எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிவப்புப் பட்டுக் கயிறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவப்புப் பட்டுக் கயிறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஜூன், 2017

தினமணி காரைக்குடி சில புகைப்படங்கள்.



தினமணியும் காரைக்குடி புத்தகத் திருவிழாவும் இணைந்து நடத்திய போட்டியில் 2013 இல் எனது சிவப்புப் பட்டுக் கயிறு ஊக்கப்பரிசு பெற்றது. அதில் எடுத்து போட விட்டுப்போன சில புகைப்படங்கள் இங்கே. 

சிறுகதை மன்னர் திரு. அய்க்கண் அவர்கள் மகளும் குழந்தைக் கவிஞர் திரு அழ வள்ளியப்பா அவர்கள் மகளும். ( தேவி நாச்சியப்பன் )




தேவி நாச்சியப்பன் அவர்கள் கணவருடன்



இவர் ஆதலையூர் சூரியகுமார்.



நாஞ்சிலாரிடம் பரிசு.

வியாழன், 9 மார்ச், 2017

கயல்விழியின் பார்வையில் சிவப்புப் பட்டுக்கயிறு நூல் விமர்சனம் யூ ட்யூபில்.


https://www.youtube.com/watch?v=8QcyYRRQxvw
Thenammai Lakshmanan Book Review By Kayalvizhi - Segment 2/3



https://www.youtube.com/watch?v=_0l6UyE-VsQ
Thenammai Lakshmanan Book Review By Kayalvizhi - Segment 1/3



https://www.youtube.com/watch?v=GK5v4twOcG8
Thenammai Lakshmanan Book Review By Kayalvizhi - Segment 3/3



அன்பும் நன்றியும் அணைப்புகளும்டா கயல். யூட்யூபில் பதிவேற்ற நாளாகிவிட்டது. மிக அருமையான உரை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டாய் கயல். எப்போதும் எனக்கு ஊக்கமளித்து வரும் தங்கை கயலுக்கும்,  மணிமேகலை மேம், லதானந்த் சார் & இளங்கோ சார் , வேடியப்பன் ஆகியோருக்கும் ( பத்மா இளங்கோ மேமுக்கும்  ) மனம் நிறைந்த அன்பும் நன்றியும். வாழ்க வளமுடன்.

புதன், 11 ஜனவரி, 2017

சிவப்புப் பட்டுக் கயிறு - நமது மண்வாசத்தில் விமர்சனம்.


  எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட தேனம்மை லெக்ஷ்மணன் பல்வேறு இதழ்களில் எழுதி வெளியான  கதைகளின் தொகுப்பு இந்த சிவப்பு பட்டுக்கயிறு நூல். 

புத்தகத் தலைப்பாகியுள்ள சிவப்புப் பட்டுக் கயிறு கதையானது மனதை உலுக்குகிறது.

திங்கள், 26 டிசம்பர், 2016

சரஸ் மேம் பார்வையில் சிவப்புப் பட்டுக் கயிறு.

 மன்னை சதிரா என்று அறியப்படும் பிரபல எழுத்தாளரான சரஸ்வதி ராஜேந்திரன் மேம் அவர்கள் எனது சிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு விமர்சனம் அளித்துள்ளார்கள். முகநூலில் எனது புத்தகப் பக்கத்தில் அவர் கொடுத்ததை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். :)




///Saraswathi Rajendran சிவப்புப்பட்டுக்கயிறுஒரு பார்வை 

படைப்பாளியின் வாழ்க்கை அன்பவங்கள் நேர்பதிப்பாகவோ
மறைமுகப்பதிவாகவோ இருக்கலாம். அதை கலை நயத்துடன் அவர் வெளியிடும் பாங்கில்தான் படைப்புத்திறன் பளிச்சிடுகிறது. அவருடைய பாதிப்பின் ஆழம்,அழுத்தம்,உணர்வுகளின் வெளிப்பாடாய் அருமையான சொற்களில் வந்து விழும் பிரதிபலிப்பாய் பரிணமிக்கிறது
சிவப்புப்பட்டுக் கயிறு.


