எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 டிசம்பர், 2016

சரஸ் மேம் பார்வையில் சிவப்புப் பட்டுக் கயிறு.

 மன்னை சதிரா என்று அறியப்படும் பிரபல எழுத்தாளரான சரஸ்வதி ராஜேந்திரன் மேம் அவர்கள் எனது சிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு விமர்சனம் அளித்துள்ளார்கள். முகநூலில் எனது புத்தகப் பக்கத்தில் அவர் கொடுத்ததை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். :)




///Saraswathi Rajendran சிவப்புப்பட்டுக்கயிறுஒரு பார்வை 

படைப்பாளியின் வாழ்க்கை அன்பவங்கள் நேர்பதிப்பாகவோ
மறைமுகப்பதிவாகவோ இருக்கலாம். அதை கலை நயத்துடன் அவர் வெளியிடும் பாங்கில்தான் படைப்புத்திறன் பளிச்சிடுகிறது. அவருடைய பாதிப்பின் ஆழம்,அழுத்தம்,உணர்வுகளின் வெளிப்பாடாய் அருமையான சொற்களில் வந்து விழும் பிரதிபலிப்பாய் பரிணமிக்கிறது
சிவப்புப்பட்டுக் கயிறு.


 
பட்டுக்கயிறு அறுப்பது தொப்புள்கொடி அறுப்பதற்கு சமம் சித்தப்பாவின் அழுகை எல்லோரது கண்களையும் நனைத்தது ,படிப்போர் நெஞ்சையும் துளைத்ததுசோகம்.

ஒரு சுவீகாரம் கொடுக்க எத்தனை சாங்கியங்கள் கொடுப்பவரின் மன நிலையை உணர்வுபூர்வமாய் வெளியிட்டுள்ளார் கதாசிரியை 


‘சூலம்  குடிகார கணவனின் மகளும் மனைவியும் படும் வேதனைகளும் அப்பப்பா  கதையின் முடிவு சோகமானதுதான் என்றாலும் தீர்வு அதுதான் .

பதினைந்து கதைகளை உள்ளடக்கியது இந்த நூல் பிள்ளைக்கறி,எருமுட்டை
நான் மிஸ்டர் ஒய், அப்பத்தா.செம்மாதுளைச்சாறு  கல்யாணமுருங்கை ஆகியகதைகள் மிக அருமை.


இச்சிறுகதைகள் படிப்பவர்களுக்கு புதிய உண்மைகளை சிந்திக்க வாய்ப்பு கொடுக்கக்கூடியவை என்றால் மிகையல்ல.


யதார்த்தம் உயர் போக்கு சொல்லாற்றல் எல்லாமே எல்லா கதைகளிலும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது 


கதையின் நிகழ்வுகள் களங்கள் ஆகியவை அனைத்துமே பெண்களின் மனநிலைகளை எண்ண ஓட்டங்களை பல்வேறு வாழ்க்கை நெருக்கடிகளில் தனித்தொரு இயல்போடு சித்தரித்திருப்பது போற்றத்தக்கதாகும்.

தேனம்மையின் இந்த நூலை படித்தபிறகு .. நானெல்லாம் கதை எழுதுவதையே நிறுத்துவிட வேண்டும் அத்துணை ஆளுமை எழுத்துகளில்.

சரஸ்வதிராசேந்திரன் தாமதமான விமர்சனம் சாரிதேன் உடல் நிலை காரணம்////


 ----  அஹா அம்மா நீங்க எல்லாம் எங்க குரு. உங்களை நாங்கள் முன்மாதிரியாகக் கொண்டுதான் எழுத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். என்றும் எங்கள் முன்னோடி வழிகாட்டி நீங்கள்தான். லேட்டானாலும் லேட்டாஸ்டா விமர்சனம் கொடுத்தமைக்கு அன்பும் நன்றியும் .

ிவப்புப் பட்டுக் கிறு, ேனம்மைலெக்ஷ்மன், ிஸ்கி புக் பேலஸ், கே. கே. நர், சென்னை - 78, ஃபோன்: 044 - 65157525, விலை ரூ. 80/-
 

4 கருத்துகள்:

  1. அருமையான விமர்சனம். விமர்சித்தவருக்கு நன்றி. உங்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...