சமையலறைப் பாதுகாப்பும்
சுகாதாரமும். :-
நம்ம குடும்பத்தின் ஆரோக்யம் நம்மளோட கிச்சன்லேருந்துதான் தொடங்குது. காலை காஃபி, டிஃபன், மதிய சாப்பாடு, மாலை ஸ்நாக்ஸ் காஃபி, இரவு உணவு என ஒரு நாளைக்கு இல்லத்தரசி குறைஞ்சது மூணு தரமாவது அடுக்களையில் வேலை செய்ய வேண்டி இருக்கு. அப்படி இருக்கும்போது அதோட பாதுகாப்பும் நம்ம சுகாதாரமும் பாதுகாக்கப்படணும்னா சில டிப்ஸை ஃபாலோ பண்ணலாம்.
கிச்சன்ல இருக்க வேண்டிய ஐட்டம் க்ளவுஸ், பிடிதுணி, டவல்ஸ், டிஷ்யூஸ், இடுக்கி, கத்திரிக்கோல் கத்தி ஸ்பூன்ஸ் போர்க்ஸ், கட்லெரி செட், இவை எல்லாத்தையும் குழந்தைகள் கையில் படாத இடத்துல வைக்கணும்.
அதே போல ஹேண்ட்வாஷ், லிக்விட் சோப், சோப் ஆயில், ஸ்பாஞ்ச், சிங்க் க்ளீனிங் ஐட்டம்ஸ், டாய்லெட் க்ளீங்க் ஐட்டம்ஸ் எல்லாத்தையும் குழந்தைகள் பார்வைக்கும் கைக்கும் எட்டாதவாறு வைப்பது உத்தமம்.
கிச்சன்ல ப்ரிட்ஜை வைக்க வேண்டாம். அதுல கம்ப்ரஸர் கேஸ் இருக்குறதால நிறைய இடைவெளிவிட்டு ஹால்லதான் வைக்கப்படணும். அதுபோல அதுல அலமாரி மாதிரி நிறைய சாமான்களை அடைச்சு வைக்காம அழகா டேட் போட்டு அடுக்கி மூடி வைச்சுக்கணும். அதிகப் பழசு எல்லாம் வைச்சு ஐஸ்பெட்டியை ஊசப்பெட்டி ஆக்கிட வேண்டாம். மாதம் ஒரு முறையாவது பொருட்களை வெளியே எடுத்து சுத்தம் செய்யணும்.
கிச்சன் ஜன்னல்களுக்கு திரைச்சீலை வேண்டவே வேண்டாம். காஸ் சிலிண்டரும் இரண்டு இருந்தால் பக்கம் பக்கமா வைக்க வேண்டாம். ஐ எஸ் ஐ தரத்தில் உள்ள அடுப்பு, டியூப், ரெகுலேட்டரையே உபயோகிக்கணும். கேஸ் வாங்கும்போது சேஃப்டி வால்வ் சரியா செயல்படுதான்னு செக் செய்து வாங்கணும். இரண்டு பர்னரும் சரியா எரியுதான்னு செக் செய்து ஒரு வருடத்துக்கு ஒருதரமாவது ஆதரைஸ்டு சர்வீஸ்மேனைக் கூப்பிட்டுக் க்ளீன் செய்யணும்.
சமைத்து முடித்ததும், இரவிலும் பயணம் செல்லும் முன்பும் ரெகுலேட்டரை க்ளோஸ் செய்துவிடவேண்டும். கிச்சனில் பட்டாசு போன்றவற்றை வைக்க வேண்டாம். அடுப்பைப் பற்றவைத்துவிட்டோ அதிகத் தீயில் வைத்துவிட்டோ அடுத்த வேலையைச் செய்யாமல் சமைத்து முடித்து ரெகுலேட்டரை ஆஃப் செய்ததும் செல்லாம்.
சமைக்கும்போது ஏப்ரன் அணிந்து கொண்டால் வசதி. லேசாக தளர்வான காட்டன் உடைகள் நல்லது. முழுக்கை உடை இருந்தால் கைகளை மடித்துவிட்டுக் கொண்டு சமைக்கணும். ஏனெனில் நெருப்புப் பிடிக்கும் அபாயம் தவிர்க்கப்படும். அதேபோல் தலைக்கு பாண்ட் அல்லது கவர் செய்துகொண்டு சமைத்தால் உணவில் முடி விழாது. நகத்தையும் வாரம் ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.
கிச்சன்ல வைக்கும் மைக்ரோவேவ், கிரைண்டர், மிக்ஸி, ஜூஸர் மிக்ஸர், ஃபுட் ப்ராசஸர், ஓவன், டோஸ்டர், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், வாஷிங் மெஷின் , டிஷ்வாஷர் , வாட்டர் ப்யூரிஃபையர் ஐ எஸ் ஐ முத்திரை கொண்டதே வாங்கணும். எல்லாத்துக்குமே ப்ளக் பாயிண்ட் மற்றும் சுவிட்சஸ், கரெண்ட் கனெக்ஷன் சரியா இருக்கான்னு பார்க்கணும். சுவிட்ச் போர்டும் சுத்தமா வைக்கணும்.
குக்கர் மற்றும் ப்ரஷர் பானின் வெயிட்டை நன்கு கழட்டிக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும். இல்லாவிட்டால் ஆவி வெளியேற வழியில்லாமல் ப்ரஷரின் அழுத்தத்தில் குக்கர் பறந்துவிழும். இல்லாட்டி மேலே போய் அடிச்சிரும்.