புதன், 21 டிசம்பர், 2016

நலந்தாவில் எனது நூல்கள். தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை.

////அன்புடையீர் 

வணக்கம் 

வ. சுப. மாணிகனார் நூற்றாண்டை முன்னிட்டு நலந்தாவின் "தனித் தமிழும் இனித் தமிழும்" கருத்துப் பேழையில் ஆக்கம் நல்கி பங்கு பெற வேண்டுகிறோம். 

தங்கள் கருத்துகளை 500 சொற்களுக்கு மிகாமல் கை எழுத்து பிரதியாகவோ தட்டச்சுப் பிரதியாகவோ 05.01.2017 க்குள் அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி

அன்புடன்
நலந்தா செம்புலிங்கம் .////
*                *                   *               *                  *                   *                *
காரைக்குடி நலந்தா புத்தகக் கடை நிகழ்த்தும் ”இனித்தமிழும் தனித்தமிழும் ” என்ற தலைப்பில் கருத்துப் பேழைக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பிப் பங்கு பெற வாழ்த்துகிறேன்.
நலந்தா = நல்ல புத்தகக் கடை. இதை நடத்தி வருபவர் தேவகோட்டையைச் சேர்ந்த திரு ஜம்புலிங்கம் அவர்கள். 

சனி, 3 டிசம்பர், 2016

சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய விமர்சனம். எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்.

சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய எங்கள் ப்ளாகின் ஸ்ரீராமின் விமர்சனப் பார்வை.

இந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன.  தினமணி கதிர், திண்ணை, தினமலர் பெண்கள் மலர், மேரிலேன்ட் எக்கோஸ், தினமலர் வாரமலர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம்,தென்றல் (அமெரிக்க தமிழ் மாத இதழ்) ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை.      இதில் புத்தகத் தலைப்பாகியுள்ள சிவப்பு பட்டுக் கயிறு கதை மனதை அசைத்து விட்டது.  ஏதோ தத்து கொடுப்பார்கள் எங்கள் இல்லங்களிலும்.  ஆனால் இந்த மாதிரி ஒரு உறவறுத்து இன்னொரு உறவுடன் சேரும் வேதனை படிக்கும்போது மனதில் பதிந்தது.  

வெள்ளி, 4 நவம்பர், 2016

சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.



சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை

பட்டுகயிற்றை எப்பிடி இடுப்பை சுற்றி கட்டுகிறோமோ, அது மாதிரி இந்த புத்தகமும் சமூகத்தை சுற்றி சகல இடத்திலும் சாமனியதளங்களில் இலகுவாக பயணிக்கிறது.அறுத்து போடும் பட்டு கயிற்றில் உயிர் ஏற்றி ஆரம்பிக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு.

வியாழன், 6 அக்டோபர், 2016

சிவப்புப் பட்டுக் கயிறு.- விஜிகே சாரின் நூல் மதிப்புரை.


எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு விஜிகே சார் அவர்கள் எனது  ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு என்னும் சிறுகதைத் தொகுதிக்கு மிகச் சிறப்பாக ஆறுபாகங்களாக மதிப்புரை வழங்கி இருக்கின்றார்கள்.

நாமெல்லாம் ஒரு போஸ்டாக போடுவோம். ஆனால் அவர் ஆறு போஸ்டுகளாகப் போட்டு அசத்தி இருக்கிறார். இதில் ஒவ்வொரு போஸ்டிலும் கிட்டத்தட்ட 100 க்கும் குறையாமல் பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன . என்னுடைய வலைத்தளத்தில் எந்தப் போஸ்டுக்கும் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்ததே இல்லை.  ( நான் பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பதில் கால தாமதத்தையும் கடைப்பிடிக்கிறேன்.என்று லேசாக குட்டிக் கொண்டேன். ஹ்ம்ம் முகநூல் மொக்கைகளில் ஆழ்ந்து ஒரு மூணு மாசத்துக்கொருதரம்தான் ப்லாக் போஸ்டுகளுக்கு மொத்தமாக நன்றி சொல்கிறேன்.  அனைவருமே மன்னிக்க வேண்டுகிறேன் :)

திங்கள், 19 செப்டம்பர், 2016

சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.

