப்படுத்தும் சக்தி வாய்ந்தவை.


மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதால் கிடைக்கும் ஓஸோன் காற்று உடலை சுத்தமாக்கும். சாணம் தெளிப்பதால் சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு நோய் நொடி அண்டாமல் தடுக்கிறது. கோலத்தில் வைக்கப்படும் சாணியும் பூசணிப்பூ பரங்கிப் பூவும் மறுநாள் இயற்கை உரமாகும். குனிந்து நிமிர்ந்து கோலிடும்பபெண்களுக்கான ஜீரண உறுப்புகள் வேலை செய்வதோடு மற்ற உறுப்புகளும் பலம் பெறுகின்றன

இனி அறிவியல் காரணம் :- இதில் போடப்படும் ஓவல் ஷேப் கோடுகள் கோள்களின் பாதையை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளன. முக்கோணம், வட்டம், சதுரம், செவ்வகம், வளைவு நெளிவுகள் என்று போடப்படும் கோலங்களுக்கு ஒத்த அதிர்வுகள் உள்ளன. பௌதீகத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு ஒத்திசைவான வடிவம் உள்ளது. அது குறிப்பிட்ட அதிர்வலைகளை உருவாக்குகிறது. அதனால்தான் அழகான வண்ண ரங்கோலிகளைப் பார்க்கும்போது மனதில் இனிமையான அதிர்வுகள் உருவாகின்றன. அமைதிப் படுத்துகின்றன.  

ஸைமாட்டிக்ஸ் என்னும் தனிப்பிரிவு அதிர்வுகளுக்கும் கோல வடிவங்களுக்கும் உள்ள உறவை விளக்குகின்றது. க்ரேக்க ொழியில் அலைகள் என்றேர்ச்சொல்லில் இரந்து வந்து. இற்கு முழு உருவம் கொடத்ெருமுவிஸ் விஞ்ானியானான்ஸ் என்னி என்பையே சாரும்.

ஒரு உலோகத் தகட்டில் சிறிது மணலைத் தூவி அதை அதிர்வு ஏற்படுத்தக் கூடிய ஜெனரேட்டரோடு இணைத்தால் ஒவ்வொரு ஒத்ததிர்வுக்கும் ஏற்ப மணல் துகள்கள் வெவ்வேறு வடிவமைப்புப் பெறுகின்றன. இப்படி அதிர்வானது வெவ்வேறு வடிவமைப்புகளை உருவாக்குவது போல இந்த வடிவமைப்பில் அமைந்த கோலங்களைப் பார்க்கும் மனிதருக்குள் அவை நல்ல அதிர்வுகளை உருவாக்கும். அமைதியான, மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுக்கும். இதைக் கொண்டு சிக்கலான மனநிலை வியாதி கொண்டவரையும் குணமாக்கப் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வண்ணங்கள் வடிவங்கள் கொண்டு மனித மனங்களில் மாற்றங்கள் நிகழ்த்த இயலும் என்று நரம்பியல் அறிவியல் நிரூபித்துள்ளது. இதற்கு ஸைமோதெரஃபி என்று பெயர். இதனால்தான் வடிவழகான வண்ணக் கோலங்களைக் கண்டு நாம் அமைதியான மனநிலை பெற்று ரசிக்கத் துவங்குகிறோம். ஆன்மீகத்துக்காகவும் அழகியலுக்காகவும் பயன்படும் நமது மரபு சார்ந்த கோலக்கலை நம் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் நம்மைச் செப்பனிட்டே வந்திருக்கிறது. அதற்குக் காரணமான நமது கோலக்கலைக்கு நன்றி சொல்வோம்.

4 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

கோலமிடும் மரபு என்பதானது அழகியல் நிலையிலும் போற்றிப் பாராட்டப்படவேண்டியதாகும். நன்றி.

பரிவை சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா...
கோலமிடுதல் ஒரு கலை... நம் மரபு...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

நன்றி குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...