ஹாண்ட் வாஷிங் டிப்ஸ். டாய்லெட் போயிட்டு வந்தா நல்லா சோப்புப் போட்டு நகங்கள் விரல்கள் எல்லாம் நுரைவரத் தடவித் தேய்த்துக் கழுவணும். கிச்சனில் ஈ கோலி, சால்மொனெல்லா, கேம்பிலோபாக்டர் போன்றவை அழுக்குப் பிடிதுணி மூலமாவும் , மேடையில் தெறித்துக் கிடக்கும் உணவுத் துகள் மூலமாவும் பரவக்கூடும். எனவே அடுப்பு, மேடை, பிடிதுணி, டவல்ஸை சோப்புப் போட்டு தினம் சுத்தம் செய்யவும் அல்லது டிஸ்போஸ் செய்யவும்.
அதேபோல சிங்கில் சாப்பிட்ட தட்டுகளை மிச்ச உணவுகளுடன் போட்டு வைக்க வேண்டாம். டஸ்ட்பின்னில் போடவும். டஸ்ட் பின்னை தினம் சுத்தம் செய்து கழுவி வைக்கவும். இதனால் எல்லாம் கிருமிகள் பரவுவதைத் தடுக்கலாம். சிங்கையும் சமையல் முடிந்ததும் தேய்த்துக் கழுவி விடுவது நல்லது.
கிச்சனில் விளக்கேற்றி வைப்பதும் ஊதுபத்தி, மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதும் தவிர்க்கலாம். புகைப்பிடித்தல், பெட் அனிமல்ஸுடன் விளையாடுதல், ஃபோன் பேசிக்கொண்டோ ஃபேஸ்புக், டிவி பார்த்துக்கொண்டோ சமைத்தல், குழந்தைகள் பொம்மைகளையோ பொருட்களையோ கிச்சனில் உருட்டி விளையாடுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்..
சமைக்கும்போது பூச்சி ஓடினால் மருந்தெல்லாம் அடிக்க வேண்டாம். இரவுநேரத்தில் மருந்து போடலாம். கரப்பான் பூச்சி , எறும்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்க செல்ஃப்களில் பேப்பர் போட்டுப் பொருட்களை அடுக்கும்முன்பே லெக்ஷ்மண்ரேகாவைப் போட்டு வைக்கவும்.
கைகளில் புண், வெட்டுக் காயம் இருந்தால் சமைக்கக்கூடாது. காய் வெட்டும்போது காயமோ சமைக்கும்போது தீக்காயமோ ஏற்பட்டால் உடனடியாக பர்னால் போன்றவற்றைப் போட்டாலும் மருத்துவ உதவியும் பெறவும். ஃபயர் எக்ஸ்டிங்யுஷர் ஒன்றை சுவற்றில் மாட்டி வைப்பது நல்லது.
தரை ஈரமாக இருந்தால் வழுக்கலாம். எனவே தரையில் நீர், பொருட்கள், மாவு, தாளிக்கும் சாமான்கள் சமைத்தவை சிந்தினால் உடனே துடைத்துவிடவும். நான்ஸ்டிக், டஃபர்வேர், ப்ளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்கவும்.
மின்புகைபோக்கி பொருத்தி இருந்தால் அவ்வப்போது எண்ணெய் வடியாமல் சர்வீஸ்மேனைக் கூப்பிட்டுச் சுத்தம் செய்யவும். சோலார் குக்கிங் நல்லது. சமைக்கும் முன்பே தயார் செய்து கொள்ளவும். குழந்தைகள் சமைத்தால் கண்காணித்து உதவி செய்யவும்.
இப்பிடி கிச்சன் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் கடைபிடிச்சு உங்க குடும்பத்தோட ஹெல்த்தையும் உங்க ஹெல்த்தையும் சீரா வைச்சுக்குங்க.
டிஸ்கி:- இங்கேயும் படிக்கலாம்.

நான்ஸ்டிக்,- ஏன் இது நல்லதில்லை?
பதிலளிநீக்குநான்ஸ்டிக் பான்களில் டெஃப்லான் கோட்டிங் இருக்கு. என் உறவினர் சிலருக்கு ரீஃபைண்ட் ஆயில் & நான்ஸ்டிக் உபயோகத்தால் கல்லீரல் பாதிப்பு வந்துருக்கு.
பதிலளிநீக்குகோட்டிங் சுரண்டி வந்தப்புறம் உபயோகிப்பது கான்சரை உருவாக்கும். மேலும் இரும்பு இருப்புச் சட்டி, தோசைக்கல், கடாய் நல்லது. அலுமினியம் இண்டாலியம் சில்வர் காப்பர் பாட்டம் அடுத்தபடிதான்.
மண்சட்டி ரொம்ப நல்லது. ஆனா பார்த்து உபயோகிக்கணும். அதேபோல் அகப்பை ( சிரட்டை எனப்படும் கொட்டாங்கச்சியைத் தேய்த்துக் குச்சி மாட்டி கரண்டி போல உபயோகப்படுத்துவது ) நல்லது.
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு சகோதரியாரே
பதிலளிநீக்குபடிப்பதோடு மட்டுமன்றி கடைபிடிக்கப்படவேண்டியதும்கூட.
பதிலளிநீக்குபயனுள்ள குறிப்புகள்.
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குஉண்மைதான் ஜம்பு சார்
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!