N.Rathna Vel added 2 new photos — .
September 10 at 1:06pm ·

நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்

சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைத் தொகுப்பு)

எழுதியவர்: திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்
honeylaksh@gmail.com

பக்கங்கள் 108 – விலை ரூ.80

ஆசிரியர் பற்றி:

எங்கள் இனிய நண்பர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் பதிவுகளில் நட்பு, முகநூலிலும் தொடர்ந்தது. இது அவர்களின் 5வது புத்தகம்.

சிவப்பு பட்டுக் கயிறு
அருமையான முகப்பு,
அருமையான கட்டமைப்பு, அச்சு.

படித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் இவரது புத்தகங்கள் வெளியாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

திங்கள், 12 செப்டம்பர், 2016

மதுரை புத்தகக் கண்காட்சியில் “சிவப்புப் பட்டுக் கயிறு “ நூல்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ஸ்டால் எண். 205 இல் எனது சிறுகதைத் தொகுதி “சிவப்புப் பட்டுக் கயிறு ” நூல் கிடைக்கிறது. 





டிஸ்கவரியின் வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கிறது. இன்றே கடைசி. அடுத்து தூத்துக்குடியில் செப்டம்பர் 20 புத்தகத் திருவிழாவிலும் கிடைக்கும். படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க மக்காஸ் :) 
டிஸ்கி:- 

பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான தேனம்மை லெஷ்மணனின் இக்கதைகள் அனைத்து பெண் மனங்களின் வழியாக வெளிப்படும் அவர்களின் ஆற்றாமையையும்,அன்பையுமே களமாகக் கொண்டுள்ளன.மிக எதார்த்தமான இக்கதைக் களங்களின் வழியாக தான்சார்ந்த பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கும் அதே நேரத்தில்,இவ்வாழ்க்கையின் அர்த்தமிழந்துபோன அன்றாட நிகழ்வுகள் சில எப்படி பெண்களின் பார்வையில் வேறோரு கோணத்தில் அதே துடிப்புடன் உயிர் பெற்றுவிடுகிறது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக கதைகள் நெடுக பதிவாகியுள்ளன.

ஆன்லைனில் வாங்க.

லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.

செப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல்  பற்றி படித்துப் பாருங்கள் பகுதியில் வந்துள்ளது.

நான் ஃப்ரீலான்சிங்காகப் பணிபுரிந்த லேடீஸ் ஸ்பெஷலில் சாதனை அரசிகள், ங்கா, ஆகியனவும் நூல் முகத்தில் வெளிவந்துள்ளன. சிவப்புப் பட்டுக் கயிறு நூலையும் அறிமுகப்படுத்திய ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

புதன், 24 ஆகஸ்ட், 2016

சூலம். .( திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை. )


குலதெய்வம் கோயிலில் புரவி எடுப்பில் செல்லும் குதிரைகளைப் பார்த்தபடி நின்றிருந்த மேகலா அதிர்ந்த கைபேசியை எடுத்துப் பேசி அதிர்ச்சியானாள். அவளது அப்பா மாரியப்பன் யாரும் இல்லாத வீட்டில் முதல் நாள் இரவு இறந்த செய்தியை, இறந்த விதத்தை அதிர்ச்சியோடு பகிர்ந்திருந்தாள் அவளது அத்தை மோகனா.

பக்கத்தில் நின்றிருந்த தனது அம்மா தேவியைப் பதட்டத்தோடு பார்த்த மேகலா , ”அம்மா ஒரே கூட்டமா இருக்கு. சீக்கிரம் போகலாம் வா, போகலாம் ” என்றாள். ”இருடி சாமி உள்ளே போன பின்னாடி அருச்சனை பண்ணிட்டுப் போகலாம் “ என்றாள். 

”இல்லம்மா பின்னாடி கூட்டம் சாஸ்தியாயிடும் இன்னொருநாள் வரலாம். வா” என்றாள். “அடி இவளே. வெளக்கு வைக்கும்போது உருண்டிருச்சு , அதுனால தீவம் பார்த்துட்டுத்தான் போகணும் “ என அம்மா பிடிவாதம் பிடிக்க, ”இல்லம்மா அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லையாம் அதான் அத்த போன் பண்ணிச்சு , உடனே போவோம்மா என அவளைக் கிளப்புவதிலேயே குறியாயிருந்தாள் மேகலா. ஐஸ் வண்டிகளும், மாங்காய் பத்தைகளும் எலந்தை வடைகளும் மணம் கிளப்பிக் கொண்டிருக்க பலூனைப் பிடித்தபடி குழந்தைகளும் முறைப்பெண்களைச் சுற்றியபடி இளவட்டங்களுமாக கலகலப்பாக இருந்தது முத்துப்பிடாரி அம்மன் கோயில் புரவி எடுப்பு. சாமியாட்டத்தோடு கொடிகளும் குடைகளும் சூழ ஆரம்பித்திருந்தது திருவிழா.

புதன், 10 ஆகஸ்ட், 2016

சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் குரலில் - சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் உள்ள நந்தினி சிறுகதை .

தென்றலுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் அனுப்பி அதன் பின் மறந்துவிட்டு என் சிறுகதைத் தொகுப்பில் வெளியிட்ட கதை ஒன்றை தென்றலுக்காக ஒலிவடிவமாக்கி இருக்கின்றார்கள்.


வேறு நூலில் வந்ததை வெளியிடமுடியாது என்றாலும் ஒலி வடிவில் முன்பே ஏற்றியதை பெருமதிப்பிற்குரிய என் முகநூல் தோழி திருமதி சரஸ்வதி தியாகராஜன் அனுப்பி இருக்கின்றார்கள்.

அதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவர்கள் குரலில் என் கதையைக் கேட்கும்போது அற்புதமாய் இருக்கிறது. படிக்கும்போதே நெகிழ்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். மிக்க நன்றி மேம். வாழ்க வளமுடன்.

என் சிறிய மகன் சபாரெத்தினத்தினம் இதை சவுண்ட்க்ளவுடில் போட்டுக்கொடுத்துள்ளான்.

https://soundcloud.com/sabalaksh/nanthini-story 

எனது சிறுகதைத் தொகுப்பு - ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் இந்தக் கதை வெளியாகி உள்ளது.  கேட்டுட்டு சொல்லுங்க :)


புதன், 27 ஜூலை, 2016

சிவப்புப் பட்டுக்கயிறு & பெண்பூக்கள் நூல் வெளியீடு & மதிப்புரை பாருவின் பார்வையில். :)

Paaru Kumar

எப்படியாவது இந்த உலகத்த விட்டு போறதுக்குள்ள....கால் பங்காவது இலக்கியவாதி ஆகனுங்கற முயற்சியல்.....

யாரு புத்தகம் வெளியிடறாங்க...இல்ல அதைப்பற்றி பேசுறாங்கன்னாலும்....கலந்துக்கறேன்.

இளமதி பத்மா ...அழைப்பின் பேரில் கலந்துகொண்டேன்...
தேனம்மை லஷ்மணின்.....
சிவப்பு பட்டுக்கயிறு மற்றும் பெண் பூக்கள் புத்தக வெளியீடு மற்றும் மதிப்புரை.

வெள்ளி, 22 ஜூலை, 2016

சிவப்புப் பட்டுக் கயிறு & பெண் பூக்கள் நூல் வெளியீடு & மதிப்புரை.

ஜூலை 23 சனிக்கிழமை அன்று மாலை ஆறு மணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் சிவப்புப் பட்டுக் கயிறு & பெண்பூக்கள் நூல் விமர்சனம்.

பெண்பூக்கள் நூல் வெளியீடு - சாஸ்த்ரி பவன் யூனியன் லீடர் திருமதி மணிமேகலை அவர்கள்.

 
 பெற்றுக் கொள்பவர் - திருமதி சுபா தேசிகன் அவர்கள்.

பெண் பூக்கள் & சிவப்புப் பட்டுக்கயிறு  நூல் மதிப்புரை .

இடம் :- டிஸ்கவரி புத்தக நிலையம், முனுசாமி சாலை, கே. கே. நகர், சென்னை.

நேரம். 23 . 7. 2016 சனிக்கிழமை. மாலை 6 மணி.

வரவேற்புரை - டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்கள்.

சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய மதிப்புரை :-

1. முன்னாள் வனத்துறை அதிகாரி & கோகுலம் எடிட்டர் திரு. லதானந்த். அவர்கள்
 
 

2. மென்திறன் பயிற்சியாளர்.திருமதி கயல்விழி மோகன் அவர்கள்

பெண்பூக்கள் பற்றிய மதிப்புரை :-

1. பொறியாளர் திரு. கே டி இளங்கோ அவர்கள்
 
 

2. லயனஸ் திருமதி. வசுமதி வாசன் அவர்கள்


ஏற்புரை. திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன்.

அனைவரும் வருக.
 

திங்கள், 13 ஜூன், 2016

சிவப்புப் பட்டுக் கயிறு -நூல் வெளியிடு புகைப்படங்கள்.

சென்னையில் நடைபெற்ற 39 வது புத்தகத் திருவிழாவில் எனது ஐந்தாவது நூல் - சிறுகதைத் தொகுதி - சிவப்புப் பட்டுக் கயிறு வெளியிடப்பட்டது.

தென்னக ரயில்வேயில் உயர் பொறுப்பில் இருக்கும் திரு . இளங்கோவன் ஐஆர் எஸ் அவர்களும், சாஸ்த்ரி பவனில் உயர் பொறுப்பில் இருக்கும் திருமதி கீதா இளங்கோவன் அவர்களும் வெளியிட, இயக்குநர் திரு. ஐ எஸ் ஆர் செல்வகுமார் அவர்களும், என் அன்புத் தங்கை புவனேஸ்வரி மணிகண்டன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.

எனது தம்பி அருணாசலம் ,அவரின் துணைவியார்  இந்து, எனது கணவர் , டிஸ்கவரி புத்தக நிலைய வேடியப்பன் சகோ , சஞ்சய் சகோ ஆகியோர் உடனிருக்க, நான் மிகவும் மதிக்கும் வலைப்பதிவர்கள் சுப்பு தாத்தா என்ற சூர்யா சார், கணேஷ் பாலா சகோ, கார்த்திக் சகோ ( ஸ்கூல் பையன் ), பத்ரிக்கையாளர் கவிமணி, இளமதி பத்மா, பாரு குமார், அனிதா ராஜ், கவிதா ரவீந்திரன், மணிவண்ணன் பார்த்தசாரதி, விஜய் மகேந்திரன், கமலி பன்னீர் செல்வம், நாச்சியாள் சுகந்தி, உமா மோகன், லதா அருணாசலம், வெங்கட் சகோ, காஞ்சிபுரம் தியாகராஜன், கோபி கண்ணதாசன், கவிஞர் தஞ்சை எழிலன், மதுமிதா ராஜா, ஆகியோர் கலந்து கொண்டும் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டும் சிறப்பித்தார்கள்.

முக்கியமான தருணத்தில் என் காமிராவும் செல்ஃபோனும் காலை வாரி விட தோழி லதா அருணாசலமும், மணிவண்ணன் பார்த்தசாரதி சாரும், வெங்கட் சகோவும் புத்தக வெளியீட்டைப் படம் எடுத்து அனுப்பி உதவினார்கள். நன்றியும் அன்பும் வாழ்த்துகளும் அனைவருக்கும். என் மதிப்பிற்குரிய இளங்கோ சாரும், தோழி பத்மா இளங்கோ அவர்களும் கலந்து கொள்ளவில்லை என்ற குறையைத் தவிர வேறொன்றும் இல்லை. இரு நாட்களாக உடல் நலக் குறைவினால் நிகழ்வைப் பதிவேற்ற இயலவில்லை. இப்போதுதான் நேரம் கிடைத்தது.நன்றி மக்காஸ்.

 புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.

வெள்ளி, 10 ஜூன், 2016

சிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியீட்டு விழா.

எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு சென்னை தீவுத்திடலில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் வரும் சனிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு டிஸ்கவரி புத்தக நிலையத்தின் அரங்கு எண் 104, 105 இல் மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.

வெள்ளி, 3 ஜூன், 2016

சிவப்பு பட்டுக் கயிறு.



இந்த வருடம் - ஜூன் 2, 2016 என்னுடைய ஐந்தாவது நூல் - சிறுகதைத் தொகுதி - சிவப்பு பட்டுக் கயிறு டிஸ்கவரி புத்தக நிலையத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. 
சிவப்புப் பட்டுக் கயிறு.
தீவுத்திடலில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி அரங்கு எண் 104, 105 இல் கிடைக்கிறது.

MY FIFTH BOOK - SHORT STORIES COLLECTION -SIVAPPU PATTUK KAYIRU IS AVAILABLE AT DISCOVERY BOOK STALL NO. 104 & 105. AT 39 TH CHENNAI BOOK FAIR.


என்னுடைய நான்காவது நூலான பெண் பூக்கள் கவிதைத் தொகுதியும் அரங்கு எண் - 407 இல் ( பூவுலகின் நண்பர்கள் ) கிடைக்கிறது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் ஆசிக்கும், மேலான வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் மக்காஸ்.

டிஸ்கி:- இது எனது 2,000 ஆவது இடுகை. உங்கள் அனைவரின் அன்புக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் பின்னூட்டத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி மக்காஸ். வாழ்க வளமுடன். !!!!!

புதன், 2 டிசம்பர், 2015

ஆச்சி வந்தாச்சுவில் சிவப்புப் பட்டுக் கயிறு.

ஆச்சி வந்தாச்சு என்றொரு நகரத்தார் இதழ் வெளிவருகிறது. அதில் என்னுடைய சிறுகதையும் என் அம்மாவின் கவிதை ஒன்றும் ( ஆயாவீட்டின் காயா நினைவுகள் ) வெளிவந்துள்ளது.

வியாழன், 5 ஏப்ரல், 2012

சிவப்புப் பட்டுக் கயிறு. ( தினமணி-காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)

சிவப்புப் பட்டுக் கயிறு:-
*************************

 பட்டியக்கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சிலநாட்களுக்குக் குடிக்கவும் சமைக்கவும். நல்லவேளை தண்ணீர் தூக்க குடி தண்ணி ஊரணிக்கு பித்தளைக்குடமும் புளியுமாகப் போகவேண்டாம்.அங்கே செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளே போய் தெளிந்த தண்ணீர் மோந்துகிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்தையில்லை என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதாய் இருந்தது.

 வெய்யில் நாளில் வரும் மழை குளுமையை மட்டுமல்ல., கொஞ்சம் வெக்கையையும்தான் கிளப்பிக் கொண்டு வருகிறது. ஐயா பட்டாலையில் குறிச்சியில் உக்கார்ந்து சுருட்டைப் புகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். யார் யாரோ பீடி ., சிகரெட் குடிக்கும் போதெல்லாம் வரும் கோபம் ஐயாவின் சுருட்டைப் பார்த்தால் வருவதில்லை. பிறந்ததில் இருந்து அவர்களை சுருட்டும் கையுமாகப் பார்த்துவிட்டதாலோ என்னவோ. அல்லது சிறுபிள்ளையில் படித்த வெளிநாட்டுக் காமிக்ஸ் கதைகளில் வரும் பணக்கார ஹீரோக்கள் -- ரிப்கெர்பி-- ஸ்டைலாக சுருட்டு பிடிப்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...